துறை: காட்சி வாழ்த்து
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: சுடர்வீவேங்கை

புணர்பு஡஢ நரம்பின் தீம்தொடை பழுனிய
வணர்அமை நல்யாழ் இளையர் பொறுப்பப்
பண்அமை முழவும் பதலையும் பிறவும்
கண்அறுத்(து) இயற்றிய தூம்பொடு சுருக்கிக்
காவில் தகைத்த துறைகூடு கலப்பையர் 5
கைவல் இளையர் கடவுள் பழிச்ச
மறப்புலிக் குழூஉக்குரல் செத்து வயக்களிறு
வரைசேர்(பு) எழுந்த *சுடர்வீ வேங்கைப்*
பூவுடைப் பெருஞ்சினை வாங்கிப் பிளந்துதன்
மாஇருஞ் சென்னி அணிபெற மிலைச்சிச் 10
சேஎர் உற்ற செல்படை மறவர்
தண்(டு)உடை வலத்தர் போர்எதிர்ந் தாங்கு
வழைஅமல் வியன்காடு சிலம்பப் பிளிறும்
மழைபெயல் மாறிய கழைதிரங்(கு) அத்தம்
ஒன்(று)இரண்(டு) அலபல கழிந்து திண்தேர் 15
வசைஇல் நெடுந்தகை காண்குவந் திசினே
தாவல் உய்யுமோ மற்றே தாவாது
வஞ்சினம் முடித்த ஒன்றுமொழி மறவர்
முர(சு)உடைப் பெருஞ்சமத்(து) அரசுபடக் கடந்து
வெவ்வர் ஓச்சம் பெருகத் தெவ்வர் 20
மிள(கு)எறி உலக்கையின் இருந்தலை இடித்து
வை(கு)ஆர்ப்(பு) எழுந்த மைபடு பரப்பின்
எடுத்தே(று) ஏய கடிப்(பு)உடை வியன்கண்
வலம்படு சீர்த்தி ஒருங்(கு)உடன் இயைந்து
கால்உளைக் கடும்பிசிர் உடைய வால்உளைக் 25
கடும்பா஢ப் புரவி ஊர்ந்தநின்
படுந்திரைப் பனிக்கடல் உழந்த தாளே.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework