துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: பரிசிலர் வெறுக்கை

உலகத் தோரே பலர்மன் செல்வர்
எல்லா ருள்ளும்நின் நல்இசை மிகுமே
வளம்தலை மயங்கிய பைதிரம் திருத்திய
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்
எயில்முகம் சிதையத் தோட்டி ஏவலின் 5
தோட்டி தந்த தொடிமருப்பு யானைச்
செவ்உளைக் கலிமா ஈணகை வான்கழல்
செயல்அமை கண்ணிச் சேரலர் வேந்தே
*பா஢சிலர் வெறுக்கை* பாணர் நாளவை
வாள்நுதல் கணவ! மள்ளர் ஏறே! 10
மைஅற விளங்கிய வடுவாழ் மார்பின்
வசையில் செல்வ! வான வரம்ப!
இனியவை பெறினே தனிதனி நுகர்கேம்
தருகென விழையாத் தாஇல் நெஞ்சத்துப்
பகுத்(து)ஊண் தொகுத்த ஆண்மைப் 15
பிறர்க்(கு)என வாழ்திநீ ஆகல் மாறே.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework