பெயர் - கானுணங்கு கடுநெறி (8)
துறை - வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
வண்ணம் - ஒழுகு வண்ணமும் சொற்சீர்வண்ணமும்


மாஆ டியபுலன் நாஞ்சி ல்ஆடா
கடாஅம் சென்னிய கடுங்கண் யானை
இனம்பரந்த புலம் வளம்பரப்(பு) அறியா
நின்படைஞர், சேர்ந்த மன்றம் கழுதை போகி
நீ, உடன்றோர் மன்எயில் தோட்டி வையா 5
கடுங்கால் ஒற்றலின் சுடர்சிறந்(து) உருத்துப்
பசும்பிசிர் ஒள்அழல் ஆடிய மருங்கின்
ஆண்தலை வழங்கும் *கான்உணங்கு கடுநெறி*
முனைஅகன் பெரும்பாழ் ஆக மன்னிய
உரும்உறழ்(பு) இரங்கும் முரசிற் பெருமலை 10
வரைஇழி அருவியின் ஒளிறுகொடி நுடங்கக்
கடும்பா஢க் கதழ்சிற(கு) அகைப்பநீ
நெடுந்தேர் ஓட்டியபிறர் அகன்தலை நாடே.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework