துறை: செந்துறைப்பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகுவண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: கல்கால் கவணை

வையகம் மலர்ந்த தொழில்முறை ஒழியாது
கடவுள் பெயா஢ய கானமொடு கல்உயர்ந்து
தெண்கடல் வளைஇய மலர்தலை உலகத்துத்
தம்பெயர் போகிய ஒன்னார் தேயத்
துளங்(கு)இரும் குட்டம் தொலைய வேல்இட்(டு) 5
அணங்(கு)உடைக் கடம்பின் முழுமுதல் தடிந்து
பொருமுரண் எய்திய கழுவுள் புறம்பெற்று
நாம மன்னர் துணிய நூறிக்
கால்வல் புரவி அண்டர் ஓட்டிச்
சுடர்வீ வாகை நன்னன் தேய்த்துக் 10
குருதி விதிர்த்த குவவுச்சோற்றுக் குன்றோ(டு)
உருகெழு மரபின் அயிரை பரைஇ
வேந்தரும் வேளிரும் பின்வந்து பணியக்
கொற்றம் எய்திய பொ஢யோர் மருக
வியல்உளை அ஡஢மான் மறம்கெழு குருசில் 15
விரவுப்பணை முழங்கு நிரைதோல் வரைப்பின்
உரவுக்களிற்று வெல்கொடி நுடங்கும் பாசறை
ஆர்எயில் அலைத்த *கல்கால் கவணை*
நார்அ஡஢ நறவின் கொங்கர் கோவே
உடலுநர்த் தபுத்த பொலம்தேர்க் குருசில் 20
வளைகடல் முழவின் தொண்டியோர் பொருந
நீநீடு வாழிய பெரும நின்வயின்
துவைத்த தும்பை நனவுற்று வினவும்
மாற்றரும் தெய்வத்துக் கூட்ட முன்னிய
புனல்மலி போ஢யா(று) இழிதந் தாங்கு 25
வருநர் வரையாச் செழும்பல் தாரம்
கொளக்கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப
ஓவத் தன்ன உருகெழு நெடுநகர்ப்
பாவை அன்ன மகளிர் நாப்பண்
புகன்ற மாண்பொறிப் பொலிந்த சாந்தமொடு 30
தண்கமழ் கோதை சூடிப் பூண்சுமந்து
திருவில் குலைஇத் திருமணி புரையும்
உருகெழு கருவிய பெருமழை சேர்ந்து
வேங்கை வி஡஢ந்து விசும்(பு)உறு சேட்சிமை
அருவி அருவரை அன்ன மார்பின் 35
சேண்நாறு நல்இசைச் சேயிழை கணவ
மாகம் சுடர மாவிசும்(பு) உகக்கும்
ஞாயிறு போல விளங்குதி பல்நாள்
ஈங்குக் காண்கு வந்தனென் யானே
உறுகால் எடுத்த ஓங்குவரல் புணா஢ 40
நுண்மணல் அடைகரை உடைதரும்
தண்கடல் படப்பை நாடுகிழ வோயே.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework