மன்னிய பெரும்புகழ் மறுஇல் வாய்மொழி
இன்இசை முரசின் உதியஞ் சேரற்கு
வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்றமகன்
அமைவரல் அருவி இமையம் வில்பொறித்(து)
இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத் 5
தன்கோல் நிறீஇத் தகைசால் சிறப்பொடு
பேர்இசை மரபின் ஆ஡஢யர் வணக்கி
நயன்இல் வன்சொல் யவனர்ப் பிணித்து
நெய்தலைப் பெய்து கைபின் கொளீஇ
அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு 10
பெருவிறல் மூதூர்த் தந்துபிறர்க்(கு) உதவி
அமையார்த் தேய்த்த அணங்(கு)உடை நோன்தாள்

இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனைக்
குமட்டூர்க் கண்ணனார் பாடினார் பத்துப்பாட்டு.

அவைதாம்: புண்ணுமிழ் குருதி, மறம்வீங்கு பல்புகழ், பூத்த நெய்தல்,
சான்றோர் மெய்ம்மறை, நிரைய வெள்ளம், துயிலின் பாயல்,
வலம்படுவியன்பணை, கூந்தல் விறலியர், வளனறு பைதிரம், அட்டுமலர்மார்பன்
இவை பாட்டின் பதிகம்.

பாடிப்பெற்ற பரிசில்: உம்பற்காட்டு ஐந்நூறூர் பிரமதாயம்* கொடுத்து
முப்பத்தெட்டுயாண்டு தென்னாட்டுள் வருவதனிற் பாகம் கொடுத்தான்.

இமைய வரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத்தெட்டுயாண்டு வீற்றிருந்தான்.

[*பிரமதாயம் = அந்தணர்களுக்கு விடப்படும் இறையிலி நிலம்]
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework