1) நல்லார் வணங்கப் படுவான்பிறப் பாதி நான்கு
மில்லா னுயிர்கட் கிடர்தீர்த்துய ரின்ப மாக்குஞ்
சொல்லான் றருமச் சுடரானெனுந் தொன்மை யினா
னெல்லா முணர்ந்தா னவனேயிறை யாக வேத்தி.

2) அன்னான் பயந்த வறவாரமிர் துண்டு நின்றார்
இன்னா ரினைய ரெனவேண்டுவ தில்லை யார்க்கும்
பன்னாந் துணையும் பணிந்தாகிய பத்தி யினா
னென்னா லுரைக்கப் படுகின்றதொன் றீங்கு ளதே.

3) பண்டாக மத்துட் பயிலாவுரை யென்று மிக்கார்
விண்டீங் கிதனை வெகுளார்விடல் வேண்டு வன்யான்
தண்டா மரைமே னடந்தான்றடந் தாள்வ ணங்கிக்
கண்டேன் கிடந்தேன் கனவின்னிது கண்ட வாறே.

4) ஆய்நீல வுண்க ணவளாயடங் காமை செய்யும்
பேய்நீல கேசி பெரியோனறங் கொண்ட பின்னைத்
தீநீல வுள்ளந் திரிந்தேறு திருவத் தளாய்
மாஞால மெல்லா மறமாற்றிய மாட்சி யளா.

5) தேவன் னுரைப்பத் தெளிந்தேன்பிற் றெளிந்த வெல்லாம்
மாவென் றுகொண்டேன் மடனேவலி யாக நின்று
நாவல் புலவ ரவைநாப்பண்ணி நாட்ட லுற்றேன்
பாவின் னவென்று பழிப்பாரினி யில்லை யன்றே.

6) கண்டிங்கு நாளுங் கடல்வையகங் காதல் செய்யும்
வெண்டிங்க டானும் விமலந்தனக் கில்ல தன்றே
கொண்டென்சொ லெல்லாங் குணனேயெனக்கூறு கென்னே
னுண்டிங்கோர் குற்ற மெனில்யானுமொட் டாமை யுண்டோ.

7) தெள்ளி நரைத்துத் தெருளாதுறு தீமை செய்யும்
புள்ளி னுரையும் பொருளாமெனக் கோட லினா
லெள்ளுந் திறத்த.: துரையென்றிது நீக்க லின்றாய்க்
கொள்ளும் முலகங் குணமாணறம் வேண்டு மென்றால்.


8) நாடும் மநாடா ளரசுந்நக ருந்நகர்சூழ்
காடுங் கடவுள் புகனீக்குதல் கார ணம்மாத்
தேடுஞ் சிறுபேய் பெரும்பேய்த்தியைச் சென்று பற்றும்
பாடும் மவடான் பகைகொண்டுபல் கால்வெ ருட்டி.

9) தான்கண்ட வன்செய் தவந்தன்னைக் கலக்க கில்லா
மான்கொண்ட நோக்கின் னவளாய்மற மாற்றி யபின்
னூன்கொண்ட காட்சி முதலாக வுடைத்த தெல்லாம்
யான்கண்ட வாறே யுரைப்பன்னவை யார்க் கிதனை.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework