463) அணிநா டிவைதா மறல்யா றிவைதாம்
பிணிநா டிவைதாம் பெருங்கா டிவைதாம்
மணிமா மலைதா மெனவே வருவாள்
அணியார் சுகதன் நகரெய் தினளே.

464) அறையும் கடலும் அரவக் குரலும்
பறையின் னொலியும் படுகண் டிகையுஞ்
சிறையின் மிகுமா லிதுசெம் படர்கள்
இறைவன் னுறையு மிடமா மெனலும்.

465) மழைசேர் நகரம் மலைபோன் றனவே
கழைசேர் கொடியுங் கதலிவ் வனமே
விழைதா ரவரும் விரிகோ தையரும்
முழைவாழ் புலியே மயிலே மொழியின்.

466) நெடுவெண் டிரைமே னிமிருந் திமிலுங்
கடுவெஞ் செலவின் னுலவுங் கலனும்
படுவண் டறையும் பொழிலும் மெழிலார்
மடுவுந் திடரும் மணல்வார் புறவும்

467) கயன்மீ னிரியக் கழுநீர் விரியும்
வயன்மாண் புடைய வளமைத் தெனவும்
முயன்மீ னெறியு முறியுங் கறியா
தயன்மே யுறையா தணியிற் றெனவும்.

468) கழுகின் னினமும் கழுதின் னினமும்
முழுதும் மறுவை பலமூ டினரும்
கொழுதின் னிணனும் பிணனுங் குலவி
இழுதென் னெலும்பா ரிடுகா டெனவும்.

469) சாதியே மிக்க தடுமாற்ற வெந்துயர
மோதியே வைத்தாரவ் வோத்தெலா மீக்கிடந்த
வீதியே காணலா மென்றாளா னின்றாரும்
போதியா ரீண்டைப் புலால்பழியா ரென்றலும்.

470) அங்காடிப் பண்டவூன்றின்ன வறமுரைத்தார்க்
கிங்காடி வாழ்வனவுமூனாய்வந் தீண்டியவாற்
கொங்காடத் தேனறையுங்கொய்ம்மருதம் பூவணிந்த
பொங்காடை போர்த்தார்க்குப்பொல்லாதே யென்னீரோ.

471) விலைபடைத்தா ரூன்வேண்ட வவ்விலைதான் வேண்டி
வலைபடைத்தார்க் கெம்முயிரை வைக்கின்றா மின்ன
கொலைபடைத்தா னோகொடிய னென்பனவே போலத்
தலையெடுத்து வாய்திறப்ப தாமிவையோ காணீர்.

472) தன்றார மீந்தான் றனக்குறுதி யாவதனை
யொன்றானும் வேண்டான் பிறர்க்கே யுழந்தானூன்
தின்றானுந் தீவினையைச் சேருமெனச் சொன்னாற்
பொன்றாவாய்ப் பல்விலங்கும் பூமிமேல் வாழாவோ.

473) உரிதா வுணர்ந்தானொன் றோரா துரையான்
பரிவே யிதுவுந்தன் பாலரோ டெல்லா
மெரிதோய் நரகம்பா ழேற்றுவா னேயாம்
பெரிதா மளியன் பெருந்தகைய னேகாண்.

474) கொடைக்கொட்டி விற்பானுங் கொள்வானு மன்றி
யிடைச்செட்டி னாற்பொருளை யெய்துவான் போல
முடைக்கொட்டி முத்துரைத்து மூடிக்கொண் டேகுங்
குடைச்சிட்ட னாருயிர்க்கோர் கூற்றமே கண்டீர்.

475) ஆடுவார் காண்பா ரவரருகே தான்சென்று
தோடுவார்ந் தாலொப்பச் சொல்விரிப்பான் போற்பாவம்
கூடுவார் கூடாதார் கொன்றார்தின் றாரென்னும்
சேடனார்க் காண்டுநா மென்றுதான் சென்றாளே.

476) அணிசெய் கோழரை யரைநிழ லழகனைப் பொருந்தி
மணிக டாம்பல கதிர்விடு மலருடை மணைமேற்
றுணிவு தோற்றினை யெனச்சிலர் துதியொடு தொழுது
பணிய யாதுமோர் பரிவிலன் படம்புதைத் திருந்தான்.

477) ஆத்த னேயெனத் தெளிந்தவ ணமர்ந்திருந் தவர்க்குச்
சூத்தி ரம்மிது வினையமு மிதுவிது பிறிதாஞ்
சாத்தி ரம்மிவை மூன்றென வன்றவத் தோன்றல்
பாத்து ரைக்குந்தன் பதப்பொருள் பலவகைப் படவே.

478) கந்த மைந்திவை கணிகத்த வாமெனக் கரைந்து
முந்தி நாடினோ ருணரவல்ல தில்லையென் றுரைத்தும்
புந்தி யாலங்கோர் புற்கல னுளனெனப் புணர்த்து
மந்தி லாற்சொலாப் பாட்டினோ டியாதுமில் லெனவும்.

479) தத்து வம்மிவை தாமெனத் தமர்களுக் குரைக்கும்
புத்த னார்தம்மை புயலிருங் கூந்தலி பொருந்திப்
பித்தர் போற்பல பிதற்றினீர் பிதற்றிய விவைதா
மெத்தி றத்தினு மிசையின்மை யிசைக்குவ னென்னெவெ

480) ஓதி னீர்சொன்ன கந்தமைந் துளவெனி னுருவே
வேத னையொடு குறிசெய்கை யிலவென விரிப்பும்
போதியா லங்கோர் புற்கல னுளனெனப் புணர்ப்பும்
யாது மின்மையோ டவாச்சிய மறும்பிற வெனவே.

481) ஐந்தில் யான்சொன்ன பலகளு மமைவில வெனினும்
கந்த முண்மைக்கட் கருத்துள தாம்பிற வதனாற்
சிந்த மாயவு முளவெனத் தெளியினி யெனலும்
நந்த னார்க்கற முரைத்திர்நீ ரோவென நக்காள்.

482) இட்ட நீபல வுரைத்தனை யிவற்றுளொன் றொழிய
நட்ட மாயினு நன்மையை நின்வயிற் றருவோய்
குட்ட மேமுழு மெய்யினு மெழுந்தவன குடுமி
தொட்டி யானெனி னுந்தூய னோவது மாமோ.

483) நல்ல வேயென நாட்டிய கந்தமிவ் வைந்து
மில்ல வேயெனத் தெருட்டுவ னெடுத்துரை யெனத்தான்
சொல்ல வேதுவ ராடைகண் மூடிய சேடன்
மெல்ல வேயிவை கேளென விரித்தவ னுரைக்கும்.

484) உருவே திரிவே தனையா றுணர்வும்
மருவா தனமாண் குறியத் துணைசெய்
இருவே றவைசெய் கையிரு பதுமாந்
திருவே யிவையெம் பொருடே ரெனவும்.

485) முறைசெப் பியவைந் தினுண்முன் னையுரு
வரையிற் பலவட் டகமுள் ளுறுத்த
விறைபட் டனவெட் டெனவொட் டினகே
ணறையிற் பொலிகோ தைநறுந் நுதலே.

486) நிலநீ ரெரிகாற் றோடுரு விரதந்
நலமா கியநாற் றமொடூ றிவைதா
மிலவே யவையெட் டினும்விட் டதிறஞ்
சொலவா முடன்கேட் டொடுதோற் றமுமாம்.

487) வலிதா நிலமை யதுநீர் வெய்துதீக்
கலியே தருகாற் றியக்கம் கருமப்
பொலிவேற் பொறையயர்த் தல்புலர்த் துளர்த்தன்
மலிபூ தங்கணான் கின்மாண் பின்னவையே.

488) இனிவே தனையா வனவின் படுமொடு
துனிவே தருதுன் பமுமா மிடையுன்
நனிதா நலதீ வினையன் மையினாம்
பனிவே யிணைபன் னியதோண் மடவாய்.

489) அறிவா வனதா மினியா வெனினைம்
பொறியோ டுமனம் மிவைபுல் லினவேற்
குறிதா மிவையா றினுங்கூறுவதென்
னெறியா மிவைநீ லநிகர்த் தகணாய்.

490) குயலா குயலம் மெனக்கூ றும்வினைப்
பயனாற் பலபா கெனப்பட் டவைதா
மயலா மனமே வசிகா யத்தினா
மயலா ரிதாவை மினியா ரறிவார்.

491) கடனா கியகந் தமிவைந் துகளும்
உடனே யவைதோன் றியொரு கணத்துட்
கெடுமே யவைகேட் டினும்வாட் கணல்லாய்
சுடர்மே யசுடர்ந் நுதிபோன் மெனவும்.

492) கவையொப் பனவை விரலைந்து களும்
இவையிப் படிக்கைப் படியென் றதுபோ
லவையப் படிக்கந் தங்களைந் துகளும்
நவையைப் படுநல் லுயிரா மெனவும்.

493) அவைதா நிலையா துயரா மசுவம்
நவையா ருயிர்நாட் டிலங்காட் டமிலை
யிவைநான் மையென்வாய் மையிவ்வா றுணர்வா
ரெவையே செய்துமெய் துபவீ டுமென்றான்.

494) பல்லியல் பாகிப் பரந்தவைங் கந்தமுங் கந்தங்கடாம்
புல்லிய வொற்றுமை யிற்குறி யாகிய பொய்யுயிருஞ்
சொல்லிய கேட்டவள் வேட்டக் குரம்பை சுடுபவர்போ
லல்லியங் கோதைநின் காட்சி யழித்திடு வேனெனத்தான்.

495) பிண்டம் பிரிவில வேயெனச்சொல்லுத லாலவற்றுக்
குண்டங் கொருகுணி யாங்கவை தாங்குண மாகுமன்றேல்
விண்டங் கவையவை வேறுளதாதலும் வேண்டுமன்றோ
பண்டங்கு நீசொன்ன முட்டியிற்பஞ்சாங் குலிகளும்போல்.

496) பூதன்கும் புகுந்தே தெருல்லலுற் றயவற்றுக்
கேதமி றன்மை கரும மிரண்டா வியைந்தவை
பேதமு மாமென்ற பெற்றியி னாற்பொரு ளிற்றென்றலாற்
சாத மாமுயிர் தன்மையிற் றேற்ற தவறெவனோ

497) நின்சொல்லப் பட்ட வலிப்புந் தரிப்பு நிலத்தினவே
லென்சொல்லப் பட்ட வுணர்வொடு காட்சி யுயிரனவா
முன்சொல்லப் பட்ட நிலந்தா முடியின் முடிவுளதாம்
பின்சொல்லப் பட்ட வுயிரும் பெரிய பிரச்சையினாய்.

498) வற்பமல் லானில மில்லெனச் சொல்லுவ னாங்கதுபோற்
பொற்ப மிலாவுயிர் தானுமில் புத்திய லாலெனலும்
வற்பமலா நிலமன்னுந் தரிக்குமென் பாயல்லையோ
கற்பமெல் லாம்பிறர்க் கேநின் றுழந்த கருணையினாய்.

499) உரிய வலிமையல் லானில மோரல னென்றிருந்தாற்
பெரிய நிலத்தை யறிவிக்கும் பெற்றியில் லாய்பெரிது
மரிய வுயிரை யறிவுறக் காட்டென்றி யெப்பொருளும்
தெரியக் குணமுகத் தாலன்றி யென்றுந் தெருட்டுளதோ.

500) விருத்த நிலைமையும் வேண்டலம் யாமென வேண்டுகின்றீ
ரருத்த மெனக்கொண்ட வட்டகம் யாவையும் விட்டில
றிருத்தமி றீவயி னீருறை திட்ட விரோதமன்றோவாற்
பொருத்தம லாதன வேசொல்லும் புத்தநின் புத்தியிதோ.

501) தன்மை கரும மவற்றன வேயென்ற றானென்னைவே
றின்மை முடியினெ னிட்டமுரைப்பினுங் கெட்டதென்னோ
மன்னுமந் நான்கு மறுதலை தத்தமு ளாதலினா
லென்னு மியல்பும் பயனு மழிக்குமென் பேனல்லனோ?

502) ஊரிது காடிது தானென லென்னை யொருங்குளவே
னீரிது தீயிது தானென லாமோ நிகழ்வுடனே
யாரிவை கேட்டறி வாரவை யட்டக மென்னினலாற்
போ¢து வேயெனச் சொ;லுத றானும் பிழைக்குங்கொலோ.

503) தொக்கவை யாயுட னேயவைநிற்பினு மாங்க வற்றுண்
மிக்கத னாற்பெயர் சொல்லுவன்யானென்று வேண்டுதியேற்
புக்கன தாம்பொறி யானின்புலமன்றிப் பொய்யெனத்தா
னக்கனர் சாக வெனுநீயுரைக்கு நயங்க ளென்றாள்.

504) உருவுடை யட்டக மன்றியுமைந்தினுட் பட்டவெல்லாம்
மருவொடு கூடியுந் தீண்டியுமாக்குந் திறமரிதான்
மருவுடை யார்களை மாயங்கள்சொல்லி மருட்டியண்ணுந்
திருவுடை யாயவ காயத்துத்தேரை யடித்தெருட்டாய்.

505) திரிவே தனைகளுந் தீராநுமக்குள வாதலன்றே
கரிவே தனையவர் காமுறுகாமங் கடிந்ததுதான்
பரிவே பெரிதுடை யீர்முன்னுரைத்தபல் செய்கைகளின்
விரிவே யவையோரின் வேதனைவேறில்லை யாம்பிறவே.

506) உணர்ச்சியி னாற்செய்கை யாக்கியச்செய்கையி னாலுழப்பாம்
உணர்ச்சியி னாங்கோர் பொருட்சுவடுள்ளது போல்கின்றதா
லுணர்ச்சியொ டல்லன வொன்றொன்றில்நோக்கில வாமெனினு
மிணர்ச்சி யிழந்து பிறபிறவாகிப் பெறலிலவே

507) ஆறினி னொறே நிகழும்பொழுதினல் லாவுணர்வு
தேறின வாறவற் றுண்மையெனக்குத் தெருட்டனலிந்
தாறின வோவில்ல தாழ்ச்சியினாலுள தாமெனினீ
கூறிய வாற்றா லுயிருண்மைகூறலுங் குற்றமென்னோ.

508) ஓருணர் வுள்ள பொழுதினொழிந்த வுணர்வுகடம்
பேரு முணரப் படாமைபெற்றாமென்னும் பேச்சுமுண்டா
லீருணர் வில்லை யிருமூன்றொருங்குள வென்றுரைக்கு
மோருணர் வேயுடை யீர்சொற்களொன்றொன் றழிப்பனவே.

509) ஒன்றே யுணர்வாய் நிகழற்குக்காரண மவ்வுணர்வாய்
நின்றே யறிவான் றனிமையினாலெனத் தோ¢னிநீ
யன்றே யெனினவை யாறுந்தமுண்மையின் வேறென்னலாற்
சென்றே புலந்தலைப் பெய்தலறிவுடன் சீர்க்குமன்றே.

510) இச்சையில் லாமையி னெல்லாமொருங்குண ராவெனினு
மிச்சையெல் லாத்திற்கும் வேறேலொருங்குட னெய்துமன்றி
யிச்சையெல் லாத்திற்கு மொன்றேற்குணிப்பொரு ளிச்சையென்றாய்
தச்சனஞ் சிச்சா ரகழ்கள்வனென்கின்ற தன்மையினாய்.

511) பிறந்து பிறந்துநி னிச்சைகெடலன்றிப் பின்னொன்றின்மேற்
சிறந்து சிறந்தாங் குணர்ச்சிவிரியுந் திறமரிதாற்
கறந்த கறந்த கலஞ்சுவைத்திட்டாற் கறைக்கலங்க
ணிறைந்த நிறைந்தவை பாறயிர்மோரெனத் தானென்னையோ.

512) எல்லா வுணர்ச்சியு மிச்சைவழியா லெழுமெனலா
லில்லாம் பிறநுன திச்சையுமிச்சைமு னின்மையினால்
வல்லா யிதற்குமுண் டாயின்வரம்பின்மை யாமதனாற்
சொல்லா விடுந்திற மென்னோவிரிவிற்குச் சூனியமே.

513) வெளிப்பட்டு நின்றதொன் றன்றியொழிந்தவிஞ் ஞானங்கடாங்
குளித்தன தாங்கொள்ளப் பாடின்மையாலின்மை கூறிநின்றேற்
களித்தவை தங்களுக் காலயமாலய மாமெனநீ
யொளித்தனை கொள்ளலுற் றாயுயிர்தன்னையோர் பேருரைத்தே.

514) இருளுடை மாலைக்கண் டோன்றாதெனக்கென நண்பகலே
பொருளுடை யார்பொருள் கொள்வானகழுநன் போன்றிலையோ
வருளுடை யார்சொல்லு மாருயிராலய மென்றிருக்கும்
மருளுடை யாய்நின் மாண்பழிந்தெற்றான் மயங்கினையோ.

515) மூக்கொடு நாமெய்யும் மூன்றுந்தம்மூன்று புலன்களையும்
தாக்கிய போழ்தே யறிதலுந்தத்துவ மாமென்றியா
லாக்கிய மூன்றி லறிவுமரூவா லவையொருவாப்
பாக்கியஞ் செய்தாய் பரிசங்கள்கொள்ளும் பரிசென்னையோ.

516) உற்றில வாயொலி கொள்ளுஞ்செவியென வோதுகின்றாய்
கற்றிலை மெய்ம்மைநீ கட்புலந்தன்னோடோர் காலத்தினாற்
பெற்றில நாமதன் பின்கொளறானும் பெருந்தவத்தாய்
மற்றிது தான்றன் பொறியுறுகாறும் வரலினன்றே.

517) வாய்த்துரை யீதென வாமனிதுசொல்லும் வந்துறுமேற்
சேய்த்தெனக் கோடலுஞ் சேராதொலிசெவிக் கண்ணதெனி
னீத்தன தாமல வாயினுநீசொல்லு முற்றறிவின்
றீத்தனைப் போலவுந் தேறென்றவனைத் தெருட்டினளே.

518) பெற்ற வெழுத்தேற் பிரிவின்கணாறாம் பெயர் நுனது
முற்ற வுணர்ந்து முடித்துரையென்னை முதலெழுத்துப்
பற்றின சித்தம் பலவுணர்ந்தேயவை பாழ்படலாற்
கற்றினி யெல்லாக் கணக்குங்கலந்துரை காண்பென்னையோ.

519) ஓதிய கந்தங்க ளொற்றுமையாலுயி ரென்றதுபோற்
போதிய னாய்நின்னைப் புத்தனென்றாலது பொய்பிறவோ
வாதியி னாம்புத்தி யாவதல்லாலந்தத் தன்களையா
நீதியி னாற்சொல்லி நின்றுநின்பேறு முணர்விலையே.

520) அன்றியு நின்சொ லறிபொருடானில வாதலினா
லொன்றி யுரைத்த வுனக்குமெனைத்து முணர்வருமை
யென்றினி யாமுந் தெளிந்தோமிதனா லெனவுரைத்தாள்
வென்றி யுடையன வல்லதுசொல்லா விரிகுழலே.

521) ஆறுகுறி யாவனவு மாயபுலந் தாமும்
கூறுகுறி மாறுமவை கொள்ளும்வகை தாமும்
மாறுகுறி மாறிக்குறி யென்றுமயக் காதே
வேறுகுறி தாமுணர்வின் விள்ளுவ லினிக்கேள.

522) கண்ணின்குறி மூக்கின்குறி மெய்யின்குறி செவியி
னண்ணுங்குறி நாவின்குறி காடின் மனத்தோடு
மெண்ணுங்குறி யாவனவிவ் வாறுமெனக் கொண்ணீ
பண்ணின்குறி யேசுமொழிப் பாவையெனச் சொல்லும்.

523) அறிவுகுறி யென்பனவி னாயபுல மொன்றே
லறிவுகுறி யென்பனவு மாகுமவை யொன்றே
பிறிதுகொளு புலமுள்ள தாகுமெனிற் பேதம்
சிறிதுநெறி காட்டினது செல்லுமெனச் சொல்லும்.

524) உண்மைகுறி கொள்ளுமுணர் வின்புலம தெய்தா
தெண்ணினுணர் வோடுகுறி யிவ்வகைய வென்னி
லுண்மையுணர் வின்புலமோ டொன்றெனில தொன்றே
நண்ணலில வேலுணர்வி னாயபுல னின்றே.

525) ஒருங்குகுறி யோடுணர்வுதோன்றியுடன் கொள்க
வொருங்குபுலந் தோன்றியவையொத்தகெட லானா
லொருங்குகுறி யோடுணர்வுதோன்றலில வாமே
லொருங்குபுலந் தோன்றுதலினொன்றுமுணர் வில்லை.

526) உள்ளுஞ் சொல்லுடம் பென்றிவை மூன்றினாற்
கொள்ளு நுங்குச லாகுச லங்கடா
மெள்ளி னேரு மிவையின்மை காட்டுவே
னுள்ளக் காக வுரைத்தவம் மூன்றினுள்.

527) வேண்ட லேயென்றும் வெ·குத லாயினா
லீண்டி நின்றநி னித்தொடைப் பாடெலாந்
தீண்ட லன்னெனத் தீண்டிய வந்தவோ
வீண்டை யேநிற்ப வி·து மறிகிலை.

528) நன்மை வெ·குதல் நன்றெனச் சொல்லுலு
மனமை வெ·குத லன்றெனக் கூறலு
மின்மை யால்வெ·க லென்றதுந் தீமையி
னின்மை யாய நெறிமொழி நீயினி.

529) தீய வாய வெகுளியை யொப்பன
மாய மான முலோப மனத்தன
காய்வு செய்திலை கண்டுநின் கள்ளமே
நீய வையவை நேர்தலி னாம்பிற.

530) காட்சி நல்லன் காண்ட லனைத்தினு
மாட்சி யாமெனின் மன்னும· தொட்டுவேன்
வேட்கை யாலிது நன்றென வேண்டினு
மாட்சி யொட்டி வழித்தன னல்லனோ.

531) பொய்கு றள்ளே கடுஞ்சொற் பயனில்கொ
னைத லில்லன நான்கிவை நாவினாஞ்
செய்கை தீயன வாமெனச் செப்பினீ
ரைய நன்மையென் றீரவற் றப்புடை.

532) மண்டை கெண்டிகை மாட மடாமனை
கொண்டை குண்டிகை கூறை குடங்கடை
யுண்டி கட்டி லுடம்புயி ராதிய
பிண்ட மாய பிறபிற யாவையும்.

533) கூட்ட மான குறியெனி னலதை
பூட்ட லங்கோர் பொருளின்மை வேண்டியு
மீட்டு மீட்டிவை சொல்லின மெய்யுரை
நாட்டு மாறென்கொ லோவிளி நாசநீ.

534) நிலம்பொய் நீர்பொய் நெடுநகர் தாமும்பொய்
கலம்பொய் காற்றொடு தீயும்பொய் காடும்பொய்
குலம்பொய் யேயெனக் கூறுஞ்செங் கூறையாய்
சலம்பொய் யன்றிதொன் றேநுங்கள் சத்தையே.

535) குற்ற மென்ற குறளையே யொப்பன
மற்றுஞ் சால வுளபிற மாண்பில
வொற்றைப் பெண்ணுரை யாடுதல் போகங்கள்
கற்ற லேகடுஞ் சொல்லின்ன காத்தலும்.

536) பையச் சொல்லுத னல்வினைப் பாலென்றா
லெய்யக் குற்ற வெறியப்புணர்க்குங்கால்
வையத் தீயாவரு மந்திர மாமவை
செய்யச் சொல்லுநர் செவ்விய ராபவோ.

537) கடுக்கத் தாமடி கள்ளெனக் காய்ஞர்யா
ரொடுக்கச் சாம்பிவை தாலுவப் பாரில்லை
கொடுக்க வென்றல் குசலமன் றென்பதோ
படுக்க லுற்ற பதகநின் பாடமே.

538) ளபாவ மாம்பய னில்லன சொல்லலேற்
பூவ மேபொருள் கைக்கொண்டு புற்கலர்
சாவச் சொல்லுவ தத்துவ மாம்பிற
வேவ னன்றென்றி யொப்பவொன் றில்லையேல்.

539) காயத் தாற்கொலை காமங் களவென
நீயத் தாசொன்ன நேருந் திறமென்னோ
மாயத் தான்மன மின்றி யவையவை
தேயத் தியாருளர் செய்பவை ரென்பவே.

540) வழிமுள் ளூன்றன் மனைசுடன் மாந்தரைக்
குழியு ளுந்துதல் கோயிற் கலஞ்செய்த
லொழிவில் யானைமுன் னோட்டலோ டின்னவும்
பழியும் பாவமு மாக்குவ வல்லவோ.

541) ஒன்றி நின்ற வுயிரை யுயிரிது
வென்று சிந்தித் தழிப்ப னெனவெண்ணி
நன்றி யி·றொழி றேற்ற நவையினாற்
கொன்ற தேகொலை யென்றைந்திற் கூறினாய்.

542) தேவ னையிவன் றேவ bனனவெண்ணிப்
பாவனையிற் பணியு மனத்தனாய்த்
தூவென மும்மையே தோற்றித் தொழானங்கோர்
தாவ னைதொழு தான்றவ றெய்துமோ.

543) ஒத்த வன்றனை யுறுபகை யேயெனக்
குத்தி னாற்குங் கொலைவினை யில்லைனப்
புத்த னீருரைத் தீரங்கோர் புற்கலன்
செத்த வாறது சிந்திக்கற் பாலதே.

544) கொன்ற பாவமுண் டாயின் குறட்கண்ணும்
ஒன்று மேயென் றுரைப்பனெப் பாரியார்
பொன்றினும் புத்த ரேநீவி¡; சொல்லின
சென்று சேர்தலைச் சித்தம தின்மையால்.

545) பட்டி லன்பகை யாலெய்து பாவமங்
கொட்டி நீயவ் வுயிர்க்கொலை யாலென்னில்
துட்டனைத் தொழு தோன்றுறந் தானெனக்
கெட்ட னன்னிது கேட்க வினைநிலை.

546) ஆய்ந்த வைந்தினு மாம்வினை யார்ப்பெனின்
வீய்ந்த தின்மையின் வெய்ய வவீசிதான்
காந்தி பாலி யிரங்கக் கலகனைப்
போழ்ந்து கோடல் பொருந்தல தொக்குமே.

547) கொல்வ னென்றவன் கூர்ம்படை குன்றினுஞ்
செல்வ னென்றய லார்மனைச் சோ¢னுங்
கல்லு வானொ டெல்லார்க்குங் கருவினை
சொல்லு வானோ டுலகமுஞ் சுற்றமே.

548) துப்பி னால்வினை சொல்லலன் யானென்று
வப்பி னார்முலை காய்வது வாமனீ
யிப்ப லாரிடை யென்னையி தென்பதோ
செப்பி னாலுஞ் சிதைகின்ற தில்லையால்.

549) பண்டு தான்வைத்தப் பண்டத்தை யொப்பதொன்
றுண்ட தாயி னதுவது வேயெனக்
கொண்டு போகினுங் கொள்ளினுங் குற்றமில்
கண்ட போழ்துங் களவன்ற தென்றலால்.

550) பஞ்சி மெல்லடி நோவப் பகனடந்
தஞ்சி லோதியு மல்க வவளெனத்
துஞ்சு மில்லுடை யாளைச் சுமந்துபோய்
வஞ்சி யான்கொள்க வாழ்கபுத் தன்னென.

551) கந்த மாவன காகதந் தம்மெனப்
பந்த மின்மையிற் பாழ்செய்திட் டேனினி
யந்தி னீசொன்ன வாரிய சத்தையுஞ்
சிந்தை யுஞ்சிதைப் பேன்சில சொல்லினால்.

552) பிண்டமொன் றாயினும் பிரியநோக் கின்னது
கொண்டுநின் றாம்பிற கூறினைந் தேயெனக்
கண்டநா மெய்ம்மையுங் காட்டுவா யீங்கெனி
னுண்டுதா மாகுல முணர்வுதான் கூறுவோம்.

553) முழுதுந்துன்பம்மென மொழியின· தாகிய
பொழுதினா னல்லவும் புல்லுமா மாதலாற்
பழுதுதா னவ்வுரை பன்மைதா னின்மையில்
இழுதையா னான்குள வென்றுசொன் னாயென.

554) உழப்புமூன் றும்முட னொக்கநோக் கின்னது
வழுக்கில்லா வாய்மையேல் வாய்மை சொல்லியினி
யிழுக்கினாய் நீபிறர்க் கின்பமீந் தேனெனல்
பழுக்களே காய்வது ண்டுமுண் டேபிற.

555) துக்கமே யாயினாற் றொழிலுமொன் றாய்ப்பய
மொக்கவே வேண்டுமா லுயர்விலாக் கீழ்க்கதி
புக்குவீழ்ந் தார்பிறர் பொங்கிநின் றாரெமர்
மிக்கதே யென்னெறி யென்றுவேண் டல்லெவன.

556) உறுதிகூ றல்லொழி யொழுக்கங்காத் தல்லொழி
யிறுதியி· றுன்பமே யின்பமில் லாயினாற்
சிறிதுநீ தீப்புகாய் சேர்வதென் னைந்நிழல்
இறுதியில் லாத்துய ரின்னசெய் யாயினி.

557) தூய்மை யில்லை முழுவது மென்பதை
வாயும் நீசொல்லும் வாய்மைய தாயினாற்
றாமஞ் சாந்தம் புனைபவர் தாமெலாம்
ஏம நன்னெறி கண்டில ரேபிற.

558) ஓது மோத்து மொழுக்குநின் னுண்டியுங்
கோதில் தூய்மைய வாமெனக் கூறியும்
யாது நீயசு வாமெனச் சொல்லுவாய்
நாத னீபிற நன்கறிந் தாயவை.

559) நீயி னேசொன்ன மெய்ம்மையை நோக்கிலார்
தூய்மை யாம்பிறர் தூய்மை யிலரென்று
காய்ப வேகவி மண்டைகள் என்றனள்
வேயி னன்மை விலக்கிய தோளினாள்.

560) சென்ற சென்றுன செந்நெறி கண்டவர்
பின்றைத் தூய்மை பெறுவது மில்லையே
லின்று மின்று மியல்வது வாக்கொள்வாய்க்
கின்றித் தூய்தன்மை யென்னை யிழைத்ததோ.

561) அழுகு பூசுமி னங்கண மாடுமின்
கழுகு ணூத்தையோ டேனவுங் கவ்வுமின்
மெழுகு மின்னிடை மெச்சிய மல்லதின்
முழுதுந் தூய்தன்மை சொல்லிய மூடர்கள்.

562) நில்லா வென்னி னில்லன்மையாலும் நில்லாவா
யில்லா மென்ற லின்புறு மேற்கோ ளிழுக்காகு
மெல்லாந் தானே யென்றலி னேன் விழவெய்தி
நல்லாய் சொன்ன நான்மையை நாட்டுந் திறமென்னோ.

563) உழுவார் வணிக ரென்றிவ ருள்ளிட்டுலகத்துள்
வழுவார்க் கீய வான்பொருள் வேறாய் மறியும்மே
வழுவார் தமையுங் காண்டும· தாமாறுரையீரோ
புழுவாழ் கென்று புனன்மழை தந்த புகழுள்ளீர்.

564) தெய்வத மென்று தேறினர் செய்யுஞ் சிறப்பென்றும்
கையது வீயக் காமுறு தானக் கலப்பென்று
மெய்தல் ரேயின் னிவையிவை யெல்லா மிழுக்காவோ
மெய்பிளந் திட்டு வேண்டுநர்க் கீயும் விழுமிய்யீர்.

565) ஒள்ளிழை யாரே யுறுபொருள் பிச்சைக் குரியார்கள்
தள்ளின போழ்தின் னவையவை தன்னைத் தலைநிற்பார்
கள்ளர்க ளன்மை காட்டலு மாமோ கருணையாற்
பிள்ளைக ளேங்கப் பிறர்களுக் கீந்த பெருமைய்யீர்.

566) நில்லா தாகக் கூறுத றன்னை நெறியென்றீர்
பல்வகை யானும் பாழ்செய்து பின்னே பரிகாரஞ்
சொல்லுவி ராயிற் சொல்லிய மெய்ம்மை துறவாமன்
கொல்சின வேழங் குறிநிலை செய்த குணத்தின்னீர்.

567) ஓதி யாது முயிரில்லை யென்ப துரைத்து நின்றாயேற்
கோதி லங்கோர் குறியுயிரே கொள்ளி னுங்கோளழிவாம
வேதி லார்சொல் பரிகற்ப னையி னாலின் மைசொல்லி
னீதி யாநின் கருத்தினா லுண்மை யுந்நேர்ந் தாயன்றோ.

568) ஒன்று மில்லை யுயிரென்றுரைத்தநீ யுண்மை யின்மை
நின்ற வாறே நெறியாகநேர்கின் றாய்நீ யாவனோ
வன்றி முன்சொன் னவத்திறமெத்திறத்தா னும்மா காமையா
லின்றுந் நின்றுந் நீமொழிந்தாயெம்மிறை யேயிறை யாகவே.

569) போற லானு மதுபோ லாதென்றும்பு னைவினாலும்
வேறல் லதில் லையெனவும் வினைவலியும்யோ கின்னாலும்
தேறி நின்ற பொழுதோடிவ்வேழாந்திறத்தி னாலுங்
கூற லாமோ மீட்டுணர்வுகொண்டு ணர்வா னில்லாக்கால்.

570) நாம சீவன் முதலாய நான்மை களின்முன் மூன்றிலுந்
தூய்மை சீவனுடைத்தாகு மன்றே னின்சொன் மாறுமாந்
தாம சீவன் முழுவது மென்று தருக்கு கின்றாய்
வாம சீவ னிவற்றினா லுண்மை மறுக்க லாகுமோ.

571) அறியும் மெய்ம்மை யும்மைங்கந்தம்மாட சிய்யு மல்லவையுஞ்
சிறிதும் மென்முன் னிலையின்மைகாட்டிச் சிதைத்தே னாலினிப்
பிறிதொன் றுண்டே லுரைய்யெனவுரைத்தாள் புத்தன் றான்பெரிதும்
மெறிபட் டென்னெ றியினாலேயடக்கு வன்னி னையுமென்றான்.

572) ஆதி யலாத வகன்றடுமாற்றமுஞ்
சாதி யறுக்குந் தகையு மிவையென
வோதி வினைப்பயத் தொப்புரைப் பார்க்கன்றி
நீதி யிலாநெறி நேரல னென்றாள்.

573) வித்தின் வழிவழித் தோன்றும் முளைகிளை
சத்தியி னாயசந் தானத்தை மாற்றென்பன்
வெத்தவ வித்தினின் வேறன்று வீடிது
தத்துவ மாக்கொ டளிரிய லாயே.

574) வினையு முளது பயனு முளது
தினையனைத் தாயினுஞ் செய்ஞ்ஞன மில்லை
யெனையவுங் கந்த மருகண நில்லா
நினையின்மற் றென்றா னெறிபயந் தானே.

575) குணம்பொரு ளென்றி கொடைபொரு ளென்றி
யுணர்ந்துசெய் துண்பா னொருவனி லென்றி
கணந்தனி லேநிலை கந்தமு மாயக்காற்
பிணங்குவ தொக்குநின் பேரெமக் கென்றாள்.

576) தீதுள்ள மேலது தீயழப் பேசெய்யும்
யாதுள்ள மாண்புள மேலின்ப மாமென்னை
மாதுளம் பீசமுண் மாணரக் கின்னிறம்
போதுள்ளங் காண்பது போலமற் றென்றான்.

577) எட்டி னியன்ற விரண்டினு ளாங்கவை
யட்ட வரத்தமு மல்லது மாய்ப்பய
மாட்டார் மலர்க்கண்ணுஞ் செம்மையு மற்றுமா
விட்டமுங் காடம்டுவ னீங்கிது போல.

578) ஐந்தி னியன்றவர் பிண்டத்த ராகிய
மைந்த ரிருவர் குசலா குசலத்தர்
சிந்தையி னல்லவன் றன்வழித் தேவனும்
வெந்தொழி லான்வழி வீறி னரகனும்.

579) பீச மெனப்பட்ட தெட்டே பிறிதங் கொன்
றாசொன்று மில்லைய வைந்திற்கு மன்னது
நீ சொன்ன வாறிது நேருந் திறமென்னை
யேசுவன் கேள்யா னெடுத்தினி யென்றாள்.

580) அயலரக் கட்டக பீசமுண் டாங்கு
வியலகத் தைந்திற்கும் வேறொன்று காட்டாய்
குயலமு மல்லது மாயினன் றாகும்
மயல்படைத் தாயொழி மாதுளங் காட்டல்.

581) பூவின்கட் காட்டல் பொருந்தா ததன்வழி
மாவின்க ணாக மகன்செய் வினைப்பயன்
தேவன்கட் போலத் திருந்திய மாதுளஞ்
சாவின்கட் செய்கையுஞ் சாங்களைந் தாயோ.

582) வித்தொடு பூவின்கண் வேற்றுமை காட்டினும்
துத்தல் குழவி கிழவன்கட் சொல்லென்பன்
பித்துடை யார்போற் பிதற்றி வினைப்பய
மெத்திறத் தின்னு மியைத் துரைக் கில்லாய.

583) அங்குரந் தன்கண்ணுஞ் செல்லா தரக்கொடு
மங்கின பீசத் துருவ மலரின்கட்
டங்கின வென்னுஞ்சொற் றத்துவ மாக்கொண்ட
வங்குலி மாரனை யாதன்மற் றென்னாய்.

584) அப்படி யாலரக் காமது போன்மெனிற்
றப்படை யானுழப் பெய்வழித் தங்குத
றுப்புடை யான்சுர னாகிய வன்றுய்க்க
லிப்படி யாயினீ யென்றுரை யாயோ.

585) எம்மை யுவப்ப வினைவழித் துப்பெனின்
¦ச்மை வழியது தீஞ்சுவை யென்றில்லை
யெம்மை வினைவினை யாக்குநின் பூவுரை
யிம்மையோ டும்மை யிவையிலை யாலோ.

586) உண்டது போலு முறுபயன் பன்மலர்
கண்டது காரண மாகக் கருதினு
மண்டையா மான்றசை மீன்றடி தோன்றிய
வண்டுண வாகலு மாமத னாலே.

587) தீயுழப் பேசெயுந் தீவினை யென்பது
வாயுழப் பாம்வழி யேபுகுந் தாயினி
நோயுழப் பாகிய நுஞ்செய்கை யாவையும்
நீயுழப் பாய்பிறர்க் கேயுழந் தாயால்.

588) உள்ளம் வினையென வோதினை யேற்செய்கை
யெள்ளின் றுணையும· தின்மை யினைந்தெனக்
கொள்ளுந் திறமென்னை கூறாய் குணந்தினிக்
கள்ளமல் லாலென்றுங் கட்டுரை யாயால்.

589) நின்னுடை யுள்ளமுஞ் செய்கையு மொன்றெனிற்
றன்னிடை யெய்துந் தரும தருமிமற்
றென்னிடைக் கொண்டிலை யெங்குப்பெற் றாயிது
முன்னுடம் பாட்டின் முரணுள தாமால்.

590) சித்தமுஞ் செய்கையும் வேறென்றி யேயெனி
லொத்த வினையுடன் பாடின்றி யாமினித்
துத்த லையாதின் வழித்தெனச் சொல்லுதி
யொத்திய வல்ல துரையலை யாயால்.

591) கண்டுணர்ந் தார்வத்தி னாற்செய்கை யாதலை
யுண்டெனி னாற்குண மொன்றினுக் கொட்டினை
பிண்டிநீ ழலவன் பேரறஞ் செர்தலிற்
கொண்டநின் கோளின்கட் குற்றமுண் டாமோ.

592) விளைவத னால்வினை யாக்குமென் பார்சொ
லுளைவதிங் கென்செய வோவுணர் வில்லாய்
தளைபெய்து வைத்தென்னைத் தம்பொறி யெல்லா
மளைவது நன்றிது தானற மாமேல்.

593) ஆர்வத்தி னால்வினை யாக்கு மெனச்சொல்லி
னார்வத்தைச் சித்தமென் றாருரைப் பாரினிச்
சேர்வித்த துப்பினிற் செய்கையு மாதலை
நேர்வித்த வாறது நீயறி யாயால்.

594) உணர்வினை ஆர்வ மெனவுரைப் பாயேற்
புணரும் பிறர்கடம் பொற்றொடி யார்மே
லுணர்வன்ற தார்வ முழப்பெனச் சொல்லி
னிணர்பிரி யாத்துப்பி னால்வினை யன்றாய்.

595) சித்திமுடைச் செய்கை செய்வினை யாதலின்
சித்த முடைத்துப்புஞ் செய்வினை யாம்பிற
சித்தம் வினையெனச் செப்புத லாலெங்குச்
சித்தமுண் டவ்வழிச் செய்கையு முண்டே.

596) செய்கையி னாற்றுப்பு மாக்கியத் துப்பினிற்
செய்கையு மாம்வகை செப்புவித் தேனினிப்
பொய்கைசெய் தேசொன்ன பூவொடு வித்துரை
வைகவென் றாண்மல ருண்கண் மடவாள்.

597) இருவகைப் பீசத் தியல்வு மழித்துத்
திருவகைத் தேவொடு பூவுஞ் சிதைத்தே
மருவுகை யாய்நின் மதுரஞ்செய் மாவும்
தருவனை யாயிற் றகரு மதுபோல்.

598) வலிசெய்து பீசத்தின் மாண்பு மழித்திட்
டலிசெய்து விட்டே னமையு மதன்மேற்
பலிசையி னீசொல்லும் பாடங்க ளெல்லாம்
நலிவனொன் றொன்றா நடுவுணர்ந் தென்றாள்.

599) பிறந்தவப் பிண்டம் வினையினோ டாங்கே
யிறந்தன வெத்திறத் தின்னுமற் றென்றாற்
சிறந்தவத் தேவெய்திச் சேர்தலுஞ் சீரா
தறஞ்செய் தறானு மவம்பிற வன்றே.

600) உரந்தனை யாது மொடுக்ககி லாகிச்
சுரந்தபல் குற்றஞ் சொலக்கேட் டிருந்தான்
பரந்தினி நீசொன்ன பல்வழி யெல்லாங்
கரந்தனை போதலைக் காட்டுவன் கேணீ.

601) அரக்கொடு பீச மறக்கெட்ட வாற்றல்
கரப்பது போலிடைக் காண்பரி தாகி
மரத்திடை சென்று மலரின்கட் டோன்றிப்
பரக்குமென் றேன்பயம் பைந்தொடி யென்றான்.

602) அன்னணஞ் செய்தா னறங்கெட் டவன்வழித்
துன்னுஞ் சந்தானத் தொடர்ச்சி நிகழ்ச்சியிற்
பின்னை யதுபெறு மாதலின் யான்கண்ட
நன்னெறி நின்னா லறிவரி தென்றான்.

603) கந்தங்க ளெல்லாங் கடையறக் கெட்டக்க
ணந்தமி லாக்குற்ற மாமெனச் சொல்லுஞ்
சந்தங்க டம்முட் சவலைச் சந்தானமும்
வந்த· தெவன் செய்யும் வாமமாற் றென்றாள்.

604) ஆற்ற மகன்கெட்ட போழ்தே யமரிற்
றோற்றமு மென்னை துடித விமானத்து
ளேற்ற தவத்தவன் றேவென லென்கொல்
சாற்றுஞ்சந் தானத்தைச் சந்தித்துக் காட்டாய்.

605) மக்க ளுடம்பொடு தேவ ருடம்பிடை
மிக்க விடம்பெரு வெள்ளிடை யாலிது
புக்க தொடர்வில்லை யாதலி னீகொண்ட
பக்க முடன்கெடு மாலென்னை பாவம்.

606) புளிபொறி வாழ்நிழ றண்மதி யின்ன
தெளிவுள தாஞ்செல வின்முடி வென்னில்
விளிபவ னுளபொழு தேவினை துய்க்கு
மொளிகிளர் தேவ னுளமென்னு மாறோ.

607) சென்றில தேலிடை யற்றுழிக் தோன்றுக
வென்றலு மிங்குள தோவது தானெனி
னொன்றல பல்பொரு டாமொளி யாதிய
நின்றல வோவுல கெங்கும் நிறைந்தே.

608) தண்மதி கெட்டதன் சாயை யுடன்பெற
லுண்மை யுண்டாயினி னொத்துரை யொட்டுவன்
கண்மதி யாததெங் காரிய மேயின்ன
வெண்மதி யாயை விலக்குநர் யாரோ.

609) மதியென்று மில்லெனி னில்லொளி தானும்
புதியதும் பாழது பொன்றிய போழ்தே
கதியினை நாட்டிய காட்டி யெமக்கிங்
கதுவென்னை சொல்லிய வாறுரை யாத்தா.

610) அடியொடு பூவி னிடையற வின்றி
நெடியதோர் கொம்பினை நீமறந் தாயோ
மடியிலார் செய்த மானுயர் தெய்வப்
படியிது வென்றிடை பாழ்செய்திட் டாயால்.

611) தோற்ற மிடையற வில்லாத் தொடர்ச்சியைச்
சாற்றுதும் யாமுஞ்சந் தான மெனவென்னிற்
காற்றுஞ் சுடருங் கரகத்துட் டாரையு
மேற்றன வல்ல விரண்டுண்மை யாலே.

612) பித்தொடு கனவிடைப் பேயின் மயங்குநர்க்
கொத்த வுணர்வுண்மை யொட்டல தென்செய
தத்துவ மாயசந் தான முளதெனிற்
புத்தநின் சொற்கள் பொருளில வேயால்.

613) மூத்தல் வகையு முதலத னைம்மையு
மாத்த கணந்தோ றலர்ந்த நிகழ்ச்சியுஞ்
சாத்திரத் தாலத் தவிரன்கட் டாழ்ச்சியும்
போத்தந்து காட்டுந் திறமென்னை புத்தா.

614) கப்பம் பலபல கண்ணிமை யானுக்குத்
துப்பு முரைத்தென்னை தோன்றிய வக்கணத்
தொக்க விளைவுரைப் பாய்பின் வழிவழிச்
செப்புதி யேற்செய்கை சென்றுசென் றுண்டே.

615) காரண மென்னினுஞ் சென்றின்மை யாலில்லை
ஏரண தேவ விழுதைமை சொல்லுதி
யூருணி நீர்நிறை வுண்டோ யுறுபுனல்
வாரண வாய்க்கால் வரவில்லை யாக்கால்.

616) நில்லா தறக்கெடுந் தோன்றிற்றுந் தோற்றமு
மெல்லா வகையினு மில்லதற் கேலில்லை
சொல்லாய் தொடர்ச்சி தொடர்ச்சியென் றேநின்று
பல்லார் களையும் படுத்துண்ணும் பண்பா.

617) சுடருடைத் தோற்றத் தொடர்ச்சியைச் சொல்லி
யிடருடைத் தாக விவையிவை காட்டி
யடர்படுத் திட்டாட் கதற்கொன்று நாடிச்
சடருடை வாசனை சாதிக்க லுற்றான்.

618) கெட்டபி னாற்றல்க ளெல்லாம் வழியதற்
கொட்டு நறுமலர் வாசமோ டோட்டின்கட்
சுட்டுவ தொப்ப வெனச்சொல்லு நீகண்ட
விட்ட மிவற்றோ டியையல தென்றாள்.

619) முன்னைய துள்ள பொழுதத்து மற்றதன்
பின்னைய தில்லை யதுபெற்ற போழ்து
தன்னையு மில்லை யெனச்சொல்லின் வாசனை
யென்னை யியையுந் திறமிவை தானே.

620) ஓடு மலரு மொருங்குள வாதலிற்
கூடும் வாசமுங் குற்றமொன் றில்லெனிற்
கேடும் பிறப்பு முடனில்லை யாதலிற்
கூடல வென்பது கூறின மன்றே.

621) கெடுவத னுண்ணின்று தோன்றுவ தன்கண்
வடுவறச் செல்வது வாசனை யென்னப்
படுவதொன் றன்றுநின் பக்கத்தை யெல்லாஞ்
சுடுவதோர் கொள்ளி சுவடித்த வாறே.

622) போதின்க ணின்றும்புத் தோட்டிற் பொருந்திய
தாதின நாற்றந்தண் ணீருக்குச் சொல்லுதி
யோதன கந்த முடன்கெடின் வாசனை
யாதின தாகு மறிந்துரை யேழாய்.

623) வாசனை வாசனை யென்று வழிவழி
நீசொன்ன நீசொன்ன நேர்வதிங் கென்செய்ய
பாசன மாகிய பாதிரிப் பூவினைப்
பூசின தெப்பொருள் போத்தந்து காட்டாய்.

624) பூவின்கட் கேடும்புத் தோட்டின்கட் டோன்றியு
மேவிய வாசனை யெங்குமுண் டாமெனின்
சோபன மாகச் சுவாகதம் போந்ததென்
றேவன் றிருந்தடி சிந்திமற் றென்றாள்.

625) அதற்கு மறக்கே டுளதெனின் வாச
மதற்குமுண் டாயினி யெல்லையின் றோடு
மிதற்கெண்ணு மில்லெனி னில்லை யதற்கு
முதற்சொன்ன குற்றம் முடிந்தன வாமே.

626) சென்றதென் றாலதன் கேடின்மை யாஞ்செல
வின்றதென் றாலத னாற்றமு மில்லற்க
நன்றிதென் றேசொல்ல நல்லது நாமறிந்
தன்றிதென் றென்முனே யாருரைக் கிற்பார்.

627) கேடது தான்முழு தாதலி னீசொல்லும்
வீடது வாகலும் வேண்டும் விழுத்தவம்
கூடு பவர்க்குங் குணமில் லவர்க்கு
நீடல தேயுள தாநிரு வாணம்.

628) தோற்றம் வழியென்று சொல்லுத லாற்றட
மாற்ற மதுவிதன் மார்க்கத்து மாண்பெனச்
சாற்றுதி யேலுந் சவறது வாதலைத்
தேற்றுவன் கேணீ தெருண்டிருந் தென்றாள்

629) தன்வழித் தோற்றிக் கெடுமோ வதுகெடப்
பின்வழித் தோற்றம் பெறுமோ விரண்டனு
ளென்வழித் தோற்றம· தாமா றிருளற
நின்வழித் தோற்றத்தை நீயுரை யென்றாள்.

630) வழியொன்று தோற்றிக் கெடுமேன் மகப்பெற்
றழிகின் றவள்போ லணைவுள தாகு
மொழிகின்ற தேயது காணல தென்னிற்
கழிகின்ற கன்னிக்கோர் காதலற் காட்டாய்.

631) பிறப்பித்துக் கேடும்பின் றோற்றக் கெடலும்
இறப்பவுங் கூடா திருதிறத் தானுந்
துறப்பித்த வாறிது தூவெனக் கேட்டை
மறப்பித் துரைத்ததுண் டோசொல்லு வாம.

632) சுலாப்பல சொல்லிச் சுழன்று விடாதே
துலாத்தலைத் தூக்கமு மோக்கமுங் காட்டி
னிலாத்தலை யல்லா விரண்டு ளொன்றுண்டா
யிலாத்தலை யில்லே லமைவது மன்றே.

633) இல்லதற் கோயில்லை கேடென்னை காக்கையின்
பல்லதற் கோதார் பருமையு நுண்மையுஞ்
சொல்லிதற் காவதுண் டேலெனச் சொல்லின
ணல்லதற் கல்லது நாப்பெய ராதாள்.

634) துலாமில்லை யட்டக மேயது தானு
மிலாமிரு பாற்றலை யேதலை தாமு
நிலாம்வகை யில்லுயர் வோடிழி வெங்கும்
கலாமவை யாய்க்கடை கண்டது பாழே.

635) ஓல குளவி குருட்டெண் ணெய் வாணிச்சி
கோலஞ் சிதையுமென் றெண்ணெயட் டாளென்னும்
பாலகர் பாட்டுரை போன்றது மற்றுநின்
நூலுரை யெல்லா நுழைந்துணர் வார்க்கே.

636) கோற்றிர ளொன்றா யதன்றலைக் கேயுட
னாற்றியு மோக்கமு நாட்டினை ய·தொப்பத்
தோற்றமுங் கேடுந் தொகுபிண்ட மொன்றிற்குச்
சாற்றுதி யாய்விடிற் றக்கதென் னேனோ.

637) தலையன தாழ்ச்சியு மெழுச்சியு மன்றி
நிலையிலை கோலிடை நீக்கலு நீங்கு
மிலையென வெட்டி னிடுகுறி யொன்றெனிற்
பலவினி யிங்குப் படுவன கேணீ.

638) கோலுந் தலையு முடனில்லை யாமெனின்
மேலு முரைத்தன மேயதன் மேற்பழி
வாலுந் தலையு நடுவு மவையின்றிப்
பாலும் படுவதோ ராவுள தென்னாய்.

639) புணரிய தாமவை பொய்யெனச் சொன்னேற்
குணர்வதங் குண்மையு மொட்டுவை யாயிற்
குணகுணி யாயு மவயவி யாயும்
பிணபிணக் கெய்துமப் போ¢டர் செய்தாய்.

640) இருபிண்ட முப்பிண்ட மெண்ணில்பல் பிண்டம்
வருபிண்ட மேற்பல மற்றவை நீங்க
வொருபிண்டங் கொண்டாங் குயிர்க்குறுதி யிட்டுத்
திருவுண்ட செய்கையிற் செய்தவ னாக.

641) வினைசெய்தான் றுய்க்குமோ வேறொருவ னேயோ
வனைவரு மோவில்லை யோசொல்லா யோவென்னக்
கனைகடலி னுண்மணலிற் கண்ணினையு மீந்தா
னினைவகைய கேளென் றெடுத்துரைக்க லுற்றான்.

642) அவனேயு மென்னேன் பிறனேயு மென்னே
னவனும் பிறனு மவரேயு மென்னே
னெவனேயு மெய்தா னெனலேயு மாகா
வெவனோ விதுதுய்ப்பா னின்னணங்கே ளென்றான்.

643) அதுவேயு மென்னேன் பிறிதேயு மென்னேன்
அதுவும் பிறிது மவையேயு மென்னேன்
அதுபோன்ற வல்ல ததன்வழியின் மற்றொன்
றிதுபோல வென்பே னெடுத்துரையுங் கேணீ.

644) இடுபீச மன்றா லிறுங்காதி யன்றால்
வடுவாய வவ்விரண்டும் வந்தனவு மன்றால்
நெடிதாய தீங்கரும்பு நெல்லுமே போல
நடுவாக நோக்காய் நறுநுதலா யென்ன.

645) ஆத்தாவ தன்றேற் பிறிதா மரும்பெற
னாத்தான் வருத்த நீ நாட்டியதியாங் காணேன்
போத்தாகா தேற்குதிரை பெட்டையது போலென்
சாத்தாகு மாகாமை சாதிக்க வல்லையோ.

646) அவன்போற லானு மவனன்மை யானு
மவன்றன் வழியா னவனாத லானு
மவன்றான் பிறனே யவனென்ற லானு
மவன்றான் பிறனே யெனவழிவ துண்டோ.

647) கண்போலக் கயலெனினுங்
காடன்றித் தூறெனினும்
பெண்பாலாற் பல்கியும்
எல்லாம் பிறவேயாம்.

648) அயலானே துய்க்கு மவன்றுவ்வா னென்பாய்
முயலானு மில்லான் முகஞ்சிறிதே யொப்பான்
வயலாமை போல்வதோர் மக்குளி யிலானென்
றியலா தனவே யெடுத்துரைத்தி யென்றாள்.

649) அயற்பிறனு மல்ல னவன்றானு மல்லன்
புயற்றிறலைங் கூந்த லிதன்போலப் பிறனுக்கேல்
முயற்பிறவி மேயினீர் முன்செய்தா னங்கோர்
பயப்பெறுவ தில்லையேற் பாழ்பயனி தென்னோ.

650) தற்பிறிதே யாகிப் பிறபிறிது தானல்லா
நெற்பிறிது போன்மெனவு நீயுரைத்தா ய·தொழிந்து
சொற்பிறிது சொன்னாய் சுவர்க்கத் தவர்க்குரைப்
பிற்பிறனே யாகிப் பெறப்பிறனே யாகானோ.

651) நெல்லின் வழிக்கரும்பு நீள்கரும்பி னானெல்லுஞ்
சொல்லுநீ சொல்லாயேற் சொல்லியநின் சொல்லெய்தா
வல்லனாய்ச் செய்த மகன்வழியி னான்மகன்றா
னல்லனாய்ச் சொல்லின் னுலங்கரு வாமே.

652) செய்தானுஞ் செய்தானே துப்பானுந் துப்பானே
யி·தாலென் மெய்ம்மை கிடந்தவா றென்றானுக்
கெய்தார் பிறவோ விருசார் வினைப்பயனுஞ்
செய்தார்க டாமெனலுஞ் சிந்தித் திருந்தானால்

653) கண்ணுந் தலையும் பிறவுங் கருந்தடியும்
பெண்ணுங் கொடுத்துப் பிறர்க்கே யுழந்தாய்முன்
னெண்ணுங்கா லின்னுநீ யெவ்வினையுஞ் செய்தாரை
யுண்ணுந் திறமொன்று மோதா தொழிந்தாயோ.

654) எனைத்துணையு நீவருந்தி யெத்துணையோர் கால
நினைத்திருப்பி னல்லது நின்காட்சி தன்னால்
வினைப்பயத்தின் கூட்டம் விரித்துரைப்ப னென்னிற்
றினைத்துணையு மாகாமை தோ¢துநீ யென்றாள்.

655 ) முழுக்கேடு வேண்ட¡யேன் முன்ன¢ன்ற துண்ட¡ம்
வழுக்குமே லவ்வுரைக்கு மாறுகோ ள¢·த ¡
மிழுக்காமை புத்த£ ரெனைப்பலருங் கூடிக்
குழுக்கள¡ய் வந்துநுங் கோள¢றுமி னென்றாள்.

656) நின்றே நிலையுமென¢ ன¢த்த¢யமே யாயொழியு
மன்றேய· த¡யி லநித்த¢யமா மவ்விரண்டு
மென்றே யுரைக்கில¢ரு வழிக் குற்றமுமா
மென்றே யுரைக்கின்றா யேகாந்த ன¡குத¢யோ.

657) உச்சேதந் த¡னு மொருவகையா லவ்வகையே
யச்சேத மின்மையு மவ்விரண்டு மாய்நிகழ்ந்து
பொய்ச்சேத மல்ல¡ப் பொருண் முடிபொன் றுண்ட¡க
மெச்சாயே நீயெனயான் மெச்சுவனே யென்றான .

658 ) இறைவன்ற னூலுணரி னெவ்வுருவி ன¡ரு
முறையின¡ லெய்துவர்த¡ முன்ன¢ய வீடென்றாள்
மறையின¡ ல¡யினு மற்றொருவா றேனு
நிறையின¡ற் செல்லென்று நோ¢ழையுஞ் சென்றாள்.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework