நீலகேசி
- விவரங்கள்
- தமிழர்கள்
- தாய்ப் பிரிவு: இயல்
- ஐஞ்சிறு காப்பியங்கள்
நீலகேசி என்பது ஐஞ்சிறு காப்பியங்கள் எனப்படும் ஐந்து தமிழ் இலக்கிய நூல்களுள் ஒன்று. சமண சமய நூலான நீலகேசி ஒரு கதைப் பின்னணியில் சமணக் கொள்கைகளை விளக்குகின்றது. தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் இதுவெனக் கூறப்படுகின்றது. பௌத்த சமயத்தின் பெருமை கூற எழுந்த காப்பியமான குண்டலகேசி எனும் நூலுக்கு மறுப்பாகவே நீலகேசி எழுதப்பட்டுள்ளது. எனினும் இதனை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை.
இந்நூல் கடவுள் வாழ்த்து தவிரப் 10 பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது. இப் பதினொரு பகுதிகளிலும் மொத்தமாக 894 பாடல்கள் உள்ளன.
- கடவுள் வாழ்த்து
- தர்ம உரை
- குண்டலகேசி வாதம்
- அர்க்க சந்திர வாதம்
- மொக்கல வாதம்
- புத்த வாதம்
- ஆசீவக வாதம்
- சாங்கிய வாதம்
- வைசேடிக வாதம்
- வேத வாதம்
- பூத வாதம்