துறை: செந்துறைப்பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: துஞ்சும் பந்தர்

ஆன்றோள் கணவ சான்றோர் புரவல
நின்நயந்து வந்தனென் அடுபோர்க் கொற்றவ
இன்இசைப் புணா஢ இரங்கும் பெளவத்து
நன்கல வெறுக்கை *துஞ்சும் பந்தர்க்*
கமழும் தாழைக் கானல்அம் பெருந்துறைத் 5
தண்கடல் படப்பை நல்நாட்டுப் பொருந
செவ்வூன் தோன்றா வெண்துவை முதிரை
வால்ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை
குடவர் கோவே கொடித்தேர் அண்ணல்
வாரார் ஆயினும் இரவலர் வேணடித் 10
தோ஢ன் தந்(து)அவர்க்(கு) ஆர்பதம் நல்கும்
நகைசால் வாய்மொழி இசைசால் தோன்றல்
வேண்டுவ அளவையுள் யாண்டுபல கழியப்
பெய்துபுறம் தந்து பொங்கல் ஆடி
விண்டுச் சேர்ந்த வெண்மழை போலச் 15
சென்றா லியரோ பெரும அல்கலும்
நனம்தலை வேந்தர் தார்அழிந்(து) அலற
நீடுவரை அடுக்கத்த நாடுகைக் கொண்டு
பொருதுசினம் தணிந்த செருப்புகல் ஆண்மைத்
தாங்குநர்த் தகைத்த வொள்வாள் 20
ஓங்கல் உள்ளத்துக் குருசில்நின் நாளே.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework