பெயர்: புகன்றவாயம் (19)
துறை: பெருஞ்சோற்றுநிலை
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு

இணர்ததை ஞாழல் கரைகெழு பெருந்துறை
மணிக்கலத் தன்ன மாஇதழ் நெய்தல்
பாசடைப் பனிக்கழி துழைஇப் புன்னை
வால்இணர்ப் படுசினக் குரு(கு)இறை கொள்ளும்
அல்குறு கானல் ஓங்குமணல் அடைகரை 5
தாழ்அடும்பு மலைந்த புணா஢வளை ஞரல
இலங்குநீர் முத்தமொடு வார்துகிர் எடுக்கும்
தண்கடல் படப்பை மென்பா லனவும்
காந்தள்அங் கண்ணிக் கொலைவில் வேட்டுவர்
செங்கோட்(டு) ஆமான் ஊனொடு காட்ட 10
மதன்உடை வேழத்து வெண்கோடு கொண்டு
பொன்உடை நியமத்துப் பிழிநொடை கொடுக்கும்
குன்றுதலை மணந்த புன்புல வைப்பும்
காலம் அன்றியும் கரும்(பு)அறுத்(து) ஒழியா(து)
அ஡஢கால் அவித்துப் பலபூ விழவின் 15
தேம்பாய் மருதம் முதல்படக் கொன்று
வெண்தலைச் செம்புனல் பரந்துவாய் மிகுக்கும்
பலசூழ் பதப்பர் பா஢ய வெள்ளத்துச்
சிறைகொள் பூசலின் *புகன்ற ஆயம்*
முழவிமிழ் மூதூர் விழவுக்காணூஉப் பெயரும் 20
செழும்பல் வைப்பி பழனப் பாலும்
ஏனல் உழவர் வரகுமீ(து) இட்ட
கான்மிகு குளவிய வன்புசேர் இருக்கை
மென்தினை நுவணை முறைமுறை பகுக்கும்
புன்புலம் தழீஇய புறஅணி வைப்பும் 25
பல்பூஞ் செம்மல் காடுபயம் மாறி
அரக்கத் தன்ன நுண்மணல் கோடுகொண்(டு)
ஒண்நுதல் மகளிர் கழலொடு மறுகும்
விண்உயர்ந்(து) ஓங்கிய கடற்றவும் பிறவும்
பணைகெழு வேந்தரும் வேளிரும்ஒன்று மொழிந்து 30
கடலவுங் காட்டவும் அரண்வலியார் நடுங்க
முரண்மிகு கடுங்குரல் விசும்(பு)அடை(பு) அதிரக்
கடுஞ்சினங் கடாஅய் முழங்கு மந்திரத்(து)
அருந்திறல் மரபின் கடவுள் பேணியர்
உயர்ந்தோன் ஏந்திய அரும்பெறல் பிண்டம் 35
கருங்கண் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க
நெய்த்தோர் தூஉய நிறைமகிழ் இரும்பலி
எறும்பும் மூசா இறும்பூது மரபின்
கருங்கண் காக்கையொடு பருந்(து)இருந் தார
ஓடாப் பூட்கை ஒண்பொறிக் கழல்கால் 40
பெரும்சமம் ததைந்த செருப்புகல் மறவர்
உருமுநிலன் அதிர்க்குங் குரலொடு கொளைபுணர்ந்து
பெருஞ்சோ(று) உகுத்தற் கெறியும்
கடுஞ்சின வேந்தேநின் தழங்குகுரல் முரசே.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework