துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: ஊன்துவை அடிசில்

பொலம்பூந் தும்பைப் பொறிகிளர் தூணிப்
புற்(று)அடங்(கு) அரவின் ஒடுங்கிய அம்பின்
நொசி(வு)உடை வில்லின் ஒசியா நெஞ்சின்
களி(று)எறிந்து மு஡஢ந்த கதுவாய் எஃகின்
விழுமியோர் துவன்றிய அகன்கண் ணாட்பின் 5
எழுமுடி மார்பின் எய்திய சேரல்
குண்டுகண் அகழிய மதில்பல கடந்து
பண்டும் பண்டும்தாம் உள்அழித்(து) உண்ட
நாடுகெழு தாயத்து நனம்தலை அருப்பத்துக்
கதவம் காக்கும் கணைஎழு அன்ன 10
நிலம்பெறு திணிதோள் உயர ஓச்சிப்
பிணம்பிறங்(கு) அழுவத்துத் துணங்கை ஆடிச்
சோறுவே(று) என்னா *ஊன்துவை அடிசில்*
ஓடாப் பீடர் உள்வழி இறுத்து
முள்இடு(பு) அறியா ஏணித் தெவ்வர் 15
சிலைவிசை அடக்கிய மூ஡஢ வெண்தோல்
அனைய பண்பின் தானை மன்னர்
இனியார் உளரோநின் முன்னும் இல்லை
மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது
20 விலங்குவளி கடவும் துளங்(கு)இரும் கமம்சூல் 20
வயங்குமணி இமைப்பின் வேல்இடுபு
முழங்குதிரைப் பனிக்கடல் மறுத்திசி னோரே.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework