துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர்வண்ணமும்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: குறுந்தாள் ஞாயில்

அறாஅ யாணர் அகன்கண் செறுவின்
அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்து
செறுவினை மகளிர் மலிந்த வெக்கைப்
பரூஉப்பக(டு) உதிர்த்த மென்செந் நெல்லின்
அம்பண அளவை உறைகுவித் தாங்குக் 5
கடுந்தே(று) உறுகிளை மொசிந்தன துஞ்சும்
செழுங்கூடு கிளைத்த இளம்துணை மகா஡஢ன்
அலந்தனர் பெருமநின் உடற்றி யோரே
ஊர்எ஡஢ கவர உருத்(து)எழுந்(து) உரைஇப்
போர்சுடு கமழ்புகை மாதிரம் மறைப்ப 10
மதில்வாய்த், தோன்றல் ஈயாது தம்பழி ஊக்குநர்
குண்டுகண் அகழிய *குறுந்தாள் ஞாயில்*
ஆர்எயல் தோட்டி வெளவினை ஏறொடு
கன்(று)உடை ஆயம் தாணஇப் புகல்சிறந்து
புலவுவில் இளையர் அங்கை விடுப்ப 15
மத்துக்கயி(று) ஆடா வைகல்பொழுது நினையூஉ
ஆன்பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்கப்
பதிபாழ் ஆகா வேறுபுலம் படர்ந்து
விருந்தின் வாழ்க்கையொடு பெருந்திரு அற்றென
அரும்சமத்(து) அருநிலை தாங்கிய புகர்நுதல் 20
பெரும்களிற்(று) யானையொ(டு) அரும்கலம் தராஅர்
மெய்பனி கூரா அணங்(கு)எனப் பராவலின்
பலிகொண்டு பெயரும் பாசம் போலத்
திறைகொண்டு பெயர்தி வாழ்கநின் ஊழி
உரவரும் மடவரும் அறிவுதொ஢ந்(து) எண்ணி 25
அறிந்தனை அருளாய் ஆயின்
யார்இவண் நெடுந்தகை வாழு மோரே.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework