இமைய வரம்பன் தம்பி அமைவர
உம்பற் காட்டைத் தன்கோல் நிறீஇ
அகப்பா எறிந்து பகல்தீ வேட்டு
மதிஉறழ் மரபின் முதியரைத் தழீஇக்
கண்ணகன் வைப்பின் மண்வகுத்(து) ஈத்துக் 5
கருங்களிற்(று) யானைப் புணர்நிரை நீட்டி
இருகடல் நீணரும் ஒருபகல் ஆடி
அயிரை பரைஇ ஆற்றல்சால் முன்போ(டு)
ஒடுங்கா நல்இசை உயர்ந்த கேள்வி
நெடும்பார தாயனார் முந்(து)உறக் காடுபோந்த 10

*பல்யானைச் செல்கெழு குட்டுவனைப்
பாலைக் கெளதமனார்* பாடினார் பத்துப்பாட்டு.

அவைதாம்: அடுநெய்யாவுதி, கயிறு குறுமுகவை, ததைந்தகாஞ்சி,
சீர்சால்வெள்ளி, கானுணங்குகடுநெறி, காடுறுகடுநெறி,
தொடந்தகுவளை, உருத்துவரு மலிர்நிறை, வெண்கைமகளிர், புகன்றாவாயம்.
இவை பாட்டின் பதிகம்.

பாடிப்பெற்ற பரிசில்: 'நீர் வெண்டியது கொண்மின்' என 'யானும் என் பார்ப்பனியும்
சுவர்க்கம் புகல் வெண்டும்' என, பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு ஒன்பது
பெருவேள்வி வேட்பிக்கப் பத்தாம் பெருவேள்வியிற் பார்ப்பானையும் பார்ப்பனியையும்
காணாராயினார்.
இமயவரம்பன்றம்பி பல்யானைச்செல்கெழு குட்டுவன் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework