தங்கரத்தினமே
- விவரங்கள்
- தமிழர்கள்
- தாய்ப் பிரிவு: இசை
- தெம்மாங்கு பாடல்கள்
காடுவெட்டிக் கல்பொறுக்கிக்
கம்புசோளம் தினைவிதைத்துக்
காலைமாலை காட்டைக் காக்கத் -தங்கரத்தினமே
கண்விழித்திருந்தாளாம் -பொன்னுரத்தினமே. 1
அள்ளiஅள்ளi விதைத்த
அழமுத்தினை சாகாதடி
மொள்ளமொள்ள விதைத்த -தங்கரத்தினமே
மொந்தத்தினை சாகாதடி -பொன்னுரத்தினமே. 2
கறுப்பானை ஓடிவரக்
கள்ளரெல்லாம் தினைவிதைக்க
வெள்ளானை ஓடிவரத் -தங்கரத்தினமே
வேடரெல்லாம் தினைவிதைக்கப் -பொன்னுரத்தினமே. 3
சின்னச்சின்ன வெற்றிலையாம்
சேட்டுக்கடை மிட்டாயாம்
மார்க்கட்டு மல்லிகைப்பூ -தங்கரத்தினமே
(உன்) கொண்டையிலே மணக்குதடி -பொன்னுரத்தினமே. 4
சாலையிலே ரெண்டுமரம்
சர்க்காரு வச்சமரம்
ஓங்கி வளர்ந்தமரம் -தங்கரத்தினமே
உனக்கேத்த தூக்குமரம் -பொன்னுரத்தினமே. 5
எல்லோரும் கட்டும்வேட்டி
ஏழைக்கேற்ற மல்லுவேட்டி
சந்தனங் கட்டும்வேட்டி -தங்கரத்தினமே
சரியான சரிகைவேட்டி -பொன்னுரத்தினமே. 6
ஒத்தத்தலை நாகன்வந்து
ஒட்டாக்காட்டை அழிச்சிடுத்தே
ஆராரைக் காவல்வைப்போம் -தங்கரத்தினமே
அழகான தினைப்பயிர்க்குப் -பொன்னுரத்தினமே. 7
தெய்வானையைக் காவல்வைத்தால்
தீஞ்சிடுமே தினைப்பயிருவள்ளiயைக்
காவல்வைத்தால் -தங்கரத்தினமே
வனத்துக்கொரு சேதமில்லை -பொன்னுரத்தினமே. 8
மூத்தண்ணன் பொண்சாதியை
மூணுமாசம் காவல்வைப்போம்
ஏழையண்ணன் பொண்சாதியை -தங்கரத்தினமே
ஏழுமாசம் காவல்வைப்போம் -பொன்னுரத்தினமே. 9
சாய்ந்திருந்து கிளிவிரட்டச்
சாய்மானமும் பொன்னாலே
உட்கார்ந்து கிளிவிரட்டத் -தங்கரத்தினமே
முக்காலியும் பொன்னாலே -பொன்னுரத்தினமே. 10