துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: கரைவாய்ப் பருதி

இழையர் குழையர் நறுந்தண் மாலையர்
சுடர்நிமிர் அவிர்தொடி செறித்த முன்கைத்
திறல்விடு திருமணி இலங்கு மார்பின்
வண்டுபடு கூந்தல் முடிபுனை மகளிர்
தொடைபடு பேர்யாழ் பாலை பண்ணிப் 5
பணியா மரபின் உழிஞை பாட
இனிதுபுறந் தந்(து)அவர்க்(கு) இன்மகிழ் சுரத்தலின்
சுரம்பல கடவும் *கரைவாய்ப் பருதி*
ஊர்பாட்(டு) எண்ணில் பைந்தலை துமியப்
பல்செருக் கடந்த கொல்களிற்(று) யானைக் 10
கோடுநரல் பெளவம் கலங்க வேல்இட்(டு)
உடைதிரைப் பரப்பில் படுகடல் ஓட்டிய
வெல்புகழ்க் குட்டுவன் கண்டோ ர்
செல்குவம் என்னார் பாடுபு பெயர்ந்தே.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework