நீலகேசி என்பது ஐஞ்சிறு காப்பியங்கள் எனப்படும் ஐந்து தமிழ் இலக்கிய நூல்களுள் ஒன்று. சமண சமய நூலான நீலகேசி ஒரு கதைப் பின்னணியில் சமணக் கொள்கைகளை விளக்குகின்றது. தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் இதுவெனக் கூறப்படுகின்றது. பௌத்த சமயத்தின் பெருமை கூற எழுந்த காப்பியமான குண்டலகேசி எனும் நூலுக்கு மறுப்பாகவே நீலகேசி எழுதப்பட்டுள்ளது. எனினும் இதனை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை.

இந்நூல் கடவுள் வாழ்த்து தவிரப் 10 பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது. இப் பதினொரு பகுதிகளிலும் மொத்தமாக 894 பாடல்கள் உள்ளன.

  1. கடவுள் வாழ்த்து
  2. தர்ம உரை
  3. குண்டலகேசி வாதம்
  4. அர்க்க சந்திர வாதம்
  5. மொக்கல வாதம்
  6. புத்த வாதம்
  7. ஆசீவக வாதம்
  8. சாங்கிய வாதம்
  9. வைசேடிக வாதம்
  10. வேத வாதம்
  11. பூத வாதம்

 

Add a comment

தமிழில் எழுந்த ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான யசோதர காவியம், ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும். இந்நூல் நான்கு சருக்கங்களில் 320 விருத்தப்பாக்களால் ஆன இதன் ஆசிரியர் பெயரும் தெரியவில்லை.

இராசமாபுரத்து அரசன் மாரிதத்தன் உயிர்களைப் பலியிட்டு வந்தான். அவனுக்கு உயிர்க்கொலை தீது என்று உணர்த்துவதற்காக எழுதப்பட்ட காப்பியம் இது. மறுபிறவிகள், சிற்றின்பத்தின் சிறுமை, பேரின்பத்தின் பெருமை, ஒழுக்கத்தின் உயர்வு போன்றவற்றை விவரிப்பது இந்நூல். இது ஒரு வடமொழி நூலின் தழுவல். எளிய நடையும் நயமான பாக்களும் உடைய நூல் இது. காலம் 13-ஆம் நூற்றாண்டு. இசை காமத்தைத் தூண்டும் என்பதையும், கர்மத்தின் விளைவுகளையும் எடுத்தியம்பும் இக்கதை உத்தரபுராணத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் புட்பந்தர் கதையின் தமிழ் வடிவம் என்றும் இதன் ஆசிரியர் வெண்ணாவலுடையார் வேள் என்றும் கூறுவோர் உண்டு.

தற்சிறப்புப்பாயிரம்

கடவுள் வாழ்த்து

1) உலக மூன்று மொருங்குணர் கேவலத்
தலகி லாத வனந்த குணக்கடல்
விலகி வெவ்வினை வீடு விளைப்பதற்
கிலகு மாமலர்ச் சேவடி யேத்துவாம்.

2) நாத னம்முனி சுவ்வத னல்கிய
தீது தீர்திகழ் தீர்த்தஞ்செல் கின்றநாள்
ஏத மஃகி யசோதர னெய்திய
தோத வுள்ள மொருப்படு கின்றதே.


அவையடக்கம்

3) உள்வி ரிந்த புகைக்கொடி யுண்டென
எள்ளு கின்றன ரில்லை விளக்கினை
உள்ளு கின்ற பொருட்டிற மோர்பவர்
கொள்வ ரெம்முரை கூறுதற் பாலதே.

நூல் நுவல் பொருள்

4) மருவு வெவ்வினை வாயின் மறுத்துடன்
பொருவில் புண்ணிய போகம் புணர்ப்பதும்
வெருவு செய்யும் வினைப்பய னிற்றெனத்
தெரிவு றுப்பதுஞ் செப்புத லுற்றதே.


நூல்

முதற் சருக்கம்

நாட்டுச் சிறப்பு

5) பைம்பொன் னாவற் பொழிற்பர தத்திடை
நம்பு நீரணி நாடுள தூடுபோய்
வம்பு வார்பொழில் மாமுகில் சூடுவ
திம்ப ரீடில தௌதய மென்பதே.

நகரச் சிறப்பு்

6) திசையு லாமிசை யுந்திரு வுந்நிலாய்
வசை யிலாநகர் வானவர் போகமஃ
தசைவி லாவள காபுரி தானலால்
இசைவி லாதவி ராசபு ரம்மதே.

7) இஞ்சி மஞ்சினை யெய்தி நிமிர்ந்தது
மஞ்சு லாமதி சூடின மாளிகை
அஞ்சொ லாரவர் பாடலொ டாடலால்
விஞ்சை யாருல கத்தினை வெல்லுமே.

அரசனியல்பு

8) பாரி தத்தினைப் பண்டையின் மும்மடி
பூரி தத்தொளிர் மாலைவெண் பொற்குடை
வாரி தத்தின் மலர்ந்த கொடைக்கரன்
மாரி தத்தனென் பானுளன் மன்னவன்.

9) அரசன் மற்றவன் றன்னொடு மந்நகர்
மருவு மானுயர் வானவர் போகமும்
பொருவில் வீடு புணர்திற மும்மிவை
தெரிவ தொன்றிலர் செல்வ மயக்கினால்.

வேனில் வரவு

10) நெரிந்த நுண்குழல் நேரிமை யாருழை
சரிந்த காதற் றடையில தாகவே
வரிந்த வெஞ்சிலை மன்னவன் வைகுநாள்
விரிந்த தின்னிள வேனிற் பருவமே.

வசந்தமன்னனை வரவேற்றல்

11) கோங்கு பொற்குடை கொண்டு கவித்தன
வாங்கு வாகை வளைத்தன சாமரை
கூங்கு யிற்குல மின்னியங் கொண்டொலி
பாங்கு வண்டொடு பாடின தேனினம்.

இதுவுமது

12) மலர்ந்த பூஞ்சிகை வார்கொடி மங்கையர
தலந்த லந்தொறு மாடினர் தாழ்ந்தனர்
கலந்த காதன்மை காட்டுநர் போலவே
வலந்த வண்டளிர் மாவின மேயெலாம்.

அரசனும் நகரமாந்தரும் வசந்தவிழா அயர முற்படுதல்

13) உயர்ந்த சோலைக ளூடெதிர் கொண்டிட
வயந்த மன்னவன் வந்தன னென்றலும்
நயந்த மன்னனு’ நன்னகர் மாந்தரும்
வயந்த மாடு வகையின ராயினர்.

14) கானும் வாவியுங் காவு மடுத்துடன்
வேனி லாடல் விரும்பிய போழ்தினில்
மான யானைய மன்னவன் றன்னுழை
ஏனை மாந்த ரிறைஞ்சுபு’ கூறினார்.

ஏனைமாந்தர் மன்னனிடம் மாரியின் வழிபாடு வேண்டுமெனல்

15) என்று மிப்பரு வத்தினோ டைப்பசி
சென்று தேவி சிறப்பது செய்துமஃ
தொன்று மோரல மாயின மொன்றலா
நன்ற லாதன நங்களை வந்துறும்.

இதுவுமது

16) நோவு செய்திடு நோய்பல வாக்கிடும்
ஆவி கொள்ளும் அலாதன வுஞ்செயும்
தேவி சிந்தை சிதைந்தனள் சீறுமேல்
காவல் மன்ன கடிதெழு கென்றனர்.

அரசன் தேவிபூசைக்குச் செல்லுதல்

17) என்று கூறலு மேதமி தென்றிலன்
சென்று நல்லறத் திற்றெளி வின்மையால்
நன்றி தென்றுதன் நன்னக ரப்புறத்
தென்றி சைக்கட் சிறப்பொடு சென்றனன்.

தேவியின் கோயிலை அடைதல்

18) சண்ட கோபி தகவிலி தத்துவங்
கொண்ட கேள்வியுங் கூரறி வும்மிலாத்
தொண்டர் கொண்டு தொழுந்துருத் தேவதை
கண்ட மாரி தனதிட மெய்தினான்.

அரசன் மாரிதேவதையை வணங்குதல்

19) பாவ மூர்த்தி படிவ மிருந்தவத்
தேவி மாட மடைந்து செறிகழன்
மாவ லோன்வலங் கொண்டு வணங்கினன்
தேவி யெம்மிடர் சிந்துக வென்றரோ.

20) மன்ன னாணையின் மாமயில் வாரணம்
துன்னு சூகர மாடெரு மைத்தொகை
இன்ன சாதி விலங்கி லிரட்டைகள்
பின்னி வந்து பிறங்கின கண்டனன்.

21) யானிவ் வாளினின் மக்க ளிரட்டையை
ஈன மில்பலி யாக வியற்றினால்
ஏனை மானுயர் தாமிவ் விலங்கினில்
ஆன பூசனை யாற்றுத லாற்றென.

22) வாட லொன்றிலன் மக்க ளிரட்டையை
யீடி லாத வியல்பினி லில்வழி
யேட சண்ட கருமதந் தீகென
நாட வோடின னன்னகர் தன்னுளே.

அந்நகர்ச் சோலையின்கண் முனிவர்சங்கம் வருதல்

23) ஆயிடைச் சுதத்த னைஞ்ஞூற் றுவரருந் தவர்க ளோடுந்
தூயமா தவத்தின் மிக்க வுபாசகர் தொகையுஞ் சூழச்
சேயிடைச் சென்றோர் தீர்த்த வந்தனை செய்யச் செல்வோன்
மாயமில் குணக்குன் றன்ன மாதவர்க் கிறைவன் வந்தான்.

சங்கத்தார் உபவாச தவம் கைக்கொள்ளுதல்

24) வந்துமா நகர்ப்பு றத்தோர் வளமலர்ப் பொழிலுள் விட்டுச்¢
சிந்தையா னெறிக்கட் டீமை தீ¢¢ர்த்திடும் நியம முற்றி
அந்திலா சனங்கொண்டண்ண லனசனத் தவன மர்ந்தான்¢
முந்துநா முரைத்த சுற்ற முழுவதி னோடு மாதோ.

சிராவகர்கூட்டத்திலுள்ள இளைஞரிருவர்களின் வணக்கம்

25) உளங்கொள மலிந்த கொள்கை யுபாசகர் குழுவி னுள்ளார்
அளந்தறி வரிய கேள்வி யபயமுன் னுருசி தங்கை
யிளம்பிறை யனைய நீரா ளபயமா மதியென் பாளும்
துளங்கிய மெய்ய ருள்ளந் துளங்கலர் தொழுது நின்றார்.

சுதத்தாசாரியர் கருணையால் இளைஞரைச் சரியை செல்லப் பணித்தல்்

26) அம்முனி யவர்க டம்மை யருளிய மனத்த னாகி
வம்மினீர் பசியின் வாடி வருந்திய மெய்ய ரானீர்
எம்முட னுண்டி மாற்றா தின்றுநீர் சரியை போகி
நம்மிடை வருக வென்ன நற்றவற் றொழுது சென்றார்.

இளைஞர் சரிகை செல்லுதல்

27) வள்ளிய மலருஞ் சாந்தும் மணிபுனை கலனு மின்றாய்
வெள்ளிய துடையோன் றாகி வென்றவ ருருவ மேலார்
கொள்ளிய லமைந்த கோலக் குல்லக வேடங் கொண்ட
வள்ளலு மடந்தை தானும் வளநகர் மருளப் புக்கார்.

இதுவுமது்

28) வில்லின தெல்லைக் கண்ணால் நோக்கிமெல் லடிகள் பாவி
நல்லருள் புரிந்து யி¢ர்க்கண் ணகைமுத லாய நாணி
யில்லவ ரெதிர்கொண் டீயி னெதிர்கொளுண்டியரு மாகி
நல்லற வமுத முண்டார் நடந்தனர் வீதி யூடே.

மன்னவனேவல் பெற்ற சண்டகருமன் இளைஞர்களைக் கண்டு கலங்குதல்

29) அண்டல ரெனினுங் கண்டா லன்புவைத் தஞ்சு நீரார்க்
கண்டனன் கண்டு சண்ட கருமனும் மனங்க லங்காப்
புண்டரீ கத்தின் கொம்பும் பொருவில்மன் மதனும் போன்று
கொண்டிளம் பருவ மென்கொல் குழைந்திவண் வந்த தென்றான்.

இளைஞரைப் பலியிடப் பிடித் தேகுதல்

30) எனமனத் தெண்ணி நெஞ்சத் திரங்கியும் மன்ன னேவல்
தனைநினைந் தவர்க டம்மைத் தன்னுழை யவரின் வவ்விச்
சினமலி தேவி கோயிற் றிசைமுக மடுத்துச் சென்றான்.
இனையது பட்ட தின்றென் றிளையரு மெண்ணி னாரே.

31) வன்சொல்வாய் மறவர் சூழ மதியமோர் மின்னொ டொன்றித்
தன்பரி வேடந் தன்னுள் தானனி வருவ தேபோல்
அன்பினா லையன் றங்கை யஞ்சுத லஞ்சி நெஞ்சில்
தன்கையான்முன்கைபற்றித் தானவட்கொண்டு செல்வான்)

32) நங்கை யஞ்சல் நெஞ்சி னமக்கிவ ணழிவொன் றில்லை
யிங்குநம் முடம்பிற் கேதமெய்துவ திவரி னெய்தின்
அங்கதற் கழுங்க லென்னை யதுநம தன்றென் றன்றோ
மங்கையா மதனை முன்னே மனத்தினில்விடுத்ததென்றான்

33) அஞ்சின மெனினு மெய்யே யடையபவந் தடையு மானால்
அஞ்சுத லதனி னென்னை பயனமக் கதுவு மன்றி¢
அஞ்சுதற் றுன்பந் தானே யல்லது மதனிற் சூழ்ந்த
நஞ்சன வினைக ணம்மை நாடொறு நலியு மென்றான்.

34) அல்லது மன்னை நின்னோ டியானுமுன் னனேக வாரந்
தொல்வினை துரப்ப வோடி விலங்கிடைச் சுழன்ற போழ்தின்
நல்லுயி¢ர் நமர்க டாமே நலிந்திட விளிந்த தெல்லாம்
மல்லன்மா தவனி னாமே மறித்துணர்ந் தனமு மன்றோ.

35) கறங்கென வினையி னோடிக் கதியொரு நான்கி னுள்ளும்
பிறந்தநாம் பெற்ற பெற்ற பிறவிகள் பேச லாகா
இறந்தன விறந்து போக வெய்துவ தெய்திப் பின்னும்
பிறந்திட விறந்த தெல்லா மிதுவுமவ் வியல்பிற் றேயாம்.

36) பிறந்தநம் பிறவிதோறும் பெறுமுடம் பவைகள் பேணாத்
துறந்தறம் புணரின் நம்மைத் தொடர்ந்தன வல்ல தோகாய்
சிறந்ததை யிதுவென் றெண்ணிச் செம்மையே செய்யத் தாமே
இறந்தன விறந்த காலத் தெண்ணிறந்தன களெல்லாம்.

(இதுமுதல் நான்கு கவிகளால் நான்கு கதிகளிலும் உயிர்களடையும் வரலாற்றைக் கூறுவார்)

நரககதி வரலாறு

37) முழமொரு மூன்றிற் றொட்டு மூரிவெஞ் சிலைக ளைஞ்ஞூ
றெழுமுறை பெருகி மேன்மே லெய்திய வுருவ மெல்லாம்
அழலினுள் மூழ்கி யன்ன வருநவை நரகந் தம்முள்
உழைவிழி நம்மொ டொன்றி யொருவின வுணர லாமோ.

விலங்குகதி வரலாறு

38) அங்குலி யயங்கம் பாக மணுமுறை பெருகி மேன்மேல்
பொங்கிய வீரைஞ் ஞூறு புகைபெறு முடையு டம்பு
வெங்கனல் வினையின் மேனாள் விலங்கிடைப் புக்கு வீழ்ந்து
நங்களை வந்து கூடி நடந்தன வனந்த மன்றோ.

மனுஷ்யகதி வரலாறு்

39) ஓரினார் முழங்கை தன்மே லோரொரு பதேசமேறி
மூரிவெஞ் சிலைகண் மூவி ராயிர முற்ற வுற்ற (விட்ட
பாரின்மேல் மனிதர் யாக்கை பண்டுநாங் கொண்டு
வாரிவாய் மணலு மாற்றா வகையின வல்ல வோதான்.

தேவகதி வரலாறு

40) இருமுழ மாதி யாக வெய்திய வகையி னோங்கி
வருசிலை யிருபத் தைந்தின் வந்துறு மங்க மெல்லாந
திருமலி தவத்திற் சென்று தேவர்தமுலகிற் பெற்ற(றோ.
தொருவரா லுரைக்க லாமோ வுலந்தன வனந்தமன்

தேவ நரக யாக்கையின் விருப்பும் வெறுப்பும்

41) துன்பகா ரணமி தென்றே துடக்கறு கெனவுஞ் துஞ்சா
அன்புறா நரகர் யாக்கை யவைகளு மமரர் கற்பத்
தின்பக்காரணமி தென்றே யெம்முட னியல்க வென்றே
அன்புசெய் தனக டாமு மழியுநா ளழியு மன்றே.

42) வந்துடன் வணங்கும் வானோர் மணிபுனை மகுடகோடி
தந்திரு வடிக ளேந்துந் தமனிய பீட மாக
இந்திர விபவம் பெற்ற விமையவ ரிறைவ ரேனுந்
தந்திரு வுருவம் பொன்றத் தளர்ந்தன ரனந்த மன்றோ.

43) மக்களின் பிறவி யுள்ளும் மன்னர்தம் மன்ன ராகித்
தி¢க்கெலா மடிப்ப டுத்துந் திகிரியஞ் செல்வ ரேனும்
அக்குலத் துடம்பு தோன்றி யன்றுதொட் டின்று காறும்
ஒக்கநின் றார்கள் வையத் தொருவரு மில்லை யன்றே.

44) ஆடைமுன் னுடீஇய திட்டோ ரந்துகி லசைத்த லொன்
மாடமுன் னதுவி டுத்தோர் வளமனை புதிதின் வாழ்தல் [றோ
நாடினெவ் வகையு மஃதே நமதிறப் பொடுபி றப்பும்
பாடுவ தினியென் நங்கை பரிவொழிந் திடுக வென்றான்.

அபயமதி தன் உள்ளக்கிடக்கையே வெளியிடல்

45) அண்ணனீ யருளிற் றெல்லா மருவருப் புடைய மெய்யின்
நண்ணிய நமதென் னுள்ளத் தவர்களுக் குறுதி நாடி
விண்ணின்மே லின்ப மல்லால் விழைபயன் வெறுத்துநின்ற
கண்ணனாய் நங்கட் கின்ன கட்டுரை யென்னை யென்றாள்.

இதுவுமது.

46) அருவினை விளையு ளாய அருந்துயர்ப் பிறவி தோறும்
வெருவிய மனத்து நம்மை வீடில விளைந்த வாறுந்
திருவுடை யடிக டந்த திருவறப் பயனுந் தேறி (டோ.)
வெருவிநாம் விடுத்த வாழ்க்கை விடுவதற் கஞ்ச லுண்

இதுவுமது

47) பெண்ணுயி ரௌ¤ய தாமே பெருந்திற லறிவும் பேராத்
திண்மையு முடைய வல்ல சிந்தையி னென்ப தெண்ணி
அண்ணனீ யருளிச் செய்தா யன்றிநல் லறத்திற்காட்சி
கண்ணிய மனத்த ரிம்மைக் காதலு முடைய ரோதான்.

48) இன்றிவ ணைய வென்க ணருளிய பொருளி தெல்லாம்
நன்றென நயந்து கொண்டே னடுக்கமு மடுத்த தில்லை
என்றெனக் கிறைவ னீயே யெனவிரு கையுங் கூப்பி
இன்றுயான் யாது செய்வ தருளுக தெருள வென்றாள்.

இறுதியில் நினைக்கவேண்டிய திதுவெனல்.

49) ஒன்றிய வுடம்பின் வேறாம் உயிரின துருவ முள்ளி
நன்றென நயந்து நங்கள் நல்லறப் பெருமை நாடி
வென்றவர் சரண மூழ்கி விடுதுநம் முடல மென்றான்
நன்றிது செய்கை யென்றே நங்கையும் நயந்த கொண்

இருவரும் உயிரின் இலக்கணம் உன்னுதல்.

50) ‘அறிவொடா லோக முள்ளிட் டனந்தமா மியல்பிற் றாகி
அறிதலுக் கரிய தாகி யருவமா யமல மாகிக் (வேறா
குறுகிய தடற்றுள் வாள்போற் கொண்டிய லுடம்பின்
யிறுகிய வினையு மல்ல தெமதியல் பென்று நின்றார்.‘

இருவரும் மும்மணிகளை எண்ணி மகிழ்தல்

51) உறுதியைப் பெரிது மாக்கி யுலகினுக் கிறைமை நல்கிப்
பிறவிசெற் றரிய வீட்டின் பெருமையைத் தருதலானும்
அறிவினிற் றெளிந்த மாட்சி யரதனத் திரய மென்னும்
பெறுதலுக் கரிய செல்வம் பெற்றனம் பெரிதுமென்றார்.

சித்தர் வணக்கம்

52) ஈங்குநம் மிடர்க டீர்க்கு மியல்பினார் நினைது மேலிவ்
வோங்கிய வுலகத் தும்ப ரொளிசிகாமணியி னின்றார்
வீங்கிய கருமக் கேட்டின் விரிந்தவெண் குணத்த ராகித்
தீங்கெலா மகற்றி நின்ற சித்தரே செல்லல் தீர்ப்பா£.¢

அருகர் வணக்கம்

53) பெருமலை யனைய காதிப் பெரும்பகை பெயர்த்துப்பெற்ற
திருமலி கடையி னான்மைத் திருவொடு திளைப்பரேனும்
உரிமையி னுயிர்கட் கெல்லா மொருதனி விளக்கமாகித்
திருமொழியருளுந் தீர்த்த கரர்களே துயர்க டீர்ப்பார்.

ஆசார்¢யர் வணக்கம்

54) ஐவகை யொழுக்க மென்னு மருங்கல மொருங் கணிந்தார
மெய்வகை விளக்கஞ் சொல்லி நல்லற மிகவ ளிப்பார்
பவ்வியர் தம்மைத் தம்போற் பஞ்சநல் லொழுக்கம் பாரித்
தவ்விய மகற்றந் தொல்லா சிரியரெம் மல்ல றீர்ப்பார்.

உபாத்தியாயர் வணக்கம்

55) அங்க நூலாதி யாவு மரிறபத் தெரிந்து தீமைப்
பங்கவிழ் பங்க மாடிப் பரமநன் னெறிப யின்றிட்
டங்கபூ வாதி மெய்ந்நூ லமிழ்தகப் படுத்த டைந்த
நங்களுக் களிக்கு நீரார் நம்வினை கழுவு நீரார்.

சர்வசாது வணக்கம்

56) பேதுறு பிறவி போக்கும் பெருந்திரு வுருவுக் கேற்ற
கோதறு குணங்கள் பெய்த கொள்கல மனைய ராகிச்
சேதியின் நெறியின வேறு சிறந்தது சிந்தை செய்யாச்
சாதுவ ரன்றி யாரே சரண்நமக் குலகி னாவார்.


57) இனையன நினைவை யோரு மிளைஞரை விரைவிற் கொண்டு
தனைர சருளும் பெற்றிச் சண்டனச் சண்ட மாரி
முனைமுக வாயிற் பீட முன்னருய்த் திட்டு நிற்பக
கனைகழ லரச னையோ கையில்வா ளுருவி னானே.

இளைஞர் புன்முறுவல் செய்தல்

58) கொலைக்களங் குறுகி நின்றுங் குலுங்கலர் டம்மால்
இலக்கண மமைந்த மெய்ய ரிருவரு மியைந்து நிற்ப
நிலத்திறை மன்னன் வாழ்க நெடிதென வுரைமி னென்றார்.
மலக்கிலா மனத்தர் தம்வாய் வறியதோர் முறுவல் செய்தார்.

இளைஞர் மன்னனை வாழ்த்துதல்

59) மறவியின் மயங்கி வையத் துயிர்களை வருத்தஞ் செய்யா
தறவியன் மனத்தை யாகி யாருயிர்க் கருள் பரப்பிச்
சிறையன பிறவி போக்குந் திருவற மருவிச் சென்று
நிறைபுக முலகங் காத்து நீடுவாழ்க கென்று நின்றார்.

மன்னவன் மனமாற்ற மடைதல்

60) நின்றவர் தம்மை நோக்கி நிலைதளர்ந் திட்டு மன்னன்(கொல்
மின்றிகழ் மேனி யார்கொல் விஞ்சையர் விண்ணுளார்
அன்றியில் வுருவம் மண்மே லவர்களுக் கரிய தென்றால்
நின்றவர் நிலைமை தானு நினைவினுக் கரிய தென்றான்

அச்சமின்மை, நகைத்தல் ஆகிய இவற்றின் காரணம் வினாவிய வேந்தனுக்கு இளைஞர் விடையிறுத்தல்

61) இடுக்கண்வந் துறவு மெண்ணா தெரிசுடர் விளக்கி னென் [கொல்
நடுக்கமொன் றின்றி நம்பா னகுபொருள் கூறு கென்ன
அடுக்குவ தடுக்கு மானா லஞ்சுதல் பயனின் றென்றே
நடுக்கம தின்றி நின்றாம் நல்லறத் தௌ¤வு சென்றாம்.

இதுவுமது

62) முன்னுயி ருருவிற் கேத முயன்றுசெய் பாவந் தன்னா
லின்னபல் பிறவி தோறு மிடும்பைக் டொடர்ந்து வந்தோம்
மன்னுயிர்க் கொலையி னாலிம் மன்னன்வாழ் கென்னு
என்னதாய் விளையு மென்றே நக்கன மெம்மு ளென்றான்.

அங்குக் குழுமியுள்ள நகரமாந்தர் வியத்தல்

63) கண்ணினுக் கினிய மேனி காளைதன் கமல வாயிற்
பண்ணினுக் கினிய சொல்லைப் படியவர் முடியக் கேட்டே
அண்ணலுக் கழகி தாண்மை யழகினுக் கமைந்த தேனும்
பெண்ணினுக் கரசி யாண்மை பேசுதற் கரிய தென்றார்.

மன்னனும் வியத்தல்

64) மன்னனு மதனைக் கேட்டே மனமகிழ்ந் தினிய னாகி
என்னைநும் பிறவி முன்ன ரிறந்தன பிறந்து நின்ற
மன்னிய குலனு மென்னை வளரிளம் பருவந் தன்னில்
என்னைநீ ரினைய ராகி வந்தது மியம்பு கென்றான்.

அபயருசியின் மறுமொழி

65) அருளுடை மனத்த ராகி யறம்புரிந் தவர்கட் கல்லால்
மருளுடை மறவ ருக்கெம் வாய்மொழி மனத்திற்சென்று
பொருளியல் பாகி நில்லா புரவல கருதிற் றுண்டேல்
அருளியல் செய்து செல்க ஆகுவ தாக வென்றான்.

வேந்தன், கருணைக்குப் பாத்திரனாகி மீண்டும் வினவல்

66) அன்னண மண்ணல் கூற வருளுடை மனத்த னாகி
மன்னவன் றன்கை வாளு மனத்திடை மறனு மாற்றி
என்னினி யிறைவனீயே யெனக்கென விறைஞ்சிநின்று
பன்னுக குமர நுங்கள் பவத்தொடு பரிவு மென்றான்.

அபயருசியின் அறவுரை

67) மின்னொடு தொடர்ந்து மேகம் மேதினிக் கேதம் நீங்கப்
பொன்வரை முன்னர் நின்று புயல்பொழிந் திடுவதேபோல்
அன்னமென் னடையி னாளு மருகணைந் துருகும் வண்ண
மன்னவ குமரன் மன்னற் கறமழை பொழிய லுற்றான்

இதுமுதல் மூன்றுகவிகளால் இவ்வற வுரையின் பயன் கூறுகின்றார்.

68) எவ்வள விதனைக் கேட்பா ரிருவினை கழுவு நீரார்
அவ்வள வவருக் கூற்றுச் செறித்துட னுதிர்ப்பை யாக்கும்
மெய்வகை தெரிந்து மாற்றை வெருவினர் வீட்டையெய்துஞ்
செவ்விய ராகச் செய்து சிறப்பினை நிறுத்தும் வேந்தே.

69) மலமலி குரம்பை யின்கண் மனத்தெழு விகற்பை மாற்றும்
புலமவி போகத் தின்கண் ணாசையை பொன்று விக்கும்
கொலைமலி கொடுமை தன்னைக் குறைத்திடு மனத்திற் கோ
சிலைமலி நுதலி னார்தங் காதலிற் றீமை செப்பும்.

70) ‘புழுப் பிண்ட மாகி புறஞ் செய்யுந் தூய்மை
விழுப் பொருளை வீறழிப்பதாகி - அழுக் கொழுகும்
ஒன்பது வாயிற்றா மூன்குரம்பை மற்றிதனா
வின்பமதா மென்னா திழித் துவர்மின்‘

71) பிறந்தவர் முயற்சி யாலே பெறுபய னடைவ ரல்லா
லிறந்தவர் பிறந்த தில்லை யிருவினை தானு மில்லென
றறைந்தவ ரறிவி லாமை யதுவிடுத் தறநெ றிக்கட்
சிறந்தன முயலப் பண்ணுஞ் செப்புமிப் பொருண்மை

இளைஞர் தம் பழம் பிறப்பு முதலியன அறிந்த வரலாறு கூறல்

72) அறப்பொருள் விளைக்குங் காட்சி யருந்தவ ரருளிற் றன்றிப்
பிறப்புணர்ந் ததனின் யாமே பெயர்த்துணர்ந் திடவும் பட்ட
திறப்புவ மிதன்கட் டேற்ற மினிதுவைத் திடுமி னென்றான்
உறப்பணிந் தெவ முள்ளத் துவந்தனர் கேட்க லுற்றார்.


இரண்டாவது சருக்கம்

உஞ்சயினியின் சிறப்பு

73 ) வளவயல் வாரியின் மலிந்த பல்பதி
அளவறு சனபத மவந்தி யாமதின்
விளைபய னமரரும் விரும்பு நீர்மைய
துளதொரு நகரதுஞ் சயினி யென்பவே.

அசோகன் சிறப்பு

74) கந்தடு களிமத யானை மன்னவன்
இந்திர னெனுந்திற லசோக னென்றுளன்
சந்திர மதியெனு மடந்தை தன்னுடன்
அந்தமி லுவகையி னமர்ந்து வைகுநாள்

இக்காப்பியத் தலைவனான யசோதரன் பிறப்பு

75) இந்துவோ ரிளம்பிறை பயந்த தென்னவே
சந்திர மதியொரு தனயற் றந்தனள்
எந்துயர் களைபவ னெசோத ரன்னென
நந்திய புகழவ னாம மோதினான்.

யசோதரன் மணம்

76) இளங்களி றுழுவையி னேத மின்றியே
வளங்கெழு குமரனும் வளர்ந்து மன்னனாய்
விளங்கிழை யமிழ்தமுன் மதியை வேள்வியால்
உளங்கொளப் புணர்ந்துட னுவகை யெய்தினான்.

யசோமதியின் பிறப்பு

77) இளையவ ளெழினல மேந்து கொங்கையின்
விளைபய னெசோதரன் விழைந்து செல்லுநாள
கிளையவ ருவகையிற் கெழும வீன்றனள்
வளையவ ளெசோமதி மைந்தன் றன்னையே.

இதுமுதல் நான்கு கவிகளால் அசோகன் துறவெண்ணம்நிறைதல் கூறுகின்றார்.

78) மற்றோர்நாள் மன்னவன் மகிழ்ந்து கண்ணடி
பற்றுவா னடிதொழ படிவ நோக்குவான்
ஒற்றைவார் குழன்மயி ருச்சி வெண்மையை
யுற்றுறா வகையதை யுளைந்து கண்டனன்.

இளமை நிலையாமை

79) வண்டளிர் புரைதிரு மேனி மாதரார
கண்டக லுறவரு கழிய மூப்பிது
உண்டெனி லுளைந்திக லுருவ வில்லிதன்
வண்டுள கணைபயன் மனிதர்க் கென்றனன்.

துறவின் இன்றியமையாமை

80) இளமையி னியல்பிது வாய வென்னினிவ்
வளமையி லிளமையை மனத்து வைப்பதென்
கிளைமையு மனையதே கெழுமு நம்முளத
தளைமையை விடுவதே தகுவ தாமினி.

81) முந்துசெய் நல்வினை முளைப்ப வித்தலை
சிந்தைசெய் பொருளொடு செல்வ மெய்தினாம்
முந்தையின் மும்மடி முயன்று புண்ணிய
மிந்திர வுலகமு மெய்தற் பாலாதே.

யசோதரனுக்கு முடி சூட்டுதல்

82) இனையன நினைவுறீஇ யசோதர னெனுந்
தனையனை நிலமகட் டலைவ னாகெனக
கனை மணி வனைமுடி கவித்துக் காவலன
புனைவளை மதிமதி புலம்பப் போயினான்.

யசோதரன் அரசியல்

அசோகன் துறவு

83) குரைகழ லசோகன் மெய்க் குணதரற் பணிந்
தரைசர்க ளைம்பதிற் றிருவர் தம்முடன
உரைசெய லருந்தவத் துருவு கொண்டுபோய்
வரையுடை வனமது மருவி னானரோ.

84) எரிமணி யிமைக்கும் பூணா னிசோதர னிருநி லத்துக்
கொருமணி திலதம் போலு முஞ்சயி னிக்கு நாதன்
அருமணி முடிகொள் சென்னி யரசடிப் படுத்து யர்ந்த
குருமணி குடையி னீழற் குவலயங் காவல் கொண்டான்.

மன்னனின் மனமாட்சி

85) திருத்தகு குமரன் செல்வச் செருக்கினால் நெருக்குப்பட்டு
மருத்தெறி கடலிற் பொங்கி மறுகிய மனத்த னாகின்றி
உருத்தெழு சினத்திற் சென்ற வுள்ளமெய் மொழியோடொ
அருத்திசெய் தருத்த காமத் தறத்திற மறத் துறந்தான்.

86) அஞ்சுத லிலாத வெவ்வ ரவியமே லடர்த்துச் சென்று
வஞ்சனை பலவு நாடி வகுப்பன வகுத்து மன்னன்
புஞ்சிய பொருளு நாடும் புணர்திறம் புணர்ந்து நெஞ்சில்
தஞ்சுத லிலாத கண்ணன் றுணிவன துணிந்து நின்றான்

87) தோடலார் கோதை மாதர் துயரியிற் றொடுத் தெடுத்தப் கால்
பாடலொ டியைந்த பண்ணி னிசைச்சுவைப் பருகிப்பல்
ஊடலங் கினிய மின்னி னொல்கிய மகளி ராடும
நாடகம் நயந்து கண்டும் நாள்சில செல்லச் சென்றான்.

யசோதரன் பள்ளியறை சேர்தல்

88) மற்றோர்நாள் மன்னர் தம்மை மனைபுக விடுத்துமாலைக
கொற்றவே லவன்றன் கோயிற் குளிர்மணிக் கூடமொன்றிற
சுற்றுவார் திரையிற் றூமங் கமழ்துயிர் சேக்கை துன்னி
கற்றைவார் கவரி வீசக் களிசிறந் தினிதி ருந்தான்.

அமிர்தமதியும் பள்ளியறை சேர்தல்

89) சிலம்பொடு சிலம்பித் தேனுந் திருமணி வண்டும் பாடக்
கலம்பல வணிந்த வல்குற் கலையொலி கலவி யார்ப்ப
நலம்கவின் றினிய காமர் நறுமலர்த் தொடைய லேபோல்
அலங்கலங் குழல்பின் றாழ வமிழ்தமுன் மதிய ணைந்தாள்.

இருவரும் இன்பம் நுகர்தல்

90) ஆங்கவ ளணைந்த போழ்தி னைங்கணைக் குரிசி றந்த
பூங்கணை மாரி வெள்ளம் பொருதுவந் தலைப்பப் புல்லி
நீங்கல ரொருவ ருள்புக் கிருவரு மொருவ ராகித்
தேங்கம ழமளி தேம்பச் செறிந்தனர் திளைத்துவிள்ளா£.¢

இதுவுமது.

91) மடங்கனிந் தினிய நல்லாள் வனமுலைப் போக மெல்லாம
அடங்கல னயர்ந்து தேன்வா யமிர்தமும் பருகி யம்பொற்
படங்கடந் தகன்ற வல்குற் பாவையே புணைய தாக
விடங்கழித் தொழிவி லின்பக் கடலினுண் மூழ்கி னானே.

இருவரும் இன்பம் நுகர்ந்தபின் கண் உறங்கல்.

92) இன்னரிச் சிலம்புந் தேனு மெழில்வளை நிரையு மார்ப்ப
பொன்னவிர் தாரோ டாரம் புணர்முலை பொருகு பொங்க்
மன்னனு மடந்தை தானு மதனகோ பத்தின் மாறாய்த்றே
தொன்னலந் தொலைய வுண்டார் துயில்கொண்ட விழிகளன்

பண்ணிசையைக் கேட்ட அரசி துயிலெழல்

93) ஆயிடை யத்தி கூடத் தயலெழுந் தமிர்த மூறச்
சேயிடைச் சென்றோர் கீதஞ் செவிபுக விடுத்த லோடும
வேயிடை தோளி மெல்ல விழித்தனள் வியந்த நோக்காத்
தீயிடை மெழுகி னைந்த சிந்தையி னுருகினாளே.

அரசி மதிமயங்குதல்

94) பண்ணினுக் கொழுகு நேஞ்சிற் பாவையிப் பண்கொள் செவ்
அண்ணலுக் கமிர்த மாய வரிவையர்க்¢ குரிய போகம்
விண்ணினுக் குளதென் றெண்ணி வெய்துயிர்த் துய்தல் செல்
மண்ணினுக் கரசன் றேவி மதிமயக் குற்றிருந் தாள்.
பெண்மையின் புன்மை

95) மின்னினு நிலையின் றுள்ளம் விழைவுறின் விழைந்த யாவுந
துன்னிடும் மனத்தின் தூய்மை சூழ்ச்சியு மொழிய நிற்கும்
பின்னுறு பழியிற் கஞ்சா பெண்ணுயிர் பெருமை பேணா
என்னுமிம் மொழிகட் கந்தோ விலக்கிய மாயி னாளே

குணவதி என்னுந் தோழி அரசியை உற்றத வினாவுதல்

96) துன்னிய விரவு நீங்கத் துணைமுலை தமிய ளாகி
யின்னிசை யவனை நெஞ்சத் திருத்தின ளிருந்த வெல்லை
துன்னின டொழி துன்னித் துணைவரிற் றமிய ரேபோன்
றென்னிது நினைந்த துள்ளத் திறைவிநீ யருளு கென்றாள்.

அரசி தன் கருத்தினைக் குறிப்பாகத் தெரிவித்தல்

97) தவழுமா மதிசெய் தண்டார் மன்னவன் றகைமை யென்னுங்
கவளமா ரகத்தென் னுள்ளக் கருங்களி மதநல் யானை
பவளவய் மணிக்கை கொண்ட பண்ணிய றோட்டி பற்றித்
¢துவளுமா றொருவ னெல்லி தொடங்கின னோவ வென்றாள்.

தோழி அறிந்தும் அறியாள் போலக் கூறல்.

98) அங்கவ ளகத்துச் செய்கை யறிந்தன னல்லளே போல்
கொங்கவிழ் குழலி மற்றக் குணவதி பிறிது கூறும்
நங்கைநின் பெருமை நன்றே நனவெனக் கனவிற் கண்ட
¢பங்கம துள்ளி யுள்ளம் பரிவுகொண்டனையென் னென்றாள்.

அரசி மீண்டும் தன் கருத்தை வெளிப்படையாகக் கூற, தோழி அஞ்சுதல்.

99) என்மனத் திவரு மென்னோ யிவணறிந் திலைகொ லென்றே
தன்மனத் தினைய வட்குத் தானுரைத் திடுத லோடும்
நின்மனத் திலாத சொல்லை நீபுனைந் தருளிற் றென்கொல்
சின்மலர்க் குழலி யென்றே செவிபுதைத் தினிது சொன்னாள்.

அரசி ஆற்றாமையால் உயிர்விடுவேன் என்றல்.

100) மாளவ பஞ்ச மப்பண் மகிழ்ந்தவ னமுத வாயிற்
கேளல னாயி னாமுங் கேளல மாது மாவி
நாளவ மாகி யின்னே நடந்திடு நடுவொன் றில்லை
வாளள வுண்கண் மாதே மறுத்துரை மொழியி னென்றாள்.

அரசி தன் எண்ணத்திற்குத் தோழி மறுத்துக் கூறாவண்ணம் புகழுதல்.

101) என்னுயிர்க் கரண நின்னோ டின்னிசை புணர்த்த காளை
தன்னின்மற் றொருவ ரில்லை தக்கது துணிக வென்ன
என்னுயிர்க் கேத மெய்தி னிதுபழி பெருகு மென்றே
துன்னும்வா யவளோ டெண்ணித் தோழியு முன்னி னாளே.

தோழி, பாகனைக் கண்டு மீளல்.

102) மழுகிரு ளிரவின் வைகி மாளவ பஞ்ச மத்தேன்
ஒழுகிய மிடற்றோர் காளை யுள்ளவன் யாவ னென்றே
கழுதுரு வவனை நாடிக் கண்டனள் கண்டு காமத் (டாள்
தொழுகிய வுள்ளத் தையற் கொழியுமென் றுவந்து மீண்

(மூன்று கவிகளால்) தோழி, பாகனின் வடிவு கூறல்

103) மன்னன்மா தேவி நின்னை வருத்துவான் வகுத்த கீதத்
தன்னவ னத்தி பாக னட்டமா பங்க னென்பான் (டேன்
றன்னைமெய் தெரியக் கண்டே தளர்ந்துகண் புதைத்து மீண்
என்னைநீ முனிதி யென்றிட் டிசைக்கல னவற்கி தென்றாள்..

104) நரம்புகள் விசித்த மெய்ய னடையினில் கழுதை நைந்தே
திரங்கிய விரலன் கையன் சிறுமுகன் சினவு சீரிற்
குரங்கினை யனைய கூனன் குழிந்துபுக் கழிந்த கண்ணன்
நெருங்கலு நிரலு மின்றி நிமிர்ந்துள சிலபல் லென்றாள்.

105) பூதிகந் தத்தின் மெய்யிற் புண்களுங் கண்கள் கொள்ளா
சாதியுந் தக்க தன்றா லவன்வயிற் றளரு முள்ளம்
நீதவிர்ந் திட்டு நெஞ்சி னிறையினைச் சிறைசெய் கென்றாள்
கோதவிழ்ந் திட்ட வுள்ளக் குணவதி கொம்ப னாளே

அமிர்தமதி ஊழின்வலியால் தன் மனம் காதலித்ததைத் தோழிக்குக் கூறல்

106) என்றலு மிவற்றி னாலென் னிறைவளை யவன்க ணார்வம
¢சென்றது சிறந்து முன்னே திருவொடு திறலுந் தேசும
ஒன்றிய வழகுங் கல்வி யொளியமை குலத்தோ டெல்லாம்
நின்றுசெய் பயனு நல்லார் நெஞ்சமும் பெறுத லன்றோ

107) காரியம் முடிந்த பின்னுங் காரண முடிவு காணல்
காரிய மன்றி தென்றே கருதிடு கடவுட் காமன்
ஆருழை யருளைச் செய்யு மவனமக் கனைய னாக்
நேரிழை நினைந்து போகி நீடலை முடியி தென்றாள்.

தோழியின் அச்சம்

108) தேவிநீ கமலை யாவாய் திருவுளத் தருளப் பட்டான்
ஆவிசெல் கின்ற வெந்நோ யருநவை ஞமலி யாகும்
பூவின்வார் கணைய னென்னே புணர்த்தவா றிதனையெ
நாவினா லுளைந்து கூறி நடுங்குபு நடுங்கி நின்றாள்.

இக் காப்பியத்தின் ஒருநீதியினை ஆசிரியர் தோழியின் வாயிலாகக் கூறுகின்றார்.

109) ஆடவ ரன்றி மேலா ரருவருத் தணங்க னாருங்¢1
கூடலர் துறந்து நோன்மைக் குணம்புரிந் துயர்தற் காகப
பீடுடை யயனார் தந்த பெருமக ளிவளென்றுள்ளே
தோடலார் குழலிதோழி துணிந்தனள் பெயர்த்துச் சென்¢ .

110) தனிவயி னிகுளை யானே தரப்படு சார னோடு
கனிபுரை கிளவி காமங் கலந்தனள் கனிந்து செல்நாள்
முனிவினை மன்னன் றன்மேல் முறுகின ளொழுகு முன்போ
லினியவ ளல்ல ளென்கொ லெனமனத் தெண்ணி னானே..

மன்னனின் பொய்யுறக்க முணராத அரசியின் செயல்

111) அரசவை விடுத்து மெய்யா லறுசின னொப்ப மன்னன்
உரையல னமளி தன்மே லுறங்குதல் புரிந்த போழ்தின்
விரைகமழ் குழலி மேவி மெய்த்துயி லேன்று காமத்
துறையினள் பெயர்ந்து தோழி குறியிடந் துன்னி னாளே.

மன்னன், மனைவியின் செயலைக் காணப் பின்தொடர்தல்.

112) துயிலினை யொருவி மன்னன் சுடர்க்கதிர் வாள்கை யேந்தி¢
மயிலினை வழிச்செல் கின்ற வாளரி யேறு போலக்
கயல்விழி யவடன் பின்னே கரந்தன னொதுங்கி யாங்கண்
செயலினை யறிது மென்று செறிந்தனன் மறைந்து நின்றான்.

அரசி தாழ்த்துவந்ததற்காகப் பாகன் வெகுளல்

113) கடையனக் கமலப் பாவை கருங்குழல் பற்றிக் கையால்
இடைநிலஞ் செல்ல வீர்த்திட் டிருகையி னாலு மோச்சிப்¢
புடைபல புடைத்துத் தாழ்த்த பொருளிது புகல்க வென்றே.
துடியிடை துவள வீழ்த்து நிலத்திடைத் துகைத்திட்டானே

அரசி மூர்ச்சை யெய்துதல்

114) இருளினா லடர்க்கப் பட்ட வெழின்மதிக் கடவுள் போல்
வெருளியான் மதிப்புண் டையோ விம்மிய மிடற்ற ளாகித்¢
தெருள்கலா ளுரையு மாடாள் சிறிதுபோ தசையக் கண்டே ¢
மருளிதான் மயங்கி மாதர் மலரடி சென்னி வைத்தான்.

அரசி மூர்ச்சை தௌ¤ந்து காலம் கடந்ததற்குக்காரணம் கூறல்

115) தையலாள் மெல்லத் தேறிச் சாரனை மகிழ்ந்து நோக்கி
வெய்யநீ முனிவு செல்லல் மேதினிக் கிறைவன் றன்னோ¢
விடையவா சனத்தி னும்ப ரரசவை யிருந்து கண்டாய் [றாள்.
வெய்யபா வங்கள்2 செய்தேன் விளம்பலன் விளைந்த தென்¢

அரசியின் உறுதிமொழி

116) பொற்பகங் கழுமி யாவும் புரந்தினி தரந்தை தீர்க்குங்
கற்பகங் கரந்து கண்டார் கையகன் றிடுத லுண்டோ
எற்பகங் கொண்ட காத லெனக்கினி நின்னின் வேறோர்
சொற்பகர்ந் தருளு காளை துணைவரா பவரு முண்டோ.

மறைந்து நின்ற மன்னனின் செயல்

117) என்றலு மேனை மன்ன னெரியெழ விழித்துச் சீறிக்
கொன்றிவர் தம்மை வாள்வாய்க் கூற்றுண விடுவ லென்றே
யொன்றின னுணர்ந்த துள்ளத் துணர்ந்தது கரத்து வாளும்
சென்றிடை விலக்கி நின்றோர் தௌ¤ந்துணர் வெழுந்ததன்றே

118) மாதரா ரெனைய ரேனும் வதையினுக் குரிய ரல்லர்
பேதைதா னிவனும் பெண்ணி னனையனே பிறிது மொன்
டேதிலார் மன்னர் சென்னி யிடுதலுக் குரிய வாளிற் (றுண்
றீதுசெய் சிறுபுன் சாதி சிதைத்தலுந் திறமன் றென்றான்.

மன்னன் காமத்தாலாகுந் தீங்குகளைக் கருதுதல்.

120) எண்ணம தலாமை பண்ணு மிற்பிறப் பிடிய நூறும்
மண்ணிய புகழை மாய்க்கும் வரும்பழி வளர்க்கும் மானத்
திண்மையையுடைக்கு மாண்மை திருவொடுசிதைக்குஞ்சிந்தை
கண்ணொடு கலக்கு மற்றிக் கடைப்படுகாம மென்றான்.

இதுவுமது

121) உருவினொ டழகு மொளியமை குலனும் பேசின்
திருமக ளனைய மாத ரிவளையுஞ் சிதையச் சீறிக்
கருமலி கிருமி யன்ன கடைமகற் கடிமை செய்த
துருமதி மதனன் செய்கை துறப்பதே சிறப்ப தென்றான்

மண்ணாசையையும் துறக்க எண்ணுதல்

122) மண்ணியல் மடந்தை தானு மருவினர்க் குரிய ளல்லள்
புண்ணிய முடைய நீரார் புணர்ந்திடப் புணர்ந்து நீங்கும்
பெண்ணிய லதுவ தன்றோ பெயர்கமற் றிவர்கள் யாமும்
கண்ணிய விவர்க் டம்மைக் கடப்பதே கரும மென்றான்.

மன்னன் தன்உள்ளக் கிடக்கையை மறைத்திருத்தல்.

124) மற்றைநாள் மன்னன் முன்போல் மறைபுறப் படாமை
சுற்றமா யவர்கள் சூழத் துணிவில னிருந்த வெல்லை [யின்பச
மற்றுமா மன்னன் றேவி வருமுறை மரபின் வந்தே
கற்றைவார் குழலி மெல்லக் காவலன் பாலி ருந்தாள்.

இதுவுமது

125) நகைவிளை யாடன் மேவி நரபதி விரகி னின்றே
மிகைவிளை கின்ற நீல மலரினின் வீச லோடும்
¤புகைகமழ் குழலி சோர்ந்து பொய்யினால் மெய்யை வீழ்த்
மிகைகமழ் நீரிற் றேற்ற மெல்லிய றேறி னாளே.

இதுவுமது.

126) புரைவிரை தோறு நீர்சோர் பொள்ளலிவ் வுருவிற் றாய
விருநிற மலரி னாலின் றிவளுயி ரேக லுற்ற
தரிதினில் வந்த தின்றென் றவளுட னசதி யாடி
விரகினில் விடுத்து மன்னன் வெய்துயிர்த் தனனி ருந்தான்.

சந்திரமதி ஐயுறல்.

127) மணிமரு ளுருவம் வாடி வதனபங் கயமு மாறா
வணிமுடி யரச ரேறே யழகழிந் துளதி தென்கோ¢
பிணியென வெனது நெஞ்சிற் பெருநவை யுறுக்குமைய
துணியலெ னுணரச் சொல்வாய் தோன்றனீ யென்று.

அரசன் அமிர்தமதியின் செய்கையைத் தன் தாய்க்கு உள்ளுறையாகத் தெரிவித்தல்.

128) விண்ணிடை விளங்குங் காந்தி மிகுகதிர் மதியந் தீர்ந்தே
மண்ணிடை மழுங்கச் சென்றோர் மறையிருட் பகுதி சேரக
கண்ணிடை யிறைவி கங்குற் கனவினிற் கண்ட துண்டஃ
தெண்ணுடை யுள்ளந் தன்னு ளீர்ந்திடு கின்ற தென்றான்

உண்மையை உணரவியலாத தாய், மகனிடம் அக்கனவு சண்டிகையால் விளைந்ததெனக் கூறல்

129) கரவினிற் றேவி தீமை கட்டுரைத் திட்ட தென்னா
இரவினிற் கனவு தீமைக் கேது வென்றஞ்சல் மைந்த
பாவிநற் கிறைவி தேவி பணிந்தனை சிறப்புச் செய்தால
விரவிமிக் கிடுத லின்றி விளியுமத் தீமை யெல்லாம்

130) ஐப்பசி மதிய முன்ன ரட்டமி பக்கந் தன்னின்
மைப்பட லின்றி நின்ற மங்கலக் கிழமை தன்னிற்
கைப்பலி கொடுத்துத் தேவி கழலடி பணியிற் காளை
மெய்ப்பலி கொண்டு நெஞ்சின் விரும்பின ளுவக்கு

131) மண்டமர் தொலைத்த வேலோய் மனத்திது மதித்து நீயே
கொண்டுநின் கொற்ற வாளிற் குறுமறி யொன்று கொன்றே
சண்டிகை மனந்த ளிர்ப்பத் தகுபலி கொடுப்பத் தையல
கண்டநின் கனவின் திட்பந் தடுத்தனள் காக்கு மென்றாள்.

மன்னன் நெறியறிந்து கூறல்

132) ஆங்கவ ளருளொன் றின்றி யவண்மொழிந் திடுதலோடுந்
தேங்கல னரசன் செங்கை செவிமுதல் செறியச் சேர்த்தி
ஈங்கருள் செய்த தென்கொ லிதுபுதி தென்று நெஞ்சில்
தாங்கல னுருகித் தாய்முன் தகுவன செப்பு கின்றான்.

133) என்னுயிர் நீத்த தேனும் யானுயிர்க் குறுதி சூழா
தென்னுயிர்க் கரண நாடி யானுயிர்க் கிறுதி செய்யின்
என்னையிவ் வுலகு காவ லெனக்கினி யிறைவி கூறாய்
மன்னுயிர்க் கரண மண்மேல் மன்னவ ரல்லரோ தான்.

134) யானுயிர் வாழ்த லெண்ணி யௌ¤யவர் தம்மைக் கொல்
வானுய ரின்ப மேலால் வருநெறி திரியு மன்றி (லின்
ஊனுயி ரின்ப மெண்ணி யெண்ணமற் றொன்று மின்றி
மானுயர் வாழ்வுமண்ணின் மரித்திடு மியல்பிற் றன்றே.

135) அன்றியு முன்னின்1 முன்ன ரன்னைநின் குலத்து ளோ£¢கள்
கொன்றுயி£¢ கன்று முள்ளக் கொடுமைசெய் தொழில ரல்லா¢
இன்றுயி£¢ கொன்ற பாவத் திடா¢பல விளையு மேலால்
நன்றியொன் றன்று கண்டாய் நமக்குநீ யருளிற் றெல்லாம்.

மன்னனை மாக்கோழி பலியிடப் பணித்தல்

136) என்றலு மெனது சொல்லை யிறந்தனை கொடியை யென்
சென்றனள் முனிவு சிந்தைத் திருவிலி பிறிது கூறுங் (றே
கொன்றுயிர் களைத லஞ்சிற் கோழியை மாவிற் செய்து
சென்றனை பலிகொடுத்துத் தேவியை மகிழ்வி யென்றாள்.

137) மனம்விரி யல்குன் மாய மனத்ததை வகுத்த மாயக்
கனவுரை பிறிது தேவி கட்டுரை பிறிதொன் றாயிற்
றெனைவினை யுதயஞ் செய்ய விடர்பல விளைந்த வென்பால்
வினைகளின் விளைவை யாவர் விலக்குந ரென்று நின்றான்.

138) உயிர்ப்பொருள் வடிவு கோற லுயிர்க்¢கொலை போலுமென்னும
பயிர்ப்புள முடைய னேனும் பற்றறத் துணிவின் மன்னன
செயிர்த்தவளுரைத்த செய்கைசெய்வதற் கிசைந்ததென்றான்
அயிர்ப்பதென் னறத்தின் றிண்மை யறிவதற்கமைவிலாதான்.

139) மாவினில் வனைந்த கோழி வடிவுகொண் டவ்வை யாய
பாவிதன் னோடு மன்னன் படுகொலைக் கிடம தாய [செய்தே
தேவிதன் னிடைச்சென் றெய்திச் சிறப்பொடு வணக்கஞ்
ஆவவன் றன்கை வாளா லெறிந்துகொண் டருளி தென்றான்.

மாக்கோழியில் ஒரு தெய்வம் புகுந்து கூவுதல்

140) மேலியற் றெய்வங் கண்டே விரும்பின தடையப் பட்ட
சாலியி னிடியின் கோழி தலையரிந் திட்ட தோடி
கோலிய லரசன் முன்னர்க் கூவுபு குலுங்கி வீழ
மாலிய லரசன் றன்சை வாள்விடுத் துருகி னானே.

141) என்னைகொல் மாவின் செய்கை யிவ்வுயிர் பெற்ற பெற்றி
சென்னிவா ளெறிய வோடிச் சிலம்பிய குரலி தென்கொல
பின்னிய பிறவி மாலைப் பெருநவை தருதற் கொத்த
கொன்னியல் பாவ மென்னைக் கூவுகின் றதுகொ லென்றான்.

142) ஆதகா தன்னை சொல்லா லறிவிலே னருளில் செய்கை
ஆதகா தழிந்த புள்வா யரிகுர லரியு நெஞ்சை
ஆதகா தமிர்த முன்னா மதியவள் களவு கொல்லும் [ன்.
ஆதகாவினைக ளென்னை யடர்த்துநின் றடுங்கொ லென்றா.

அரசன் துறவு மேற் கொள்ள வீழைதல்

143) இனையன நினைவு தம்மா லிசோதர னகர மெய்தித்
தனையனி லரசு வைத்துத் தவவனம் படர லுற்றான்
அனையதை யறிந்து தேவி யவமதித் தெனைலவிடுத்தான்
எனநினைந் தேது செய்தா ளெரிநர கத்த வீழ்வாள.

144) அரசுநீ துறத்தி யாயி னமைக மற்றெனக்கு மஃதே
விரைசெய்தா ரிறைவ வின்றென் வியன்மனை மைந்தனோடும்
அரசநீ யமுது கைக்கொண் டருளுதற் குரிமை செய்தால்
அரசுதா னவன தாக விடுதுநா மடிக ளென்றாள்.

145) ஆங்கவ ளகத்து மாட்சி யறிந்தன னரச னேனும்
வீங்கிய முலையி னாய்நீ வேண்டிய தமைக வென்றே
தாங்கல னவ்வை தன்னோ டவண்மனை தான மர்ந்தான்
தீங்கத குறுகிற் றீய நயமுநன் னயம தாமே.

146) நஞ்சொடு கலந்த தேனி னறுஞ்சுவை பெரிய வாக
எஞ்சலி லட்டு கங்க ளிருவரு மருந்து கென்றே
வஞ்சனை வலித்து மாமி தன்னுடன் வரனுக் கீந்தாள்
¢சொடு படாத தானும் பிறரொடு நயந்து கொண்டாள்.

மன்னனும் தாயும் விஷத்தால் மடிந்து விலங்கிற் பிறத்தல்

147) நஞ்சது பரந்த போழ்தி னடுங்கினர் மயங்கி வீழ்ந்தார்
அஞ்சினர் மரணஞ் சிந்தை யடைந்தது முதல தாங்கண்¢
புஞ்சிய வினைக டீய புகுந்தன பொறிகள் பொன்றித்
துஞ்சினர் துயரந் துஞ்சா விலங்கிடைத் துன்னி னாரே.

உழையர் தம் அரசியை இகழ்ந்து வருந்துதல்

148) எண்களுக் கிசைவி லாத விறைவியா மிவடன் செய்கை
கண்களுக் கிசைவ லாத கடையனைக் கருதி நெஞ்சின்
மண்களுக் கிறைவ னாய வரனுக்கு மரணஞ் செய்தாள்
பெண்களிற் கோத னாளே பெரியபா வத்த ளென்றார்.

விஷத்தால் இறந்ததை அறியாது மாக்கோழியைக் கொன்ற பாபத்தால் மரணம் நேர்ந்ததென்று நகர மாந்தருட் சிலர் தம்முட் கூறிக்கொள்ளல்

149) தீதகல் கடவுளாகச் செய்ததோர் படிமை யின்கண்
காதர முலகி தன்கட் கருதிய முடித்தல் கண்டுஞ்
சேதன வடிவு தேவிக் கெறிந்தனர் தெரிவொன் றில்லார்
ஆதலால் வந்த தின்றென் றழுங்கினர் சிலர்க ளெல்லாம்.

நகரத்து அறிஞர் கூறுதல்

150) அறப்பொரு ணுகர்தல் செல்லா னருந்தவர்க் கௌ¤யனல்லன்
மறப்பொருள் மயங்கி வையத் தரசியன் மகிழ்ந்து சென்றான்
இறப்பவு மிளையர் போகத் திவறின னிறிது யின்கண
சிறப்புடை மரண மில்லை செல்கதி யென்கொ லென்றார்.

151) இனையன வுழையர் தாமு மெழினக ரத்து ளாரும்
நினைவன நினைந்து நெஞ்சி னெகிழ்ந்தனர் புலம்பி வாடக்
கனைகழ லரசன் றேவி கருதிய ததுமு டித்தாள்
மனநனி வலிதின் வாடி மைந்தனை வருக வென்றாள்.

152) இனையனீ தனியை யாகி யிறைவனிற் பிரிந்த தென்கண்
வினையினால் விளைவு கண்டாய் விடுத்திடு மனத்து வெந்நோய்¢
புனைமுடி கவித்துப் பூமி பொதுக்கடிந் தாள்க வென்றே
மனநனி மகிழ்ந் திருந்தாள் மறைபதிக் கமுத மாவாள்.

யசோமதி முடிபுனைந்து அரசனாதல்

153) வாரணி முரச மார்ப்ப மணிபுனை மகுடஞ் சூடி
யேரணி யார மார்ப னிசோமதி யிறைமை யெய்திச்
சீரணி யடிகள் செல்வத் திருவற மருவல் செல்லான்
ஓரணி யார மார்ப ருவகை2 யங் கடலு ளாழ்ந்தான்.

154) இனையன வினையி னாகு மியல்பிது தெரிதி யாயின்
இனையன துணைவ ராகு மிளையரின் விளையு மின்பம
இனையது தௌ¤வி லாதா ரிருநில வரசு செய்கை
வனைமலர் மகுட மாரி தத்தனே மதியி தென்றான்.

 

 மூன்றாஞ் சருக்கம்

யசோதரனும் சந்திரமதியும் மயிலும் நாயுமாய்ப் பிறந்தசெய்த கூறல்


155) மற்றம் மன்னன் மதிமதி யென்றிவர்
நற்ற வத்திறை நல்லறம் புல்லலாப்
பற்றி னோடு முடிந்தனர் பல்பிறப்
புற்ற தாகு முரைக்குறு கின்றதே.

157) அம்பின் வாய்விழு மண்ட மெடுத்தவன்
வம்பு வாரண முட்டையின் வைத்துடன்
கொம்ப னாயிது கொண்டு வளர்க்கென
நம்பு காமர் புளிஞிகை நல்கினான்.

158) சந்தி ரம்மதி யாகிய தாயவள்
வந்து மாநக ரப்புறச் சேரிவாய
முந்து செய்வினை யான்முளை வாளெயிற்
றந்த மிக்க சுணங்கம் தாயினாள்.

159) மயிலு நாயும் வளர்ந்தபின் மன்னனுக்
கியலு பாயன மென்று கொடுத்தனர்
மயரி யாகு மிசோமதி மன்னவன
இயலு மாளிகை யெய்தின வென்பவே.

160) மன்ன னாகிய மாமயின் மாளிகை
தன்னின் முன்னெழு வார்க்குமுன் தானெழாத்
தன்னை யஞ்சினர் தங்களைத் தான் வெருண்
டின்ன வாற்றின் வளர்ந்திடு கின்றதே .

161) அஞ்சி லோதியர் தாமடி தைவரப்
பஞ்சி மெல்லணை பாவிய பள்ளிமேல்
துஞ்சு மன்னவன் மாமயிற் றோகையோ
டஞ்சி மெல்ல வசைந்தது பூமிமேல்.

162) சுரைய பாலடி சிற்சுவை பொற்கலத்
தரைய மேகலை யாரி மைர்ந்துணும
அரையன் மாமயி லாய்ப்புறப் பள்ளிவாய
இரைய வாவி யிருந்தயில் கின்றதே.

163) வந்து குப்பையின் மாசன முண்டபின்
சிந்து மெச்சில்கள் சென்று கவர்ந்துதின்
றந்து ளும் மக ழங்கணத் தூடுமாய்ச்
சந்தி ரம்மதி நாய்தளர் கின்றதே

164) நல்வ தத்தொ டறத்திற நண்ணலார
கொல்வ தற்குள முன்செய் கொடுமையான
ஒல்வ தற்கரு மாதுய ருற்றனர்
வெல்வ தற்கரி தால்வினை யின்பயன்.

165) மற்றொர் நாண்மணி மண்டபத் தின்புடை
யற்ற மாவிருந் தட்டபங் கன்றனை
முற்று வார்முலை யாண்முயங் குந்திறம
மற்ற மாமயில் வந்தது கண்டதே.

166) அப்பி றப்பி லமர்ந்த தன் காதலி
ஒப்பில் செய்கை யுணர்ந்த துணர்ந்தபின
தப்பி லன்னது சாரன்றன் கண்களைக்
குப்பு றாமிசைக் குத்தி யழித்ததே.

167) முத்த வாணகை யாண்முனி வுற்றனள்
கைத்த லத்தொரு கற்றிரள் வீசலும்
மத்த கத்தை மடுத்து மறித்தது
தத்தி மஞ்ஞை தரைப்பட வீழ்ந்ததே.

168) தாய்முன் னாகி யிறந்து பிறந்தவள்
நாய்பின் னோடி நலிந்தது கவ்விய
வாய்முன் மஞ்ஞை மடிந்துயிர் போயது
தீமை செய்வினை செய்திற மின்னதே.

169) நாயின் வாயில் நடுங்கிய மாமயில்
போய தின்னுயிர் பொன்றின மன்னவன்
ஆயு மாறறி யாத விசோமதி
நாயை யெற்றின னாய்பெய் பலகையால்.

யசோதரனாகிய மயில் (2வது) முள்ளம் பன்றியாய்ப் பிறத்தல்

170) மன்னன் மாமயில் வந்துவிந் தக்கிரி
துன்னுஞ் சூழலுட் சூழ்மயிர் முள்ளுடை
இன்னல் செய்யுமோ ரேனம தாகிய
தன்ன தாகு மருவினை யின்பயன்..

171) சந்தி ரம்மதி நாயுமச் சாரலின்
வந்து காரிருள் வண்ணத்த நாகமாய
அந்தி லூர்தர வேர்த்துரு ளக்குடர்
வெந்தெ ழும்பசி விட்டது பன்றியே.

172) தாய்கொல் பன்றி தளர்ந்தயர் போழ்தினிற்
சீய மொன்றெனச் சீறுளி யம்மெதிர்
பாய நொந்து பதைத்துடன் வீ¢ழ்ந்தரோ
போய தின்னுயிர் பொன்றுபு பன்றியே.

மன்னனாகிய முட்பன்றி (3வது) லோகிதமீனாய்ப் பிறத்தல்

173) மன்னன் மாமயில் சூகரம் வார்புனல்
இன்னல் செய்யுஞ் சிருப்பிரை யாற்றினுள்
உன்னு மொப்பி லுலோகித விப்பெயர்
மன்னு மீனின் வடிவின தாயிற்றே.

சந்திரமதியாகிய நாகம் (3வது) முதலையாகப் பிறத்தல்

174) சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய்
முந்து சன்று முதலைய தாயது¢
வெந்து வேர்த்தின மீனை விழுங்குவான
உந்தி யுந்தி யுளைந்திடு போழ்தினில்.

175) அந்த ரத்தொரு கூனிநின் றாடுவாள்
வந்து வாயின் மடுத்தது கொண்டது¢
கொந்து வேய்குழற் கூனியைக் கொல்கராத்
தந்த கொல்கென மன்னவன் சாற்றினான்

176) வலையின் வாழ்நரின் வாரிற் பிடித்தபின
சிலர்ச லாகை வெதுப்பிச் செறித்தனர்¢
கொலைவ லாளர் குறைத்தன ரீர்ந்தனர்
அலைசெய் தார்பலர் யாரவை கூறுவார்.

சந்திரமதியாகிய முதலை (4வது) பெண் ஆடாய்ப் பிறத்தல்

177) சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய்
வந்து வார்வலைப் பட்ட கராமரித
தந்தில் வாழ்புலை யாளர்தஞ் சேரிவாய்
வந்தொ ராட்டின் மடப்பிணை யாயதே.

178) மற்றை மீனுமோர் வார்வலைப் பட்டதை
அற்ற மில்லரு ளந்தணர் கண்டனர்
கொற்ற மன்னவ நின்குலத் தார்களுக்
குற்ற செய்கைக் குரித்தென வோதினார்.

179) அறுத்த மீனி னவயவ மொன்றினைக்
கறித்தி சோமதி யிப்புவி காக்கவோர
இறப்ப ருந்துறக் கத்தி லிசோதரன
சிறக்க வென்றனர் தீவினை யாளரே.

180) நின்ற கண்டத்து நீளுயிர் போமது
சென்ற தன்பிறப் போர்ந்து தௌ¤ந்தது
தின்று தின்று துறக்கத் திருத்துதல்
நன்று நன்றென நைந்திறந் திட்டதே

மன்னனாகிய லோகித மீன் (4வது) தகராய்ப் பிறத்தல்

181) மன்னன் மாமயில் சூகர மாயமீன்
முன்னை யாட்டின் வயிற்றின் முடிந்ததோர
மன்ன மாணுரு வெய்தி வளர்ந்தபின
தன்னை யீன்றவத் தாய்மிசைத் தாழ்ந்ததே.

தகர் (5ஆவது) மீண்டும் தன் தாயின் கருவில் தகராதல்.

182) தாயி னன்னலந் தானுகர் போழ்தினில்¢
ஆய கோபத் தடர்த்தொரு வன்றகர
பாய வோடிப் பதைத்துயி¢ர் போயபின
தாய்வ யிற்றினில் தாதுவிற் சார்ந்ததே.

183) தாய்வ யிற்கரு வுட்டக ராயது
போய்வ ளர்ந்துழிப் பூமுடி மன்னவன
மேய வேட்டை விழைந்தனன் மீள்பவன
தாயை வாளியிற் றானுயிர் போக்கினான்.

184) வாளி வாய்விழும் வன்றகர்க் குட்டியை
நீள நின்ற புலைக்குலத் தோன்றனைத்
தாள்வ ருத்தந் தவிர்த்து வளர்க்கென
ஆளி மொய்ம்ப னருளின னென்பவே.

யசோமதி பலியிடும் செய்தி கூறல்

185) மற்றொர் நாண்மற மாதிற்கு மன்னவன்
பெற்றி யாற்பர விப்பெரு வேட்டைபோய்
உற்ற பல்லுயிர் கொன்றுவந் தெற்றினான்
கொற்ற மிக்கெரு மைப்பலி யொன்றரோ.

186) இன்றெ றிந்த வெருமை யிதுதனைத்
தின்று தின்று சிராத்தஞ் செயப்பெறின்
நன்றி தென்றன ரந்தணர் நல்கினார
நின்று பின்சில நீதிகள் ஓதினார்.

187) ஆத பத்தி லுலர்ந்ததை யாதலாற்
காது காகங் கவர்ந்தன வாமெனின்
தீது தாமுஞ் சிராத்தஞ் செயற்கென
ஓதி னாரினி யொன்றுள தென்றனர்.

188) தீதி தென்ற பிசிதமுந் தேர்ந்துழி
சாத நல்ல தகர்முகத் துப்படின
பூத மென்றனர் புண்ணிய நூல்களின்
நாத னாரத் துராதிக ணன்றரோ.

189) என்ற லும்மிணர் பெய்முடி மன்னவன்
நன்று நாமுன் வளர்க்க விடுத்தது
சென்று தம்மெனச் சென்றன ரொற்றர்பின
நன்றி தென்று நயந்தன ரந்தணர்.

190) சென்று நல்லமிர் துண்டது தின்றனர்
அன்று மன்ன னிசோதர னன்னையோ
டொன்றி யும்ப ருலகினுள் வாழ்கென
நன்று சொல்லினர் நான்மறை யாளரே.

இதுமுதல் ஏழுகவிகளில் யசோதரனாகிய ஆடு எண்ணியது கூறப்படும்

191) அத்த லத்தக ராங்கது கேட்டபின்
ஒத்த தன்பிறப் புள்ளி யுளைந்துடன
இத்த லத்திறை யான விசோமத
மத்த யானையின் மன்னவ னென்மகன்.

192) இதுவென் மாநக ருஞ்சயி னிப்பதி
இதுவென் மாளிகை யாமென் னுழைக்கலம்
இதுவெ லாமிவ ரென்னுழை யாளராம்
இதுவென் யானிவ ணின்னண மாயதே.

193) யான்ப டைத்த பொருட்குவை யாமிவை
யான்வ ளர்த்த மதக்களி றாமிவை
யான ளித்த குலப்பரி யாமிவை
யான்வி ளைத்த வினைப்பய னின்னதே.

194) இவர்க ளென்கடைக் காவல ராயவர்
இவர்க ளென்படை நாயக ராயவர்
இவர்க் ளென்னிசை பாடுந ராடுநர்
இவர்க ளும்மிவ ரென்பரி வாரமே.

195) என்னை நஞ்சுபெய் தின்னண மாயிழைத்
தன்ன மென்னடை யாளமிர் தம்மதி
மன்னு தன்மறை யானொருட வைகுமோ
என்னை செய்தன ளோவிவ ணில்லையால்.

196) அசைய தாகி யரும்பட ரொன்றிலா
இசையி லாதன யானுற வித்தலைத்
தசைதி னாளர்கள் தங்களி னென்னையிவ்
வசையின மன்னவன் வானுல குய்க்குமோ.

197) பேதை மாதர்பெய் நஞ்சினி லெஞ்சியிம்
மேதி னிப்பதி யாதல் விடுத்தபின்
யாது செய்தன னோவினை யேனிடை
யாது செய்குவ னோவுண ரேனினி.

சந்திரமதியாகிய பெண்யாடு (5வது) எருமையாய்ப் பிறத்தல்

198) இனைய வாகிய சிந்தைக ளெண்ணிலா
வினையி னாகிய வெந்துயர் தந்திடத்
தனையன் மாளிகை தன்னுள நோகமுன்
சினைகொண் டாடுயிர் சென்று பிறந்ததே.

199) சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய்
வந்தி டங்கரு மாகிய வாடது
நந்து பல்பொருள் நாடு கலிங்கத்து
வந்து மாயிட மாகி வளர்ந்ததே.

200) வணிகர் தம்முடன் மாமயி டம்மது
பணிவில் பண்டம் பரிந்துழல் கின்றநாள்
அணிகொ ளுஞ்சயி னிப்புறத் தாற்றயல்
வணிகர் வந்த மகிழ்ந்துவிட் டார்களே.

201) தூர பாரஞ் சுமந்த துயரது
தீர வோடுஞ் சிருப்பிரை யாற்றினுள்
ஆர மூழ்குவ தம்மயி டங்கரை
சேரு மாவினைச் சென்றெறிந் திட்டதே.

202) வரைசெய் தோண்மன்ன வணிகர் மயிடத்தால்
அரைச வன்ன மெனும்பெய ராகும்நம்
அரைச வாகன மாயது போயதென்
றுரைசெய் தாரர சற்குழை யாளரே.

ஏவலர் ‘வணிகர்எருமையால் நம் குதிரை இறந்த‘ தென்று அரசனுக்கு அறிவித்தன ரென்க.

203) அணிகொன் மாமுடி மன்ன னழன்றனன்
வணிகர் தம்பொருள் வாரி மயிடமும்
பிணிசெய் தெம்முறை வம்மெனப் பேசினான்
கணித மில்பொருள் சென்று கவர்ந்தனர்.

204) அரச னாணை யறிந்தரு ளில்லவர்
சரண நான்கினை யுந்தளை செய்தனர்
கரண மானவை யாவுங் களைந்தனர்
அரண மாமற னில்லது தன்னையே.

205) கார நீரினைக் காய்ச்சி யுறுப்பரிந்
தார வூட்டி யதன்வயி றீர்ந்தவர்
நெய்பெய் சலாகை கடைந்தபின்
கூர்முண் மத்திகை யிற்கொலை செய்தனர்.

206) ஆயி டைக்கொடி யாளமிர் தம்மதி
மேய மேதித் தசைமிக வெந்ததை
வாயின் வைத்து வயிற்றை வளர்த்தனள்
மாயை செய்தன ளென்றனர் மற்றையார்.

207) இன்னு மாசை யெனக்குள திவ்வழித்
துன்னி வாழ்தக ரொன்றுள தின்றது
தன்னி னாய குறங்குக டித்தது
தின்னி னாசை சிதைந்திட மென்றனள்.

இதுமுதல் ஐந்துகவிகள் ஆட்டின் அருகே சேடியர் பேசிக்கொள்ளுதல்

208) அனங்க னான பெருந்தகை யண்ணலைச்
சினங்கொ ளாவுயிர் செற்றனள் நஞ்சினில்
கனங்கொள் காமங் கலக்கக் கலந்தனள்
மனங்கொ ளாவொரு மானுட நாயினை.

209) குட்ட மாகிய மேனிக் குலமிலா
அட்ட பங்கனோ டாடி யமர்ந்தபின்
நட்ட மாகிய நல்லெழின் மேனியள்
குட்ட நோயிற் குளித்திடு கின்றனள்.

210) அழுகி நைந்துட னஃகு மவயவத்
தொழுகு புண்ணி னுருவின ளாயினள்
முழுகு சீயின் முடைப்பொலி மேனியள்
தொழுவல் பல்பிணி நோய்களுந் துன்னினாள்.

211) உம்மை வல்வினை யாலுணர் வொன்றிலாள்
இம்மைச் செய்த வினைப்பய னேயிவை
எம்மை யும்மினி நின்றிடு மிவ்வினை
பொய்ம்மை யன்றிவள் பொன்றினும் பொன்றல.

212) நோயி னாசைகொல் நுண்ணுணர் வின்மைகொல்
தீய வல்வினை தேடுத லேகொலோ
மேய மேதிப் பிணத்தை மிசைந்தனள்
மாய மற்றிது தன்னையும் வவ்வுமே.

பவஸ்ம்ருதி யடைந்த ஆடு ஆகலின், சேடியர் கூறியதனை அறிந்து வருந்துதல்

213) என்று தன்புறத் திப்படிக் கூறினர்
சென்று சேடியர் பற்றிய வத்தகர்
ஒன்று முற்ற வுணர்ந்தவள் தன்னையும்
சென்று கண்டது சிந்தையின் நொந்தரோ.

214) தேவி யென்னை முனிந்தனை சென்றொரு
பாவி தன்னை மகிழ்ந்த பயன்கொலோ
பாவி நின்னுரு வின்னண மாயது
பாவி யென்னையும் பற்றினை யின்னணம்.

215) நஞ்சி லன்னையோ டென்னை நலிந்தனை
எஞ்ச லில்சின மின்ன மிறந்திலை
வஞ்ச னைமட வாய்மயி டம்மது
துஞ்சு நின்வயிற் றென்னையுஞ் சூழ்தியோ.

216) என்று கண்ட மொறுமொறுத் தென்செயும்
நின்று நெஞ்சம துள்சுட நின்றது
அன்று தேவி யலைப்ப வழிந்துயிர்
சென்ற தம்மயி டத்தொடு செல்கதி.

எருமையும் ஆடும் (6) கோழிகளாய்ப் பிறத்தல்

217) மற்றம் மாநகரத்து மருங்கினில்
சிற்றில் பல்சனஞ் சேர்புறச் சேரியின்
உற்று வாரணப் புள்ளுரு வாயின
வெற்றி வேலவன் கண்டு விரும்பினான்.

218) கண்டு மன்னவன் கண்களி கொண்டனன்
சண்ட கன்மியைத் தந்த வளர்க்கெனக்
கொண்டு போயவன் கூட்டுள் வளர்த்தனன்
மண்டு போர்வினை வல்லவு மாயவே.

219) தரள மாகிய நயனத்தொ டஞ்சிறை சாபம்போற் சவியன்ன
மருள மாசனம் வளர்விழி சுடர்சிகை மணிமுடி தனையொத்த
வொளிரு பொன்னுகிர்ச் சரணங்கள் வயிரமு ளொப்பிலபோ
தளர்வில் வீரியந்தகைபெற வளரந்தன தமக்கிணையவைதாமே.


நான்காஞ் சருக்கம்

220) செந்தளிர் புதைந்த சோலைத் திருமணி வண்டுந் தேனுங்
கொந்துகள் குடைந்து கூவுங் குயிலொடு குழுமி யார்ப்பச
செந்துண ரளைந்து தென்றற் றிசைதிசை சென்று வீச
வந்துள மகிழ்ந்த தெங்கும் வளர்மதுப் பருவ மாதோ.

221) இணர்ததை பொழிலி னுள்ளா லிசோமதி யென்னுமன்னன்
வணர்ததை குழலி புட்பா வலியெனுந் துணைவி யோடு
வணர்ததை வல்லி புல்லி வளரிளம் பிண்டி வண்டா£¢
இணர்ததை தவிசி னேறி யினிதினி னமர்ந்தி ருந்தான்.

222) பாடக மிலங்கு செங்கேழ்ச் சீறடிப் பாவை பைம்பொற்
சூடக மணிமென் றோளிற் றொழுதனர் துளங்கத் தோன்றி
நாடக மகளி ராடு நாடக நயந்து நல்லார்
பாடலி னமிர்த வூறல் பருகினன் மகிழ்ந்தி ருந்தான்.

223) வளையவர் சூழ லுள்ளான் மனமகிழ்ந் திருப்ப மன்னன்
தளையவிழ் தொடையன் மார்பன் சண்டமுற் கருமன்போகி
வளமலர் வனத்துள் தீய மனிதரோ டனைய சாதி
களைபவன் கடவுட் கண்ணிற் கண்டுகை தொழுது நின்றான்

224) அருவினை முனைகொ லாற்ற லகம்பன னென்னு நாமத்
தொருமுனி தனிய னாகி யொருசிறை யிருந்த முன்னர்த்
தருமுதல் யோகு கொண்டு தன்னள விறந்த பின்னர்
மருவிய நினைப்பு மாற்றி வந்தது கண்டி ருந்தான்.

225) வடிலநுனைப் பகழி யானு மலரடி வணங்கி வாழ்த்தி
அடிகணீ ரடங்கி மெய்யி ருள்புரி மனத்தி ராகி
நெடிதுட னிருந்து நெஞ்சி னினைவதோர் நினைவு தன்னான்
முடிபொருடானு மென்கொல் மொழிந்தருள் செய்கவென்றான்.

226) ஆரருள் புரிந்த நெஞ்சி னம்முனி யவனை நோக்கிச்
சீரருள் பெருகும் பான்மைத் திறத்தனே போலுமென்றே
பேரறி வாகித் தம்மிற் பிறழ்விலா வுயிரை யன்றே
கூரறி வுடைய நீரார் குறிப்பது மனத்தி னாலே.

227) அனந்தமா மறிவு காட்சி யருவலி போக மாதி
நினைந்தவெண் குணங்க ளோடு நிருமல நித்த மாகிச்
சினஞ்செறு வாதி யின்றித் திரிவித வுலகத் துச்சி
அனந்தகா லத்து நிற்ற லப்பொருட்டன்மை யென்றான்.

228) கருமனு மிறைவ கேளாய் களவுசெய் தோர்க டம்மை
இருபிள வாகச் செய்வ னெம்மர சருளி னாலே
ஒருவழி யாலுஞ் சீவ னுண்டெனக் கண்ட தில்லை
பெரியதோர் சோரன் றன்னைப் பின்னமாய்ச் சேதித் திட்டும்.

229) மற்றொரு கள்வன் றன்னை வதைசெய்யு முன்னும் பின்னும்
இற்றென நிறைசெய் திட்டு மிறைவனே பேதங் காணேன்
உற்றதோர் குழியின் மூடி யொருவனைச் சிலநாள் வைத்தும்
மற்றவ னுயிர்போ யிட்ட வழியொன்றுங் கண்டி லேனே.

முனிவர் தளவரன்ஐயத்தைப் போக்குதல்.

230) பையவே காட்டந் தன்னைப் பலபின்னஞ் செய்திட் டன்று
வெய்யெரி கண்ட துண்டோ விறகொடு விற்கை யூன்ற
ஐயென வங்கி தோன்றி யதனையு மெரிக்க லுற்ற
திவ்வகைக் காண லாகு மென்றுநீ யுணரத்ல் வேண்டும்.

இதுவும் அது

231) சிக்கென வாயு வேற்றித் தித்திவாய் செம்மித் தூக்கிப்
புக்கவவ் வாயு நீங்கிப் போயபின் நிறைசெய் தாலும்
ஒக்குமே யொருவன் சங்கோ டொருநில மாளிகைக் கீழ்த்
திக்கெனத் தொனிசெய் திட்ட தெவ்வழி வந்த தாகும்.

232) இவ்வகை யாகுஞ் சீவ னியல்புதா னியல்பு வேறாம்
வெய்யதீ வினைக ளாலே வெருவுறு துயரின் மூழ்கி
மையலுற் றழுந்தி நான்கு கதிகளுட் கெழுமிச் செல்வர்
ஐயமில் சாட்சி ஞானத் தொழுக்கத்தோ ரறிவ தாகும்.

233) ஆகமத் தடிக ளெங்கட் கதுபெரி தரிது கண்டீர்
ஏகசித் தத்த ராய விறைவர்கட் கௌ¤து போலும்
போகசித் தத்தோ டொன்றிப் பொறிவழிப் படரு நீரார்க்
காகுமற் றுறுதிக் கேது அருளுக தெருள வென்றான்.

234) அற்றமில் லறிவு காட்சி யருந்தகை யொழுக்க மூன்றும்
பெற்றனர் புரிந்து பேணிப் பெருங்குணத் தொழுகு வாருக்
குற்றிடு மும்ப ரின்ப முலகிதற் கிறைமை தானும்
முற்றமுன் னுரைத்த பேறும் வந்துறும் முறைமையென்றான்.

235) உறுபொரு ணிலைமை தன்னை யுற்றுணர் வறிவ தாகும்
அறிபொரு ளதனிற் றூய்மை யகத்தெழு தௌ¤வு காட்சி
நறுமலர்ப் பிண்டி நாதன் நல்லறப் பெருமை தன்மேல்
இறுகிய மகிழ்ச்சி கண்டா யிதனது பிரிவு மென்றான்.

236) பெருகிய கொலையும் பொய்யும் களவோடு பிறன்ம னைக்கண்
தெரிவிலாச் செலவும் சிந்தை பொருள்வயிற் றிருகு பற்றும்
மருவிய மனத்து மீட்சி வதமிவை யைந்தோ டொன்றி
ஒருவின புலைசு தேன்கள் ஒழுகுத லொழுக்க மென்றான்.

237) கொலையின் தின்மை கூறிற் குவலயத் திறைமை செய்யும்
மலைதலில் வாய்மை யார்க்கு வாய்மொழி மதிப்பை யாக்கும்
விலையில்பே ரருளின் மாட்சி விளைப்பது களவின் மீட்சி
உலைதலில் பெருமை திட்ப முறுவலி யொழிந்த தீயும்.

238) தெருளுடை மனத்திற் சென்ற தௌ¤ந்துணர் வாய செல்வம்
பொருள்வயி னிறுக்க மின்மை புணர்த்திடும் புலைசு தேன்கள்.
ஒருவிய பயனு மஃதே யொளியினோ டழகு வென்றி
பொருள்மிகு குலனோ டின்பம் யுணர்தலு மாகு மாதோ.

239) சிலைபயில் வயிரத் தோளாய் செப்பிய பொருளி தெல்லாம்
உலைதலில் மகிழ்வோ டுள்ளத் துணர்ந்தனை கொள்கவென்னக்
கொலையி¢னி லொருவலின்றிக் கொண்டனெனருளிற்றெல்லாம்
அலைசெய்வ தொழியின் வாழ்க்கை யழியுமற் றடிகளென்றான்.

முனிவரர் மீண்டும் கூறல்

240) ஆருயிர் வருத்தங் கண்டா லருள்பெரி தொழுகிக கண்ணால்
ஒருயிர் போல நெஞ்சத் துருகிநைந துய்ய நிற்றல்
வாரியின் வதங்கட் கெல்லா மரசமா வதமி5 தற்கே
சார்துணை யாகக் கொள்க தகவுமத் தயவு மென்றான்.

241) இறந்தா ளென்றுமுள்ளத் திரங்குத லின்றி வெய்தாய்க்
கறந்துயி ருண்டு கன்றிக் கருவினை பெருகச் செய்தாய்
பிறந்துநீ, பிறவி தோறும் பெருநவை யுறுவ தெல்லாஞ்
சிறந்தநல் லறத்தி னன்றித் தீருமா றுளது முண்டோ.

242) நிலையிலா வுடம்பின் வாழ்க்கை நெடிதுட னிறுவ வென்றிக்
கொலையினான் முயன்று வாழுங் கொற்றவ ரேனு முற்றச்
சிலபக லன்றி நின்றார் சிலரிவ ணில்லை கண்டாய்
அலைதரு பிறவி முந்நீ ரழுந்துவ ரனந்தங் காலம்.

243) இன்னுமீ தைய கேட்க இசோமதி தந்தை யாய
மன்னவ னன்னை யோடு மாவினற் கோழி தன்னைக்
கொன்னவில் வாளிற் கொன்ற கொடுமையிற் கடிய துன்
பின்னவர் பிறவி தோறும் பெற்றன பேச லாமோ.

244) வீங்கிய வினைக டம்மால் வெருவரத் தக்க துன்பந்
தாங்கினர் பிறந்தி றந்து தளர்ந்தனர் விலங்கிற் செல்வார்
ஆங்கவர் தாங்கள் கண்டாய் அருவினை துரப்ப வந்தார்
ஈங்குநின் அயலக் கூட்டி லிருந்த கோழிகளு மென்றான்.

245) உயிரவ ணில்லை யேனு முயிர்க்கொலை நினைப்பி னாலிம்
மயரிகள் பிறவி தோறும் வருந்திய வருத்தங் கண்டால்
உயிரினி லருளொன் றின்றி யுவந்தனர் கொன்று சென்றார்
செயிர்தரு நரகி னல்லாற் செல்லிட மில்லை யென்றான்.

246) மற்றவ னினைய கூற மனநனி கலங்கி வாடிச்
செற்றமுஞ் சினமு நீக்கித் திருவறத் தௌ¤வு காதல்
பற்றினன் வதங்கள் முன்னம் பகர்ந்தன வனைத்துங் கொண்டு
பெற்றன னடிக ணுமமாற் பெரும்பய னென்று போந்தான்.

247) கேட்டலு மடிகள் வாயிற் கெழுமிய மொழிக டம்மைக்
கூட்டினு ளிருந்த மற்றக் கோழிகள் பிறப்பு ணர்ந்திட்
டோட்டிய சினத்த வாகி யுறுவத முய்ந்து கொண்ட
பாட்டருந் தன்மைக் தன்றே பான்மையின் பரிசு தானும்.

248) பிறவிக ளனைத்து நெஞ்சிற் பெயர்ந்தன நினைத்து முன்னர்
மறவியின் மயங்கி மாற்றின் மறுகினம் மறுகு சென்றே
அறவிய லடிக டம்மா லறவமிர் தாரப் பெற்றாம்
பிறவியின் மறுகு வெந்நோய் பிழைத்தன மென்ற வன்றே.

249) அறிவரன் சரண மூழ்கி யறத்தெழு விருப்ப முள்ளாக்
குறைவில வமுதங் கொண்டு குளிர்ந்தக மகிழ்ந்து கூவச்
செறிபொழி லதனுட் சென்று செவியினு ளிசைப்ப மன்னன்
முறுவல்கொண் முகத்து நல்லார்முகத்தொருசிலைவளைத்தான்.

250) சொல்லறி கணையை வாங்கித் தொடுத்தவன் விடுத்தலோடும¢
நல்லிறைப் பறவை தம்மை நடுக்கிய தடுத்து வீழச்
சில்லறி வினக ளேனுந் திருவறப் பெருமை யாலே¢
வல்லிதின் மறைந்து போகி மானுடம் பாய வன்றே.

251) விரைசெறி பொழிலி னுள்ளால வேனிலின் விளைந்த வெல்
அரைசனு மமர்ந்து போகி யகநகர்க் கோயி லெய்தி (லாம்
முரைசொலி கழுமப் புக்கு மொய்ம்மலர்க் குழலி னாரோ
டுரைசெய லரிய வண்ண முவகையின் மூழ்கி னானே.

252) இன்னண மரசச் செல்வத் திசோமதி செல்லு நாளுள்
பொன்னிய லணிகொள் புட்பா வலியெனும் பொங்கு கொங்
இன்னிய லிரட்டையாகு மிளையரை யீன்று சின்னாள்
பின்னுமோர் சிறுவன் றன்னைப் பெற்றனள் பேதை தானே.

253) அன்னவர் தம்முள் முன்னோ னபயமுன் னுருசி தங்கை
அன்னமென் னடையி னாளு மபயமுன் மதியென் பாளாம்
பின்னவர் வளரு நாளுட் பிறந்தவ னிறங்கொள் பைந்தார்
இன்னிளங் குமரனாம மிசோதர னென்ப தாகும்.

254) பரிமிசைப் படைப யின்றும் பார்மிசைத் தேர்க டாயும்
வரிசையிற்கரிமேற்கொண்டும் வாட்டொழில்பயின்று மன்னர்க்
குரியவத் தொழில்க ளோடு கலைகளின் செலவை யோர்ந்தும்
அரசிளங் குமரன் செல்நா ளடுத்தது கூற லுற்றேன்.

255) நூற்படு வலைப்பொறி முதற்கருவி நூற்றோ
டேற்றிடை யெயிற்றுஞம லிக்குல மிரைப்ப
நாற்படை நடுக்கடல் நடுச்செய் நமனேபோல்
வேற்படை பிடித்தரசன் வேட்டையின் விரைந்தான்.

256) இதத்தினை யுயிர்க்கினி தளித்திடு¢ மியற்கைச்
சுதத்தமுனி தொத்திரு வினைத்துக ளுடைக்கும்
பதத்தயன் மதக்களி றெனப்படிம நிற்பக்
கதத்துட னிழித்தடு கடத்திடை மடுத்தான்

257) கூற்றமென வடவிபுடை தடவியுயிர் கோறற்
கேற்றபடி பெற்றதில னிற்றைவினை முற்றும்
பாற்றியவ னின்னுயிர் பறிப்பனென வந்தான்
மாற்றரிய சீற்றமொடு மாதவனின் மேலே.

258) கொந்தெரி யுமிழ்ந்தெதிர் குரைத்ததிர்வ கோணாய்
ஐந்தினொடு பொருததொகை யையம்பதி னிரட்டி
செந்தசைகள் சென்றுகவர் கென்றுடன் விடுத்தான்
நந்தியருண் மழைபொழியும் நாதனவன் மேலே.

259) அறப்பெருமை செய்தரு டவப்பெருமை தன்னால்
உறப்புணர்த லஞ்சியொரு விற்கணவை நிற்பக்
கறுப்புடை மனத்தெழு கதத்தரச னையோ
மறப்படை விடக்கருதி வாளுருவு கின்றான்.

இதுமுதல் நான்கு கவிகளின் வணிகள் முனிவன் சிறப்புரைத்தல்

260) காளைதகு கல்யாண மித்திர னெனும்பேர்
ஆளியடு திறல்வணிக னரசனுயி ரனைய
கேளொருவன் வந்திடை புகுந்தரச கெட்டேன்
வாளுருவு கின்றதுவென் மாதவன்மு னென்றான்.

261) வெறுத்துடன் விடுத்தரசி னைத்துக ளெனப்பேர்
அறப்பெரு மலைப்பொறை யெடுத்தவ னடிக்கண்
சிறப்பினை யியற்றிலை சினத்தெரி மனத்தான்
மறப்படை யெடுப்பதுவென் மாலைமற வேலோய்.

262) ஆகவெனி னாகுமிவ ரழிகவெனி னழிப
மேகமிவண் வருகவெனின் வருமதுவும் விதியின்
ஏகமன ராமுனிவர் பெருமையிது வாகும்
மாகமழை வண்கைமத யானைமணி முடியோய்.

263) அடைந்தவர்கள் காதலினொ டமரரச ராவர்
கடந்தவர்கள் தமதிகழ்வில் கடைநரகில் வீழ்வர்
அடைந்தநிழல் போலருளு முனிவுமில ரடிகள்
கடந்ததிவ ணுலகியல்பு கடவுளவர் செயலே.

264) இந்திரர்கள் வந்தடிபணிந்தருளு கெனினும்
நிந்தையுடன் வெந்துயர்க ணின்னனர்கள் செயினும்
தந்தம்வினை யென்றுநமர் பிறரெனவு நினையார்
அந்தர மிகந்தருள் தவத்தரசர் தாரோய்.

265) இவ்வுலகி னெவ்வுயிரு மெம்முயிரி னேரென்
றவ்விய மகன்றருள்சு ரந்துயிர் வளர்க்குஞ்
செவ்விமையி னின்றவர்தி ருந்தடி பணிந்துன்¢
வெவ்வினை கடந்துயிர் விளங்கு விறல்வேலோய்.

266) என்றினிது கூறும்வணி கன்சொலிக ழாதே
கன்றுசின முங்கர தலப்படையு மாற்றி
இன்றிவனை யென்னைதொழு மாறளியன் யாவன்
கன்றுதுக டுன்றுகரு மேனியின னென்றான்.

267) இங்குலகு தொழுமுனியை யாவனெனி னிதுகேள்
கங்கைகுல திலகனிவன் கலிங்கபதி யதனைப்
பொங்குபுய வலியிற்பொது வின்றிமுழு தாண்ட
சி¢ங்கமிவ னென்றுதௌ¤ தேர்ந்துணரின் வேந்தே.

இதுமுதல் ஆறு கவிகளால், வணிகன் அரசனுக்கு முனிவர்பெருமையைத் தௌ¤விக்கின்றான்

268) மேகமென மின்னினொடு வில்லுமென வல்லே
போகமொடு பொருளிளமை பொன்றுநனி யென்றே
ஆகதுற வருள்பெருகு மறனொடத னியலே
போகமிகு பொன்னுலகு புகுவனென நினைவான்.

269) நாடுநக ரங்களும் நலங்கொள்மட வாரும்
ஆடுகொடி யானையதிர் தேர்புரவி காலாள்
சூடுமுடி மாலைகுழை தோள்வளையொ டாரம்
ஆடைமுத லாயினவொ டகல்கவென விட்டான்.

270) வானவரும் மண்ணின்மிசை யரசர்களும் மலைமேல்
தானவரும் வந்துதொழு தவவுருவு கொண்டான்
ஊனமன மின்றியுயிர் கட்குறுதி யுள்ளிக்
கானமலை நாடுகள்க லந்துதிரி கின்றான்.

271) யானுமல தெனதுமல திதமுமல தென்று
மானமுடை மாதவனின் மேனிமகி ழானாய்
ஏனைவினை மாசுதன துருவினிறு வாதே
ஞானவொளி நகைசெய்குணம் நாளுமணி கின்றான்.

272) ஈடின்முனி யோகினது பெருமையினி லிறைவ
காடுபடு கொலையினொடு கடியவினை நின்னைக்
கூடுவதா ழிந்ததுகொ லின்றுகொலை வேலோய்
நாடுவதென் ஞமலியிவை நணுகலகள் காணாய்.

273) என்றவ னுளங்கொள வியம்பின னியம்பச்
சென்றுதிரு வடிமலர்கள் சென்னிமிசை யணியா
இன்றெனது பிழைதணிய வென்றலை யரிந்து
நின்றமுனி சரணிலிட லென்றுநினை கின்றான்.

274) இன்னதுநி னைந்ததிவ னென்றுகை யெடுத்தே
மன்னநின் மனத்தது விடுத்திடு மனத்தில்
தன்னுயிரின் மன்னுயிர் வளர்க்கைதக் வானால்
நின்னுயிரை நீகளையி னின்னருள தென்னாம்.

275) முன்னமுரை செய்தபொருள் முடிந்திலது முடியப்
பின்னுமிகை பிறவுமுரை பேசுதிற நினைவுந்
துன்னுயிரின் முன்னிது துணிந்தபிழை தூரப்
பின்னைநினை கின்றவிது பிழைபெரிது மென்றான்.

276) மன்னவன் மனத்ததை விரித்தருள் வளர்க்குஞ்
சொன்னவில் சுதத்தமுனி தொன்மல ரடிக்கட்
சென்னிமுடி துன்னுமலர் சென்றுற வணங்கிப்
பன்னியரு ளிறைவவெமர் பவமுழுது மென்றான்.

277) ஆங்குமுனி யவதியி னறிந்தபொரு ளதனை
வாங்கியவ னுணரும்வகை வைத்தருள் செய்கின்றான்
ஈங்குமு னியற்றிய தவத்தினி லசோகன்
ஓங்குபுக ழமருலக மொன்றினு ளுவந்தான்.

சுருங்கக் கூறிய அசோகன் வரலாற்றை விளங்க உரைத்தல்

278) அருமணியி னொளிதிகழு மமரனவ னாகிப்
பிரமனுல கதனுண்மிகை பெறுகடல்கள் பத்துந்¢
திருமணிய துணைமுலைய தெய்வமட வாரோடு
அருமையில் னகமகிழ்வின் மருவுமன் மாதோ.

279) வஞ்சனையி லன்னையுடன் மன்னவனை நஞ்சில்
துஞ்சும்வகை சூழ்ந்துதொழு நோய்முழுது மாகி
அஞ்சின் மொழி யமிர்தமதி யருநரகின் வீழ்ந்தாள்
நஞ்சனைய வினைநலிய நாமநகை வேலோய்.

280) இருளினிரு ளிருள்புகையொ டளறுமணல் பரலின்
மருள்செயுரு வினபொருளின் வருபெயரு மவையே
வெருள்செய்வினை தருதுயரம் விளையுநில மிசையத்¢
தெருளினெழு வகைநரக குழிகளிவை தாரோய்.

281) மேருகிரி யுய்த்திடினும் வெப்பமொடு தட்பம்
நீரெனவு ருக்கிடுநி லப்புரைய வைந்தாம்
ஓரினுறு புகைநரகி னுருகியுடன் வீழ்ந்தா
ளாருமில ளறனுமில ளமிர்தமதி யவளே.

282) ஆழ்ந்தகுழி வீழ்ந்தபொழு தருநரக ரோடிச்
சூழ்ந்துதுகை யாவெரியு ளிட்டனர்கள் சுட்டார்
போழ்ந்தனர்கள் புண்பெருக வன்றறிபு டைத்தார்
மூழ்ந்தவினை முனியுமெனின் முனியலரு முளரோ.

283) செந்தழலின் வெந்தசைக டின்றனைமு னென்றே
கொந்தழலின் வெந்¢துகொது கொதுகென வுருகுஞ்
செந்தழலி னிந்திதர்கள் செம்புகள் திணிப்ப
வெந்தழலி னைந்துருகி விண்டொழுகு முகனே.

284) கருகருக ரிந்தன னுருவி னொரு பாவை
பெரு கெரியி னிட்டுருகு மிதுவுமினி தேயென்
றருகணைய நுந்துதலு மலறியது தழுவி
பொருபொருபொ ரிந்துபொடி யாமுடல மெல்லாம்.

285) நாவழுகி வீழமுது நஞ்சுண மடுத்தார
ஆவலறி யதுவுருகி யலமரினு மையோ
சாவவரி திவணரசி தகவில்வினை தருநோ
யாவும்விளை நிலமதனி னினியவுள வாமோ.

286) முன்னுநுமர் தந்தசை முனிந்திலை நுகர்ந்தாய்க்
கின்னுமினி துன்னவய வங்கடின லென்றே
தன்னவய வம்பலத டிந்துழல வைத்துத்
தின்னவென நொந்தவைக டின்னுமிகைத் திறலோய்.

287) திலப்பொறியி னிட்டனர்தி ரிப்புவநெ ருப்பின்
உலைப்பெரு கழற்றலை யுருக்கவு முருத்துக்
கொலைக்கழுவி னிட்டனர் குலைப்பவுமு ருக்கும்
உலைப்பரு வருத்தம துரைப்பரிது கண்டாய்.

288) ஒருபதினோ டொருபதினை யுந்தியத னும்பர்
இருபதினொ டைந்துவி லுயர்ந்தபுகை யென்றும
பொருவரிய துயரினவை பொங்கியுடன் வீழும்
ஒருபதினொ டெழுகடல்க ளளவு மொளித் தாரோய்.

289) தொல்லைவினை நின்று சுடுகின்றநர கத்துள்
அல்லலிவை யல்லனவு மமிழ்தமதி யுறுவ
வெல்லையில விதுவிதென வெண்ணியெரு நாவிற்
சொல்லவுலவா வொழிக சுடருநெடு முடியோய்.

290) எண்ணமி லிசோதரனொ டன்னையிவர் முன்னாள்
கண்ணிய வுயிர்க்கொலை வினைக்கொடுமை யாலே
நண்ணிய விலங்கிடை நடுங்கஞர் தொடர்ந்த
வண்ணமிது வடிவமிவை வளரொளிய பூணோய்.

291) மன்னன் மயிலாய்மயிரி முள்ளெயின மீனாய்
பின்னிருமு றைத்தகரு மாகியவ னேகி
மன்னுசிறை வாரணம தாகிவத மருவி
மன்னவநின் மகனபய னாகிவளர் கின்றான்.

292) சந்திரமுன் மதிஞமலி நாகமொ டிடங்கர்
வந்துமறி மயிடமுடன் வாரணமு மாகி
முந்தைவினை நெகிழமுனி மொழியும்வத மருவி
வந்துன்மக ளபயமதி யாகிவளர் கின்றாள்.

293) இதுநுமர்கள் பவம்வினை கள் விளையுமியல் பிதுவென்
றெதுவின்முனி யருளுமொழி யவையவைகள் நினையா
விதுவிதுவி திர்த்தக நெகிழ்ந்துமிகை சோரா
மதுமலர்கொள் மணிமுடிய மன்னவன் மருண்டான்.

294) ஆங்கபய வுருசியுட னபயமதி தானுந்
தாங்கலர்கள் சென்றுதவ வரசனரு ளாலே
நீங்கிய பவங்களை நினைந்தன ருணர்ந்தார்
ஆங்கவர்க ளுறுகவலை யாவர்பிற ரறிவார்.

295) தந்தையும் தந்தை தாயு மாகிய தழுவு காதல்
மைந்தனு மடந்தை தானு மாற்றிடைச் சுழன்ற பெற்றி
சிந்தையி னினைந்து நொந்து தேம்பினர் புலம்பக் கண்டு
கொந்தெரியழலுள் வீழ்ந்த கொள்கையன்மன்ன னானான்.

296) எந்தையு மெந்தை தாயு மெய்திய பிறவி தோறும
வெந்துயர் விளைவு செய்த வினையினே னென்செய் கேனோ
அந்தமி லுயிர்கள் மாய வலைபல செய்து நாளும் [கேனோ.
வெந்துயர் நரகின் வீழ்க்கும் வினைசெய்தே னென்செய்.

297) அருளொடு படர்தல் செய்யா தாருயிர்க் கழிவு செய்தே
பொருளோடு போக மேவிப் பொறியிலே னென்செய் கேனோ
அருளின துருவ மாய வடிகணும் மடிகட் கேயுந்
தெருளல னினைந்த தீமைச் சிறியனே னென்செய் கேனோ.

298) மாவியல் வடிவு தன்னை வதைசெய்தார் வண்ண மீதே
ஆவினி யளிய னேது மஞ்சிலே னவதி யென்கொல் [ல்
காவல வருளு கென்னக் கலங்கின னரசன் வீழ
மாவல வஞ்ச லென்றம் மாதவ னுரைவ ளர்த்தான்.

299) அறிவில ராய காலத் தமைவில செய்த வெல்லாம்
நெறியினி லறிவ தூற நின்றவை விலகி நிற்பர்
அறியலர் வினைக ளாலே யருநவை படுநர்க் கைய
சிறியநல் வதங்கள் செய்த திருவினை நுமர்கட் காணாய்.

300) அருள்புரி மனத்த ராகி யாருயிர்க் கபய நல்கிப்
பொருள்கொலை களவுகாமம் பொய்யொடு புறக்கணித்திட்¢
டிருள்புரி வினைகள்சேரா விறைவன தறத்தையெய்தின்
மருள்செய வருவ துண்டோ வானவ ரின்ப மல்லால்.

301) என்றலு மடிகள் பாதத் தெழின்முடி மலர்கள் சிந்தக்
கன்றிய வினைக டீரக் கருணையி னுருகி நெஞ்சிற்
சென்றன னறிவு காட்சி திருவறத் தொருவ னானான்
வென்றவர் சரண டைந்ததார் விளைப்பதுவென்றியன்றோ.

302) வெருள்செயும் வினைக டம்மை வெருவிய மனத்த னாகி
மருள்செயு முருவ மாட்சி மகனொடு மங்கை தன்னை
அருள்பெரு குவகை தன்னா லமைவில னளிய னும்மைத்
தெருளலன் முன்பு செய்த சிறுமைகள் பொறுக்க வென்றான்

303) ஓருயிர்த் தோழ னாகி யுறுதிசூழ் வணிகள் றன்னை
ஆருயிர்க் கரண மாய வடிகளோ டைய நீயும்
நேரெனக் கிறைவ னாக நினைவலென் றினிய கூறிப்
பாரியற்பொறையை நெஞ்சிற் பரிந்தனன்மன்னனானான்.

304) மணிமுடி மகனுக் கீந்து மன்னவன் றன்னோ டேனை
யணிமுடி யரசர் தாமு மவனுயிர்த் துணைவ னாய
வணிகனு மற்று ளாரு மாதவத் திறையை வாழ்த்தித்
துணிவனர் துறந்து மூவார் தொழுதெழு முருவங்கொண்டார்.

305) தாதைதன் துறவு முற்றத் தானுடன் பட்ட தல்லால
ஓதநீர் வட்டந்தன்னை யொருதுகள் போல வுள்ளத்
தாதரம் பண்ணல் செல்லா வபயனு மரசு தன்னைக்
காதலன் குமரன் றம்பி கைப்படுத் தனன்வி டுத்தான்.

306) மாதவன் மலர்ந்த சொல்லான் மைந்தனும் மங்கை யாய
பேதையும் பிணைய னாளும் பிறப்பினி துணர்ந்த பின்னர்
ஆதரம் பண்ணல் போகத் தஞ்சினர் நெஞ்சி னஞ்சாய்
மாதவன் சரண மாக வனமது துன்னி னாரே.

307) வினைகளும் வினைக டம்மால் விளைபயன் வெறுப்பு மேவித்
தனசர ணணையு ளார்க்குத் தவவர சருளத் தாழ்ந்து
வினையின விளைவு தம்மை வெருவின மடிகள் மெய்யே
சினவரன் சரண மூழ்கிச் செறிதவம் படர்து மென்றார்.

308) ஆற்றல தமையப் பெற்றா லருந்தவ மமர்ந்து செய்மின
சாற்றிய வகையின் மேன்மேல் சய்யமா சய்யமத்தின்
ஏற்றவந் நிலைமை தன்னை யிதுபொழு துய்மி னென்றான்
ஆற்றலுக் கேற்ற வாற்றா லவ்வழி யொழுகு கின்றார்.

309) அருங்கல மும்மை தம்மா லதிசய முடைய நோன்மைப்
பெருங்குழு வொருங்குசூழப் பெறற்கருங்குணங்கடம்மாற்
கருங்கலில் சுதத்த னென்னுந் துறவினுக் கரச னிந்நாள்
அருங்கடி கமழுஞ் சோலை யதனுள்வந் தினிதி ருந்தான்.

310) அனசன மமர்ந்த சிந்தை யருந்தவ னிசோ மதிக்குத
தனயர்க டம்மை நோக்கித் தரியலீர் சரியை போமின்
எனவவ ரிறைஞ்சி மெல்ல விந்நக ரத்து வந்தார்
அனையவ ராக வெம்மை யறிகமற் றரச வென்றான்.

311) இணையது பிறவி மாலை யெமரது மெமது மெண்ணின்
இனையதுவினைகள்பின்னா ளிடர்செய்த முறைமைதானும்
இனையது வெகுளி காமத் தெய்திய வியல்பு நாடின்
இனையது பெருமை தானு மிறைவன தறத்த தென்றான்.

312) செய்த வெந்தியக் கொலையொரு துகள்தனில் சென்றுறு பவந்
எய்து மாயிடிற் றீர்ந்திடாக் கொலையிஃ திருநில முடிவேந்தே
மையல் கொண்டிவண்மன்னுயிரெனைப்பலவதைசெயவருபாவ
தெய்தும் வெந்துய ரெப்படித் தென்றுளைந் திரங்குகின்

313) ஐய நின்னரு ளாலுயிர்க் கொலையினி லருவினை நரகத்தாழ்ந்
தெய்தும்வெந்துயரெனைப்பலகோடி கோடியினுறுபழிதீர்ந்தே
பொய்ய தன்றிது புரவல குமரநின் புகழ்மொழி புணையாக (ன்
மையின் மாதவத் தொருகடலாடுதல் வலித்தன னிதுவென்றான்.

314) இன்சொல் மாதரு மிளங்கிளைச் சுற்றமு
    மெரித்திர ளெனவஞ்சிப்
    பொன்செய் மாமுடிப் புதல்வருட் புட்பதந்
    தற்கிது பொறையென்றே
    மின்செய் தாரவன் வெறுத்தன னரசியல்
    விடுத்தவ ருடன்போகி
    முன்சொன் மாமலர்ப் பொழிலினுண் முனிவரற்
    றெழுதுநன் முனியானான்.

315) வெய்ய தீவினை வெருவுறு மாதவம
    விதியினின் றுதிகொண்டான்
    ஐய தாமதி சயமுற வடங்கின
    னுடம்பினை யிவணிட்டே
    மையல் வானிடை யனசனர் குழாங்களுள்
    வானவன் றானாகித்
    தொய்யின் மாமுலைச் சுரவரர் மகளிர்தம்
    தொகுதியின் மகிழ்வுற்றான்.

316) அண்ண லாகிய வபயனுந் தங்கையு
    மாயுக மிகையின்மை¢
    நண்ணி நாயக முனிவனி னறிந்தனர
    நவின்றநற் குண மெல்லாம்
    கண்ணி னார்தம துருவின
    துடலங்கள் கழிந்தன கழி போகத்
    தெண்ணில் வானுல கத்திரண் டாவதி
    னிமையவர் தாமானார்

317) அம்பொன் மாமுடி யலர்கதிர்க் குண்டல மருமணி திகழாரஞ்
செம்பொன்மாமணி தோள்வளைகடகங்கள் செறிகழன்முதலாக்
நம்பு நாளொனி நகுகதிர்க் கலங்களி னலம்பொலிந் தழகார்ந்த
வம்பு வானிடு தனுவென வடிவுடை வானவ ரானாரே.

318) வந்துவானவர்திசைதொறும்வணங்கினர் வாழ்த்தினர்மலர்மாரி
மந்த மாருதந் துந்துபி வளரிசை மலிந்தன மருங்கெங்கும்
அந்தி லாடினர் பாடினர் விரும்பிய வரம்பைய ரருகெல்லாம்
வந்து தேவியர் மன்மத வாளியின் மகிழ்ந்துடன் புடைசூழ்ந

319) மாசின் மாமணி மேனியின் வாசமொ ரோசனை மணநாறத்
தேசொ ரோசனை திளைத்திட முளைத்தெழு தினகர னனையார்கள்
ஆசி லெண்குண னவதியொடமைந்தனரலைகடலளவெல்லாம
ஏசில் வானுல கிணையிலின் பத்தினி லிசைந்துட னியல்கின்

320) வெருவுறு வினைவலி விலக்கு கிற்பது
தருவது சுரகதி தந்து பின்னரும்
பொருவறு சிவகதி புணர நிற்பது
திருவற நெறியது செவ்வி காண்மினே.


யசோதர காவியம் முற்றிற்று.

Add a comment

சூளாமணி என்பது செந்தமிழ் மொழியின்கண் சிறந்து விளங்கும் பெருங்காப்பியங்களுள் ஒன்று. இது ஆருகத சமயத்தைச் சார்ந்த தோலாமொழித்தேவர் என்னும் நல்லிசைப் புலவரால் இயற்றப்பட்டது. கடைச்சங்க காலத்திற்குப் பின்னரும் தேவாரக் காலத்திற்கு முன்னரும் நிகழ்ந்த காலத்தில் நம் தமிழகத்தின் கண் ஆருகத சமயம் என்னும் சமண சமயம் யாண்டும் பரவி மிகவும் செழிப்புற்றிருந்தது. அக்காலத்தே அம்மதச் சார்புடைய நல்லிசைப் புலவர் பலர் அம் மதத்திற்கு ஆக்கமாக இயற்றிய பெருங்காப்பியங்கள், நிகண்டுகள் பல.

சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி இவை ஐம்பெருங்காப்பியமாம். சூளாமணி, யசோதர காவியம், உதயண காவியம், நாககுமார காவியம், நீலகேசி இவை ஐஞ்சிறுகாப்பியமாம். இலக்கண வகையாலன்றிக் காப்பியப் பண்பு வகையாலும் தலை சிறந்த காவியம் சிந்தாமணியாகும். இதை அடியொற்றி அதற்குப் பின் தோன்றிய பெருங்காப்பியமே இச் சூளாமணியாகும். எனினும், சிந்தாமணியின் செய்யுளைக் காட்டிலும் சூளாமணியின் செய்யுட்கள் இனிய ஓசையுடையனவாய்ச் சிறந்திருக்கிறது.

சூளாமணி என்னும் இவ் வனப்பியல் நூல் ஆருகத நூலாகிய பிரதமாநுயோக மகாபுராணத்தில் கூறப்பட்ட பழைய கதை ஒன்றினை பொருளாகக் கொண்டு எழுந்த நூலாகும். இந்நூலிற்கு அமைந்த சூளாமணி என்னும் இப் பெயர் ஆசிரியரால் இடப்பட்ட பெயராகத் தோன்றவில்லை, தன்மையால் வந்த பெயரே ஆகும்.

 

சூளாமணியை இயற்றிய தோலாமொழித் தேவரின் இயற்பெயர் இன்னதென்று தெரியவில்லை. இவர் இந்நூலின்கண் இரண்டிடங்களில் 'ஆர்க்கும் தோலாதாய்' என்றும், 'தோலாநாவிற் சச்சுதன்' இனிய அழகிய சொற்றொடரை வழங்கி யிருத்தலால் அதன் அருமை உணர்ந்த பெரியோர் இவரைத் தோலாமொழித் தேவர் என்று வழங்கலாயினர் என பெரியோர்கள் கருதுகின்றனர்.

இவர் கார்வெட்டியரசன் விசயன் என்பவனுடைய காலத்தவர் ,தருமதீர்த்தங்கரரிடத்தே பெரிதும் ஈடுபாடுடையவர் என்றும் மன்னன் விசயன் வேண்டுகோளின்படி இந்நூலை இயற்றினார் என்பதும் சில செய்யுட்களால் விளக்கப்பட்டு இருக்கிறது. கடைச் சங்க காலத்திற்குப் பின்னர்ச் சமண சமயம் செழிப்புற்றிருந்த காலத்தே அச் சமயக் கணக்கர்கள் அதை பரப்பும் பொருட்டு அங்கங்கே சங்கங்கள் பல நிறுவினர் ,அதில் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்ச்சங்கம் [திரமிள சங்கம் ] மிகவும் சிறப்புற்றிருந்தது. இச் சங்கங்களுக்கு அரசர்கள் தலைமை தாங்கினர்.இச் சூளாமணி, அரசன் விசயன் சேந்தன் அவையின்கண் அமைந்த சான்றோர்களால் கேட்கப்பட்டு அவர்களால் நல்லநூல் என ஏற்றுக் கொள்ளப்பட்டும் இருக்கிறது.

இனி, தோலாமொழித்தேவர் வாழ்ந்த காலத்தை இதுகாறும் யாரும் வரையறுத்துக் கூறவில்லை. அச் சூளாமணிக்கு முற்பட்ட சிந்தாமணியின் காலம் கி.பி. 897 க்குப் பின்னாதல் வேண்டும். எங்ஙனமாயினும், சிந்தாமணி ஆசிரியருக்குத் தோலாமொழித் தேவர் பிற்காலத்தவர் என்பதை மறுப்பார் யாருமில்லை. எனவே, இவர் கடைச்சங்ககால்த்திற்குப் பின்னிருந்த சிந்தாமணி ஆசிரியராகிய திருத்தக்கதேவர் காலத்திற்கு அணித்தாய்த் தேவாரக் காலத்திற்கு முற்பட்டதொரு காலத்தே வாழ்ந்தவர் என்பது ஒருவாறு பொருந்துவதாம்.

Add a comment

காப்பு


மணியும்நல் கந்தமுத்தும் மலிந்த முக்குடை இலங்க
அணிமலர்ப் பிண்டியின்கீழ் அமர்ந்த நேமீசர் பாதம்
பணியவே வாணிபாதம் பண்ணவர் தமக்கும் எந்தம்
இணைகரம் சிரசில் கூப்பி இயல்புறத் தொழுதும் அன்றே.

முதல் சருக்கம்


தெய்வ வணக்கமும் செயப்படு பொருளும்


1) செந்தளிர்ப் பிண்டியின்கீழ்ச் செழுமணி மண்டபத்துஉள்
இந்திரன் இனிதின் ஏத்தும் ஏந்துஅரிஆசனத்தின்
அந்தமாய் அமர்ந்த கோவின் அருள்புரிதீர்த்த காலம்
கொந்தலராசன் நாக குமரன்நல் கதை விரிப்பாம்.


2) திங்கள் முந்நான்கு யோகம் தீவினை அரிய நிற்பர
அங்கபூ ஆதி நூலுள் அரிப்புஅறத் தௌ¤ந்த நெஞ்சில்
தங்கிய கருணை ஆர்ந்த தவமுனி அவர்கள் சொன்ன
பொங்குநல் கவிக்கடல்தான் புகுந்துநீர்த்து எழுந்தது அன்றே.

அவைஅடக்கம்

3) புகைக்கொடி உள்உண்டு என்றே பொற்புநல் ஒளிவிளக்கை
இகழ்ச்சியின் நீப்பார் இல்லை ஈண்டுநல் பொருள் உணர்ந்தோர்
அகத்துஇனி மதியில் கொள்வார் அரியரோ எனது சொல்லைச்
செகத்தவர் உணர்ந்து கேட்கச் செப்புதல் பாலது ஆமே.

கேட்போர் பெறு பயன்

4) வெவ்வினை வெகுண்டு வாரா விக்கிநன்கு அடைக்கும் வாய்கள்
செவ்விதில் புணர்ந்து மிக்க செல்வத்தை ஆக்கும் முன்னம்
கவ்விய கருமம் எல்லாம் கணத்தினில் உதிர்ப்பை ஆக்கும்
இவ்வகைத் தெரிவுறுப்பார்க்கு இனிதுவைத்து உரைத்தும் அன்றே.

மகத நாட்டுச் சிறப்பு

5) நாவலந் தீப நூற்றை நண் ணுதொண்ணூறு கூறில்
ஆவதன் ஒருகூறு ஆகும் அரியநல் பரத கண்டம்
பாவலர் தகைமை மிக்கோர் பரம்பிய தரும பூமி
மேவுமின் முகில்சூழ் சோலை மிக்கதுஓர் மகதநாடு.

இராசமாகிரிய நகரம்

6) திசைகள் எங்கெங்கும் செய்யாள் செறிந்துஇனிது உறையும் நாட்டுள்
இசையுநல் பாரிசாத இனமலர்க் காவும் சூழ்ந்த
அசைவிலா அமர லோகத்து அதுநிகரான மண்ணுள்
இசைஉலா நகரம் மிக்க இராசமாகிரியம் ஆமே.


7) கிடங்குஅரு இஞ்சி ஓங்கிக் கிளர்முகில் சூடிச் செம்பொன்
கடங்கள்வைத்து இலங்கு மாடம் கதிர்மதி சூட்டினால்போல்
படம்கிடந்த அல்குலார்கள் பாடலோடு ஆடலாலே
இடம்கொண்ட இன்பம் உம்பர் இடத்தையும் மெச்சும் அன்றே.

சிரேணிக ராசனின் செங்கோல்ஆட்சி

8) பாரித்த தன்மை முன்னம் பாலித்தற்கு ஐம்மடங்காம்
பூரித்த தார்கள் வேய்ந்த பொற்குடை எழுந்த மேகம்
வாரித்து அசைந்து இளிக்கும் வண்கைஅம்பொன்திண் தோளான்
சீரித்தது அலங்கல் மார்பன் சிரேணிக ராசன்ஆமே.


9) ஆறில்ஒன்று இறைகொண்டு ஆளும் அரசன்மாதேவி அன்னப்
பேறுடை நடைவேல் கண்ணாள் பெறற்குஅரும் கற்பினாள்பேர்
வீறுடைச் சாலினீதா மிடைதவழ் கொங்கை கொண்டை
நாறுடைத் தார்அணிந்த நகைமதி முகத்தினாளே.


10) மற்றும் எண்ணாயிரம்பேர் மன்னனுக்கு இனிய மாதர்
வெற்றிவேல் விழியினாரும் வேந்தனும் இனிய போகம்
உற்றுஉடன் புணர்ந்து இன்பத்து உவகையுள் அழுந்தி அங்குச்
செற்றவர்ச் செகுத்துச் செங்கோல் செலவிய காலத்து அன்றே.

வரவீரநாதரின் வருகையை வனபாலன் தெரிவித்தல்


11) இஞ்சிசூழ் புரத்து மேற்பால் இலங்கிய விபுலம் என்னும்
மஞ்சிசூழ் மலையின் மீது வரவீரநாதர் வந்து
இஞ்சிமூன்று இலங்கும் பூமி ஏழிறை இருக்கை வட்டம்
அஞ்சிலம்பார்கள் ஆட அமரரும் சூழ்ந்த அன்றே.


12) வனமிகு அதிசயங்கள் வனபாலன் கண்டுவந்து
நனைமது மலர்கள் ஏந்தி நன்நகர் புகுந்துஇராசன்
மனைஅது மதில்கடந்து மன்னனை வணங்கிச் செப்ப
மனமிக மகிழ்ந்து இறைஞ்சி மாமுரசு அறைக என்றான்.

மன்னன் தன் சுற்றம் சூழச் சென்று முனிவரை வணங்குதல்


13) இடிமுரசு ஆர்ப்பக் கேட்டும் இயம்பிய அத்தினத்தின்
படுமத யானை தேர்மா வாள்நால் படையும் சூழக்
கடிமலர் சாந்தும் ஏந்திக் காவலன் தேவியோடும்
கொடிநிரை பொன் எயிற்குக் குழுவுடன் சென்ற அன்றே.


14) பொன்எயில் குறுகிக் கைம்மாப் புரவலன் இழிந்துஉள்புக்கு
நன்நிலத்து அதிசயங்கள் நரபதி தேவியர்க்குப்
பன்உரை செய்து காட்டிப் பரமன்தன் கோயில் தன்னை
இன்இயல் வலங்கொண்டு எய்தி ஈசனை இறைஞ்சினானே.


15) நிலமுறப் பணிந்து எழுந்து நிகர்இலஞ் சினையின் முற்றிக்
கலன்அணி செம்பொன் மார்பன் கால்பொரு கடலில் பொங்கி
நலமுறு தோத்திரங்கள் நாதன்தன் வதனம் நோக்கிப்
பலமனம் இன்றி ஒன்றிப் பலதுதி செப்பல் உற்றான்.

வர்த்தமானரை மன்னன் துதித்துப் போற்றுதல்

வேறு


16) பொறியொடு வல்வினைவென்ற புனிதன் நீயே
பூநான்கு மலர்ப்பிண்டிப் போதன் நீயே
புறவிதழ்சேர் மரைமலர்மேல் விரனால் விட்டுப்
பொன்எயிலுள் மன்னிய புங்கவனும் நீயே
அறவிபணி பணஅரங்கத்து அமர்ந்தாய் நீயே
ஐங்கணைவில் மன்மதனை அகன்றாய் நீயே
செறிபுகழ்சேர் சித்திநகர் தன்னை ஆளும்
சிரீவர்த்த மானம்எனும் தீர்த்தன் நீயே.

17) கஞ்சமலர் திருமார்பில் தரித்தாய் நீயே
காலம்ஒரு மூன்றுஉணர்ந்த கடவுள் நீயே
பஞ்சாத்தி தான்உரைத்த பரமன் நீயே
பரமநிலை ஒன்றுஎனவே பணித்தாய் நீயே
துஞ்சாநல் உலகுதொழும் தூயன் நீயே
தொல்வினை எல்லாம்எரித்த துறவன் நீயே
செஞ்சொல் பாவையை நாவில் சேர்த்தாய் நீயே
சிரீவர்த்தமான் எனும் தீர்த்தன் நீயே.


18) அறவன்நீ அமலன்நீ ஆதி நீயே
ஆரியன்நீ சீரீயன்நீ அனந்தன் நீயே
திரிலோக லோகமொடு தேயன் நீயே
தேவாதி தேவன்எனும் தீர்த்தன் நீயே
எரிமணிநல் பிறப்புடைய ஈசன் நீயே
இருநான்கு குணம்உடைய இறைவன் நீயே
திரிபுவனம் தொழுதுஇறைஞ்சும் செல்வன் நீயே
சிரீவர்த்த மானம்எனும் தீர்த்தன் நீயே.


19) முனிவர்தமக்கு இறையான மூர்த்தி நீயே
மூவா முதல்வன்எனும் முத்தன் நீயே
இனிமை ஆனந்தசுகத்து இருந்தாய் நீயே
இயல்ஆறு பொருள்உரைத்த ஈசன் நீயே
முனிவுமுதல் இல்லாத முனைவன் நீயே
முக்குடையின் கீழ்அமர்ந்த முதல்வன் நீயே
செனித்துஇறக்கும் மூப்பு இறப்பும் தீர்த்தாய் நீயே
சிரீவர்த்த மானன்எனும் தீர்த்தன் நீயே.


20) நவபத நன்னயம்ஆறு நவின்றாய் நீயே
நன்முனிவர் மனத்துஇசைந்த நாதன் நீயே
உவமைஇலா ஐம்பதமும் உரைத்தாய் நீயே
உத்தமர்தம் இருதயத்துள் உகந்தாய் நீயே
பவமயமாம் இருவினையைப் பகர்ந்தாய் நீயே
பரம நிலைஅமர்ந்த பரமன் நீயே
சிவமயமாய் நின்றதிகழ் தேசன் நீயே
சிரீவர்த்தமானன்எனும் தீர்த்தன் நீயே.

வேறு


21) துதிகள் செய்துபின் தூய்மணி நன்நிலத்து
அதிகொள் சிந்தையின் அம்பிறப் பணிந்து உடன்
நெதி இரண்டுஎன நீடிய தோளினான்
யதிகொள் பண்ணவர் பாவலன் புக்கதே.


22) சிறந்து கோட்டத்துச் செல்வக கணதரர்
இறைவன் நன்மொழி இப்பொருள் உள்கொண்டு
அறைஅமர்ந்து உயிர்க்கு அறமழையைப்பெயும்
துறவன் நற்சரண் தூய்தின் இறைஞ்சினான்.

தவராசராம் கௌதமர் பாதம் பணிந்து தருமம் கேட்டல்


23) மற்றுஅம் மாமுனி ஏர்மல ராம்பதம்
உற்றுடன்பணிந்து ஓங்கிய மன்னவன்
நற்றவர்க்கு இறையானநற் கௌதமர்
வெற்றி நற்சரண் வேந்தன் இறைஞ்சினான்.


24) இருகரத்தின் இறைஞ்சிய மன்னனும்
பொருகயல்கணிப் பூங்குழை மாதரும்
தரும தத்துவம் சனமுனிவர்க்குஉரை
இருவரும்இயைந்து இன்புறக் கேட்டபின்.

நாக பஞ்சமி கதைஉரைக்க மன்னன் வேண்டுதல்


25) சிரிநல் பஞ்சமி செல்வக் கதையினை
செறிகழல் மன்னன் செப்புக என்றலும்
அறிவு காட்சி அமர்ந்துஒழுக் கத்துஅவர்
குறிஉ ணர்ந்துஅதன் கூறுதல் உற்றதே.

மகத நாட்டு மன்னன் சயந்தரனும் அவன் சுற்றத்தாரும்


26) நாவலந் தீவின் நற்பரதத்துஇடை
மாவலர் மன்னர் மன்னு மகதம்நல்
கூவும் கோகிலம் கொண்மதுத் தாரணி
காவும் சூழ்ந்த கனக புரம்அதே.


27) அந்நகர்க்கு இறையான சயந்தரன்
நன்மனைவி விசாலநன் நேத்திரை
தன்சுதன்மதுத் தாரணி சீதரன்
நன்கு அமைச்சன் நயந்தரன் என்பவே.


28) மற்றும் தேவியர் மன்னும்எண்ணாயிரர்
வெற்றி வேந்தன் விழைந்துஉறுகின்றநாள்
பற்ற வாணிகன் பல்பொருள் பொற்கலத்து
உற்றமாதர் படத்து உருக்காட்டினான்.


29) மன்னன் நோக்கி மயங்கி மகிழ்ந்தபின்
கின்னரியோ கிளர்கார் மாதரோ
இன்ன ரூபம்மிக்கார்இது என்றலும்
மன்னும் வாசவன் வாக்குஉரை செய்கின்றான்.

வாசவன் மறுமொழி


30) சொல்அரிய சுராட்டிர தேசத்துப்
பல்சனம்நிறை பரங்கிரியாநகர்
செல்வன் சிரீவர்மன் தேவியும் சிரீமதி
நல்சுதையவள் நாமம் பிரிதிதேவி.

சயந்தரன் பிரிதிதேவியை மணந்து பட்டத்துஅரசி ஆக்குதல்


31) அவ்வணிகன் அவளுடை ரூபத்தைச்
செவ்விதில் செப்பச் சீருடை மன்னனும்
மௌவல் அம்குழல் மாதரைத் தான்அழைத்துத்
தெய்வ வேள்வியில் சேர்ந்து புணர்ந்தனன்.


32) மன்னன் இன்புற்று மாதேவி ஆகவே
நன்மைப் பட்டம் நயந்து கொடுத்தபின்
மன்னும் மாதர்கள் வந்து பணிந்திட
இன்ன ஆற்றின் இயைந்துடன் செல்லுநாள்.

பிரிதிதேவி-விசாலநேத்திரை சந்திப்பு


33) வயந்தம் ஆடவே மன்னனும் மாதரும்
நயந்து போந்தனர் நன்மலர்க் காவினுள்
பெயர்ந்து பல்லக்கின் ஏறிப் பிரிதிதேவி
கயந்தம் நீர்அணி காண்டற்குச் சென்றநாள்.


34) வாரணத்தின்முன் மார்க்கத்து நின்றவள்
வார்அணி கொங்கை யார்அவள் என்றலும்
ஏர்அணிம்முடி வேந்தன்மாதேவிஎன்று
தார்அணிகுழல் தாதி உரைத்தனள்.

பிரிதிதேவி பரமன் ஆலயம் சென்று தொழுதல்


வேறு

35) வேல்விழி மாது கேட்டு விசாலநேத்திரையோ என்னைக்
கால்மிசை வீழ எண்ணிக் காண்டற்கு நின்றாள் என்று
பால்மொழி அமிர்தம் அன்னாள் பரமன் ஆலையம் அடைந்து
நூல்மொழி இறைவன் பாதம் நோக்கிநன்கு இறைஞ்சினாளே.

ஆலயத்து அமர்ந்திருந்த முனிவனை அவள் பணிதல்


வேறு

36) கொல்லாத நல்விரதக் கோமான்நினைத் தொழுதார்
பொல்லாக் கதிஅறுத்துப் பொற்புடைய முத்திதனைச்
செல்லற்கு எளிதென்றே சேயிழையாள் தான்பரவி
எல்லா வினைசெறிக்கும் இயன்முனியைத் தான்பணித்தாள்.

முனிவனின் வாழ்த்துரை கேட்ட பிரிதிதேவி மகிழ்தல்


37) பணிபவள்கு நன்குஉரையில் பரமமுனி வாழ்த்த
அணிபெறவே நல்தவமும் ஆமோ எனக்குஎன்றாள்
கணிதம்இலாக் குணச்சுதனைக் கீர்த்திஉடனேபெறுவை
மணிவிளக்கமே போன்ற மாதவனும் தான்உரைத்தான்,


38) நின்றசனம் தன்னுடனே நீடுபோய்த் தவம்பட்டுப்
பின்றை அறஉரைகள் பெருமிதமாய்க் கேட்டுவிதி
வென்ற பரமன்அடி விமலமாய்த் தான்பணிந்து
அன்றுதான் புத்திரனை அவதரித்தால் போல்மகிழ்ந்தாள்.

வேறு

39) நல்தவன் உரைத்த சொல்லை நறுமலர்க் கோதை கேட்டு
பற்றுடன் உணர்ந்து நல்ல பாசுஇழைப் பரவை அல்குல்
உற்றதன் குழலினாரோடு உறுதவன் பாதம் தன்னில்
வெற்றியின் இறைஞ்சி வந்து வியன்மனை புகுந்து இருந்தாள்.

இரண்டாம் சருக்கம்

சயந்தரன்-பிரிதிதேவி உரையாடல்


40) வனவிளையாடல் ஆடி மன்னன் தன்மனை புகுந்து
மனமகிழ் கோதை தன்னை மருவிய காதலாலே
புனலின்நீ ஆடல் இன்றிப் போம்பொருள் புகல்க என்ன
கனவரை மார்பன் கேட்¢பக் காரிகை உரைக்கும் அன்றே.

41) இறைவன் ஆலயத்துஉள் சென்று இறைவனை வணங்கித் தீய
கறைஇலா முனிவன் பாதம் கண்டுஅடி பணிந்து தூய
அறவுரை கேட்டேன் என்ன அரசன்கேட்டு உளம் மகிழ்ந்து
பிறைநுதல் பேதை தன்னால் பெறுசுவைக் கடலுள் ஆழ்ந்தார்.

பிரிதிதேவி கண்ட கனவு


42) இருவரும் பிரிதல் இன்றி இன்புறு போகம் துய்த்¢து
மருவிய துயில்கொள்கின்றார் மனோகரம் என்னும் யாமம்
இருள்மனை இமில் ஏறுஒன்றும் இளங்கதிர் கனவில் தோன்றப்
பொருஇலாள் கண்டுஎழுந்து புரவலர்க்கு உணர்த்தினாளே.

சினாலய முனிவரிடம் மன்னனும் தேவியும் கனாப்பயன் கேட்டல்


43) வேந்தன்கேட்டு இனியன் ஆகி விமலன் ஆலயத்துஉள் சென்று
சேந்தளிர்ப் பிண்டியின்கீழ்ச் செல்வனை வணங்கி வாழ்த்தி
காந்திய முனிக்கு இறைஞ்சிக் கனாப்பயன் நுவல என்றான்
ஏந்துஇள முலையினாளும் இறைவனும் மிகுந்து கேட்டார்.

புத்திரன் பிறப்பான் என்றார் முனிவர்


44) அம்முனி அவரை நோக்கி அருந்துநல் கனவு தன்னைச்
செம்மையின் இருவர்கட்கும் சிறுவன்வந்து உதிக்கும் என்றும்
கம்பம்இல் நிலங்கள் எல்லாம் காத்துநல் தவமும் தாங்கி
வெம்பிய வினைஅறுத்து வீடுநன்கு அடையும் என்றார்.

புதல்வன் பிறந்தபின் நிகழ்வன மன்னன் கேட்டல்


45) தனையன்வந்து உதித்த பின்னைத் தகுகுறிப்பு உண்டோ என்று
புனைமலர் அலங்கல் மார்பன் புரவலன் மற்றுங் கேட்ப
நினைமின்அக் குறிகள் உண்டுஎன்நேர்மையில் கேட்பிர் ஆயின்
தினைஅனைப் பற்றும் இல்லாத் திகம்பரன் இயம்புகின்றான்.

திகம்பர முனிவரின் மறுமொழி


வேறு

46) பொன்எயில்உள் வீற்றுஇருக்கும் புனிதன் திருக்கோயில்
நின்சிறுவன் சரணத்தான் நீங்கும் திருக்கதவம்
நன்நாக வாவிதனில் நழுவப் பதமும்உண்டாம்
மன்னாக மாவினொடு மதம்அடக்கிச் செலுத்திடுவான்.


47) அருள்முனி அருளக்கேட்டு அரசன்தன் தேவிதன்னோடு
இருவரும் இறைஞ்சிஏத்தி எழில்மனைக்குஎழுந்துவந்து
பருமுகில் தவழும்மாடப் பஞ்சநல் அமளிதன்னில்
திருநிகர்மாது மன்னன் சேர்ந்துஇனிது இருக்கும்அந்நாள்.

பிரிதிதேவி கருக் கொள்ளுதல்


வேறு

48) புண்தவழ் வேல்கண் கோதை பூரண மயற்கைச் சின்னம்
மண்இனிது உண்ண எண்ணும் மைந்தன்பூவலயம் ஆளும்
பண்ணுகக் கிளவி வாயில் பரவிய தீரும் சேரும்
கண்ணிய மிச்சம் மின்னைக் கழித்திடும் உறுப்பு இதுஆமே.

புதல்வன் பிரதாபந்தன் பிறத்தல்


49) திங்கள் ஒன்பான் நிறைந்து செல்வன்நல் தினத்தில் தோன்றப்
பொங்குநீ¢ர்க் கடல்போல் மன்னன் புரிந்துநல் உவகை ஆகித்
தங்குபொன் அறைதிறந்து தரணிஉள்ளவர்க்குச் சிந்திச்
சிங்கம்நேர் சிறுவன் நாமம் சீர்பிரதாபந்தன் என்றார்.

பிரிதிவிதேவி குழந்தையுடன் பரமன் ஆலயம் அடைதல்


50) பிரிதிவி தேவி ஓர்நாள் பெருங்குழுத் தேவி மாரும்
அரியநல் பரமன் கோயில் அன்புடன் போக எண்ணி
விரிநிற மலரும் சாந்தும் வேண்டிய பலவும் ஏந்திப்
பரிவுள தனையன் கொண்டு பாங்கினால் சென்ற அன்றே.

ஆலயத்தில் நிகழ்ந்த அற்புதங்கள்


51) சிறுவன்தன் சரணம் தீண்டச் சினாலயம் கதவு நீங்கப்
பிறைநுதல் தாதிதானும் பிள்ளைவிட்டு உள்புகுந்தாள்
நறைமலர் வாவி தன்னுள் நல்சுதன் வீழக் காணாச்
சிறைஅழி காதல்தாயும் சென்றுஉடன் வீழ்ந்தாள் அன்றே.


52) கறைகெழு வேலினான் தன் காரிகை நீர்மேல் நிற்பப்
பிறைஎயிற்று அரவின் மீது பெற்றிருந் தனையன் கண்டு
பறைஇடி முரசம் ஆர்ப்பப் பாங்கினால் எடுத்து வந்து
இறைவனை வணங்கி ஏத்தி இயன்மனை புகுந்தான் அன்றே.

நாககுமாரன் எனப் பெயர் பெற்றது


53) நாகத்தின் சிரசின் மீது நன்மையில் தரித்தென்று எண்ணி
நாகநல் குமரன் என்று நரபதி நாமம் செய்தான்
நாகம்நேர் அகலத்தானை நாமகள் சேர்த்தி இன்ப
நாகஇந்திரனைப் போல நரபதி இருக்கும் அந்நாள்.

கின்னரி-மனோகரியரின் இசைத் திறம் அறிதல்


54) கின்னரிமனோகரீஎன் கெணிகைநல் கன்னிமாரும்
அன்னவர் தாயும் வந்தே அரசனைக் கண்டு உரைப்பார்
என்னுடைச் சுதையர் கீதம் இறைவநின் சிறுவன் காண்க
என்றுஅவள் கூற நன்றுஎன்று இனிதுடன் கேட்கின்றாரே.


55) இசைஅறி குமரன் கேட்டே இளையவள் கீதம் நன்றுஎன்று
அசைவிலா மன்னன் தானும் அதிசய மனத்தன் ஆகித்
திசைவிளக்கு அனையாள் மூத்தாள் தெரிந்துநீ என்கொல் என்ன
வசைஇன்றி மூத்தாள் தன்னை மனோகரிநோக்கக் கண்டேன்.

நாககுமாரன் அம் மங்கையரை மணத்தல்


56) பலகலம் அணிந்த அல்குல் பஞ்சநல் சுகந்தநீயும்
துலங்குதன் சுதையர் தம்மை தூய்மணிக் குமரன்கு ஈந்தாள்
அலங்கல்வேல் குமரன் தானும் ஆயிழை மாதர் தாமும்
புலங்களின் மிகுத்த போகம் புணர்ந்துஇன்பக் கடலுள் ஆழ்ந்தார்.

நாககுமாரன் யானையையும் குதிரையையும் அடக்குதல்


57) நாகம்மிக் கதம்கொண்டு ஓடி நகர்மாடம் அழித்துச் செல்ல
நாகநல் குமரன் சென்று நாகத்தை அடக்கிக் கொண்டு
வேகத்தின்¢ விட்டுவந்து வேந்தநீ கொள்க என்ன
வாகுநல் சுதனை நோக்கி யானைநீ கைக்கொள் என்றான்.


58) மற்றுஓர்நாள் குமரன் துட்ட மாவினை அடக்கி மேற்கொண்டு
உற்றஊர் வீதிதோறும் ஊர்ந்துதீக் கோடி ஆட்டி
வெற்றிவேல் வேந்தன் காட்ட விழைந்துநீ கொள்க என்றான்
பற்றியே கொண்டு போகிப் பவனத்தில் சேர்த்தினானே.

நாககுமாரன் பெருமைத் திருமகனாக விளங்குதல்


59) அறஉரை அருளிச் செய்த அம்முனி குறித்த நான்கும்
திறவதின் எய்தி நல்ல சீர்கலைக் கடலை நீந்திப்
படுமதக் களிறும் தேர்மா புகழ்பெற ஊர்ந்து மூன்றாம்
பிறையது போல்வளர்ந்து பீடுஉடைக் குமரன் ஆனான்.

விசாலநேத்திரை பொறாமையால் மகன் சிரீதரனிடம் சொன்ன சொற்கள்


60) தூசுநீர் விசாலக்கண்ணி சுதனைக்கண்டு இனிது உரைப்பாள்
தேசநல் புரங்கள் எங்கும் திகழ்பணி குமரன் கீர்த்திப்
பேசஓணா வகையில் கேட்டேன் பெருந்தவம் இல்லை நீயும்
ஏசுற இகழ்ஒன்று இன்றி இனிஉனைக் காக்க என்றாள்.

சிரீதரன் நாககுமாரனைக் கொல்லச் சமயம் பார்த்திருத்தல்


61) சிரிதரன் கேட்டு நெஞ்சில் செய்பொருள் என்என்று ஏகி
குறிகொண்டு ஆயிரத்தினோரைக் கொன்றிடும் ஒருவனாகச்
செறியும்ஐந்நூறு பேரும் சீர்மையில் கரத்தினாரை
அறிவினில் கூட்டிக் கொண்டு அமர்ந்துஇனிது இருக்கும் அந்நாள்.

நாககுமாரன் நீர்விளையாடலும் பிரிதிவிதேவி அவண் போதலும்

வேறு

62) குமரனும்நன் மாதரும் குச்சம்என்னும் வாவிஉள்
மமரநீரில் ஆடவே வன்னமாலை குங்குமம்
சுமரஏந்திப் பட்டுடன் தோழிகொண்டு போகையில்
சமையும்மாட மீமிசைச் சயந்தரன் இருந்ததே.

விசாலநேத்திரை சயந்தரனிடம் பொய்யுரை பகர்தல்


63) வேந்தன் பக்கம்கூறுநல் விசாலநேத்திரையவள்
போந்தனள் மனைவியால் புணரும்சோரன் தன்னிடம்
பூந்தடத்தைச் சுற்றிய பொற்புடைக் கரைமிசை
ஏந்திழையாள் நிற்பக்கண்டு இனிச்சுதன் பணிந்ததே.

பொய்பேசிய மூத்த மனைவியை மன்னன் கடிதலும், நாககுமாரன் சுற்றம்சூழ மனை திரும்புதலும்


64) பொய்உரை புனைந்தவளைப் புரவலனும் சீறினான்
நையும்இடை மாதரும் நாகநல் குமரனும்
செய்யமாலை சாந்துபட்டுச் செம்மையுடன் தாங்கியே
வெய்யவேல்கண் தாயுடன் வியன்மனை அடைந்தனன்.

பிரிதிவிதேவிக்கு மன்னன் இட்ட கட்டளை


65) மன்னன் தேவியை மாதேஎங்கு போனதுஎன்
நின்னுடைப் புதல்வன் நீராடல்காணப் போனதுஎன்
நின்உடன் மனைதனில் ஈண்டுஇனிதின் ஆடல்என்
நந்நகர்ப் புறத்தனைய நாடல்நீங்க என்றனன்.

தேவியின் சோர்வும் நாககுமாரன் உலாப்போதலும்


66) அரசன்உரைத்து ஏகினான் அகமகிழ்வும் இன்றியே
சிரசுஇறங்கித் துக்கமாய்ச் சீர்கரத்து இருந்தனள்
விரகுநல் குமரனும் வியந்துவந்து கேட்டனன்
அரசன்உரை சொல்லக்கேட்டு ஆனைமிசை ஏறினான்.


67) வாத்தியம் முழங்கவும் மதவாரணம் அடக்கவும்
ஏத்துஅரிய வீதிதொறும் ஈடுஇல்வட்ட சாரியும்
பார்த்துஅரிய நடனமும் பல்இயங்கள் ஆர்ப்பவே
சீற்றமொடு உலாச்செலச் சீர்அரசன் கேட்டனன்.

அரசன் சினந்து நாககுமாரனின் நற்பொருள் கவரச்செய்தல்


68) நன்அடியார் சொல்லினர் நாகநல் குமரன்என்
இன்உரையை மீறினன் இனிஅவன் மனைபுகுந்து
பொன்அணிகள் நற்பொருள் நாடிமிக் கவர்கொள
என்றுஅரசன் கூறலும் இனப்பொருள் கவர்ந்தனர்.

நாககுமாரன் அரசர்களுடன் சூதாடிப் பொருள் மிகக் கொணர்தல்


69) ஆடு வாரணமிசை அண்ணல்வந்து இழிதர
நீடுமாளிகைஅடைய நீர்மைநற்றாய் கூறலும்
ஆடும்சூது மனைபுகுந்து அரசர்தம்மை வென்றபின்
கூடும் ஆபரணமே குமரன் கொண்டு ஏகினான்.

அரசர்கள் சயந்தரனிடம் முறையிடுதல்


70) அரசர்கள் அனைவரும் அதிகராசனைத்தொழ
அரவமணி ஆரமும் ஆன முத்து மாலையும்
கரம்அதில் கடகமும் காய்பொன் கேயூரமும்
எரிமணிகள் இலதைவேந்து என்னஇக் கூற்றென.

நாககுமாரனுடன் ஆடிய சூதில் தந்தை இருமுறை தோற்றல்


71) சூதினால் செயித்துநின் சுதன்அணிகள் கொண்டனன்
சூதில்ஆட என்னுடன் சுதன்அழைப்ப வந்தபின்
சூதினில் துடங்கிநல் சுதனும்தந்தை அன்பினில்
சூதுஇரண்டு ஆட்டினும் சுதன்மிகச் செயித்தனன்.

தாயின் மனையில் கவர்ந்துசென்ற பொருளைமட்டும் கொண்டு ஏனைய பொருள்களை உரியவர்க்கே அளித்தல்


72) இனியசூதில் ஆடலுக்கு இசைந்ததேச மன்னரை
இனியதாயப் பொருள்களை இயல்பினால் கொடுத்துஉடன்
தனையனும் மனைபுகுந்து தாய்பொருள் கொடுத்தபின்
அணிஅரசர் ஆரமும் அவர்அவர்க்கு அளித்தனன்.

புதிய மாளிகையில் நாககுமாரன் குடிபுகுதல்


73) மன்னவன்தன் ஏவலால் மாநகர்ப் புறத்தினில்
நன்நகர் சமைத்துஇனிதின் நற்சுதன் இருக்கஎன்று
அந்நகரின் நாமமும் அலங்கரிய புரம்எனத்
தன்நகரின் மேவும்பொன்தார் அணிந்த காளையே.

மூன்றாம் சருக்கம்

கவிக்கூற்று


74) அரிவையர் போகம் தன்னில் ஆனநல் குமரன் தானும்
பிரிவுஇன்றி விடாது புல்லிப் பெருமலர்க் காவு சேர்ந்து
பரிவுடன் இனிதின் ஆடிப் பாங்¢கினால் செல்லும் நாளில்
உரிமையால் தோழர்வந்து சேர்ந்தது கூறல் உற்றேன்.

நாககுமாரனின் தோழர் வரலாறு


75) பார்அணி சூர சேனம் பண்ணுதற்கு அரிய நாட்டுள்
ஊர்அணி கொடிகள் ஓங்கும் உத்தர மதுரை தன்னில்
வார்அணி கொங்கை மார்க்கு மாரன்நேர் செயவர்மாவின்
சீர்அணி தேவிநாமம் செயவதி என்பது ஆகும்.

வியாள-மாவியாளரின் தோற்றம்


76) வேய்ந்தவெம் முலையாள் பக்கல் வியாள மாவியாளர் என்னும்
சேர்ந்துஇரு புதல்வர் தோன்றிச் செவ்வியால் செல்லும் நாளில்
காந்திநல் தவத்தோர் வந்தார் கடவுள்நேர் தூம சேனர்
வேந்தன்வந்து அடி வணங்கி விரித்துஒன்று வினவினானே.


77) என்னுடையப் புதல்வர் தாமும் இனிஅரசு ஆளும் ஒன்றோ
அன்னியன் சேவை ஒன்றோ அடிகள் நீர்அருளிச் செய்மின்
துன்னிய புதல்வர் தாமும் ஒருவனைச் சேவை பண்ணும்
என்றுஅவர் குறியும் சொல்ல எழில்முடி புதல்வர்க்கு ஈந்தான்.

வியாள-மாவியாளர் தம் நாடுவிட்டுப் பாடலிபுரம் சார்தல்


78) மன்னன்போய் வனம் அடைந்து மாமுனியாகி நிற்பப்
பின்னவர் அமைச்சன் தன்மேல் பெருநிலப் பாரம் வைத்துத்
தன்இறை தேடிப் போந்தார் தரைமகள் திலதம் போலும்
பன்னக நகரம் நேர்ஆம் பாடலிபுரமது ஆமே.

பாடலிபுர மன்னன் மகளிரை அவ்விருவரும் மணத்தல்


79) நன்னகர்க்கு இறைவன் நல்ல நாமம் சிரீவர்மன் ஆகும்
தன்னவன் றேவி பேரும் தக்கசிரீமதியாம் அம்பொன்
கிண்ணம்போல் முலையாள் புத்ரிகேணிகாசுந் தரிஎன்பாள்ஆம்
விண்உறை தேவர் போல வியாள மாவியாளர் வந்தார்.


80) மன்னனைக்கண்டு இருப்ப மாவியாளன் தகமை கண்டு
தன்உடையப் புதல்வி தன்னைத் தான்அவன் கொடுத்துத் தாதி
துன்னிய மகளி தன்னைச் சுந்தரிவியாளனுக்கு
மன்இயல் கொடுப்ப மன்னர் இருவரும் இன்புற்றாரே.

நாககுமாரனை வியாளன் காண, அவன் நெற்றிக்கண் மறைதல்


81) சிறுதினம் சென்ற பின்பு சீருடன் வியாளன் போந்து
நறுமலர்க் கோதை வேலான் நாகநல் குமரன் கண்டு
சிறுமலர் நெற்றிக் கண்ணும் சேரவே மறையக் கண்டு
சிறியன்யான் இன்னான் என்றான் செல்வனும் மகிழ்உற்றானே.

சீதரன் ஏவிய சேனையை வியாளன் கம்பத்தால் அடித்து மாய்த்தல்


82) செல்வனைக் கொல்வது என்று சிரீதரன் சேனை வந்து
பல்சன மனையைச் சூழப் பண்புடை வியாளன் கண்டு
வல்லைநீர் வந்தது என்ன வள்ளலை வதைக்க என்றார்
கொல்களி யானைக் கம்பம் கொண்டுஉடன் சாடினானே.

சீதரன் வந்து நாககுமாரனை எதிர்த்தலும், அமைச்சர் வேண்டுதலால் போர் விடுத்தலும்


83) சேனைதன் மரணம் கேட்டு சிரீதரன் வெகுண்டு வந்தான்
ஆனைமேல் குமரன் தோன்றி அவனும்வந்து எதிர்த்த போது
மானவேல் மன்னன் கேட்டு மந்திரிதன்னை ஏவ
கோன்அவர் குமரன் கண்டு கொலைத் தொழில் ஒழித்தது அன்றே.

மன்னனின் ஆணை கேட்ட நாககுமாரனின் மறுமொழி


84) நாகநல் குமரன் கண்டு நயந்தரன் இனிய கூறும்
வேகநின் மனைக்குச் சூரன் வெகுண்டுஅவன் வந்தான் என்ன
போகநீ தேசத்து என்று புரவலன் சொன்னான் என்ன
ஆகவே அவன்முன் போகில் அவ்வண்ணம் செய்வன் என்றான்.

நயந்தரன் அறிவுரையால் சீதரன் மனை புகுதல்


85) நயந்தரன் சென்று உரைப்பான் நல்லறிவு இன்றி நீயே
செயந்தனில் ஒருவன் கையில் சேனைதன் மரணம் கண்டும்
நயந்து அறியாத நீயே நன்மனை புகுக என்றான்
பயந்துதன் சேனை யோடும் பவனத்தில் சென்ற அன்றே.

நாககுமாரன் தேவிமாரோடு தன் தோழன் வியாளனின் ஊருக்குச் செல்லுதல்


86) தந்தையால் அமைச்சன் சொல்லத் தானும் தன்தாய்க்கு உரைத்து
தந்திமேல் மாதர் கூடத் தோழனும் தானும் ஏறி
நந்திய வியாளன் நன்ஊர் மதுரையில்புக்கு இருந்து
அந்தம்இல் உவகைஎய்தி அமர்ந்துஇனிது ஒழுகும் நாளில்.

மதுரையில் வீணைத் தலைவன் குழுவுடன் எதிர்ப்படல்


வேறு

87) மன்னவ குமரனும் மன்னனும் தோழனும்
அந்நகர்ப் புறத்தினில் ஆடல் மேவலின்
இன்இசை வீணைவேந்து இளையர் ஐஞ்நூற்றுவர்
அன்னவர்க் கண்டுமிக்கு அண்ணல் உரைத்தனன்.


88) எங்குஉளிர் யாவர்நீர் எங்குஇனிப் போவதுஎன்று
அங்குஅவர் தம்முளே அறிந்துஒருவன்சொலும்
தங்கள்ஊர் நாமமும் தந்தைதாய் பேர்உரைத்து
இங்குஇவர் என்கையின் வீணைகற்பவர்களே.

வீணைத் தலைவன் சொன்ன காம்பீர நாட்டுச் செய்தி


வேறு

89) நந்துகாம் பீரநாட்டின் நகரும் காம்பீரம் என்னும்
நந்தன ராசன்தேவி நாமம் தாரணியாம் புத்திரி
கந்தம்ஆர் திரிபுவனாரதி கைவீணை அதனில் தோற்று
என்தமரோடும் கூட எங்கள்ஊர்க்கு ஏறச்சென்றோம்.

திரிபுவனாரதியை வீணையினால் வென்று நாககுமாரன் நன்மணங் கொள்ளல்


90) வெற்றிவேல் குமரன் கேட்டு வியாளனும் தானும் சென்று
வில்புரு வதனத்தாளை வீணையின் வென்று கொண்டு
கற்புடை அவள்தன் காமக் கடல்இடை நீந்து நாளில்
உற்றதுஓர் வணிகனைக்கண்டு உவந்துஅதிசயத்தைக் கேட்டான்.

வேற்றுநாட்டு வணிகன் சொன்ன அற்புதச் செய்தி


91) தீதுஇல்பூந் திலகம் என்னும் சினாலயம் அதனின் முன்னில்
சோதிமிக் கிரணம் தோன்றும் சூரியன் உச்சி காலம்
ஓதிய குரலன் ஆகி ஒருவன்நின்று அலறுகின்றான்
ஏதுஎன்று அறியேன் என்றான் எரிமணிக் கடகக் கையான்.

வணிகன் சொன்ன சினாலயத்தை நாககுமாரன் சேர்ந்திருத்தல்


92) குன்றுஎனத் திரண்ட தோளான் குமரனும் கேட்டுஉவந்து
சென்றுஅந்த ஆலயத்தில் சினவரன் பணிந்து நின்று
வென்றுஅந்த விமலன் மீது விரவிய துதிகள் சொல்லி
முன்அந்த மண்டபத்தின் முகமலர்ந்து இனிது இருந்தான்.

வேடனின் மனைவியை நாககுமாரன் மீட்டுத்தருதல்

93) பூசல்இட்டு ஒருவன் கூவப் புரவல குமரன் கேட்டு
ஓசனிக்கின்றது என்ன ஒருதனி நின்ற நீயார்
ஆசைஎன் மனைவி தன்னை அதிபீம அசுரன் கொண்டு
பேசஒணா மலைமுழஞ்சுள் பிலத்தினில் வைத்துஇருந்தான்.


94) இரம்மிய வனத்துள் வாழ்வேன் இரம்மிய வேடன் என்பேன்
விம்முறு துயர்சொல் கேட்டு வீரன்அக் குகைகாட்டு என்னச்
செம்மையில் சென்று காட்டச் செல்வனும் சிறந்து போந்து
அம்மலைக் குகைவாய் தன்னில் அண்ணலும் உவந்து நின்றான்.

வியந்தரதேவன் நாககுமாரனுக்கு வாள் முதலியன கொடுத்தல்

95) வியந்தர தேவன் வந்து வந்தனை செய்து நிற்ப
விந்தநல் கிராதன் தேவிதனை விடுவித்த பின்புச்
சந்திரகாந்தி வாளும் சாலமிக்கு அமளி தானும்
கந்தநல் காமம் என்னும் கரண்டகம் கொடுத்தது அன்றே.

வேடன் உரைத்த மலைக்குகை நாலாயிரவர் நாககுமாரனுக்கு அடிமையாதல்

96) அங்குநின்று அண்ணல் போந்து அதிசயம் கேட்ப வேடன்
இங்¢குஉள மலைவாரத்தில் இரணிய குகைஉண்டு என்னக்
குங்குமம் அணிந்த மார்பன் குமரன்கேட்டு அங்குச் சென்றான்
அங்குள இயக்கி வந்து அடிபணிந்து இனிது சொல்வாள்.


97) இனிஉனக்கு ஆளர் ஆனோம் ஈர்இரண்டு ஆயிரவர்
எனஅவள் சொல்ல நன்றுஎன்று இனிஒரு காரியத்தின்
நினைவன்யான் அங்கு வாஎன் நீங்கிநற் குமரன் வந்து
வனசரன் தன்னைக் கண்டு அதிசயம் கேட்பச் சொல்வான்.

வேடன் சொற்படி வேதாளத்தை வதைத்தல்

98) வாள்கரம் சுழற்றி நிற்பான் வியந்தரன் ஒருவன் என்னக்
காலினைப் பற்றி ஈர்ப்பக் கனநிதி கண்டு காவல்
ஆள்எனத் தெய்வம் வைத்து அருகன்ஆலையத்துள் சென்று
தோள்அன தோழன் கூடத் தொல்கிரிபுரத்தைச் சேர்ந்தான்.

கிரிகூடபுரத்தில் நாககுமாரன் கணைவிழியை மணத்தல்

99) அந்நகர்க்கு அதிபன் ஆன வனராசன் தேவிதானும்
மன்னிய முலையினாள்பேர் வனமாலை மகள்நன் நாமம்
நன்நுதல் கணைவிழியை நாகநல் குமரனுக்குப்
பன்அரும் வேள்வி தன்னால் பார்த்திபன் கொடுத்தது அன்றே.

புண்டரபுரத்தை வனராசற்கு அளித்தல்

100) தாரணி வனராசன்குத் தாயத்தான் ஒருவன் தன்னைச்
சீரணி குமரன் தோழன் சிறந்துஅணி மாமன் கூடப்
பார்அணி வெற்றி கொண்டு புண்டர புரத்தை வாங்கி
ஏர்அணி வனரா சன்கு எழில்பெறக் கொடுத்த அன்றே.

நாடிழந்த சோமப்பிரபன் நற்றவம் செய்தல்

101) சொல்அரும் நாடு இழந்து சோமநல் பிரபன் போகி
எல்லையில் குணத்தின் மிக்க எமதரர் அடிவணங்கி
நல்லருள் சுரந்துஅளிக்கும் நற்றவ முனிவன் ஆகி
ஒல்லையின் வினைகள் தீர யோகத்தைக் காத்து நின்றான்.

நான்காம் சருக்கம்

சுப்பிரதிட்ட மன்னன் செயவர்மன் பரம முனிவரைப் பணிந்து வேண்டுதல்

102) சுப்பிரதிட்டம் எனும்புரம் ஆள்பவன்
செப்பு வன்மை செயவர்மராசன்தன்
ஒப்புஇல் பாவையும் ஓவியம் போல்செம்பொன்
செப்பு நேர்முலையாள்நல் செயவதி.


103) மக்கள் சேத்திஅ பேத்தியர் என்றுஇவர்
மிக்க செல்வத்தின் மேன்மையில் செல்லுநாள்
பக்க நோன்புடை பரம முனிவரர்
தொக்க ராசன் தொழுதிட்டு இறைஞ்சினான்.


104) இருவர் என்சுதர் என்னுடை ராச்சியம்
மருவி ஆளுமோ மற்றுஒரு சேவையோ
திருவுளம் பற்றித் தேர்ந்துஅறிவிக்கஎனத்
திருமுடி மன்ன செப்புவன் கேள்என்றார்.

முனிவர் மன்னனுக்கு உரைத்தவை

105) புண்டிரம் எனும்புரப் புரவலன்தனைக்
கண்திறந்து உந்திடும் காவலன்தனை
அண்டிநல் சேவையார் ஆவராம்எனப்
பண்திறத்தவத்தவர் பண்உரை கேட்டபின்.

செயவர்மன் புதல்வரின் அரசாட்சி

106) மக்கள் மிசைநில மன்னவன் வைத்துஉடன்
மிக்கு நத்துவம் வீறுடன் கொண்டுதன்
நிற்கும் செவ்வினை நீங்க நின்றனர்
தக்க புத்திரர் தாரணி ஆளும்நாள்.

சோமப்பிரபர் வழி அக்குமரர் நாககுமாரன் புகழை அறிதல்

107) நல்அருந்தவச் சோமப் பிரபரும்
எல்லை இல்குண இருடிகள் தம்முடன்
தொல்புகழ்ப்புரம் சுப்பிர திட்டத்தின்
நல்ல காவின் நயந்துஇருந்தார்களே.


108) செயவர்மன் சுதர் சீர்நல் தவர்களை
நயம் அறிந்துசேர் நன்அடியைப்பணிந்து
இயம்பும் இம்முனி இப்ப துறந்ததுஎன்
செயந்தரன்சுதன் சீற்றத்தின் ஆனதே.

செயவர்மன் புதல்வரிருவரும் நாககுமாரனை வந்தடைதல்

வேறு

109) என்றவர் உரையைக் கேட்டு இருவரும் துறந்து போந்து
சென்றுநல் குமரன் தன்னைச் சீர்பெற வணங்கிச் சொன்னார்
இன்றுமக்காளர் ஆனோம் என்றுஅவர் கூற நன்றுஎன்
குன்றுசூழ் வனசாலத்துக் குமரன்சென்று இருந்த அன்றே.


110) அடிமரத்து இருப்ப அண்ணல் அந்நிழல் திரிதல் இன்றித்
கடிகமழ் மார்பன் தன்னைக் காத்துஉடன் இருப்பப் பின்னும்
விடமரப் பழங்கள் எல்லாம் வியந்து நன்துய்த்து இருந்தார்
கொடிமலர்க் காவு தன்னுள் கோமகன் இருந்த போழ்தில்.

ஆலநிழலிருந்தபோது ஐந்நூற்றுவர் வந்து குமரனைத் தலைவனாக ஏற்றுக்கொள்ளல்

111) அஞ்சுநூற்றுவர்கள் வந்தே அடிபணிந்து இனிய கூறும்
தஞ்சமாய் எங்கட்கு எல்லாம் தவமுனி குறிஉரைப்ப
புஞ்சிய வனத்துஇருந்தோம் புரவலன் நின்இடத்தின்
நெஞ்சிலில் குறியன் காணாய் எமக்குநீ இறைவன் என்றார்.

கிரிநகரில் குணவதியை நாககுமாரன் மணத்தல்

112) அரியநல் உரையைக் கேட்டு அவ்வணம் களிசிறந்து
உரியநல் அவர்களோடும் உவந்துஉடன் எழுந்து சென்று
கிரிநகர் தன்னைச்சேரக் கேட்டுநன் நகரைச் சென்றான்
அரிவரன் எதிர்க்கொண்டு ஏக அவன்மனை புகுந்துஇருந்தான்.


113) அரிவர ராசன் தேவி அருந்ததி அனைய கற்பின்
மிருகலோசனைஎன் பாளாம் மிக்கநன் மகள்தன் பேரும்
சுரிகுழல் கருங்கண் செவ்வாய்த் துடிஇடைக் குணவ தீயைப்
பிரவிச் சோதனன் இச்சித்துப் பெருநகர் வளைந்தது அன்றே.


114) நாகநல் குமரன் கேட்டு நால்படையோடும் சென்று
வேகநல் போர்க்களத்தில் வெற்றிகொண்டு அவனை ஓட்டி
நாகநல் எருத்தின் வந்து நகர்புகுந்து இருப்ப மிக்க
போகம்மிக் குணவ தீயைப் புரவலன் கொடுத்தது அன்றே.

நாககுமாரன் குணவதியுடன் கூடிப் போகந் துய்த்தல்

115) வேல்விழி அமிர்துஅன்னாளை வேள்வியால் அண்ணல் எய்திக்
கால்சிலம்பு ஓசை செய்யக் காமனும் ரதியும் போலப்
போனமும் போகம் எல்லாம் பருகிஇன்புற்று நாளும்
நூல்நெறி வகையில் துய்த்தார் நுண்இடை துவள அன்றே.


116) கலைஅணி அல்குல் பாவை கங்குலும் பகலும் எல்லாம்
சிலைஉயர்ந்து இனிய திண்தோள் செம்மலும் பிரிதல் இன்றி
நிலைபெற நெறியில் துய்த்தார் நிகர்இன்றிச் செல்லும் நாளுள்
உலைதல்இல் உறுவலீயான் ஊர்ச்சயந்தகிரிஅடைந்தான்.

நாககுமாரன் சயந்தகிரியடைந்து சினாலயம் தொழுதல்

117) வாமன் ஆலையத்து மூன்று வலம்கொண்டு உட்புகுந்து இறைஞ்சி
தாமம்ஆர் மார்பன் மிக்க தக்கநல் பூசை செய்து
சேமமாம் முக்குடைக்கீழ் இருந்துஅரியாசனத்தின்
வாமனார் துதிகள் சொல்ல வாழ்த்துபு தொடங்கினானே.

முக்குடைக்கீழ் விளங்கும் மூர்த்தியை வாழ்த்துதல்

வேறு

118) முத்துஇலங்கு முக்குடைக்கீழ் மூர்த்தி திருந்துஅடியை
வெற்றியுடன் பணிந்தவர்கள் விண்உலகம் ஆண்டுவந்து
இத்தலமும் முழுதுஆண்டு இருங்களிற்று எருத்தின்மிசை
நித்தில வெண்குடைக்கீழ் நீங்காது இருப்பவரே.


119) கமலமலர் மீதுஉறையும் காட்சிக்கு இனிமூர்த்தி
அமலமலர்ப் பொன்சரணை அன்பாய்த் தொழுபவர்கள்
இமையவர்கள் உலகத்து இந்திரராய்ப் போய்உதுதித்து
இமையவர்கள் வந்துதொழ இன்புற்று இருப்பாரே.


120) அரியாசனத்தின்மிசை அமர்ந்த திருமூர்த்தி
பரிவாக உன்னடியைப் பணிந்து பரவுவர்கள்
திரிலோகமும்தொழவே தேவாதி தேவருமாய்
எரிபொன் உயிர்விளங்கி இனியமுத்தி சேர்பவரே.

வில்லாளன் ஒருவனின் தூதுச் செய்தி

121) இணைஇலா இறைவனை ஏத்திஇவ்வகையினால்
துணைஇனிய தோழன்மார் சூழ்ந்¢து உடன்இருந்தபின்
கணைசிலை பிடித்துஒருவன் கண்டுஒர்ஓலை முன்வைத்து
இணைகரமும் கூப்பிநின்று இனிதுஇறைஞ்சிக் கூறுவான்.


122) வற்சைஎனும் நாட்டின்உள் வான்புகழும் கௌசம்பி
செற்றவரினும்மிகு சூரன்சுபசந்திரன்
வெற்புநிகர் கற்பினாள் வேந்தன்மகா தேவியும்
நற்சுகாவதிஎனும் நாமம்இனிது ஆயினாள்.


123) அன்னவர்தம் புத்திரிகள் ஆனஏழு பேர்களாம்
நன்சுயம்பிரபையும் நாகசுப்பிரபையும்
இன்பநல் பிரபையும் இலங்குசொர்ணமாலையும்
நங்கைநல் பதுமையும் நாகதத்தை என்பரே.


124) வெள்ளியின் மலையில் மேகவாகனன்துரந்திடக்
கள்அவிழ் மாசுகண்டன்அவன் வந்துஉடன்
கிள்ளைஅம் மொழியினாரைக் கேட்டுஉடன் பெறுகிலன்
வெள்ளைஅம் கொடிநகர வேந்தனை வதைத்தனன்.


125) வேந்தனுக்கு இளையன்உன்னை வேண்டிஓலையேதர
சேர்ந்தவன் அளித்தஓலை வாசகம் தௌ¤ந்தபின்
நாந்தக மயிற்கணை நலம்பெறத் திரித்துஉடன்
போந்தவனைக் கொன்றனன் பூஅலங்கல் மார்பனே.

நாககுமாரனின் வெற்றியும் நங்கையர் பலரை மணத்தலும்

126) அபிசந்திரன்தன்புரம் அத்தினாகம் ஏகியே
சுபமுகூர்த்த நல்தினம் சுபசந்திரன் சுதைகளும்
அபிசந்திரன் தன்மகளாம்சுகண்டன் சுதையுடன்
செபமந்திர வேள்வியால் செல்வன்எய்தி இன்புற்றான்.


127) நங்கைமார்கள் தன்உடன் நாகநல் குமரனும்
இங்கிதக் களிப்பினால் இசைந்துஇனிப் புணர்ந்துஉடன்
பொங்குநகர்ப் புறத்தினில் பூவளவன் மேவியே
திங்கள்சேர் செய்குன்றினும் சேர்ந்துஇனிது ஆடுநாள்.

அவந்திநாட்டு மேனகியை நாககுமாரன் அடைதல்

128) அவந்திஎன்னும் நாட்டினுள் ஆனஉஞ்சை நீள்நகர்
உவந்தமன்னன் நாமமும் ஓங்கும்செய சேனனாம்
அவன் தனன் மனைவியர் ஆனநல் செயசிரீ¢யாம்
சிவந்தபொன் நிறமகள் சீருடைய மேனகி.


129) பாடலீ புரத்துஇருந்த பண்புமாவியாளனும்
நாடிவந்து இருந்தனன் நன்குஉஞ்சை நகர்தனில்
சேடிகண்டு மேனகிக்குச் செப்பவந்து கண்டுஅவள்
நாடிஅவள் போயினள் நன்நிதிப் புரிசையே.


130) அந்நகர்விட்டு ஏகினன் ஆனமாவியாளனும்
சென்றுதன் தமையனைச் சேவடி பணிந்தபின்
நன்றுடன் வணங்கினன் நாகநல் குமரனை
இன்றிலன்தான் யார்என என்தம்பிஅவன் என்னலும்.


131) மின்னின்இடை நேர்இழை மேனகி எனஒரு
மன்மதனை இச்சியாள் மாவியாளன் சொல்லலும்
அந்நகரில் செல்லலும் அரிவையர் தரித்திட
மன்னன்அம்பு வேள்வியால் மன்னிநல் புணர்ந்தனன்.

மதுரையில் சிரீமதியை இசைப்போட்டியில் வென்று நாககுமாரன் பெறுதல்

132) மற்றும்ஒன்று உரைத்தனன் மதுரைமா நகரியில்
உற்றுஇருந்த சிரீமதி ஓர்ந்துநாடகம்தனில்
வெற்றிமுழவு ஏழ்இயம்ப வீறுடைய வல்லவன்
பற்றுடன் அவள்பதியாம் பார்மிசைமேல் என்றனன்.

மதுரை வந்த வணிகனிடம் நாககுமாரன் அவன் கண்ட அதிசயம் இயம்பக் கேட்டல்

133) அங்குசென்றுஅவ் அண்ணலும் அவளைவென்று கொண்டனன்
பொங்கும்இக் குழலியர்ப் புணர்ந்துஉடன் இருந்தபின்
வங்கமீது வந்தஓர் வணிகனை வினவுவான்
எங்குஉள அதிசயம் இயம்புகநீ என்றனன்.

வணிகன் பூதிலகமாபுரத்து அதிசயம் கூறல்

134) பொங்கும்ஆழியுள்ஒரு பூதிலகமாபுரம்
புங்கவன்தன் ஆலையம் பொங்குசொன்ன வண்ணமுன்
நங்கைமார் ஐஞ்நூற்றுவர் நாள்தொறும் ஒலிசெய்வார்
அங்குஅதற்குக் காரணம் யான்அறியேன் என்றனன்.

நாககுமாரன் அந்நகரம் சென்று சினாலயம் பணிந்து இருந்தமை

135) தனதுவித்தை தன்னையே தான்நினைக்க வந்தபின்
மனத்துஇசைந்த தோழரோடு வள்ளல்தீ பஞ்சுஎன்றுநல்
கனகமய ஆலையங் கண்டுவலங் கொண்டுஉடன்
சினன்அடி பணிந்துமுன் சிறந்துமிக்கு இருந்தனர்.

ஆலயத்தின் முன்வந்து ஐந்நூறு மங்கையர் அலற, அதன் காரணம் குமாரன் வினாவுதல்

136) ஒருநிரையாய் மங்கையர் ஓசைசெய்யக் கேட்டபின்
திருஅலங்கல் மார்பினான் சேரஅழைத்து அவர்களை
அருகன்ஆலையத்துமுன் அலறும்நீங்கள் யார்எனத்
தரணிசுந்தரியவள் அவன்கு இதுஎன்று கூறுவாள்.

ஐந்நூற்றுவருள் தரணி சுந்தரி தங்கள் நிலையெடுத்துரைத்தல்

137) அரியவெள்ளி மாமலை ஆடும்கொடி யேமிடை
பிரிதிவி திலகம்எங்கள் பேருடைய நன்நகர்
வரதிரட்சகன்எமர் தந்தையை மருகனுக்குக்
கருதிஎம்மைக் கேட்டனன் கண்ணவாயுவேகனே.


138) எந்தையும் கொடாமையால் எரிஎன வெகுண்டனன்
எந்தையை வதைசெய்து எங்களையும் பற்றியே
இந்தநல் வனத்துஇருந்தான் என்றவளும் கூறலும்
அந்தவாயுவேகனை அண்ணல்வதை செய்தனன்.

வாயுவேகனைக் கொன்ற நாககுமாரன் நங்கையர் ஐந்நூற்றுவரை மணந்து இன்புறுதல்

139) அஞ்சுநூற்று மங்கையரை அண்ணல்வேள்வியால்எய்தி
நெஞ்சில்அன்பு கூரவே நிரந்தரம் புணர்ந்தபின்
அஞ்சுநூற்றுவர்படர்கள் ஆளர்ஆகி வந்தனர்
தஞ்சமாய் அவர்தொழுது அகமகிழ்ந்து செல்லுநாள்.

கலிங்கநாட்டு அரசகுமாரி மதனமஞ்சிகையை நாககுமாரன் கூடி மகிழ்தல்

140) கலிங்கம்என்னும் நாட்டின்உள் கனகமய இஞ்சிசூழ்ந்து
இலங்குரத்னபுரம் இந்நகர்க்கு மன்னவன்
துலங்குசந்திரகுப்தன் தோகைசந்திரம்மதி
பெலங்கொள்இவர் நன்மகள் பேர்மதனமஞ்சிகை.


141) நாகநல் குமரன் சென்று நன்மந்திர வேள்வியால்
வாகனம் இனிதின்இன்று மதன்மஞ்சிகையொடும்
தாகமிக்கு உடையனாய்த் தான்லயப் பருகினான்
நாகநல் புணர்ச்சிபோல் நன்குஉடன் இருந்துஅரோ.

கங்காளநாட்டு அரசகுமாரி இலக்கணையை நாககுமாரன் பெற்றுப் போகந் துய்த்தல்

142) கங்கைநீர் அணிந்துஇலங்கும் கங்காளநன் நாட்டின்உள்
திங்கள்தவழ் மாடம்நல் திலகபுர மன்னவன்
பொங்குமகுடம் முடி பொற்புவிசையந்தரன்
இங்கித மனைவிபேர் இயல்விசையை என்பளே.


143) இலக்கணை எனும்மகள் இலக்கணம் உடையவள்
மிக்கஅண்ண லும்சென்று மெய்ம்மைவேள்வி தன்மையால்
அக்கணத்து அவன்எய்தி அவள்தன்போகம் துய்த்தபின்
தொக்ககாவு தன்உளே தொல்முனிவர் வந்துஅரோ.

நாககுமாரன் அங்கு வந்த முனிவரைப் பணிந்து தன் மனக் கருத்திற்கு விளக்கம் கேட்டல்

144) ஊற்றினைச் செறித்திடும் உறுதவனுடைச் சாரணை
நாற்றமிக் குமரனும் நன்புறப் பணிந்தபின்
ஏற்றஅறங் கேட்டுஉடன் இருந்துஇலக்கணையின்மேல்
ஏற்றமோகம் என்என இயன்முனி உரைப்பரே.

ஐந்தாம் சருக்கம்

நாககுமாரனின் முந்திய பிறப்பு வரலாறு

145) நாவலந் தீவு தன்னுள் நன்குஅயிராவதத்தின்
மேவுமின் முகில்சூழ் மாட வீதசோகப்புரத்துக்
காவிநன் விழிமாதர்க்குக் காமன்விக்கிரமராசன்
தாவில் சீர் வணிகன் நாமம் தனதத்தன் என்பது ஆமே.


146) மனைவிதன் தனதத்தைக்கு மகன்நாகதத்தன் ஆகும்
வனைமலர் மாலை வேலான் மற்றுஒரு வணிகன் தேவிப்
புனைமலர்க் கோதை நல்லாள் பொற்புடை வசுமதிக்கு
மனையின்நன்மகள்தன் நாமம் இயன்நாகவசுஎன் பாள்இம்.


147) நண்புறு நாகதத்தன் நாகநல்வசுஎன்பாளை
அன்புறு வேள்வி தன்னால் அவளுடன் புணர்ந்து சென்றான்
பண்புறு நல்தவத்தின் பரமுனி தத்த நாமர்
இன்புறும் புறத்தின் வந்தார் இறைவன் ஆலையத்தின் உள்ளே.


148) நாகதத்தன்சென்று அந்த நன்முனி சரண்அடைந்து
வாகுநல் தருமம் கேட்டு அனசன நோன்பு கொண்டான்
போகபுண்ணியங்கள் ஆக்கும் பூரண பஞ்சமீயில்
ஏகநல் தினத்தின் நன்று இடர்பசி ஆயிற்று அன்றே.


149) தருமநல் தியானம் தன்னால் தன்னுடை மேனி விட்டு
மருவினான் அசோத மத்தின் வானவன் ஆகித் தோன்றி
வருகயல் விழியாள் நாக வசுவும்வந்து அமரனுக்கு
மருவிய தேவி ஆகி மயல்உறுகின்ற அன்றே.


150) அங்குஐந்து பல்ல மாயு அமரனாய்ச் சுகித்து விட்டு
இங்குவந்து அரசன் ஆனாய் இனிஅந்தத் தேவி வந்து
தங்குநின் மனைவி ஆனாள் தவமுனி உரைப்பப் பின்னும்
எங்களுக்கு அந்த நோன்பு இனிதுவைத்து அருள என்றான்.

நாககுமாரன் வேண்ட முனிவர் நாகபஞ்சமி நோன்பினை விளக்குதல்

151) திங்கள் கார்த்திகையில் ஆதல் சேர்ந்தபங்குனியில் ஆதல்
பொங்குஅனல் ஆடி ஆதல் பூரண பக்கம் தன்னில்
அங்குறு பஞ்சமியின் அனசன நோன்பு கொண்டு
தங்கும்ஆண்டு ஐந்து நோற்றான் தான்ஐந்து திங்கள் அன்றே.


152) இந்தநல் கிரமம் தன்னில் இனிமையின் நோன்பு நோற்று
அந்தம்இல் அருகர் பூசை அருள்முனி தானம் செய்தால்
இந்திர பதமும் பெற்று இங்குவந்து அரசர் ஆகிப்
பந்ததீவீனையை வென்று பஞ்சமகதியும் ஆமே.

முனிவர் உரைப்படி நாககுமாரன் பஞ்சமி நோன்புகொள்ள அவன் தந்தை ஏவலால் அமைச்சன் நயந்தரன்வந்து அழைத்தல்

153) என்றுஅவர்உரைப்பக் கேட்டு இறைஞ்சிக் கைக்கொண்டு நோன்பை
சென்றுதன் பவனம் புக்கான் சேயிழையோடு மன்னன்
நன்றுடன் செல்லும் நாளுள் நயந்தரன் வந்துஇறைஞ்சி
உன்னுடைத் தந்தை உன்னை உடன் கொண்டு வருக என்றான்.

நாககுமாரன் தன் நகருக்கு மனைவி இலக்கணையோடும் பிறரோடும் திரும்புதல்

154) அமையும்நன்கு அமைச்சன் சொல்லை அருமணி மார்பன் கேட்டு
சமையும்நால் படையும் சூழச் சாலலக் கணையினோடும்
இமையம்போல் களிற்றின்ஏறி இனியநல் தோழன் மாரும்
இமையவர்க்கு இறைவன் போல எழில்பெறப் புக்க அன்றே.

மகன் நாககுமாரனைத் தந்தை தழுவி வரவேற்றல்

வேறு

155) தாதைஎதிர் கொள்ளஅவன் தாழ்ந்துஅடி பணிந்தான்
ஆதரவினன் நன்மகனை அன்புற எடுத்தும்
போதமிகப் புல்லியபின் போந்தனர் மனைக்கே
ஏதம்இல்சீர் இன்புற இனிதுடன் இருந்தார்.

நாககுமாரன் தான் மணந்த மனைவியரை யெல்லாம் அழைப்பித்து அவருடன் சேர்ந்திருத்தலும், தந்தை அவனுக்கு முடிசூட்டித் துறவு பூணுதலும்

156) வெற்றியுடன் வேள்விசெய்த வேல்விழியினாரை
உற்றுஉடனே மாதரை ஒருங்குஅழைக்க வந்தார்
சித்திரநல் பாவையரைச் சேர்ந்துஉடன் இருந்தான்
பற்றுஅறச் செயந்¢தரனும் பார்மகன்மேல் வைத்தான்.


157) நாககுமரன்தனக்கு நன்மகுடம் சூட்டிப்
போகஉப போகம்விட்டுப் புரவலனும் போகி
யாகமன் அடைக்குமுனியவர் அடிபணிந்து
ஏகமனம் ஆகியவன் இறைவன் உருக்கொண்டான்.

பிரிதிதேவியும் துறவுபூண்டு நற்பேறு பெறுதல்

158) இருவினை கெடுத்தவனும் இன்பஉலகு அடைந்தான்
பிரிதிவிநல் தேவியும்தன் பெருமகனை விட்டு
சிரிமதி எனும்துறவி சீர்அடி பணிந்து
அரியதவம் தரித்துஅவளும் அச்சுதம் அடைந்தாள்.

நாககுமாரன் வியாளன் முதலிய தோழர்களுக்குத் தேயங்கள்அளித்தலும், தன் மனைவியருள் இலக்கணையைப் பட்டத்தரசி யாக்குதலும்


159) வேந்தன்அர்த்த ராச்சியம் வியாளனுக்கு அளித்தான்
ஆய்ந்தபல தோழர்களுக்கு அவனிகள் அளித்துக்
சேர்ந்ததன் மனைவியருள் செயலக்கணைதன்னை
வாய்ந்த மகாதேவிபட்டம் வன்மைபெற வைத்தான்.

இலக்கணையார் வயிற்றில் புதல்வன் பிறத்தல்


160) இலக்கணையார் தன்வயிற்றில் நல்சுதன் பிறந்தான்
மிக்கவன்தன் நாமமும் மிகுதேவகுமாரன்
தொக்ககலை சிலைஅயில் பயின்றுமிகு தொல்தேர்
ஒக்கமிக் களிறுஉடனே ஊர்ந்துதினம் சென்றான்.

நாககுமாரன் மன்னர் புடைசூழ அரியாசனத்து வீற்றிருத்தல்


161) புரிசைஎழ நிலத்தின்மிசை பொற்புஉற விளங்கும்
அரியஅரியாசனத்தில் அண்ணல் மிகஏறி
எரிபொன்முடி மன்னர்கள் எண்ஆயிரவர் சூழ
இருகவரிவீசஇனி எழில்பெற இருந்தான்.

மகன் தேவகுமாரனுக்கு முடி சூட்டி நாககுமாரன் துறவு பூணவே அவன் தேவி இலக்கணையும் துறவு மேற்கொள்ளல்


162) அரசுஇனிது இயல்பினின் அமர்ந்துஇருக்கும் அளவில்
பரவுமுகில் மாய்ந்திடப் பார்த்திபன் விரத்தி
விரவிமிகு குமரன்மிசை வீறுமுடி சூட்டி
அரியதவம் தாங்கஅவன் அன்புடன் எழுந்தான்.


163) அமலமதி கேவலியின் அடிஇணை வணங்கி
விமலன்உருக் கொண்டனன்நல் வேந்தர்பலர் கூட
கமலமலராள் நிகர்நல் காட்சிஇலக்கணையும்
துமிலமனைப் பதுமைஎனும் துறவர்அடிபணிந்தாள்.

நாககுமாரனும் அவன் தோழர் முதலியோரும் சித்தியும் முத்தியும் பெறுதல்


வேறு

164) நறுங்குழல் இலக்கணையும் நங்கைமார்தம் கூட
உறுதவம் தரித்துக்¢ கொண்டு உவந்துஅவர் செல்லும் நாளுள்
மறுவில்சீர் முனிவன் ஆய நாககுமாரன் தானும்
இறுகுவெவ் வினைகள் வென்று இனிச்சித்தி சேர்ந்தது அன்றே.


165) வியாள மாவியாளர் தாமும் விழுத்தவத்து அனயை என்னும்
நயாஉயிர் தியானம் தன்னால் நால்இரு வினைகள் வென்று
செயத்துதி தேவர் கூறிச் சிறந்த பூசனையும் செய்ய
மயாஇறப் பிறப்பும் இன்றி மருவினார் முத்தி அன்றே.


166) அருந்தவ யோகம் தன்னால் லச்சேத் தியபேத் தியர்தம்
இருவினை தம்மை வென்று இன்புறும் சித்தி சேர்ந்தார்
மருவுநல் தவத்தி னாலே மற்றும் உள்ளோர்கள் எல்லாம்
திருநிறைச் சோதம் ஆதி சேர்ந்துஇன்பம் துய்த்தார் அன்றே.


167) நாகநல் குமரன்கு ஆயு நான்குஆண்டு ஐஞ்நூற்று இரட்டி
ஆகுநல் குமார காலம் ஐந்து முப்பத்து இரட்டி
போகபூமிஆண்ட பொருவில் எண்நூறு ஆண்டு
ஆருநல் தவத்தில் ஆண்டு அறுபத்து நான்குஅது ஆமே.


168) மறுஅறு மனையவர்க்கும் மாதவர் தமக்கும் ஈந்த
பெறும்இரு நிலங்கள் எங்கும் பெயர்ந்து நல்கேவலியாய்
அறமழை பொழிந்த காலம் அறுபத்து ஆறாண்டு சென்றார்
உறுதவர் தேவர் நான்கும் உற்றுஎழு குழாத்தி னோடே.

நூற் பயன்



169) இதன்கதை எழுதி ஓதி இன்புறக் கேட்பவர்க்கும்
புதல்வர்நல் பொருளும் பெற்றுப் புரந்தரன் போல வாழ்ந்து
கதம்உறு கவலை நீங்கிக் காட்சிநல் அறிவு முன்பாய்ப்
பதமிகும் அமர யோகம் பாங்குடன் செல்வர் அன்றே.

உலகிற்கு அறவுரை



170) அறம்இன்றிப் பின்னை ஒன்றும் உயிர்க்குஅரண் இல்லைஎன்றும்
மறம்இன்றி உயிர்க்கு இடர்செய் மற்றுஒன்றும் இல்லை என்றும்
திறம்இது உணர்ந்து தேறித் தீக்கதிப் பிறவிக்கு அஞ்சி
மறம்இதை விட்டு அறத்தில் வாழுமின் உலகத் தீரே.


நாக குமார காவியம் முற்றிற்று.

Add a comment

உஞ்சைக் காண்டம்

கடவுள் வாழ்த்து

மணியுடன் கனக முத்த மலிந்த முக்குடை இலங்க
அணிமலர்ப் பிண்டியின் கீழ அமர்ந்த நேமிநாதர் பாதம்
பணிபுபின் வாணிபாதம் பண்ணவர் தாள்களுக்கு எம்
இணைகரம் சிரத்தில் கூப்பி இயல்புறத்தொழுதும் அன்றே.    1

பொன்னெயில் நடுவண் ஓங்கும் பூநிறை அசோக நீழல்
இன்னியல் ஆலயத்துள் ஏந்தரி ஆசனத்தின்
மன்னிய வாமன் பாதம் வந்தனை செய்து வாழ்த்தி
உன்னத மகிமை மிக்கான் உதயணன் கதை விரிப்பாம்.    2

அவையடக்கம்

மணிபொதி கிழியும் மிக்க மணியுடன் இருந்த போழ்தில்
மணிபொதி கிழிய தன்னை மணியுடன் நன்கு வைப்பார்
துணிவினில் புன்சொலேனும் தூய நற்பொருள் பொதிந்தால்
அணியெனக் கொள்வார் நாமும் அகத்தினுள் இரங்கல் செல்லாம்.    3

பயன்

ஊறுந் தீவினை வாய் தன்னையுற்றுடன் செறியப் பண்ணும்
கூறுநல் விதி புணர்ந்து குறைவின்றிச் செல்வம் ஆமுன்
மாநுறு கருமம் தன்னை வரிசையின் உதிர்ப்பை யாக்கும்
வீறுறு முறுப்பின் தன்மை விளம்புதற் பால தாமோ.    4

நூல்

நாட்டுச் சிறப்பு

இஞ்சி மூன்றுடைய கோமான் எழில் வீரநாதன் இந்தப்
புஞ்சிய நிலத்தோர்க் கெல்லாம் பொற்பு நல்லற நன்மாரி
விஞ்சவே சொரியுங் காலம் வெண்மதிக் குடைக்கீழ் வாழும்
எஞ்சலில் காட்சி மன்னனிருக்கை நாடு உரைத்தும் அன்றே.    5

நாவந்தீவு

பூவும் நற்றளிரும் செற்றிப் பொழில் மிகச் சூழ்ந்து இலங்கும்
நாவலர் மரத்தினாலே நாமமாய்த் துலங்கி நின்று
தீவுநற்கடல் கடாமும் ஒன்றிற்கொன்று இரட்டி சூழ்ந்த
நாவலந்தீவு நந்தினன் மணி போன்ற தன்றே.    6

வத்தவநாடு

வேதிகை சிலைவளைத்து வேதண்ட நாணேறிட்டுப்
போதவும் வீக்கினாற்போல் பொற்புடைப் பரதந் தன்னில்
ஓதியதரும கண்டத்து ஓங்கிய காவு நின்று
வாதத்தால் சுகந்தம் வீசுன் வத்தவநாடதாமே.    7

கோ நகரம்

இஞ்சிமிக் கெழுந்தே யோங்கி யிலக்கிய அமர லோகம்
எஞ்சலில் எல்லை காணா எழில்பெற நிற்றனோக்கி
அஞ்சல் இல்வருக என்றே அணிபெற விலங்கி நீண்ட
குஞ்சி நன் கொடிகரத்தால் கூவியிட்டு அழைக்குமன்றே.    8

முகில்தவழ் மாடமீதின் முத்தணி மாலை நான்றே
இகலுறும் அமளியின்மேல் எழின் மங்கை மைந்தர் தாமும்
பகலிரவு இன்றிப் போகம் பண்பினால் துய்த்திருப்பார்
நகரி கௌசாம்பி என்னும் நாம மார்ந்து இலங்குமன்றே.    9

அரசன்

ஊன் உமிழ்ந்து இலங்கும் வேலான் உன்னத முகில் எழுந்து
வான் உமிழ் வாரியன்ன வண்கையன் வண்டு அரற்றும்
தேன் உமிழ் இலங்கற்றோளான் செல்வத்தில் குபேரன் அன்னான்
தானுமிழ் கிரண மார்பன் சதானிகன் அரசனாமே.    10

கோப்பெருந்தேவி

மன்னன் உள்ளத்துள்ளான் மாமணி மயிலஞ் சாயல்
அன்ன மென்னடை வேற் கண்ணாள் அருந்தது அனைய நங்கை
பொன்னணி சுணங்கு பூத்த புணர்முலை அமிர்தம் அன்னாள்
மின்னு நுண் இடையாள் நாம மிகாவதி என்று மிக்காள்.    11

கற்புடைத் திருவினங்கை காரிகை தன் வயிற்றில்
சற்புருடன் ஒருவன் வந்து சார்ந்து அவதரித்து மிக்க
நற்புடைத் திங்கள் ஒன்பா னன்கு அமைந்திருக்கும் ஓர் நாள்
பொற்புடை மஞ்ச மீதில் பொலிவுடன் இருந்த போழ்தில்.    12

மிருகாபதியை பறவை தூக்கிச் செல்லல்

செந்துகின் மூடிக்கொண்டு திருநிலா முற்றந்தன்னில்
அந்தமாய்துயில் கொள்கின்ற ஆயிழை தன்னைக் கண்டே
அந்தரத்தோடுகின்ற அண்ட பேரண்டப்புள் ஒன்று
அந்தசையென்று பற்றியன்று வான் போயிற்று அன்றே.    13

மற்றவடந்தை தானுமாமுனியாகி நிற்கும்
சற்கிரி விபுல மன்னும் சாரலவ் வனத்திற் சென்று
நற்றவனருகில் வைப்ப நற்றுயில் விட்டெழுந்தாள்
பற்றுயிர் உண்ணாப்புள்ளும் பறந்து வான் போயிற்றன்றே.    14

அரசி கருவுயிர்த்தல்

நிறைமதி முக நன் மங்கை நிரம்பிய கெர்ப்பமாதல்
பொறைவயினோய் மீக்கூரப்பொருவில் வான் கோள்கள் எல்லாம்
முறையினல் வழியை நோக்க மொய்ம்பன் அத்தினத்தில் தோன்ற
அறையலை கடலில் சங்க மாணி முத் தீன்ற தொத்தாள்.    15

பொருகயற் கண்ணினால் தான்போந்ததை யறிந்தழுங்கித்
திருமணி கிடந்த தென்னச் செழுமகன் கிடப்பக்கண்டு
பெருகிய காதலாலே பெருந்துயர் தீர்த்திருப்ப
மருவு நற்றாதையான மாமுனி கண்டு வந்தான்.    16

குழந்தைக்குப் பெயரிடல்

தவமுனி கொண்டு சென்று தாபதப்பள்ளி சேர்த்தி
அவண் இனிது ஓம்பவப்பால் அருக்கனன் உதயகாலத்து
உவமையின்று உதித்தானாம் உதயணன் ஆக என்றார்
இவணமத் தாயும் சேயும் இருடிபாலிருந்தார் அன்றே.    17

உதயணன் பெற்ற பேறுகள்

பிரமசுந்தர யோகிக்குப் பிறந்தவன் யூகியோடும்
இருவரும் வளர்ந்தே இன்பக்கடல் நீந்திக் காணக்
கரிணமும் புள்ளு மற்றுங் கண்டடி வீழுங் கீதப்
புரந்தரன் கொடுத்த யாழும் பொறை முனியருளிற் பெற்றான்.    18

உதயணன் கோடபதியின் உதவியால் தெய்வ யானை பெறுதல்

மைவரை மருங்கினின்ற மலையென விலங்குகின்ற
தெய்வ நல்லியானை கண்டு சென்றுதன் வீணை பாடப்
பையெனக்களிறுங் கேட்டுப் பணிந்தபடி யிறைஞ்சி நின்று
கையது கொடுப்ப ஏறிக் காளையும் பள்ளி சேர்ந்தான்.    19

தெய்வ யானை உதயணன் கனவில் கூறுதல்

நன்றிருட் கனவினாக நயமறிந்து இனிது உரைக்கும்
பன்னிடும் பாகன் வந்து பற்றியே யேறினாலும்
இன்றை நாள் முதலா நீ நானின்றியே முன் உண்டாலும்
அன்று உன்பானில்லேன் என்றே அக்கரி உரைப்பக் கேட்டான்.    20

உதயணன் மாமனாகிய விக்கிரமன் அந்த தவப் பள்ளிக்கு வருதல்

செல்லும் அக்காலம் தன்னில் செறிந்தவன் புதல்வனான
வெல்களிற்றி யானை வேந்தன் விக்கிரன் தனக்கு மக்கள்
இல்லையென்று எவ்வல் கூர்ந்தே இனிமையின் வந்து நல்ல
சொல்லருண் முனிவன்பாதம் தொழுது நன்கிருந்தான் அன்றே.    21

விக்கிரமன் உதயணன் யூகியைப் பற்றி முனிவரிடம் வினவுதல்

புரவலனில் இனியராம் இப்புதல்வர்கள் யார்கொலென்ன
வரமுனியருளக் கேட்டு மகிழ்ந்து தன் ஆயமெல்லாம்
சிரசணி முடியும் சூட்டிச் செல்வற்குக் கொடுத்துப்போக்கி
விரவிய தவத்தனாக வேண்டுவது எண்ணம் என்றான்.    22

உதயணன் அரசுரிமை பெறுதல்

முனியொடு தங்கை தன்னை முயன்றிரந் தெய்தி நாகம்
தனையன வெங்கயத்திற் றனயனையேற்றிப் போய்த்தன்
மனனிறை நாட்டை அந்த மருகனுக்கீந்து போந்து
முனிவனம் புகுந்து மாமன் முனிவனாய் நின்றானன்றே.    23

சாதானிகன் மிருகாபதியைக் காணல்

இளமையை இகந்து மிக்க இனிய நற்குமரனாகி
வளமையில் செங்கோல் தன்னை வண்மையினடத்தினானாங்
இளமயில் அனைய தேவிக்கு இரங்கிய சாதானிகன் தான்
உளமலி கொள்கை யான்ற வொருதவற்கண்டு உரைத்தான்.    24

மிருகாபதி மீண்டும் மக்களைப் பெறுதல்

தேவியின் வரவு நல்ல திருமகன் செல்வுங் கேட்டு
மாவலன் மனமகிழ்ந்து வந்தூர் புக்கிருக்கு நாளில்
தேவியும் வந்து கூடிச் சிறந்த நற்புதல்வர் தம்மைத்
தேவிளங்குமரர் போலச் செவ்வியிற் பயந்தாளன்றே.    25

பிங்கல கடகரென்று பேரினிதிட்டு மன்னன்
தங்கிய காதலாலே தரணியாண்டினிது செல்லக்
குங்கும மணிந்த மார்பக் குமரனும் யூகியும் போய்
அங்குள தேசமெல்லா மடிப்படுத் தினிதிருந்தார்.    26

சதானிகன் துறவியாதல்

உதயணகுமரன் தன்னை யுற்றுடனழைத்துப் பூமிப்
பதமுனக்காக வென்று பார்த்திபன் கொடுத்துப் போகிக்
கதமுறு கவலை நீங்குங் காட்சி நற்றவத்தனாகி
இதமுறு யோகந்தன்னில் எழில் பெற நின்றான் அன்றே.    27

உதயணனுடைய அமைச்சர்கள்

மணிமுடி கவித்த போழ்தின் வத்தவர்க் கிறைவனானான்
அணியும் நாற்படையும் சூழ்ந்த அமைச்சரு நால்வர் நாமம்
தணிவில் சீர் யூகியோடு சாருரு மண்ணுவாவும்
துணை வயந்தகனும் தொல்சீர் இடபகனும் என்பவாமே.    28

உதயணன் யானையின் அறிவுரையைக் கடத்தல்

அரசனுக் கினியராகி அமைச்சியனடத்திச் செற்றே
வருபகை பலவுந்தேய வரச்செங்கோல் உய்க்குங்காலை
அரிய நாடகங்கள் கண்டே அரசனும் உளமாழாந்து
கரிணத்தை மறந்து விட்டுக் காதலினடிசிலுண்டான்.    29

தெய்வ யானை மறைந்து போதல்

மன்னிய தெய்வயானை மாயமாய் மறைந்துபோக
மன்னனும் மனம் தளர்ந்து மணி இழந்த அரவு போலத்
துன்னிய சோக மேவுத்துயரெய்தித் தேடுக என்றான்
பன்னருஞ் சேனை சென்று பாரெங்கும் தேடித்தன்றே 30

உஞ்சை நகர்

சிந்து கங்கை நீர் சேர்ந்து வளம்படும்
அந்த மாகும் அவந்தி நன்னாட்டினுள்
இந்து சூடிய விஞ்சி வளநகர்
உந்து மாளிகை யுஞ்சயினிப் பதி.    31

பிரச்சோதன மன்னன்

உரைப்பரும் படையோர் பிரச் சோதனன்
நிரைத்த மன்னர் நிதி மிக்களப்பவே
தரித்த நேமியுருட்டித் தரணியாண்டு
உரைத்த மாக்களி ற்றே றேறோடு மன்னுவான்.    32

பொருவின் மன்னவன் பொன் திறை கேட்புழித்
திருவமன்னர் திறை தெரியோ லையுள்
ஒரு மகன் புள்ளியிட்ட தறிந்திலன்
மருவிக் கூறலும் மன்னன் வெகுண்டனன்.    33

பிரச்சோதனன் அமைச்சரை வினாதல்

தாமரைக் கண்டழல் எழ நோக்கியத்
தீமை செய்த திறைக் கடன் மன்னனை
நாமறந்திட நன்கு மறைத்த தென்
ஆமமைச்ச ரென்று அண்ணல் வினவினான்.    34

அமைச்சர் விடை

உறு களத்தினில் உன்னிய ஆண்மையும்
பெறு பொருள்செறி பீடுடைக் கல்வியும்
தறுகண் வேழம் தசைக்குறு பெற்றியும்
மறுவில் வீணையின் வாய்த்தநல் விஞ்சையும்.    35

வளமையின் வந்த மன்னிய செல்வமும்
இளமை இன்பம் எழில் நல நற்குலம்
உளவன் ஆதலின் உற்ற கடனென
அளவு நீதி அமைச்சர் உரைத்தனர் 36

பிரச்சோதனன் சினவுரை

வேந்தன் கேட்டு வெகுண்டுரை செய்தனன்
போந்தவற் பற்றிப் போதரு வீரெனச்
சேர்ந்த மைச்சரகள் செய்பொருள் என்னென்று
மாந்தி மற்றவர் மற்றொன்று செய்கின்றார்.    37

அமைச்சர் சூழ்ச்சி

ஊன மாற்றர்மேல் யூகிபோர் போனதும்
ஆனை போக அரசன் இரக்கமும்
கான யானையைக் காட்டிப் பிடிப்பதும்
மான வேலவர் மந்திரித்து ஒன்றினார்.    38

அமைச்சர் மாய யானை செய்தல்

அரக்கினும் மெழு காக்கிய நூலினும்
மர த்தினுங்கிழி மாவின் மயிரினும்
விரித்த தோலினும் வேண்டிய வற்றினும்
தரித்த யானையைத் தாமிக் கியற்றினார்.    39

அமைச்சர்கள் யானையை செலுத்துதல்

பொறியமை சுரிப் பொங்கும் உதரத்தில்
உறையும் மாந்தர் ஓர் தொண்ணூற்றறுவரை
மறையு மாயுதம் வைத்த தனோருடல்
நெறி கண்டூர்ந்தனர் நீல மலையென.    40

சாலங்காயன் அதனை ஊர்ந்து காட்டல்

கார்முழங்கில் களிறொலி செய்யவே
போர் மிக்க ஆனையைப் பொற்புடை மன்னன்முன்
ஊர்ந்து காட்டினான் உற்ற அமைச்சருள்
சார்ந்த மந்திரி சாலங்காயன் என்பவன்.    41

சாலங்காயன் உதயணனைச் சிறைப் பிடிக்கச் செல்லல்

சாலங் காயநீ சார்ந்து தருகென
ஞாலம் காக்கு நரபதி செப்பலும்
வேலுங் கொண்டு நல் வேந்தர்கள் வெண்குடைக்
கோலும் பிச்சமுங் கொண்டு பறந்தனன்.    42

நாற்பெரும் படையின் அளவு

ஈரெண் ணாயிரம் எண்வரை யானையும்
ஈரெண் ணாயிரம் ஈடில் புரவியும்
ஈரெண் ணாயிரமின் மணித் தேருடன்
ஈரெண் ணாயிர விற்படை யாளரே.    43

இத்தனையும் இயல்புடன் கூடியே
மெத்தெ னாவரு கென்று விடுத்துடன்
ஒத்த நற்பொறி யோங்கிய யானையும்
வத்தவன் தன் வனத்திடை வந்ததே.    44

பொய் யானையை வேடர்கள் கண்டு உதயணனுக்கு அறிவித்தல்

அவ்வ னத்தினி லான் பிடிகளும்
கவ்வு கைத்தழைக் காரிடி யானைதன்
மவ்வ லம்மத வண்டெழ வீசலும்
அவ்வ னச்சரர் அன்புடன் கண்டனர்.    45

எம்மி றையது வேழமென எண்ணித்
தம்மில் ஓடி உதையற்கு ரைத்தலும்
கொம்மை வண்மணிக் கோலக் கலினமாச்
செம்மலும் சிறந் தேறி நடந்தனன்.    46

உதயணன் தேவ யானை என்று கருதி யாழ் மீட்டல்

புள்ளிடை தடுப்பத்தீய பொய்குறி செய்யக்கண்டும்
வள்ளலும் நடப்பானாக வயந்தகன் விலக்கப்போந்து
கள்ளவிழ் மலர்க்கானத்துக்கள்ள நல்லியானை கண்டே
உள்ளமெய்மொழி கடம்மால் உணர்ந்தவன் இனியனானான்.    47

நக்க ணத்தை நயந்துடன் நோக்கிலன்
அக்க ணத்தி லகமகிழ் வெய்தித் தன்
மிக்க வீணையை மெய்ந்நரம் பார்த்துடன்
தக்க ராகத்திற்றான் மிக வாசித்தான்.    48

பொய்யானை உதயணன் பால் வருதல்

பொறியின் வேழத்தின் பொங்கு செவியுற
உறுமனத் துடனூர்ந்து முன்னே வர
மறையு மாந்தர் கைம்மாவை அழித்திடப்
பொறி கழன்றது போர்ப்படை யானதே.    49

போர் நிகழ்ச்சி

செறுநர் செய்தது சித்திர மாமென
முறுவல் கொண்ட முகத்தினனாகத் தன்
உறு வயந்த கனுற்றவைந் நூற்றுவர்
மறுவில் வீரியர் வந்துடன் கூடினார்.    50

கரந்திருந்த களிற்றுனுட் சேனையும்
பரந்து முன்வந்து பாங்கில் வளைத்தபின்
விரிந்து வத்தவன் வெகுண்டுவில் நூறினான்
முரிந்து சேனை முனையின் மடிந்ததே.    51

சாலங் காயனும் சார்ந்து வெகுண்டிட
நாலு மாப்படை வந்துநாற் றிக்கிலும்
மேலெ ழுந்து மிகவும் வளைத்தன
காலன்போல் மன்னன் கண்கள் சிவந்தவே.    52

புல்வாய்க் கூட்டத்துப் புக்க புலியெனக்
கொல்வா ளோச்சியே கூற்றம் விருந்துண
வில்வாள் தம்முடன் வீரர் அழிந்திட
வல்வாள் வத்தவன் வாட்கிரை யிட்டனன்.    53

கொன்ற போரில் குருதிஆறு ஓடவும்
நின்ற மாந்தர்கள் நீங்கி விட்டோ டவும்
கன்றிஉள் சாலங் காயனும் மேல்வர
மன்றன் வாளவன் சென்னியில் வைத்தனன்.    54

மந்திரீகளை மன்னர் வதை செயார்
புந்தி மிக்கோருரை பொருட் டேறித்தன்
செந்தி வாளை அழுத்திலன் செல்வனும்
அந்த அமைச்சனை அன்பின் விடுத்தனன்.    55

உதயணன் எதிரி யானை, குதிரைப் படை அழித்தல்

திரளுடைக்கரி சேர்ந்து வளைத்தலும்
வரைகள் வீழ்வென வாரணம் வீழவும்
நிரை மணித்தேர் நிலத்திற் புரளவும்
புரவிகள் பொங்கிப் பூமியில் வீழவும்.    56

வெஞ்சினம் மனன் வேறணி நூறலும்
குஞ்சரத்தினற் கோட்டின் வாளொடியவத்
தஞ்ச மின்றிய தாருடை வேந்தனை
வெஞ்சொல் மாந்தர் வெகுண்டு உடன்பற்றினார்.    57

நங்கை மார்சூழ னாண்மலர் சூட்டுங்கை
திங்கள் போலத் திலத மெழுதுங்கை
பொங்கு கொங்கையிற் குங்குமம் பூசுங்கை
பங்க யத்தடிப் பாடகம் பூட்டுங்கை.    58

கீத வீணை செங்கெந்தம் அனையுங்கை
ஈதன் மேவியிர வலர்க்கு ஆற்றுங்கை
ஏதமில் குணத்து என்முடி மன்னன்கை
போத வெண்டு கிலாற்புறத் தார்த்தனர்.    59

உதயணன் வயந்தகனுக்கு ஓலையனுப்புதல்

சிலந்தி நூலிற் செறித்தநற் சிங்கம்போல்
அலங்கல் வேலினான் அன்புடை யூகிக்கே
இலங்க ஓலை எழுதி வயந்தகன்
நலங்கொள் கையின வின்று கொடுத்தனன்.    60

பிரச்சோதனன் மகள் வாசவதத்தையின் கனவு

காசிறேர் மிசைக் காவலுடன் செலப்
பேசரும் பெருமைப் பிரச் சோதனன்
ஆசையின் மகள் ஆடகப்பா வைபோன்ம்
வாசவ தத்தை வண்மைக் கனவிடை.    61

பொங்கி ளங்கதிர் போந்த தமளியில்
கொங்கையைத் தழீஇக் கொண்டுடன் செல
நங்கை கண்டு நற்றாதைக்கு உரைந்தனள்
அங்கந் நூலின் அறிந்தவர்க் கேட்டனன்.    62

இவன்முலைக் கியைந்த நல்லெழின் மணம்மகன் வந்தே
துவளிடை இளமுலை தோய்ந்து கொண்டுபோமென
அவள் கனவுரைப்பக் கேட்ட அண்ணலும் மகிழ்ந்தபின்
திவளுமாலைத் தேர்மிசைச் செம்மல் வந்தடைந்தனன்.    63

உதயணன் சிறைப் புக, வயந்தகன் யூகியைக் காணல்

மன்னனை மிகவு நொந்து மாநகரிரங்கவும்
துன்னிவெஞ்சிறை மனையிற் றொல்வினை துரப்பவும்
இன்ன நற்படியிருப்பவியல் வயந்தகனும் தான்
சென்றுயூகி தன்னிடைத் திருமுகத்தைக் காட்டினான்.    64

ஓலையைக் கண்டு யூகி துன்புறுதல்

அண்ணன்கோயில் எங்கணும் அரற்றினும் புலம்பினும்
கண்ணினீரருவிகள் கால் அலைத் தொழுகவும்
அண்ணல் ஓலைவந்த செய்திமான யூகிகேட்டுடன்
புண்ணில் வேலெறிந்தெனப் பொற்பழிந்து வீழ்ந்தனன்.    65

யூகியின் கோட்பாடு

தேறினன் எழுந்திருந்து தீயவர்கள் யானையை
மாறுதரக்காட்டி எம் மன்னனைப் பிடித்தனர்
வீறுதர அந்நகரை வெங்கயத் தழித்துப் பின்
கூறுமன் மகளுடன் கொற்றவனை மீட்குவம்.    66

மீள்குலம் யாமென்றெணி வெகுண்டு போர்க்களத்தினில்
வாண்முனை கடந்தவர்க்கு வஞ்சனை செய்வோமென
நீள்விழிநன் மாதரோடு நின்ற சுற்றத்தோர்களைக்
கோள்களைந்து புட்பகத்திற் கொண்டுவந்து வைத்தனன்.    67

உருமண்ணு வாவினுடன் இடபகன் சயந்தியும்
திருநிறைந்த புட்பகமும் சேர்ந்து இனிது இருக்கவெண்
பெருமகன்கணிகை மைந்தர் பிங்கலக் கடகரை
அரசுநாட்டி ஆள்கவென்றே அன்புடன் கொடுத்தனன்.    68

யூகியின் சூழ்ச்சி

மன்னவற்கு இரங்கி யூகிமரித்தனன் என்வார்த்தையைப்
பன்னியெங்கணும் முரை பரப்பி வையகந்தனில்
அன்னதன தொப்புமை அமைந்ததோர் சவந்தனை
உன்னியூகி கான்விறகில் ஒள்ளெரிப் படுத்தினன்.    69

யூகி அவந்தி நாடு ஏக பகை மன்னன் நாட்டினை கைப்பற்றுதல்

தன்னகர் புலம்பவெங்கும் தன்னையுங் கரத்தலின்
உன்னிவந்து மாற்றரசர் ஓங்குநாடு பற்றினர்
என்றறிந்து யூகியும் இனிச்சிறையின் மன்னனைச்
சென்று அவனைக்காண்டு மென்றுதேச முன்னிச் சென்றனன்.    70

துன்னருநற் கானமோடு தொன்மலையிற் சார்தலும்
செந்நெல்கள் விளைவயற் செழும்புனனதிகளும்
மன்னுநாடுந் தான்கடந்து மாகொடி நிறைந்திலங்கு
நன்னகருஞ்சேனையின்நன்கு அமைச்சன் சென்றனன்.    71

உஞ்சையில் யூகியின் செயல்கள்

ஒலிகடலன்ன வோசையுஞ் சேனை தன்
புலிமுக வாயிற் பொற்புடைத் திலங்கும்
மலிகுடிப் பாக்க மதின் மறைந்திருக்க
வலியதன் சேனை வைத்தனன் அன்றே.    72

யூகி மாறுவேடத்தில் நகர் வீதியில் வருதல்

இன்னவை கேட்கின் இன்னவை தருக என
மன்னவன் அறியும் அருளுரை பயிற்றி
மன்னிய வேடம் வகுத்துடன் கொண்டு
நன்னகர் வீதிநடுவினில் வந்தான்.    73

இருள்படு குஞ்சி யியல்படத் தூற்றி
மருள் செயமாலை வகுத்துடன் சுற்றி
உருணிறச் சுண்ணம் உடலினிற் பூசிப்
பொருணலச் சுட்டி பொருந்துறச் சேர்த்தி.    74

செம்பொற் பட்டம் சேர்த்தினன் நுதலில்
அம்பொற்சாந்த மனிந்த நன் மார்பன்
செம்பொற் கச்சைச் சேர்த்தினன் அரையில்
அம்படக் கீறி அணிந்த உடையான்.    75

கோதை யுத்தரியங் கொண்ட கோலத்தன்
காதிற் குழையினன் காலிற் சதங்கையன்
ஊதுங் குழலினன் உனுலரிய உடுக்கையன்
போதச் சிரசிற் பொருநீர்க் கலசன்.    76

கொடியணி மூதூர்க் கோல நல்வீதி
நடுவட் டோ ன்றி நாடக மாடிப்
படிமிசைக் கரணம் பாங்கிற் றாண்டி
இடியென முழக்கி இனிதினின் வந்தான்.    77

யூகியின் கூற்று

இந்திர லோகம் விட்டிந்திரன் வந்தனன்
அந்தரத் திருந்தியான் அன்பினின் வந்தேன்
இந்திரன் எனக்கிறை யீண்டும் புதல்வர்க்குத்
தந்திரக் குமக்குத் தானிறை யாமென.    78

புற்றினில் உறையும் பொறிவரி ஐந்தலைப்
பற்றரு நாகம் பற்றி வந்தினிதா
உற்ற இந்நகரத்துள் சிறை வைத்தார்
அற்றதை எங்கும் அறியக் காட்டினர்.    79

மருளுந் தெருளும் வரம்பில பயிற்றித்
திரளுறு செனங்கள் திறவதிற் சூழப்
பெருந்தெரு வெல்லாம் பிற்படப் போந்தே
அருஞ் சிறைப்பள்ளி அருகினிற் சேர்ந்தான்.    80

யூகி தன் வரவினை உதயணனுக்கு உணர்த்தல்

கிளைத்தலை இருவர் கற்றகிளர் நரப்பிசையுங் கீதம்
தளைச் சிறை மன்னன் கேட்பத்தான் மகிழ்குழலினூத
உளத்தியல் பாட்டைக் கேட்டு யூகியாமென மகிழ்ந்து
களைந்தனன் கவலையெல்லாம் காவலர்க்குணர்த்திப் போந்தான்.    81

வீரர்கள் யூகியை அணுகி ஆராய்ந்து போதல்

பலகொடி வாயிற்செல்லப் பார்மன்னன் சேனைவந்து
நலமுறுவடிவு நோக்க நகரத்தின் கோடுபாய்ந்த
கலனணிமார் வடுவ்வைக் கஞ்சுகத்துகிலின் மூடத்
தலைமுதல் அடியீராகத் தரத்தினாற் கண்டுபோந்தார்.    82

யூகி யானைக்கு வெறியூட்டுதல்

பித்தனற் பேயனென்று பெருமகற்கு உரைப்பக் கேட்டு
வெற்றிநற் சேனைமற்றும் வெஞ்சிறை காக்கவென்றான்
மற்றினி யூகிபோந்து மலிகுடிப் பாக்கஞ் சேர்ந்தே
அன்றைநாள் இரவில் யானை அனல் கதம்படுக்கலுற்றான்.    83

வாளொடு கைவிலேந்தி வயந்தகன் தன்னோடு எண்ணித்
தோளன் தோழன் கூடத்தூபத்துக் கேற்ற வத்தும்
வேளையீதென்று கொண்டு விரகினாற் கயிறு பற்றித்
தாளொத்த கொம்மை மீதிற்றரத்தினாலிழிந் தானன்றே.    84

நளகிரியின் செயல்

ஆனை தன்னிலை கண்டெய்தி அகிலிடும் புகையு மூட்டிச்
சேனை மன்னகரழித்துச் சிறைவீடுன் கடனேயென்று
மான நல்யூகி யானை செவியின் மந்திரத்தைச் செப்ப
யானை தன்மதக்கம் பத்திலருந்தனை யுதறித் தன்றே 85

யானை பாகரைக் கொல்லுதல்

நீங்கிட மிதுவென்றெண்ணி நிலைமதிலேறிப் போகத்
தூங்கிருடன் னிலானை சுழன்றலைந் தோடப்பாகர்
பாங்கினால் வளைப்பப் பொங்கிப் படுமுகின் முழக்க மென்ன
ஆங்கது பிடுங்கிக் கையால வரைக்கொன்றிட்ட தன்றே.    86

பிரச்சோதனன் களிற்றின் வெறிச்செயலைக் கானல்

வேழமும் மதங்கொண்டோ ட வேந்தன்கேட்டினிது எழுந்து
வேழ நன் வேட்டங்காண வெம்முலை மாதரோடும்
ஆழிநல் இறைவன் தானும் அணிமிகு மாடமேறிச்
சூழநன் மாதர் நிற்பத்துளக்கின்றி நோக்கினானே.    87

நளகிரியின் தீயச் செயல்கள்

கூடமாளிகை களெல்லாங் கோட்டினாற் குத்திச் செம்பொன்
மாடமு மதிலுமற்று மறித்தஃ திடித்துச்செல்ல
ஆடவர் கூடியோடு யயில்குந்தந் தண்டமேந்தி
நாடிநற்கையால் தட்டி நாற்றிசை சூழ்ந்து நின்றார்.    88

கூற்றுருவெய்தி யோடிக் கோட்டிடைக் குடர்களாடக்
காற்றென முழக்கி வேழங்கண்ட மாத்தரைத்தன்கையால்
நாற்பத்தெண் பேரைக்கொன்று நடுவுறப் பிளந்திட்டோடி
மாற்றருங் கோட்டை வாயின் மதிற்புறம் போந்ததன்றே.    89

அற்நூற்றின் மீதிலைம்ப தானநற்சேரி தானும்
உறு நூற்றிலேழை மாறவுள்ள நாற்பாடியோடும்
நறுமலர் கந்தம்வீசு நன்குள காவுமற்றும்
பெறுமத யானை கோட்டாற் பெருநகரழித்த தம்மா.    90

உஞ்சை மாந்தர் அலறல்

பாடுநன் மகளிரெல்லாம் பாட்டொழிந் தரற்றியோட
ஆடுநன் மாதர் தாமும் ஆடல் விட்டுலந்துசெல்லக்
கூடுநன் மங்கைமைந்தர் குலைந்தவரேச் செம்பொன்
மாடநன் மேனிலைப்பான் மன்னினார் பலரோடு ஆங்கே.    91

அமைச்சர் அக்களிற்றினை அடக்க உதயணனால் மட்டுமே முடியும் எனல்

மத்துறுகடலின் மிக்கு மறுகிய நகரத்தாரும்
வெற்றிநல் வேந்தனோடு வினவினா ரமைச்சரெண்ணி
இத்தின நகரம் பட்டவிடரது விலக்கனல்ல
வத்தவன் கையதென்ன வகுத்துரை கேட்டமன்னன்.    92

மன்னன் மறுத்துக் கூறுதல்

போரினில் நிற்கலாற்றாம் பொய்யினிற்றந்த மைந்தன்
சீரொடு சிறப்பும் வௌவிச் சிறையினில் வைத்ததன்றிப்
பேரிடிக் கரிமுன்விட்டால் பெரும்பழி யாகுமென்று
தாருடை வேந்தன் சொல்லத்தரத்தினால் அமைச்சர் சொல்வார்.    93

அமைச்சர்கள் அது பழியன்று புகழே ஆகுமெனல்

இந்திரனானை தானுமிவன் கையாழிசைக்கு மீறாது
இந்திரன் வேழமுங் கேட்டேழடி செல்லுமற்றிக்
கந்திறு கைம்மாவிக்கோன் கைவீணை கடவாதென்ன
மந்திரித் தவர்சொற்கேட்டு மன்னன் அப்படிசெய்கின்றான்.    94

பிரச்சோதனன் அமைச்சன் சீவகன் என்பவன் உதயணனைக் கண்டு கூறல்

சீவகன் வத்தவற்குச் செவ்விதிற் செப்புகின்றான்
தேவ இந்நகரின் இடுக்கண் தீர்க்கைநின் கடனதாகும்
போவதுன்நேசத் தென்றல் புரவலன் கடனதாகும்
பூவலன் உரைத்தான் என்னப் புகழ்ந்தவன் சிறை விடுத்தான்.    95

உருவுள சிவிகை ஏறி உயர்மன்னன் மனை புகுந்து
திருமயிர் எண்ணெய் இட்டுத் திறத்தினன் நீருமாடி
மருவிறன் பட்டுடுத்து மணிக்கலன் இனிது தாங்கித்
தெருவிடைத் திகழப்புக்கான் திருநகர் மகிழவன்றே.    96

உதயணன் யாழ் இசைத்தலும் களிறு அடங்குதலும்

பருந்து பின் தொடர யானை பறிவைகண் பற்றும்சூழப்
பெருந்தெரு நடுவுட்டோ ன்றப் பீடுடைக்குமரன் தானும்
திருவலித்தடக்கை வீணை சீருடன் பாடலோடும்
மருவலிக்களிறுங் கேட்டு வந்தடி பணிந்ததம்மா.    97

உதயணன் நளகிரியின் மேல் ஏறுதல்

பிரிந்தநற் புதல்வர் வந்து பெற்றதன் தந்தை பாதம்
பரிந்த நற்காதாலே பணிந்திடுமாறு போல
இருந்துதற் பணிந்த யானை எழின் மருப்படிவைத்தேறிப்
பெருந்தகையேவிக் கோட்டு பெருங்கையாற் றோட்டி கொண்டான்.    98

உதயணன் அக்களிநூர்ந்து வருதலும் பிரச்சோதனன் மகிழ்தலும்

வைத்த நன் மணியும் யாழும் வரிக்கயிறதுவு நீட்ட
வெற்றிநல்வேந்தன் வாங்கி வீக்கிமிக் கார்த்துக்கொண்டே
உற்றநல் வீதிதோறும் ஊர்ந்துநற் சாரிவட்டம்
பற்றிதன் கோட்டக் கண்டு பார்த்திபன் மகிழ்ச்சி கொண்டான்.    99

பிரச்சோதனன் உதயணனுக்கு பரிசு வழங்குதல்

பிடிப்புப் பொன்விலை மட்டில்லாப் பெருவலியாரந் தன்னை
முடிப்புவி அரசன் ஈய மொய்ம்பனுமணிந்து கொண்டு
கொடிப்புலிமுகத்து வாயிற்கோட்டையுட் கொண்டு வந்தான்
இடிக்குரற் சீயமொப்ப விலங்கிய குமரன்தானே.    100

பிரச்சோதனன் உதயணனைத் தழுவுதல்

சால்கவென்று இறைவன் செப்பத் தன்னுடைக் கையினோச்சி
கால்களின் விரலினெற்றி கனக்கநன் கூன்றி நின்று
மால்கரி கால் கொடுப்ப மன்னனு மகிழ்ந்து போந்து
வேல்கவின் வேந்தன் காண வியந்துடன் தழுவிக் கொண்டான்.    101

பிரச்சோதனன் உதயணனுக்கு முகமன் கூறி உறவு கொள்ளல்

மருமகன் நீயே என்று மன்னவன் இனிமை கூறி
வருமுறை நயந்து கொண்டு மகிழ்ந்து உடன் இருந்த போழ்து
திருமகள் கனவு கூறிச் செல்வநீ கற்பியென்னப்
பெருவலியுரைப்பக் கேட்டுப் பெருமகன் உணர்த்தலானான்.    102

உதயணன் பிரச்சோதனன் மக்கட்கு வித்தை கற்பித்தல்

வேந்தன் தன் மக்கட்கெல்லாம் வேன்முதல் பயிற்றுவித்தும்
பூந்துகில் செறிமருங்குற் பொருகயற்கண்ணி வேய்த்தோள்
வாய்ந்த வாசவதத்தைக்கு வருவித்தும் வீணைதன்னைச்
சேர்ந்த வணிகரிலின்பிற் செல்வனும் மகிழ்வுற்றானே.    103

மன்னன் மைந்தர் அரங்கேறுதல்

உரையினிலரியனாய உதயண குமரன் ஓர் நாள்
அரசிளங்குமரர் வித்தை யண்ணனீ காண்கவென்ன
வரைநிகர் யானையூர்ந்து மாவுடன் தேரிலேறி
வரிசையிற்காட்டி வாள்வில் வகையுடன் விளக்கக் கண்டான்.    104

வாசவதத்தை யாழ் அரங்கேற்றம்

வாசவதத்தை வந்து மன்னனை இறைஞ்ச நல்யாழ்
பேசவை தளரக் கேட்டுப் பெருமகன் இனியனாகி
ஆசிலா வித்தையெல்லாம் ஆயிழை கொண்டாள் என்றே
ஏசவன் சிறைசெய்குற்ற மெண்ணுறேல் பெருக்க வென்றான்.    105

வாசவதத்தை யாழ் இசையின் மாண்பு

விசும்புயல் குமரர்தாமும் வியந்துடனிருப்பப் புள்ளும்
பசும் பொனினிலத்தில் வீழப்பாவையர் மயக்கமுற்றார்
வசம்படக் குறுக்கி நீட்டி வரிசையிற் பாடலோடும்
அசும்பறாக் கடாத்து வேழத்தரசனு மகிழ்ந்தானன்றே.    106

பிரச்சோதனன் உதயணனை வத்தவநாட்டிற்கு அனுப்பத் துணிதல்

வத்தவன் கையைப் பற்றி மன்னவன் இனிது கூறி
வத்தவன் ஓலை தன்னுள் வளமையிற் புள்ளியிட்டும்
வத்தவ நாட்டுக் கேற வள்ளலைப் போக வென்ன
வத்தவ நாளை யென்றே மறையவர் முகிழ்த்த மிட்டார்.    107

பிரச்சோதனன் உதயணனுக்குச் சிறப்புச் செய்தல்

ஓரிரண்டாயிரங்க ளோடை தாழ் மத்த யானை
ஈரிரண்டாயிரங்களெழின் மணிப் பொன்னின்றேரும்
போரியல் புரவி மானம் பொருவிலை யாயிரம்மும்
வீரர்கள் இலக்கம் பேரும் வீறுநற்குமரற்கீந்தான்.    108

யூகி குறத்தி வேடம் புனைந்து குறிசொல்லல்

யூகியும் வஞ்சந்தன்னையுற்றுச் சூழ்வழாமை நோக்கி
வாகுடன் குறத்திவேடம் வகுத்தனன் குறிகள் கூற்றாம்
நகரத்தினகரழிந்த நடுக்கங்கள் தீர வெண்ணிப்
போக நன்னீரிலாடப் புரத்தினில் இனிதுரைத்தான்.    109

பிரச்சோதனன் முதலியோர் நீராடச் செல்ல யூகி நகரத்திற்கு தீயிடுதல்

மன்னவன்றன்னோ டெண்ணி மாநகர் திரண்டுசென்று
துன்னிய நீர்க்கயத்திற்றொல் புரப் புறத்திலாட
நன்னெறி வத்தவன்றானன் பிடியேறி நிற்ப
உன்னிய யூகிமிக்க ஊரில் தீயிடுவித்தானே.    110

உதயணன் வாசவதத்தையைக் கைப்பற்றிக் கொண்டு போதல்

பயந்து தீக்கண்டுசேனை பார்த்திபன் தன்னோடுஏக
வயந்தகன் வந்துரைப்ப வத்தவகுமரன் தானும்
நயந்துகோன் மகளைமிக்க நன்பிடியேற்றத் தோழி
கயந்தனை விட்டுவந்த காஞ்சனை ஏறினாளே.    111

வயந்தகன் வீணைகொண்டு வன்பிடியேறிப் பின்னைச்
செயந்தரக் கரிணிகாதிற்செல்வன் மந்திரத்தைச் செப்ப
வியந்து பஞ்சவனந் தாண்ட வேயொடு பற்ற வீணை
வயந்தகன் கூற மன்னன் மாப்பிடி நிற்க வென்றான்.    112

நலமிகு புகழார் மன்னநாலிரு நூற்றுவில்லு
நிலமிகக் கடந்ததென்ன நீர்மையிற் றந்த தெய்வம்
நலமிகத் தருமின்றென்ன பண்ணுகை நம்மாலென்னக்
குலமிகு குமரன் செல்லக் குஞ்சரம் அசைந்ததன்றே.    113

பிடி வீழ்தல்

அசைந்த நற்பிடியைக் கண்டே யசலித மனத்தராகி
இசைந்த வரிழிந்தபின்னை இருநில மீதில்வீழத்
தசைந்த கையுதிரம் பாயச்சால மந்திரமங்காதில்
இசைந்தவர் சொல்லக் கேட்டே இன்புறத் தேவாயிற்றே.    114

உதயணன் முதலியோர் ஊர் நோக்கி செல்லல்

உவளகத்திறங்கிச் சென்றேயூர் நிலத்தருகு செல்லப்
பவளக் கொப்புளங்கள் பாவை பஞ்சிமெல்லடி யிற்றோன்றத்
தவளைக்கிண் கிணிகண்மிக்க தரத்தினாற் பேசலின்றித்
துவளிடையருகின் மேவுந்தோழி தோள்பற்றிச் செல்வாள்.    115

வயந்தகன் அவர்களை விட்டுப் புட்பகம் போதல்

பாவைதன் வருத்தங்கண்டு பார்த்திபன் பாங்கினோங்கும்
பூவை வண்டரற்றுங் காவுட்பூம்பொய்கை கண்டிருப்ப
வாவு நாற்படையுங்கொண்டு வயந்தகன் வருவேனென்றான்
போவதே பொருளூர்க்கென்று புரவலனுரைப்பப் போந்தான்.    116

வேடர்களை உதயணன் வளைத்துக் கொள்ளுதல்

சூரியன் குடற்பாற்சென்று குடவரை சொருகக்கண்டு
நாரியைத் தோழிகூட நன்மையிற் றுயில்கவென்று
வீரியனிரவு தன்னில் விழித்து உடன் இருந்தபோழ்து
சூரியன் உதயம்செய்யத் தொக்குடன் புளிஞர் சூழ்ந்தார்.    117

உதயணனுடன் வேடர் போர் செய்தல்

வந்த வரம்புமாரி வள்ளன்மேற் றூவத்தானும்
தந்தனு மேவிச்சாராத் தரத்தினால் விலக்கிப்பின்னும்
வெந்திறல் வேடர்வின்னாண் வெந்நுனைப் பகழிவீழ
நந்திய சிலைவளைத்து நன்பிறையம்பின் எய்தான்.    118

வேடர்கள் உதயணனிருந்த பொழிலிலே தீயிடுதலும் வயந்தகன் வரவும்

செய்வகையின்றி வேடர் தீவனங்கொளுத்த மன்னன்
உய்வகையுங்களுக்கின்றுறு பொருளீவன் என்ன
ஐவகை அடிசில் கொண்டே யான நாற்படையுஞ் சூழ
மெய்வகை வயந்தகன் தான் வீறமைந்தினிதின் வந்தான்.    119

உதயணன் வாசவதத்தை முதலியோரொடு சயந்தி நகரம் புகல்

அன்புறும் அடிசில் உண்டே அற்றை நாள் அங்கிருந்தார்
இன்புறு மற்றை நாளினெழிற் களிற்றரசனேற
நன்புறச் சிவிகையேற நங்கை நாற்படையுஞ் சூழப்
பண்புறு சயந்திபுக்குப் பார்த்திபன் இனிது இருந்தான்.    120


இலாவாண காண்டம்

உஞ்சை நகர்விட்டகன்று உதயண குமாரனும்
தஞ்சமாய்ச் சயந்தியிற் றளர்வின்றிப் புகுந்தபின்
என் செய்தனன் என்றிடினியம்புதும் அறியவே
கொஞ்ச பைங்கிளி மொழிதன்கூடலை விரும்பினான்.    121

உதயணன் வாசவதத்தை திருமணம்

இலங்கிழை நன்மாதரை யினிமை வேள்வித்தன்மையால்
நலங்கொளப் புணர்ந்தனன் நாகநற் புணர்ச்சிபோல்
புலங்களின் மிகுந்தபோகம் பொற்புடன் நுகர்ந்தனன்
அலங்கலணி வேலினான் அன்புமிகக் கூரினான்.    122

கைம்மிகு காமம்கரை காண்கிலன் அழுந்தலில்
ஐம்மிகுங் கணைமதன் அம்புமீக் குளிப்பவும்
பைம்மிகும் பொனல்குலாள் படாமுலை புணையென
மைம்மிகும் களிற்றரசன் மாரன்கடல் நீந்துவான்.    123

உதயணன் கழிபெருங்காமத்து அழுந்தி கடமையை புறக்கணித்தல்

இழந்த தன் நிலத்தையும் எளிமையும் நினைப்பிலன்
கழிந்த அறமுமெய்ம்மறந்து கங்குலும் பகல்விடான்
அழிந்தி அன்பிற்புல்லியே அரிவையுடைய நன்னலம்
விழுந்தவண் மயக்கத்தில் வேந்தன் இனிச் செல்கின்றான்.    124

ஒழுகுங்காலை யூகியாம் உயிரினும் சிறந்தவன்
எழில் பெருகும்சூழ்ச்சிக் கணினியதன் வரவதாற்
பழுதின்றிச் சிறைவிடுத்துப் பாங்குபுகழ் வத்தவன்
எழின் மங்கை இளம்பிடி யேற்றிஏகக் கண்டனன்.    125

மிஞ்சி நெஞ்சிலன்புடன் மீண்டு வர எண்ணினன்
உஞ்சைநகர்க்கு அரசன் கேட்டுள்ளகத் தழுங்கினன்
விஞ்சுபடை மேலெழாமை விரகுடனறிந்தந்த
உஞ்சை எல்லை விட்டுவந்து யூகிபுட்பகஞ் சென்றான்.    126

யூகி இடபகனிடம் உதயணனைப் பற்றி வினாதலும் அவனின் விடையும்

இடபகற்குத் தன்னுரை இனிது வைத்துரைத்துப் பொன்
முடியுடைய நம் அரசன் முயற்சியது என் என
பிடிமிசை வருகையிற் பெருநிலங் கழிந்த பின்
அடியிடவிடம் பொறாமையானை மண்ணிற் சாய்ந்ததே.    127

சவரர் தாம் வளைத்ததும் தாம் அவரை வென்றதும்
உவமையில் வயந்தகன்றனூர் வந்து உடன்போந்ததும்
தவளவெண் கொடிமிடை சயந்தியிற் புகுந்ததும்
குவிமுலை நற்கோதை அன்பு கூர்ந்துடன் புணர்ந்ததும்.    128

இழந்தபூமி எண்ணிலன் இனிய போகத்தழுந்தலும்
குழைந்தவன் உரைப்ப யூகி கூரெயிறிலங்கறக்கு
விழைந்தவேந்தன் தேவியை விரகினாற் பிரித்திடின்
இழந்தமிக்கரசியல் கைகூடு மென எண்ணினான்.    129

யூகியின் செயல்

சாங்கிய மகளெனுந் தபசினியைக் கண்டுடன்
ஆங்கவனறியக் கூறியான யூகி தன்னுயிர்
நீங்கினது போலவு நின்றமைச்சர் மூவரும்
பாங்கரசன் ரூபமும் படத்தினில் வரைந்தனன்.    130

படத்துருவி லொன்றினைப் பரந்தமேற் கண்ணாகவைத்து
இடக்கண் நீக்கியிட்டு மிக்கியல்புடன் கொடுத்துடன்
முடிக்கரசற் கறிவியென்ன முதுமகளும் போயினள்
இடிக்குரனற் சீயமாம் இறைவனையே கண்டனள்.    131

சாங்கியத்தாய் அரசனைக் கண்டு வினாதல்

வேந்தனுங்கண்டே விரும்பி வினயஞ்செய் திருக்கென
பாந்தவக் கிழவியும் பண்பினிய சொல்லியபின்
சேந்ததன் சிறைவிடுத்த செல்வயூகி நின்னுடன்
போந்துபின் வராததென்ன புரவலநீ கூறென்றாள்.    132

உதயணன் செயல்

அவனுரையறிந்திலன் அறிந்த நீ யுரைக்கெனத்
தவிசிடை யிருந்தவடான் படத்தைக் காட்டினள்
புவியரசன் கண்டுடன் புலம்பி மிகவாடிப்பின்
தவமலி முனிவனைத் தான் வணங்கிக் கேட்டனன்.    133

உதயணன் விரிசிகைக்கு மலர்மாலை சூட்டுதல்

முடிமுதல ரசினோடு முனிவறநின்று ணைவனை
வடிவுடன் பெறுவையென்ன வன்மையினிற்றேறிமீக்
கடிகமழ்ச்சாரலிற் கண்ட மாதவன் மகள்
துடியிடை விரிசிகையைத் தோன்றன் மாலைசூட்டினான்.    134

உதயணனன் தழைகொண்டுவரப் போதல்

கலந்தனனிருந்து பின் கானகத் தழைதர
நலந்திகழ் மாதர்செப்ப நரபதியும் போயினன்
கலந்திகழும் யூகியும் காவலன் தன் தேவியை
சிலதினம் பிரிவிக்கச் சிந்தை கூரித் தோன்றினான்.    135

யூகியின் செயல்

மன்னவன் மனைதனின் மறைந்திருக்கும் மாதரைத்
துன்னுநன் திருவரைத் தொக்குடன் இருக்கவென்று
மன்னன் மனைதன் மனைக்கு மாநிலச் சுருங்கை செய்
தன்னவண் மனை முழுதுமறைந்தவர் தீயிட்டனர்.    136

சாங்கியத்தாய் வாசவதத்தையை யூகி இருக்கைக்கு அழைத்து வருதல்

நிலந்திகழ் சுருங்கையினீதி மன்னன் றேவியை
இலங்கு சாங்கியம் மகளெழில் பெறக் கொண்டுவந்
தலங்கலணி வேலினானமைச்சன் மனை சேர்ந்தனன்
துலங்கி வந்தடி பரவிச் சொல்லினிது கூறுவான்.    137

யூகி வாசவதத்தையை வரங்கேட்டல்

என்னுடைய நற்றாயே நீ எனக்கொரு வரங்கொடு
நின் அரசன் நின்னைவிட்டு நீங்குஞ் சிலநாளன்றி
நன்னில மடந்தை நமக்காகுவதும் இல்லையே
என்னவுடன் பட்டனள் இயல்புடன் கரந்தனள்.    138

உதயணன் மீண்டும்வந்து வருந்துதல்

சவரர் வந்து தீயிட்டுத் தஞ்செயலினாக்கிமிக்
கவகுறிகள் கண்டரசனன் பிற்றேவிக் கேதமென்
றுவளகத் தழுங்கி வந்துற்ற கருமஞ் சொலக்
கவற்சியுட் கதறியே கலங்கி மன்னன் வீழ்ந்தனன்.    139

பூண்டமார் பனன்னிலம் புரண்டு மிக்கெழுந்துபோய்
மாண்டதேவி தன்னுடன் மரித்திடுவன் நான் என்றான்
நீண்டதோள் அமைச்சரு நின்றரசற் பற்றியே
வேண்டித் தானுடனிருந்த வெந்தவுடல் காட்டென்றான்.    140

உதயணன் வாசவதத்தையின் அணிகலன் கண்டழுதல்

கரிப்பிணத்தைக் காண்கிலர் காவலர் களென்றபின்
எரிப்பொன்னணி காட்டென வெடுத்து முன்புவைத்தனர்
நெப்பிடை விழுந்தமை நினைப்ப மாயமன்றென
விருப்புடை நற்றேவிக்கு வேந்தன் மிக்கரற்றுவான்.    141

மனம்வருந்தி உதயணன் அழுது புலம்பல்

மண்விளக்கமாகி நீ வரத்தினெய்தி வந்தனை
பெண்விளக்கமாகி நீ பெறற்கரியை யென்று தன்
கண்விளக்கு காரிகையைக் காதலித் திரங்குவான்
புண் விளக்கிலங்குவேற் பொற்புடைய மன்னவன்.    142

மானெனும் மயிலெனும் மரைமிசைத் திருவெனும்
தேனெனுங் கொடியெனுஞ் சிறந்தகொங்கை நீயெனும்
வானில மடந்தையே மாதவத்தின் வந்தனை
நான் இடர்ப்படுவது நன்மையோ நீவீந்ததும்.    143

நங்கை நறுங்கொங்கையே நல்லமைக் குழலியெம்
கொங்குலவ கோதைபொன் குழையிலங்கு நன்முகம்
சிங்கார முனதுரையுஞ் செல்வி சீதளம்மதி
பொங்காரம் முகமெனப் புலம்பினான் புரவலன்.    144

வீணைநற் கிழத்திநீ வித்தக வுருவி நீ
நாணின் பாவைதானுநீ நலந்திகழ் மணியுநீ
காணவென்றன் முன்பதாய்க் காரிகையே வந்துநீ
தேரணி முகங்காட்டெனச் சொல்லியே புலம்புவான்.    145

அமைச்சர் தேற்றுதல்

துன்பமிக வும்பெருகச் சொற்கரிய தேவிக்கா
அன்புகிக்கு அரற்றுவதை அகல்வது பொருளென
நன்புறும் அமைச்சர்சொல்ல நரபதியும் கேட்டனன்
இன்புறும் மனைவி காதலியல்புடன் அகன்றனன்.    146

யூகி உருமண்ணுவாவிடம் உரைத்தல்

அண்ண றன்னிலை அறிந்த யூகியும்
திண்ணி தின்னியல் செய்கை யென்றுரு
மண்ணு வாவினை மன்னன் அண்டையில்
எண்ணுங் காரிய மீண்டுஞ் செய்கென்றான்.    147

வயந்தகன் உதயணனுக்குக் கூறுதல்

தன்னிலைக் கமைந்த தத்துவ ஞானத்தான்
துன்னருஞ் சூழ்ச்சித் தோழன் வயந்தகன்
மன்னற் குறுதி மறித்தினிக் கூறும்
பொன்னடி வணங்கிப் புரவலன் கேட்ப.    148

வெற்றிவேன் மகதவன் வேந்தன் றேசத்தில்
இற்றவர்க் காட்டும் இயல்பினனூலுரை
கற்றுவல் லவனற் காட்சி யறிவுடன்
தத்துவ முனியுளனாமினிச் சார்வோம்.    149

உதயணன் மகதநாடு செல்லல்

வத்தவ குமரன் கேட்டு வயந்தகன் தன்னைநோக்கி
அத்திசை போவோம் என்றே அகமகிழ்ந்து இனிய கூறி
வெற்றிநாற் படையுஞ் சூழ வெண்குடை கவரிமேவ
ஒத்துடனிசைந்து சென்றான் உதயண குமரன் றானே.    150


Add a comment

உட்பிரிவுகள்

சூளாமணி என்பது செந்தமிழ் மொழியின்கண் சிறந்து விளங்கும் பெருங்காப்பியங்களுள் ஒன்று. இது ஆருகத சமயத்தைச் சார்ந்த தோலாமொழித்தேவர் என்னும் நல்லிசைப் புலவரால் இயற்றப்பட்டது. கடைச்சங்க காலத்திற்குப் பின்னரும் தேவாரக் காலத்திற்கு முன்னரும் நிகழ்ந்த காலத்தில் நம் தமிழகத்தின் கண் ஆருகத சமயம் என்னும் சமண சமயம் யாண்டும் பரவி மிகவும் செழிப்புற்றிருந்தது. அக்காலத்தே அம்மதச் சார்புடைய நல்லிசைப் புலவர் பலர் அம் மதத்திற்கு ஆக்கமாக இயற்றிய பெருங்காப்பியங்கள், நிகண்டுகள் பல.

சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி இவை ஐம்பெருங்காப்பியமாம். சூளாமணி, யசோதர காவியம், உதயண காவியம், நாககுமார காவியம், நீலகேசி இவை ஐஞ்சிறுகாப்பியமாம். இலக்கண வகையாலன்றிக் காப்பியப் பண்பு வகையாலும் தலை சிறந்த காவியம் சிந்தாமணியாகும். இதை அடியொற்றி அதற்குப் பின் தோன்றிய பெருங்காப்பியமே இச் சூளாமணியாகும். எனினும், சிந்தாமணியின் செய்யுளைக் காட்டிலும் சூளாமணியின் செய்யுட்கள் இனிய ஓசையுடையனவாய்ச் சிறந்திருக்கிறது.

சூளாமணி என்னும் இவ் வனப்பியல் நூல் ஆருகத நூலாகிய பிரதமாநுயோக மகாபுராணத்தில் கூறப்பட்ட பழைய கதை ஒன்றினை பொருளாகக் கொண்டு எழுந்த நூலாகும். இந்நூலிற்கு அமைந்த சூளாமணி என்னும் இப் பெயர் ஆசிரியரால் இடப்பட்ட பெயராகத் தோன்றவில்லை, தன்மையால் வந்த பெயரே ஆகும்.

சூளாமணியை இயற்றிய தோலாமொழித் தேவரின் இயற்பெயர் இன்னதென்று தெரியவில்லை. இவர் இந்நூலின்கண் இரண்டிடங்களில் 'ஆர்க்கும் தோலாதாய்' என்றும், 'தோலாநாவிற் சச்சுதன்' இனிய அழகிய சொற்றொடரை வழங்கி யிருத்தலால் அதன் அருமை உணர்ந்த பெரியோர் இவரைத் தோலாமொழித் தேவர் என்று வழங்கலாயினர் என பெரியோர்கள் கருதுகின்றனர்.

இவர் கார்வெட்டியரசன் விசயன் என்பவனுடைய காலத்தவர் ,தருமதீர்த்தங்கரரிடத்தே பெரிதும் ஈடுபாடுடையவர் என்றும் மன்னன் விசயன் வேண்டுகோளின்படி இந்நூலை இயற்றினார் என்பதும் சில செய்யுட்களால் விளக்கப்பட்டு இருக்கிறது. கடைச் சங்க காலத்திற்குப் பின்னர்ச் சமண சமயம் செழிப்புற்றிருந்த காலத்தே அச் சமயக் கணக்கர்கள் அதை பரப்பும் பொருட்டு அங்கங்கே சங்கங்கள் பல நிறுவினர் ,அதில் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்ச்சங்கம் [திரமிள சங்கம் ] மிகவும் சிறப்புற்றிருந்தது. இச் சங்கங்களுக்கு அரசர்கள் தலைமை தாங்கினர்.இச் சூளாமணி, அரசன் விசயன் சேந்தன் அவையின்கண் அமைந்த சான்றோர்களால் கேட்கப்பட்டு அவர்களால் நல்லநூல் என ஏற்றுக் கொள்ளப்பட்டும் இருக்கிறது.

இனி, தோலாமொழித்தேவர் வாழ்ந்த காலத்தை இதுகாறும் யாரும் வரையறுத்துக் கூறவில்லை. அச் சூளாமணிக்கு முற்பட்ட சிந்தாமணியின் காலம் கி.பி. 897 க்குப் பின்னாதல் வேண்டும். எங்ஙனமாயினும், சிந்தாமணி ஆசிரியருக்குத் தோலாமொழித் தேவர் பிற்காலத்தவர் என்பதை மறுப்பார் யாருமில்லை. எனவே, இவர் கடைச்சங்ககால்த்திற்குப் பின்னிருந்த சிந்தாமணி ஆசிரியராகிய திருத்தக்கதேவர் காலத்திற்கு அணித்தாய்த் தேவாரக் காலத்திற்கு முற்பட்டதொரு காலத்தே வாழ்ந்தவர் என்பது ஒருவாறு பொருந்துவதாம்.


நீலகேசி என்பது ஐஞ்சிறு காப்பியங்கள் எனப்படும் ஐந்து தமிழ் இலக்கிய நூல்களுள் ஒன்று. சமண சமய நூலான நீலகேசி ஒரு கதைப் பின்னணியில் சமணக் கொள்கைகளை விளக்குகின்றது. தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் இதுவெனக் கூறப்படுகின்றது. பௌத்த சமயத்தின் பெருமை கூற எழுந்த காப்பியமான குண்டலகேசி எனும் நூலுக்கு மறுப்பாகவே நீலகேசி எழுதப்பட்டுள்ளது. எனினும் இதனை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை.

இந்நூல் கடவுள் வாழ்த்து தவிரப் 10 பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது. இப் பதினொரு பகுதிகளிலும் மொத்தமாக 894 பாடல்கள் உள்ளன.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework