பெயர் - சான்றோர் மெய்ம்மறை (12)
துறை - செந்துறைப் பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கு
வண்ணம் - ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
நிலம்நீர் வளிவிசும்(பு) என்ற நான்கின்
அளப்பா஢ யையே
நாள்கோள் திங்கள் ஞாயிறு கனைஅழல்
ஐந்(து)ஒருங்கு புணர்ந்த விளக்கத்(து) அனையை
போர்தலை மிகுத்த ஈர்ஐம் பதின்மரொடு 5
துப்புத்துறை போகிய துணி(வு)உடை யாண்மை
அக்குரன் அனைய கைவண் மையையே
அமர்கடந்து மலைந்த தும்பைப் பகைவர்
போர்பீ(டு) அழித்த செருப்புகல் முன்ப
கூற்றுவெகுண்டு வா஢னும் ஆற்றுமாற் றலையே 10
எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்து
நோன்பு஡஢த் தடக்கைச் *சான்றோர் மெய்ம்மறை*
வான்உறை மகளிர் நலன்இகல் கொள்ளும்
வயங்(கு)இழை கரந்த வண்டுபடு கதுப்பின்
ஒடுங்(கு)ஈர் ஓதிக் கொடுங்குழை கணவ 15
பலகளிற்றுத் தொழுதியொடு வெல்கொடி நுடங்கும்
படைஏர் உழவ பாடினி வேந்தே
இலங்குமணி மிடைந்த பொலங்கலத் திகி஡஢க்
கடல்அக வரைப்பின்இப் பொழில்முழு(து) ஆண்டநின்
முன்திணை முதல்வர் போல நின்றுநீ 20
கெடாஅ நல்லிசை நிலைஇத்
தவாஅ லியரோஇவ் வுலகமோ(டு) உடனே.


JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework