மிக நெருங்கியவர்களையோ உடைமைகளையோ இழக்கும் போது ஏற்படும் சோகத்தில் பாடப்படும் பாடல்களை இழப்புப் பாடல்கள் எனலாம்.சாவை ‘இழவு’ எனும் சொல்லால் குறிப்பது உண்டல்லவா! மகளிர் பாடும் ஒப்பாரிப் பாடல்களும் உண்டு; கலைஞர் பாடும் ஒப்பாரிப் பாடல்களும் உண்டு. இறந்து போனவரின் உறவினர்களாகிய பெண்கள் ஒப்பாரி வைத்துப் பாடுவது நாம் அறிவதே. சில இடங்களில் சாவு நிகழ்ச்சியில் கூலி வாங்கிக் கொண்டு ஒப்பாரி பாடுவதற்கென்று கலைஞர்களே உள்ளனர் என்பது நாம் அறியத்தக்க செய்தி.