சில்வளை விறலி
- விவரங்கள்
- காக்கைபாடினியார் நச்செள்ளையார்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- பதிற்றுப்பத்து
துறை: விறலியாற்றுப்படை
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: சில்வளை விறலி
ஓடாப் பூட்கை மறவர் மிடல்தப
இரும்பனம் புடையலொடு வான்கழல் சிவப்பக்
குருதி பனிற்றும் புலவுக்களத் தோனே
துணங்கை ஆடிய வலம்படு கோமான்
மெல்லிய வகுந்தில் சீறடி ஒதுங்கிச் 5
செல்லா மோதில் *சில்வளை விறலி*
பாணர் கையது பணிதொடை நரம்பின்
விரல்கவர் போயாழ் பாலை பண்ணிக்
குரல்புணர் இன்னிசைத் தழிஞ்சி பாடி
இளம்துணைப் புதல்வர் நல்வளம் பயந்த 10
வளங்கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கை
ஆன்ற அறிவின் தோன்றிய நல்லிசை
ஒண்நுதல் மகளிர் துனித்த கண்ணினும்
இரவலர் புன்க ணஞ்சும்
புர(வு)எதிர் கொள்வனைக் கண்டனம் வரற்கே. 15