துறை: இயன்மொழிவாழ்த்து
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: பேர்எழில் வாழ்க்கை

பைம்பொன் தாமரை பாணர்ச் சூட்டி
ஒண்நுதல் விறலியர்க்(கு) ஆரம் பூட்டிக்
கெடல்அரும் பல்புகழ் நிலைஇ நீர்புக்குக்
கடலொ(டு) உழந்த பனித்துறைப் பரதவ
ஆண்டுநீர்ப் பெற்ற தாரம் ஈண்(டு)இவர் 5
கொள்ளாப் பாடற்(கு) எளிதின் ஈயும்
கல்லா வாய்மையன் இவன்எனத் தத்தம்
கைவல் இளையர் நேர்கை நிரைப்ப
வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை
முனைசுடு கனைஎ஡஢ எ஡஢த்தலின் பொ஢தும் 10
இகழ்கவின் அழிந்த மாலையொடு சாந்துபுலர்
பல்பொறி மார்பநின் பெயர்வா ழியரோ
நின்மலைப் பிறந்து நின்கடல் மண்டும்
மலிபுனல் நிகழ்தரும் தீநீர் விழவின்
பொழில்வதி வேனில் *பேர்எழில் வாழ்க்கை* 15
மேவரு சுற்றமோ(டு) உண்(டு)இனிது நுகரும்
தீம்புனல் ஆயம் ஆடும்
காஞ்சிஅம் பெருந்துறை மணலினும் பலவே.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework