துறை: வாகை
வண்ணம்: ஒழுகுவண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: தொழில்நவில்யானை

எடுத்(து)ஏ(று) ஏய கடிப்புடை அதிரும்
போர்ப்(பு)உறு முரசம் கண்அதிர்ந் தாங்குக்
கார்மழை முழக்கினும் வெளில்பிணி நீவி
நுதல்அணந்(து) எழுதரும் *தொழில்நவில் யானைப்*
பார்வல் பாசறைத் தரூஉம் பல்வேல் 5
பூழியர் கோவே பொலம்தேர்ப் பொறைய
மன்பதை சவட்டும் கூற்ற முன்ப
கொடிநுடங்(கு) ஆர்எயில் எண்ணுவரம்(பு) அறியா
பல்மா பரந்தபுலம் ஒன்(று)என்(று) எண்ணாது
வலியை ஆதல்நற்(கு) அறிந்தனர் ஆயினும் 10
வார்முகில் முழக்கின் மழகளிறு மிகீஇத்தன்
கால்முளை மூங்கில் கவர்கிளை போல
உய்தல்யா வதுநின் உடற்றி யோரே
வணங்கல் அறியார் உடன்(ரு)எழுந்(து) உரைஇப்
போர்ப்(பு)உறு தண்ணுமை ஆர்ப்(பு)எழுந்து நுவல 15
நோய்த்தொழில் மலைந்த வேல்ஈண்(டு) அழுவத்து
முனைபுகல் புகல்வின் மாறா மைந்தரொ(டு)
உரும்எறி வரையின் களிறு நிலம் சேரக்
காஞ்சி சான்ற செருப்பல செய்துநின்
குவவுக்குரை இருக்கை இனிதுகண் டிகுமே 20
காலை மா஡஢ பெய்துதொழில் ஆற்றி
விண்டு முன்னிய புயல்நெடும் காலைக்
கல்சேர்பு மாமழை தலைஇப்
பல்குரல் புள்ளின் ஒலிஎழுந் தாங்கே.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework