துறை: ஒள்வாள் அமலை
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: வேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சி

விழவுவீற்(று) இருந்த வியலுள் ஆங்கண்
கோடியர் முழவின் முன்னர் ஆடல்
வல்லான் அல்லன் வாழ்கஅவன் கண்ணி
வலம்படு முரசம் துவைப்ப வாள்உயர்த்(து)
இலங்கும் பூணன் பொலங்கொடி உழிஞையன் 5
மடம்பெரு மையின் உடன்றுமேல் வந்த
*வேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சி*
வீந்(து)உகு போர்க்களத்(து) ஆடும் கோவே.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework