குடிப்பிறப்பு
- விவரங்கள்
- தமிழர்கள்
- தாய்ப் பிரிவு: பதினென்கீழ்கணக்கு நூல்கள்
- நாலடியார்
141. உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணும்
குடிப்பிறப் பாளர்தம் கொள்கையில் குன்றார்
இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அமா
கொடிப்புல் கறிக்குமோ மற்று.
142. சான்றாண்மை சாயல் ஒழுக்கம் இநவ்முன்றும்
வான்றோய் குடிப்பிறந்தார்க் கல்லது - வான்றோயும்
மைதவழ் வேற்ப. படாஅ பெருஞ்செல்வம்
எய்தியக் கண்ணும் பிறர்க்கு.
143. இருக்கை எழலும் எதிர்செலவும் ஏனை
விடுப்ப ஒழிதலோ டின்ன - குடிப்பிறந்தார்
குன்றா வொழுக்கமாக் கொண்டார் கயவரோடு
ஒன்றா வுணரற்பாற் றன்று.
144. நல்லவை செய்யின் இயல்பாகும் தீயவை
பல்லவர் துற்றம் பழியாகும் - எல்லாம்
உணரும் குடிப்பிறப்பின் ஊதிய மென்னோ,
புணரும் ஒருவர்க் கெனின்?
145. கல்லாமை அச்சம் கயவர் தொழிலச்சம்
சொல்லாமை யுள்ளுமோர் சோர்வச்சம் - எல்லாம்
இரப்பார்க்கொன் றீயாமை அச்சம் மரத்தாம்
மாணாக் குடிப்பிறந் தார்.
146. இனநன்மை இன்சொல்ஒன் றீதல்மற் றேனை
மனநன்மை என்றிவை யெல்லாம் - கனமணி
முத்தோ டிமைக்கு முழங்குவாத் தண்சேர்ப்ப
இற்பிறந்தார் கண்ணே யுள.
147. செய்கை யழிந்து சிதல்மண்டிற் றாயினும்
பெய்யா ஒருசிறை போல் உடைத்தாகும்
எவ்வ முழந்தக் கடைத்துங் குடிப்பிறந்தார்
செய்வர் செயற்பா லவை.
148. ஒருபுடை பாம்பு கொளினும் ஒருபுடை
அங்கண்மா ஞாலம் விளக்குறுஉம் - திங்கள்போல்
செல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்கு
ஒல்கார் குடிப்பிறந் தார்.
149. செல்லா விடத்தும் குடிப்பிறந்தார் செய்வன
செல்லிடத்தும் செய்யார் சிறியவர் - புல்வாய்
பருமம் பொறுப்பினும் பாய்பா மாபோல்
பொருமுரண் ஆற்றுதல் இன்று.
150. எற்றொன்றும் இல்லா இடத்தும் குடிப்பிறந்தார்
அற்றத்தற் சேர்ந்தார்க் கசைவிடத் துற்றாவர்
அற்றக் கடைத்தும் அகல்யா றகழ்ந்தக்கால்
தெற்றெனத் தெண்ணீர் படும்.