துறை: முல்லை
வண்ணம்: ஒழுகுவண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: நிழல்விடு கட்டி

உலகம் புரக்கும் உருகெழு சிறப்பின்
வண்ணக் கருவிய வளம்கெழு கமம்சூல்
அகல்இரு விசும்பின் அதிர்சினம் சிறந்து
கடும்சிலை கழறி விசும்(பு)அடையூ நிவந்து
காலை இசைக்கும் பொழுதொடு புலம்புகொளக் 5
களிறுபாய்ந்(து) இயலக் கடுமா தாங்க
ஒளிறுகொடி நுடங்கத் தேர்தி஡஢ந்து கொட்ப
அரசுபுறத்(து) இறுப்பினும் அதிர்விலர் தி஡஢ந்து
வாயில் கொள்ளா மைந்தினர் வயவர்
மாஇரும் கங்குலும் விழுத்தொடி சுடர்வரத் 10
தோள்பிணி மீகையர் புகல்சிறந்து நாளும்
முடிதல் வேட்கையர் நெடிய மொழியூஉக்
கெடாஅ நல்லிசைத் தம்குடி நிறுமார்
இடாஅ ஏணி வியல்அறைக் கொட்ப
நா(டு)அடிப் படுத்தலின் கொள்ளை மாற்றி 15
அழல்வினை அமைந்த *நிழல்விடு கட்டி*
கட்டளை வலிப்பநின் தானை உதவி
வேறுபுலத்(து) இறுத்த வெல்போர் அண்ணல்
முழவின் அமைந்த பெரும்பழம் இசைந்து
சா(று)அயர்ந் தன்ன கார்அணி யாணர்த் 20
தூம்(பு)அகம் பழுனிய தீம்பிழி மாந்திக்
காந்தள்அம் கண்ணிச் செழுங்குடிச் செல்வர்
கலிமகிழ் மேவலர் இரவலர்க்(கு) ஈயும்
சுரும்(பு)ஆர் சோலைப் பெரும்பெயல் கொல்லிப்
பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து 25
மின்உமிழ்ந் தன்ன சுடர்இழை ஆயத்துத்
தன்நிறங் கரந்த வண்டுபடு கதுப்பின்
ஒடுங்(கு)ஈர் ஓதி ஒள்நுதல் அணிகொளக்
கொடுங்குழைக் கமர்த்த நோக்கின் நயவரப்
பெருந்தகைக்(கு) அமர்ந்த மென்சொல் திருமுகத்து 30
மாண்இழை அரிவை காணிய ஒருநாள்
பூண்க மாளநின் புரவி நெடுந்தேர்
முனைகை விட்டு முன்னிலைச் செல்லாது
தூஎதிர்ந்து பெறாஅத் தாஇல் மள்ளரொடு
தொல்மருங்(கு) அறுத்தல் அஞ்சி அரண்கொண்டு 35
துஞ்சா வேந்தரும் துஞ்சுக
விருந்தும் ஆக நின்பெருந் தோட்கே.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework