ஆசீவக வாதம்
- விவரங்கள்
- தமிழர்கள்
- தாய்ப் பிரிவு: ஐஞ்சிறு காப்பியங்கள்
- நீலகேசி
659) கண்ணார் சிறப்பிற் கபில புரங்கடந்து
விண்ணாறு செல்வாள் வியன்மலைபோற் றோற்றத்தாள்
உண்ணால் வினையு மொருவி யொளிர்மேனி
யெண்ணா துணர்ந்தானை யேத்தத் தொடங்கினாள்.
660) அங்கம் பயந்தா னறைந்த சுதக்கடலுள்
பங்கங்கள் சாராப் பரசமையர் சொல்லுளவோ
பங்கங்கள் சாராப் பரசமையர் சொல்லேபோற்
புங்கவன்றன் சேவடியைச் சேராத பூவுளவோ.
661) பூர்ப்பம் பயந்தான் புகன்ற சுதக்கடலுள்
சார்த்திப் பிறவாத் தவநெறிக டாமுளவோ
சார்த்திப் பிறவாத் தவநெறிக டம்மேபோற்
றீர்த்தன் றிருநாமங் கொள்ளாத தேவுளவோ.
662) புலவ னுரைத்த புறக்கேள்வி சாரா
துலக நவின்றுரைக்கு மோத்தெங் குளதோ
வுலக நவின்றுரைக்கு மோத்தேயு மன்றிப்
பலவும் பகர்வாப் பயந்தனவே யன்றோ.
663) அலரோடு சாந்த மணிந்தெம் மிறைவர்
மலரடியை யல்லதியா மற்றறிவ தில்லை
மற்றறிவ தில்லாத வெம்மை மலரடிகண்
முற்றவே செய்து முடிவிற்க மன்றே.
664) புனையுலகிற் காதிய புங்கவ னார்த
மிணையடியை யல்லதியா மின்புறுவ தில்லை
இன்புறுவ தில்லாத வெம்மை யிணையடிக
டுன்புறவி லக்கதியுட் டோற்றுவிக்கு மன்றே.
665) இரவிடைநன் மணிபோலு மண்ணா துணர்ந்தான்
திருவடியே யல்லதென் சிந்தனையி லில்லைச்
சிந்தனையொன் றில்லாத வெம்மைத் திருவடிக
ளந்திணையில் பேராற்ற லாக்குவிக்கு மன்றே.
666) தொக்குட னாயவென் றொல்வினை தீர்கென
முக்குடை யானடி மூன்றினும் வந்தித்துக்
குக்குட மாநகர் நின்று கொடிமினிற்
றக்கதிற் றான்போய்ச் சமதண்டம் புக்காள்.
667) ஈண்டி யிருந்த விலிங்கியர் தங்கட்கு
மாண்ட துகிலல்குல் மாதரிது சொல்லும்
காண்டற் கினிதே கடிமலர்ப் பூம்பள்ளி
யீண்டுறை வாரிவர் யாவர்கொ லென்றாள்.
668) காரணம் வேண்டாக் கடவுட் குழாந்தன்னிற்
பேருணர் வெய்திப் பெரிதும் பெரியவன்
பூரண னென்பான் பொருவறக் கற்றவ
னாரணங் கன்னாட் கறிய வுரைக்கும்.
669) புயலிருங் கூந்தற் பொலங்கொடி யன்னா
யயலியர் தாமல்ல வாசீ வகர்கள்
வியலிடத் தியாரும் வியக்குந் தகையார்
மயலறு காட்சியிம் மாதவ ரென்றான்.
670) ஆத்தனு நூலும் பொருளு நிகழ்ச்சியும்
பாத்தன சொல்லப் பயம்பெரி தாகலி
னோத்துரை யேயிங் குரையென் றுரைத்தனள்
சாத்திரம் யாவையுந் தன்னிக ரில்லாள்.
671) என்றலு மற்கலி தானே யிறையினி
ஒன்பது வாங்கதிர் நூல்யா முடையன
மன்பெறு நுண்பொரு ளைந்தியல் பாயவை
யென்ப நிகழ்ச்சியுங் காழ்ப்பா டெனச்சொல.
672) அறிந்தா னிறைவ னவனா குதலாற்
செறிந்தான் பெரிதுஞ் செறியா துரைப்பி
னெறிந்தா னனைய வியல்பா குதலான்
மறிந்தான் றடுமாற் றகத்தே மயங்கி.
673) உரையா னிறைவ னுணலு மிலனாய்த்
திரையா னரையான் றெரிவில் லுருவம்
வரையா வகைவா னிடுவில் லனையன்
புரையா வறிவிற் புகழ்பூ ரணனே.
674) அடங்கல் குறிக்கோண் முதலா யினவாய்க்
கிடந்த கதிருட் கிளந்த பொருளுந்
தொடங்கி யுரையாந் தொகையா குவதே
யுடங்கே யுணுவைந் துருவா யுளவே.
675) நிலநீ ரெரிகாற் றுயிரி னியல்பும்
பலநீ ரவற்றின் படுபா லவைதாம்
புலமா கொலியொன் றொழிய முதற்காஞ்
சலமா யதுதண் மையையே முதலாம்.
676) எறித்தன் முதலா யினதீ யினவாம்
செறித்த லிரையோ டிவைகாற் றினவா
மறித்தல் லறிதல் லவைதா முயிராம்
குறித்த பொருளின் குணமா லிவையே.
677) அணுமே யினவைந் தவைதா மனைத்துங்
குணமே யிலவாங் குழுவும் பிரியு
முணன்மே யினுமுள் புகுதல் லுரையேங்
கணமே யெனினும் மொருகா லமிலை.
678) இவையே பொருள்கள் இவற்றி னியல்பும்
சவையே அறியச் சிலசாற் றுவன்கேள்
சுவையே யுடையம் மெனநீ யிகழல்
லவையே பிறராலழிதற் கரிய.
679) அண்ணலு நூலும் பொருளுநிகழ்வு மிவையெனலு
மெண்ணினு மேனை யெழுத்தினுமிக்காங் கிருந்தவர்முன்
கண்ணினு மன்றிக் கருத்தினும்வேறெனக் காட்டலுற்றுப்
பண்ணலங் கொண்டசொல் லாளவைபேர்த்தும் பகர்ந்தனளாய்.
680) முற்ற வறிந்துரை யாதவன் மோனாந் திருந்தனனேற்
செற்றம் பெரிது முடையனச் சீவன்க டம்மொடெல்லா
மற்ற முடையவர் சொல்லின வாகம மன்மையினாற்
பெற்ற வகையென்னை பேதாயதனைப் பெயர்த்தெனவே.
681) ஒக்கலி யோகலி யென்றிரு தெய்வ முரைத்தனவேன்
மற்கலி யார்போ லறிந்தன வாயிற் செறிந்தனவாம்
தக்கில வேயறி யாதன சொல்லுத றத்துவத்தை
யிக்கலி யாள ருரைத்தவு மேதமெ னாய்பிறவோ.
682) அறிந்தா னறிந்தன தான்சொல்லினார்வச் சினத்தனனா
யெறிந்தா னனையதோ ரேதத்தையெய்துமவ் வேதத்தினான்
மறிந்தா னகன்றடு மாற்றத்தகத்தெனின் மாண்புணர்ந்தாய்
செறிந்தாங் கிருக்கிற்பி னீயுஞ்சிற்றாத்தனை யாகிற்றியே
683) ஆத்த னறிந்தன யாவையுஞ்சொல்லல னாய்விடினிச்
சாத்தனும் யானு மவன்றன்னிற்சால விசையுடைய
நாத்தனை யாட்டியோர் நன்மைகண்டாலு நினக்குரைத்து
மீத்தன முண்டு மிருமைக்குமேத மிலம்பிறவோ.
684) வானிடு வில்லின் வரவறி யாத வகையனென்பாய்
தானுடம் போடு பொறியின னாதலிற் சாதகனா
மீனடைந் தோடும் விடுசுட ரான்கதிர் வீழ்புயன்மேற்
றானடைந் தாற்றனு வாமிது வாமதன் றத்துவமே.
685) முற்ற வறிந்தனன் யானென்றுமோனங்கொண் டேயிருந்தா
னற்ற மகலவென் றானீயறிந்தமை யாதினினாம்
பெற்ற வகையெனப் பேச்சின்மையாலெனிற் பிள்ளைகளும்
மற்றிம் மரமு மலையுமம்மாண்பின வாம்பிறவோ.
686) முடக்கு மெனினு நிமிர்க்குமெனினுந்தன் மூக்குயிர்த்து
நடக்கு மெனினு மிருக்குமெனினுந்த னல்லுறுப்பி
னடக்கு மியல்பல்ல னன்னவற்றார்வத்த னாகுமன்றி
யுடக்கு மிவையில்லை யேலுயிர்தானுண்மை யொட்டுவனோ.
687) நிலப்பாலு நீர்ப்பாலுந் தீப்பாலும் காற்றின்
புலப்பாலு நெட்டுயிரின் போக்கில்லாப் பாலும்
சொலற்பால வல்லாத சொல்லுதலால் யானு
மலப்பா தொழியேனிவ் வாசீ வகனை
யருகிருந்தார் தாமறிய வாசீ வகனை.
688) வண்ணாதி யெல்லாம் வகுப்பின் னிலப்பாலாம்
நண்ணாத மூன்றிற்கு நன்பால் பிறவாகிக்
கண்ணாதி யாலவற்றைக் காணப்பா டில்லையா
யெண்ணாதே யிந்தியக்கோ ளெய்தாமை வேண்டும்
எனைத்தும் பெறப்பாடு மில்லாத வேண்டும்.
689) நீர்ப்பாலுந் தீப்பாலு நில்லா வளிப்பாலும்
பேர்ப்பாலே பற்றிப் பிறப்பிறவா நீபெருக்கி
யோர்ப்பி யாதுஞ்செய்யா துரைத்தா யுரைத்தமையிற்
கூர்ப்பியாது மின்றிநின் கோளழியு மன்றே
கொணர்ந்துநீ யைந்தென்ற கோளழியு மன்றே.
690) பொருடாமி வைந்தொழியப் போத்தந் துரைப்பா
யிருடாமி வைந்தனு ளெக்கூற்ற தாமோ
விருடாமி வைந்தனுளு மெக்கூற்று மில்லை
லருடாழ்ந்து நீயிருப்ப தியாதின்பா லாமோ
அணுமயமாங் கந்தங்க டாமனந்த மன்றோ.
691) பலவாக நீசொன்ன பாலெல்லாந் தம்முட்
கலவாவா யப்பொருளே யாதலையுங் கண்டா
லுலவாதோ வொற்றுமையும் வேற்றுமையு மென்றாற்
சலவாதி யொன்றுஞ் சமழலையே கண்டாய்
சமத்திடை யொன்றுஞ் சமழலையே கண்டாய்.
692) பாறாம் பலவாகிப் பாலாகு மப்பொருளே
வேறாது மில்லை யெனவே விளம்புவாய்
நீறாக நின்ற நிலப்பால் பெறவேலா
நாறா வகையெனக்கு நன்குரைக்கல் வேண்டும்
நலிந்தாற் பிறபொருட்கு நாட்டலே வேண்டும்.
693) இன்றேய தாயி னிவைபா லிவைபொருள்க
ளென்றே பலவா வெடுத்துரைப்ப தென்செய்யக்
குன்றோ மலையோ குவடோ வடுக்கலோ
வன்றோவ தன்றால· தியாப்பாதல் வேண்டூம்
அவையவையே சொன்னால· தியாப்பாதல் வேண்டும்.
694) நோயில்லை வாழி கடவு ளெனவுரைத்தா
னாயினோ யின்மையினேர்ந் தாய வழியொருநாட்
டீயினும் வெய்யநோய் சேர்தலையுங் காண்டுநீ
சாயினும் தத்துவத்தைச் சாராதா யன்றோ
தடுமாற்றக் காழ்ப்பாடந் தாமுளவே யன்றோ.
695) கடுங்கதிரோன் மீதூரக் காணாக்கோ ளெல்லாம்
படும்பொழுது மெழுச்சியினுந் தம்பயனே செய்யு
நெடுங்காலம் பல்பிறவி நின்றன வெல்லா
மொடுங்காதே மேய்ந்துண் டுழிதரலே வேண்டும்
உதவாத வார்தலையு மொட்டலே வேண்டும்.
696) எப்பாலுந் தான்கெடா வில்லனவுந் தோன்றாவென்
றொப்பியாது மில்ல துரைத்தளியின் றானுண்ணும்
துப்பாயதூச் சோற்றுத் தூய்தல்லா தாழ்ந்துளதென்
றிப்பாவி செய்யு மிழிதகவி தென்னோ
விழுதைதான் செய்யு மிழிதகவி தென்னோ.
697) நின்றீக கொண்டீக வுண்டீக தின்றீக
வென்றிவைகள் கூறி யிடுவார்க் கறம்வேண்டான்
கொன்றீகை தீதென்றுங் கொல்பாவ மில்லென்றுந்
தன்றீகை யுண்ணாதான் றான்கண்ட தென்னோ
தவத்தினு மில்வாழ்க்கை தான்கண்ட தென்னோ.
698) இல்லாத தோன்றா கெடாவுள் ளனவென்பாய்
சொல்லாயே நெய்சுடராய்ச் சுட்டிடுமா றென்றேனுக்
கல்லாந் தயிர்த்தோடி யாழ்மிதப்புச் சொல்லுதியா
லெல்லாமொன் றொன்றிற் கிடங்கொடா வன்றே
யிழிவுயர்ச்சிக் காரணமு மில்லாதா யன்றே.
699) ஓட்டுங் குதிரையு மொன்றே யெனிற்குதிரை
யூட்டம் பொழுதொடுதான் புல்லுண்ணும் போழ்தின்கா
னாட்டிய வீதி யதிசயத்தை நீயெமக்குக்
காட்டி யுரைப்பினின் காட்சியைக் கோடும்
கடவுட் குழாத்தார்தம் காழ்ப்பெலாங் கோடும்.
700) வண்ண முதலா வுடைய குணமெல்லாம்
எண்ணுங்கா லப்பொருளே லீந்தி னிளங்காய்க்கட்
கண்ணினாற் கண்ட பசுமை கனிக்கண்ணுந்
திண்ணிதாக் காட்டிற் றெருண்டாயே யென்றும்
திரிந்தொழிந்த காட்டினாற் றேவனே யென்றும்.
701) வட்ட முதலா வுடைய பொருளெல்லா
மொட்டிநீ யப்பொருளே யொன்றும்வே றில்லென்பாய்
தட்ட மழித்தோடஞ் செய்தா லதன்கண்ணும்
விட்ட வடிவு விரித்துநீ காட்டாய்
விகார மனைத்தும் விரித்துநீ காட்டாய்.
702) மிதப்பனவு மாழ்வனவும் வேண்டுவனயா னென்னிற்
பதப்பொரு டானான்கின் பன்மைமுடித் தாயா
மிதப்பனவே யாழ்வனதாம் வேறியாது மில்லே
லுதப்பேனு நின்சொ லுதவலவே கண்டா
லுடனேநின் பக்க முடைத்திட்டாய் கண்டாய்.
703) தொழிற்சொற் குணச்சொல் வடிவுச்சொன் மூன்றும்
பிழைப்பில் பதமாப் பிரிவிடத்துக் காண்டு
மிழுக்கில் பொருளோ டியைத்தக்காற் சந்தி
யெழுத்தியலிற் கூட்டமு மெப்பொழுதுங் காண்டு
மிலக்கண நின்சொ லியையலவே கண்டாய்.
704) அதுவா வதுவு மதுவாம் வகையு
மதுவாந் துணையு மதுவாம் பொழுதுஞ்
சதுவா நியதத் தனவா வுரைத்தல்
செதுவா குதலுஞ் சிலசொல் லுவன்யான்.
705) அரிவை யவளாங் குழவி யவளை
யுரிய வகையா லுவந்தாங் கெடுத்தா
லரிய முழமூன் றளவாம் பொழுதும்
வரிசை யுரைத்த வருட மதன்பின்.
706) குழவித் திறமுந் துறவா ளவளும்
முழுவித் ததுவும் முளையா துளதா
மிழவெத் துணையு மியல்பேன் முடியா
தழிவித் திடுவே னயநீ விரையல்.
707) முலையும் மகவும் முறுவல் லவையும்
தலையுண் மயிரும் முகிரும் முடனே
நிலையில் லமையு மிலதா மெனினே
யலையுந் நினகோ ளுடனே யெனலும்.
708) உளவே யெனின்முன் னுரைத்தந் தியதங்
களவே யெனலாங் கடையா மெனநீ
கிளவா தொழியாய் கிளந்த குழவிக்
களவே முழமா வவைதாம் பலவால்.
709) உடையள் ளிவடன் னுதரத் தொருபெண்
ணடையு மவளுக் கவளவ் வகையாற்
கடையில் குழவி யவைதன் னியல்பா
நடையு மதுவே னகையாம் பிறவோ.
710) இனியாம் வகையு மிசைத்தி யெனினுந்
நனிகா ரணமாய் நடுக்கு நினகோட்
டனிகா ரியமும் முளதேற் றவறா
முனிலா மொருவன் பொழுதும் முடிவாம்.
711) நியதந் நிகழ்ச்சிந் நியதா வுரைப்ப
தயதி யெனினீ யமையுஞ் சலமேல்
வியதி யெனினும் வெகுளல் இழுதை
பயதி யெனினு நினக்கோர் பயனே.
712) பாலைப் பழுத்தி னிறத்தன வாய்ப்பல மாட்டொடுகண்
ணாலெத் துணையு மகன்றைந்து நூறாம் புகையுயர்ந்து
ஞாலத் தியன்றன நல்லுயி ரென்பது நாட்டுகின்றாய்
மாலித் துணையுள வோநீ பெரிதும் மயங்கினையோ.
713) ஒன்றினு ளொன்று புகலிலவென்ற வுயிர்களெல்லா
நின்றன தந்த மகலமுநீளமும் பெற்றனவாய்
நன்றுநீ சொல்லுதி நாந்தொக்கிருந்துழி நல்லுயிர்க
டுன்றின வென்பது சொல்லாதினியென்ன சொல்லுதியோ.
714) தானுள தாய வழியதன் றன்பா லியல்பெனலா
மூனுள தாய வுயிர்ப்பிர தேச முணர்வதுபோல்
வானுளம் போயுழி மன்னு மறிவிலை யேலதனை
நானுள தென்றுரை யேனதற் கியாரினி நாட்டுகிற்பார்.
715) ஒன்றென நின்ற உயிர்தானுருவின தாதலினாற்
பொன்றுந் துணையும்பல் போழெய்தும்பூசணிக் காயினைப்போ
லின்றெனி னாகம மாறதுவாமினி யவ்விரண்டு
மின்றெனிற் சால வெளிதாம்பிறவத னின்மையுமே.
716) எண்டனை யாக்கி யிடவகை யுட்பொரு ளீறுசொல்லி
மண்டல மாக்கி மறுத்துங் கொணரு மனத்தினையேற்
கண்டிலை நீமெய்ம்மை காழ்ப்பட்டு நின்ற கனவுயிர்க்கெண்
ணுண்டெனி னில்லை யகன்றடுமாற்ற முலப்பின்மைபோல்.
717) மேற்சீர தீயோ டுயிர்காற்று விலங்கு சீராம்
பாற்சீர நீரு நிலந்தானும் பணிந்த சீரா
மேற்சீர மேற்போம் விலங்கோடு விலங்கு சீர்கீ
ழாற்சீர வீழும் மவையென்னினு மாவ தென்னோ.
718) தீயு முயிருந் தமக்காய திசையி னாலே
போயு மொழியா திவணிற்றல் பொருத்த மன்றால்
வீயும் வகையும் வினையாக்கும் திறமு மெல்லாம்
நீயு மவற்றை நினைவாயுள வாக வன்றோ.
719) தென்றை யதுளையத் திசைதானுறப் போய காற்றேற்
பின்றை யொருநாட் பெயராததோர் பெற்றி ய·தான்
முன்றை தழுவி முனிவாக்கும் வடந்தை யத்தா
வின்றைப் பகலே யிதன்மெய்ம்மை யிசைக்கிற்றியோ.
720) முன்சென்று வீழுந் நிலநீரை முகிலு ணின்று
பின்சென்று பெய்யுந் துளிதானும் பெருந்த வத்தா
யென்சென்ற தெய்துந் திறந்தன் னையெனக் குணர
நின்சென்ற வாற்றா லுரைத்தானெறி யாற்ற நன்றே.
721) பாலெங்கு மோதப் படுகின்ற பதப்பொ ருட்குக்
காலங்கள் சொல்லா யதுதானுன் கணக்கு மென்றாற்
சீலங்கள் காத்துக் குணனின்மையைச் செப்பு கின்றாய்
மாலிங் குடையை யதுதீர்க்கு மருந்து முண்டோ.
722) நோயுற்ற நுன்போற் குணமொன்றில னாய யானும்
பேய்மற் றிவடா னெனக்கண்டோர் பெரிய வன்றா
னீமற்றி துண்ணென் றறநல்க விளங்கப் பெற்றேன்
வாமத்து ணீயும் மதுபோலு மருந்தில் லையே.
723) நோயைத் துணிந்தே யுறுநோய்முத னாடியந்நோய்க்
காய மருந்தே யறிந்தூட்டும· துண்டு காட்டிற்
பாய மறுக்கும் படியாமது பல்லு யிர்க்கும்
கூயத்தி னென்னை குரவருப தேச மென்றாள்.
724) சாதி முதலாப் பிணிதாமிவை யப்பி ணியிற்
காதி யறியில் லவைதீவினை யூண தனாற்
றீதின் றிதனில் லழுந்தல்திரி தோடத் தினால்
வேத னையது தீர்ப்பது மெய்யுணர் வாமே.
725) மானின்ற நோக்கின் மறவேனெடுங் கண்ணி னல்லாய்
மேனின்ற வெல்லா மிகநல்லவிம் மெய்யுணர்ச்சி
தானின்ற தன்மை தவிராதுரைக் கிற்றி யேனின்
னூனின்ற வாறே பொருணோக்குவன் யானு மென்றான்.
726) நின்ற விரலுந் நிலையாழ்ந்து முடங்க லாயிற்
சென்றவ் விரலும் மெனத்தானின் கூற்ற தாயிற்
றொன்றவ் விரலே யுறலுண்மையு மின்மை யும்மா
மென்றவ் விரலே யிதுவென்றனள் வேற்க ணல்லாள்.
727) ஆழ்ச்சி யொருபா லதுவல்லன தம்மோ டாழா
தேழ்ச்சி யொன்பா லதுதன்னொடு மின்ன தென்னச்
சூழ்ச்சி யமைந்த துணைத்தோளியர் சொற்க ளென்று
தாழ்ச்சி மனத்தா லிதுதத்துவ மென்ற னன்னா.
728) பொய்ந்நின்ற வெல்லாம் புரைத்தாயினிப் பூர ணன்னே
மெய்ந்நின்ற பெற்றி யறிந்தாயிதன் மேலு நன்றாக்
கைந்நின்று முண்டுங் கடைப்பள்ளி வழியு மாக்கிச்
செய்ந்நின்று நீசெய் தவந்தானெனச் செப்பி னளே.
729) கல்லா தறிந்த கடவுள்ளிறை யாகு மெய்ந்நூல்
சொல்லானு மல்ல னவன்சொல்லின தாகு மும்மூன்
றெல்லாப் பொருளுந் தம்பான்மை யியல்பு மேன்று
பொல்லாத போக்கி யினிப்பூரண சென்மி னென்றாள்.