துறை: செந்துறைப்பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: நிறம்படு குருதி

உயிர்போற் றலையே செருவத் தானே
கொடைபோற் றலையே இரவலர் நடுவண்
பொ஢யோர்ப் பேணிச் சிறியோரை அளித்தி
நின்வயின் பி஡஢ந்த நல்இசை கனவினும்
பிறர்நசை அறியா வயங்குசெந் நாவின் 5
படியோர்த் தேய்த்த ஆண்மைத் தொடியோர்
தோளிடைக் குழைந்த கோதை மார்ப
அனைய அளப்(ப)அருங் குரையை அதனால்
நின்னொடு வாரார் தம்நிலத்(து) ஒழிந்து
கொல்களிற்(று) யானை எருத்தம் புல்லென 10
வில்குலை அறுத்துக் கோலின் வாரா
வெல்போர் வேந்தர் முரசுகண் போழ்ந்(து)அவர்
அர(சு)உவா அழைப்பக் கோ(டு)அறுத்(து) இயற்றிய
அணங்(கு)உடை மரபின் கட்டில்மேல் இருந்து
தும்பை சான்ற மெய்தயங்(கு) உயக்கத்து 15
*நிறம்படு குருதி* புறம்படின் அல்லது
மடைஎதிர் கொள்ளா அஞ்சுவரு மரபின்
கடவுள் அயிரையின் நிலைஇக்
கேடில ஆக பெரும்நின் புகழே.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework