நாலடியார்
நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இதனால் இது நாலடி நானூறு எனவூம் பெயர் பெறும். பல சந்தர்ப்பங்களில் இது புகழ் பெற்ற தமிழ் நீதி நூலான திருக்குறளுக்கு இணையாகப் பேசப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது. வாழ்க்கையின் எளிமையான விடயங்களை உவமானங்களாகக் கையாண்டு நீதி புகட்டுவதில் நாலடியார் தனித்துவம் பெற்று விளங்குகிறது.

நீதிகளைக் கூறுவதில் திருக்குறளும் நாலடியாரும் ஏறக்குறைய ஒரே முறையைப் பின்பற்றுகின்றன. திருக்குறளைப் போன்றே நாலடியாரும், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகளை உடையதாக விளங்குகிறது.திருக்குறள் இரண்டு அடிகளில் சொல்ல, நாலடியார் நான்கு அடிகளில் சொல்கிறது.திருக்குறள் ஒரே ஆசிரியரால் இயற்றப்பட்டது. நாலடியாரோ சமண முனிவர் நானூறு பேர் பாடிய வெண்பாக்களின் தொகுப்பாகும். "ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி', 'சொல்லாய்ந்த நாலடி நானூறும் நன்கு இனிது', 'பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில்' என்கிற கூற்றுகள் இதன் பெருமையை திருக்குறளுக்கு இணையாக எடுத்தியம்புவன.

கடவுள் வாழ்த்து

அறத்துப்பால்

 

 1. செல்வம் நிலையாமை

 2. இளமை நிலையாமை

 3. யாக்கை நிலையாமை

 4. அறன் வலியுறுத்தல்

 5. துய்தன்மை

 6. துறவு

 7. சினம் இன்மை

 8. பொறையுடைமை

 9. பிறர்மனை நயவாமை

 10. ஈகை

 11. பழவினை

 12. மெய்ம்மை

 13. தீவினையச்சம்

 

பொருட்பால் 1. கல்வி

 2. குடிப்பிறப்பு

 3. மேன்மக்கள்

 4. பெரியாரைப் பிழையாமை

 5. நல்லினம் சேர்தல்

 6. பெருமை

 7. தாளாண்மை

 8. சுற்றந்தழால்

 9. நட்பாராய்தல்

 10. நட்பிற் பிழை பொறுத்தல்

 11. கூடா நட்பு

 12. அறிவுடைமை

 13. அறிவின்மை

 14. நன்றியில் செல்வம்

 15. ஈயாமை

 16. இன்மை

 17. மானம்

 18. இரவச்சம்

 19. அவையறிதல்

 20. புல்லறிவாண்மை

 21. பேதைமை

 22. கீழ்மை

 23. கயமை

 24. பன்னெறி

 

காமத்துப்பால் 1. பொது மகளிர்

 2. கற்புடை மகளிர்

 3. காமநுதலியல்

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework