இன்றைக்கு 'தாண்டியா' ஆட்டம் என அழைக்கப்படும் நடனவகைத் தான் தமிழில் கோலாட்டம் என்று அழைக்கப்பட்டது. இரு கைகளிலும் கழிகளை வைத்துக் கொண்டு தாளத்திற்கேற்றாற்போல் கழிகளை மோதி சத்தம் எழுப்பியவாறே ஜோடியாக நடனமாடப்படும். கோலாட்ட கழிகள் சுமார் 15 அங்குல நீளத்தில் நுனி சிறுத்தும் அடி பெருத்தும் இருக்கும்.