பெயர் - ததைந்த காஞ்சி (19)
துறை - வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கு
வண்ணம் - ஒழுகு வண்ணம்

அலந்தலை உன்னத்(து) அங்கவடு பொருந்திச்
சிதடி கரையப் பெருவறம் கூர்ந்து
நிலம்பை(து) அற்ற புலம்கெடு காலையும்
வாங்குபு தகைத்த கலப்பையர் ஆங்கண்
மன்றம் போந்து மறுகுசிறை பாடும் 5
வயி஡஢ய மாக்கள் கடும்பசி நீங்கப்
பொன்செய் புனைஇழை ஒலிப்பப் பொ஢(து)உவந்து
நெஞ்சுமலி உவகையர் உண்டுமலிந்(து) ஆடச்
சிறுமகி ழானும் பெருங்கலம் வீசும்
போர்அடு தானைப் பொலந்தார்க் குட்டுவ 10
நின்நயந்து வருவேம் கண்டனம் புல்மிக்கு
வழங்குநர் அற்(று)என மருங்குகெடத் தூர்ந்து
பெருங்கவின் அழிந்த ஆற்ற ஏறுபுணர்ந்(து)
அண்ணல் மரைஆ அமர்ந்(து)இனி(து) உறையும்
விண்உயர் வைப்பின கா(டு)ஆ யினநின் 15
மைந்துமலி பெரும்புகழ் அறியார் மலைந்த
போர்எதிர் வேந்தர் தார்அழிந்(து) ஒராலின்
மரு(து)இமிழ்ந்(து) ஓங்கிய நளிஇரும் பரப்பின்
மணல்மலி பெருந்துறைத் *ததைந்த காஞ்சி*யொடு
முருக்குத்தாழ்(பு) எழிலிய நெருப்புறழ் அடைகரை 20
நந்து நாரையொடு செவ்வா஢ உகளும்
கழனி வாயிற் பழனப் படப்பை
அழல்மருள் பூவின் தாமரை வளைமகள்
குறாஅது மலர்ந்த ஆம்பல்
அறாஅ யாணர்அவர் அகன்தலை நாடே. 25
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework