எரிச்சல் ஊட்டுவதற்கென்றே பிறவியெடுத்தவன் 'எரிக்ஸன்'. முந்திய பிறவியில் நான் செய் வினைப்பயனால் அவனுடன் எனக்கு ஒரு தொந்தம் ஏற்பட்டுவிட்டது. நான் எங்கே போனாலும் அவனும் அங்கே என் பின்னால் வந்து சேர்ந்து விடுவான்.

ஸ்வீடன் தேசத்து அரசாங்கத்துக்காக இவன் வேலை செய்து வந்தான். ஆள் உயரமாகவும், வசீகரமாகவும் இருப்பான். அவன் ஆங்கிலம் கதைப்பது கேட்க ஆனந்தமாக இருப்பான். அவன் ஆங்கிலம் கதைப்பது கேட்க ஆனந்தமாக இருக்கும். 'ஸ்வீடிஷ்' மொழியிலே சிந்தித்து பின் அதை ஆங்கிலத்தில் வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்த்து பேசுவான். ஆகையினாலே, அவனுடைய ஆங்கிலம் நெளிந்து, நெளிந்து வரும். சுருக்கமாக ஒரு விஷயத்தைப் பேசினோம் என்பது அவன் ஜாதகத்திலேயே கிடையாது. நீண்டு வளைத்துத்தான் கதைக்கு வருவான்.

Add a comment

நாங்கள் சிறு பிள்ளைகளாக இருந்த போது அவரை 'செல்லரம்மான்' என்று தான் கூப்பிடுவோம். அவருடைய இயற்பெயர் செல்லத்தம்பி. அப்போதெல்லாம் 'சாண்டோ செல்லர்' என்றால்தான் எல்லோருக்கும் தெரியும்; அவ்வளவு பிரபலமாக இருந்தார்.

அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார். வந்ததும் நாங்கள் அவரைப் போய் மொய்த்துக் கொள்வோம். என்ன அவசரமாயிருந்தாலும் எங்களுக்கெல்லாம் கதைகள் சொல்லாமல் போகவே மாட்டார்.

Add a comment

நாங்கள் நாலு பேரும் வந்து இறங்கினோம். நான், மனைவி, என் ஆறுவயது மகன், என் இரண்டு வயது மகள். மேற்கு ஆபிரிக்காவின் அடர்ந்த காட்டுக்குள் எங்களுக்காக ஒதுக்கப்பட்ட வீட்டிற்கு சேதமின்றி வந்து சேர்ந்து விட்டோம். அங்கே நூற்றுக்கணக்கான குடியிருப்புக்கள்; எல்லாம் கம்பனி வீடுகள் தான்.

காடுகள் வெட்டும் பகுதிக்கு நான் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தேன்; ஒரு வருட ஒப்பந்தம். என் மகன் அடிக்கடி வந்து என்னைக் கேட்பான் "அப்பா, உங்களுக்கு என்ன வேலை?" என்று. நான் 'வெட்டி விழுத்திற வேலை' என்று சொல்வேன். அவனும் விளங்கியது போல சிரித்துக் கொண்டே ஓடி விடுவான்.

Add a comment

நிக்ஸன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது நடந்ததென்று ஒரு கதை சொல்வார்கள்.

பிரான்ஸ் தேசத்திலிருந்து மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு சமையல் கலைஞரை வெள்ளை மாளிகைக்கு நியமித்தார்கள். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து பல தலைவர்களும் வருவார்கள். விதம் விதமான விருந்துகள் எல்லாம் அங்கே தயார் பண்ண வேண்டும். ஒரு உலகம் புகழும் சமையல் கலைஞர் அவர்களுக்குத் தேவை தானே!

Add a comment

பூப்போல கீழே வந்து இறங்கியது விமானம். பதினைந்து வருடத்திற்குப் பிறகு கொழும்புக்கு வருகிறேன். மனைவி சொல்லியிருந்தாள். "நீங்கள் நம்பமாட்டீர்கள், அவ்வளவு சேஞ்ச்" என்று. நான் பல நாடுகளுக்கும் போயிருக்கிறேன்; பல இடங்களில் வேலை பார்த்துமிருக்கிறேன். 'என்ன தான் என்று பார்ப்போமோ?' என்று வந்திருந்தேன்.

குடிவரவுக்கு (Immigration) வரும் போதே இது விஷயம் வேறு என்று உடனே தெரிந்து விடுகிறது. அதிகாரிகள் முகத்தை உம்மென்று தான் வைத்துக் கொண்டிருப்பார்கள். ஒரு மனிதப் பிராணி அவர்கள் முன்பு நிற்பது அவர்களுக்குத் தெரியும்: ஆனால் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டார்கள். என் முறை வந்தது. பாஸ்போட்டை நீட்டினேன். குனிந்த படி ஏதோ எழுதி விட்டு பாஸ்போட்டை என் முன் 'பொத்' என்று போட்டு விட்டு 'நெக்ஸ்ட்' என்றார். 'ஆஹா! சிலோன் வந்த விட்டது' என்று எனக்குப் பட்டது.

Add a comment

அதற்குப் பேர் 'கட்டிங்கிராஸ்' மேற்று ஆபிரிக்காவில் பெருகிக்கிடக்கம் ஒரு வகை பெருச்சாளி இனம். ஒரு பெரிய முயல் குட்டி அளவுக்கு வளரும். இதில் விசேஷம் என்னவென்றால் இது ஒரு தோட்டத்தில் வாய் வைத்துவிட்டால் என்றால் தோட்டக்காரன் கதி அதோ கதிதான். மண்ணைப் பிராண்டி உள்ளே போய் கிழங்கு வகை எல்லவற்றையும் நாசமாக்கி விடும்.

மேலுக்குப் பார்த்தால் பயிர்கள் 'ஓகோ' வென்று இருக்கும். ஆனால் உள்ளுக்குள்ளே கிழங்கையும் வேர்களையும் ஒட்டச் சாப்பிட்டிருக்கும். பார்ப்பவர்களக்கு விஷயமே தெரியாது. கண் முன்னே பார்த்துக் கொண்டிருக்கும் பயிர் செத்துப் போகும்.

Add a comment

உட்பிரிவுகள்

தெனாலி ராமன் ஆந்திரமாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் கார்லபதி என்கிற கிராமத்தில் இராமையா – லட்சுமி அம்மாள் தம்பதியரின் மகனாக ஏழைப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தெனாலியில் உள்ள இராமலிங்க சுவாமியின் நினைவாக இராமலிங்கன் என்றே பெயரிடப்பட்டார். இவர் பிறந்து மூன்றாம் நாள் இவருடைய தந்தையார் மரணமடைய குடும்பம் வறுமையில் வாடியது. இவருடைய தாயார் இவரை எடுத்துக் கொண்டு தெனாலியில் இருந்த அவருடைய சகோதரனுடைய வீட்டுக்கு வந்து சேர்ந்தார். தாய்மாமன் ஆதரவில் தான் இராமலிங்கம் வளர்ந்தார்.

உரிய பருவத்தில் பள்ளியில் சேர்ந்தாலும் படிப்பில் கவனம் செல்லவில்லை. மற்றவர்களைச் சிரிக்க வைக்கும் ஆற்றல் அவரிடம் இயற்கையாகவே இருந்தது. அதனால், அகடவிகட கோமாளித் தனங்களில் தான் அவருடைய அறிவும் ஆற்றலும் ஜொலித்தன. கமலா என்கிற பெண்ணை மணந்தார் தெனாலி ராமன். இவருடைய வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பல கதைகளாக வழங்கப்படுகின்றன.

பயனாளர் பகுதி

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework