துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: கமழ்குரல் துழாய்

குன்றுதலை மணந்து குழூஉக்கடல் உடுத்த
மண்கெழு ஞாலத்து மாந்தர் ஓர்ஆங்குக்
கைசுமந்(து) அலறும் பூசல் மாதிரத்து
நால்வேறு நனம்தலை யொருங்கெழுந்(து) ஒலிப்பத்
தெள்உயர் வடிமணி எறியுநர் கல்லென 5
உண்ணாப் பைஞ்ஞிலம் பனித்துறை மண்ணி
வண்(டு)ஊது பொலிதார்த் திருஞெமர் அகலத்துக்
கண்பொரு திகி஡஢க் *கமழ்குரல் துழாஅய்*
அலங்கற் செல்வன் சேவடி பரவி
நெஞ்சுமலி உவகையர் துஞ்சுபதிப் பெயர 10
மணிநிற மையிருள் அகல நிலாவி஡஢பு
கோடுகூடு மதியம் இயல்உற் றாங்குத்
துளங்குகுடி விழுத்திணை திருத்தி முரசுகொண்(டு)
ஆண்கடன் நிறுத்தநின் பூண்கிளர் வியன்மார்பு
கருவி வானம் தண்தளி தலைஇய 15
வடதெற்கு விலங்கி விலகுதலைத்(து) எழிலிய
பனிவார் விண்டு விறல்வரை அற்றே
கடவுள் அஞ்சி வானத்(து) இழைத்த
தூங்(கு)எயில் கதவம் காவல் கொண்ட
எழூஉநிவந்(து) அன்ன பரேர்எறுழ் முழவுத்தோள் 20
வெண்திரை முந்நீர் வளைஇய உலகத்து
வண்புகழ் நிறுத்த வகைசால் செல்வத்து
வண்டன் அனையைமன் நீயே வண்டுபட
ஒலிந்த கூந்தல் அறம்சால் கற்பின்
குழைக்குவிளக்(கு) ஆகிய அவ்வாங்(கு) உந்தி 25
விசும்புவழங்கு மகளிர் உள்ளும் சிறந்த
செம்மீன் அனையள்நின் தொல்நகர்ச் செல்வி
நிலன்அதிர்(பு) இரங்கல ஆகி வலன்ஏர்பு
வியன்பணை முழங்கும் வேல்மூ(சு) அழுவத்(து) 30
அடங்கிய புடையல் பொலம்கழல் நோன்தாள்
ஒடுங்காத் தெவ்வர் ஊக்(கு)அறக் கடைஇப்
புறக்கொடை எறியார்நின் மறப்படை கொள்ளுநர்
நகைவர்க்(கு) அரணம் ஆகிப் பகைவர்க்குச்
சூர்நிகழ்ந் தற்றுநின் தானை 35
போர்மிகு குருசில்நீ மாண்டனை பலவே.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework