துறை: செந்துறைப்பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: மாகூர் திங்கள்

பகல்நீ(டு) ஆகா(து) இரவுப்பொழுது பெருகி
மாசி நின்ற *மாகூர் திங்கள்*
பனிச்சுரம் படரும் பாண்மகன் உவப்பப்
புல்இருள் விடியப் புலம்புசேண் அகலப்
பாய்இருள் நீங்கப் பல்கதிர் பரப்பி 5
ஞாயிறு குணமுதல் தோன்றி யாஅங்(கு)
இரவன் மாக்கள் சிறுகுடி பெருக
உலகம் தங்கிய மேம்படு கற்பின்
வில்லோர் மெய்ம்மறை வீற்(று)இரும் கொற்றத்துச்
செல்வர் செல்வ சேர்ந்தோர்க் கரணம் 10
அறியா(து) எதிர்ந்து துப்பின் குறைஉற்றுப்
பணிந்துதிறை தருபநின் பகைவர் ஆயின்
சினம்செலத் தணியுமோ வாழ்கநின் கண்ணி
பல்வேறு வகைய நனம்தலை ஈண்டிய
மலையவும் கடலவும் பண்ணியம் பகுக்கும் 15
ஆறுமுட்(டு) உறாஅ(து) அறம்பு஡஢ந்(து) ஒழுகும்
நாடல் சான்ற துப்பின் பணைத்தோள்
பாடுசால் நன்கலம் தரூஉம்
நாடுபுறந் தருதல் நினக்குமார் கடனே.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework