துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகுவண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: வெம்திறல் தடக்கை

உறல்உறு குருதிச் செருக்களம் புலவக்
கொன்(று)அமர்க் கடந்த *வெம்திறல் தடக்கை*
வென்வேல் பொறையன் என்றலின் வெருவர
வெப்(பு)உடை ஆடூஉச் செத்தனென் மன்யான்
நல்இசை நிலைஇய நனம்தலை உலகத்(து) 5
இல்லோர் புன்கண் தீர நல்கும்
நாடல் சான்ற நயன்உடை நெஞ்சின்
பாடுநர் புரவலன் ஆடுநடை அண்ணல்
கழைநிலை பெறாஅக் குட்டத் தாயினும்
புனல்பாய் மகளிர் ஆட ஒழிந்த 10
பொன்செய் பூங்குழை மீமிசைத் தோன்றும்
சாந்துவரு வானி நீ஡஢னும்
தீந்தண் சாயலன் மன்ற தானே.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework