நாட்டுப்புற மக்களின் பாடல்களில் மிகவும் சிறப்புடையது தெம்மாங்குப் பாடல்களாகும். இவற்றை மக்கள் இசையுடன் பாடி ஆடிமகிழ்வர். தென்பாங்கு என்பது தெம்மாங்கு ஆயிற்று. தேனினும் இனிய தெம்மாங்குப் பாடல்கள் தேன் பாங்காகத் திகழும். இதனாலும் தேன்பாங்கு தெம்மாங்கு ஆயிற்று என்றும் கூறுவர்.