பதிற்றுப்பத்து

பதிற்றுப்பத்து (பத்து + பத்து = பதிற்றுப்பத்து) எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பே பதிற்றுப் பத்தாகும். இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. அந்த எண்பது பாடல்கள் எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன.

இந்நூற்பாக்கள் புறவாழ்க்கையோடு தொடர்புடைய புறப்பொருள் பற்றியது ஆகும். சேர மன்னர்களின் கல்வித் திறம், மனத் திண்மை, புகழ் நோக்கு, ஈகைத் திறம் ஆகிய பண்புகளையும் படை வன்மை, போர்த்திறம், குடியோம்பல் முறை ஆகிய ஆட்சித் திறன்களையும் விளக்குகின்றன.

பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர் பதிகம் என்னும் பெயரால் தொகுப்புச் செய்திகளைத் தருகிறார். 10 பாடல்களில் சொல்லப்பட்டுள்ளனவும், அவர் அறிந்தனவும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. 10, 10 பாடல்களாகத் தொகுக்கப்பட்ட முறைமை இந்த நூலிலும், ஐங்குறுநூறு நூலிலும் காணப்படுகிறது. கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், முதுமொழிக்காஞ்சி, ஐந்திணை ஐம்பது போன்றவற்றிலும் காணப்படுகின்றன. அவை தொகுப்பில் வேறுபடும் பாங்கினை அந்தந்த நூல்களில் காணலாம். பதிற்றுப்பத்து நூலில் ஒவ்வொரு பாடலுக்கும் தலைப்பு, ஐங்குறுநூறு நூலிலும், திருக்குறள் நூலிலும் 10 பாடல்களுக்கு ஒரு தலைப்பு என்று அமைக்கப்பட்டுள்ளது.

அரசர்களும் ஆட்சிக்காலமும் (ஆண்டுகள்)

வஞ்சி நகரில் இருந்து ஆண்டவர்கள்

* இமையவரம்பன் (58)
* இவன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் (25)
* இமயவரம்பனுக்கும் வேள் ஆவிக் கோமான் பதுமன் மகளுக்கும் பிறந்த மூத்தமகன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் (25)
* இமையவரம்பனுக்கும் சோழன் மணக்கிள்ளி மகளுக்கும் பிறந்த மகன் கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் (55)
* இமயவரம்பனுக்கும் வேள் ஆவிக் கோமான் பதுமன் மகளுக்கும் பிறந்த இளையமகன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் (38)

கருவூர் நகரில் இருந்து ஆண்டவர்கள்

* செல்வக் கடுங்கோ ஆழி ஆதன் (25)
* தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை (17)
* குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை (16)

 

பதிகம் தரும் செய்திகள்

பதிற்றுப்பத்து நூலில் 10 பத்துகள் உள்ளன. ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் பதிகம் என்னும் பெயரில் ஒரு பாடல் சேர்க்கப்பட்டுள்ளது. இது பதிற்றுப்பத்து நூலைத் தொகுத்தவர் சேர்த்த பாடல். ஒரு அரசன் மீது பாடப்பட்ட 10 பாடல்களில் உள்ள செய்திகளைத் தொகுத்து அந்தப் பத்தின் இறுதியில் உள்ள இந்தப் பதிகத்தில் கூறியுள்ளார். அத்துடன் அந்தச் செய்திகளோடு தொடர்படையனவாகத் தாம் அறிந்த செய்திகளையும் அப்பதிகப் பாடலில் இணைத்துள்ளார். இந்தப் பதிகங்களில் கூறப்பட்டுள்ள செய்திகள் இவை.

இரண்டாம் பத்து

* இமைய வரம்பன் நெடுஞ்சேரலாதன்
o இமையத்தில் வில் பொறித்தான்
o ஆரியரை வணக்கினான்
o யவனரை அரண்மனைத் தொழிலாளியாக்கிக் கட்டுப்படுத்தினான்
o பகைநாட்டுச் செல்வங்களைக் கொண்டுவந்து தன் நாட்டுமக்களுக்கு வழங்கினான்

மூன்றாம் பத்து

* பல்யானைச் செல்கெழு குட்டுவன்
o உம்பற் காட்டைக் கைப்பற்றினான்
o அகப்பா நகரின் கோட்டையை அழித்தான்
o முதியர் குடிமக்களைத் தழுவித் தோழமையாக்கிக் கொண்டான்
o அயிரை தெய்வத்துக்கு விழா எடுத்தான்
o நெடும்பார தாயனாருடன் துறவு மேற்கொண்டான்

நான்காம் பத்து

* களங்காய்ப் கண்ணி நார்முடிச் சேரல்
o பூழி நாட்டை வென்றான்
o நன்னனை வென்றான்

ஐந்தாம் பத்து

* கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன்
o ஆரியரை வணக்கினான்
o கண்ணகி கோட்டம் அமைத்தான்
o கவர்ந்துவந்த ஆனிரைகளைத் தன் இடும்பில் நகர மக்களுக்குப் பகிர்ந்து அளித்தான்
o வியலூரை அழித்து வெற்றி கண்டான்
o கொடுகூரை எறிந்தான்
o மோகூர் மன்னன் பழையனை வென்று அவனது காவல்மரம் வேம்பினை வெட்டிச் சாய்த்தான்
o கூந்தல் முரற்சியால் குஞ்சர ஒழுகை பூட்டினான்
o சோழர் ஒன்பதின்மரை வென்றான்
o படை நடத்திக் கடல் பிறக்கு ஓட்டினான்

ஆறாம் பத்து

* ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்
o தண்டாரணித்தில் பிடிபட்ட வருடை ஆடுகளைக் கொண்டுவந்து தன் தொண்டி நகர மக்களுக்கு வழங்கினான்.
o பார்ப்பார்க்குக் குட்ட நாட்டிலிருந்த ஓர் ஊரை அதிலிருந்த கபிலைப் பசுக்களோடு வழங்கினான்.
o வானவரம்பன் என்னும் பெயர் தனக்கு விளங்கும்படி செய்தான்
o மழவர் பகையை எண்ணிக்கையில் சுருங்கும்படி செய்தான்
o கைக்குழந்தையைப் போல் தன் நாட்டைப் பேணிவந்தான்.

ஏழாம் பத்து

கல்வெட்டு - புகழூர் தாமிழி (பிராமி)

* செல்வக் கடுங்கோ வாழியாதன்
o பல போர்களில் வென்றான்
o வேள்வி செய்தான்
o மாய வண்ணன் என்பவனை நண்பனாக மனத்தால் பெற்றான்
o அந்த மாயவண்ணன் கல்விச் செலவுக்காக ஒகந்தூர் என்னும் ஊரையே நல்கினான்
o பின்னர் அந்த மாயவண்ணனை அமைச்சனாக்கிக் கொண்டான்

எட்டாம் பத்து

* பெருஞ்சேரல் இரும்பொறை
o கொல்லிக் கூற்றத்துப் போரில் அதிகமானையும், இருபெரு வேந்தரையும் வென்றான்
o தகடூர்க் கோட்டையை அழித்தான்

ஒன்பதாம் பத்து

* இளஞ்சேரல் இரும்பொறை
o கல்லகப் போரில் இருபெரு வேந்தரையும் விச்சிக்கோவையும் வீழ்த்தினான். அவர்களின் 'ஐந்தெயில்' கோட்டையைத் துகளாக்கினான்.
o பொத்தியாரின் நண்பன் கோப்பெருஞ்சோழனை வென்றான்.
o வித்தை ஆண்ட இளம்பழையன் மாறனை வென்றான்
o வென்ற இடங்களிலிருந்து கொண்டுவந்த வளத்தை வஞ்சி நகர மக்களுக்கு வழங்கினான்.
o மந்திரம் சொல்லித் தெய்வம் பேணச்செய்தான்
o தன் மாமனார் மையூர் கிழானைப் புரோசு மயக்கினான்
o சதுக்கப் பூதர் தெய்வங்களைத் தன் ஊருக்குக் கொண்டுவந்து நிலைகொள்ளச் செய்தான்
o அந்தப் பூதங்களுக்குச் சாந்திவிழா நடத்தினான்

 

நூல்

 

முதற்பத்து

(கிடைத்திலது)

இரண்டாம் பத்து

பாடப்பட்டோன்: இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன்
பாடியவர்: குமட்டூர்க் கண்ணனார்

 1. புண்ணுமிழ் குருதி

 2. மறம்வீங்கு பல்புகழ்

 3. பூத்த நெய்தல்

 4. சான்றோர் மெய்ம்மறை

 5. நிரைய வெள்ளம்

 6. துயிலின் பாயல்

 7. வலம்படு வியன்பணை

 8. கூந்தல் விறலியர்

 9. வளன்அறு பைதிரம்

 10. அட்டுமலர் மார்பன்

 11. பதிகம்

மூன்றாம் பத்து

பாடப்பட்டோன்: பல்யானைச் செல்கெழு குட்டுவன்
பாடியவர்: பாலைக் கெளதமனார்

 1. அடுநெய்யாவுதி

 2. கயிறுகுறு முகவை

 3. ததைந்த காஞ்சி

 4. சீர்கால் வெள்ளி

 5. கானுணங்கு கடுநெறி

 6. காடுறு கடுநெறி

 7. தொடர்ந்த குவளை

 8. உருத்துவரு மலிர்நிறை

 9. வெண்கை மகளிர்

 10. புகன்றவாயம்

 11. பதிகம்

நான்காம் பத்து

பாடப்பட்டோன்: களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்
பாடியவர்: காப்பியாற்றுக் காப்பியனார்

 1. கமழ்குரல் துழாய்

 2. கழையமல் கழனி

 3. வரம்பில் வெள்ளம்

 4. ஒண்பொறிக் கழற்கால்

 5. மெய்யாடு பறந்தலை

 6. வாண்மயங்கு கடுந்தார்

 7. வலம்படு வென்றி

 8. பரிசிலர் வெறுக்கை

 9. ஏவல் வியன்பணை

 10. நாடுகாண் அவிர்சுடர்

 11. பதிகம்

ஐந்தாம் பத்து

பாடப்பட்டோன்: கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
பாடியவர்: காசறு செய்யுட் பரணர்

 1. சுடர்வீவேங்கை

 2. தசும்புதுளங்(கு) இருக்கை

 3. ஏறாவேணி

 4. நோய்தபு நோன்தொடை

 5. ஊன்துவை அடிசில்

 6. கரைவாய்ப் பருதி

 7. நன்நுதல் விறலியர்

 8. பேர்எழில் வாழ்க்கை

 9. செங்கை மறவர்

 10. வெருவரு புனற்றார்

 11. பதிகம்

ஆறாம் பத்து

பாடப்பட்டோன்: ஆடுகோட் பாட்டுச் சேரலாதன்
பாடியவர்: காக்கைபாடினியார் நச்செள்ளையார்

 1. வடுவடு நுண்ணயிர்

 2. சிறுசெங்குவளை

 3. குண்டுகண் அகழி

 4. நில்லாத்தானை

 5. துஞ்சும் பந்தர்

 6. வேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சி

 7. சில்வளை விறலி

 8. ஏவிளங்கு தடக்கை

 9. மாகூர் திங்கள்

 10. மரம்படுதீங்கனி

 11. பதிகம்

ஏழாம் பத்து

பாடப்பட்டோன்: செல்வக்கடுங்கோ வாழிஆதன்
பாடியவர்: கபிலர்

 1. புலாஅம் பாசறை

 2. வரைபோல் இஞ்சி

 3. அருவி ஆம்பல்

 4. உரைசால்வேள்வி

 5. நாள்மகிழிருக்கை

 6. புதல்சூழ் பறவை

 7. வெண்போழ்க்கண்ணி

 8. ஏமவாழ்க்கை

 9. மண்கெழுஞாலம்

 10. பறைக்குரல் அருவி

 11. பதிகம்

எட்டாம் பத்து

பாடப்பட்டோ ன்: பெருஞ்சேரல் இரும்பொறை
பாடியவர்: அரிசில்கிழார்

 1. குறுந்தாள் ஞாயில்

 2. உருத்(து)எழு வெள்ளம்

 3. நிறந்திகழ் பாசிழை

 4. நலம்பெறு திருமணி

 5. தீம்சேற்று யாணர்

 6. மாசித(று) இருக்கை

 7. வென்(று)ஆடு துணங்கை

 8. பிறழநோக்கியவர்

 9. நிறம்படு குருதி

 10. புண்உடை எறுழ்த்தோள்

 11. பதிகம்

ஒன்பதாம் பத்து

பாடப்பட்டோன்: இளஞ்சேரல் இரும்பொறை
பாடியவர்: பெருங்குன்றூர்கிழார்

 1. நிழல்விடு கட்டி

 2. வினைநவில் யானை

 3. பஃறோல் தொழுதி

 4. தொழில்நவில்யானை

 5. நாடுகாண் நெடுவரை

 6. வெம்திறல் தடக்கை

 7. வெண்தலைச் செம்புனல்

 8. கல்கால் கவணை

 9. துவராக் கூந்தல்

 10. வலிகெழு தடக்கை

 11. பதிகம்

பத்தாம் பத்து

(கிடைத்திலது)

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework