மேன்மக்கள்
- விவரங்கள்
- தமிழர்கள்
- தாய்ப் பிரிவு: பதினென்கீழ்கணக்கு நூல்கள்
- நாலடியார்
151. அங்கண் விசும்பின் அகனிலாப் பாக்கும்
திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள்
மறுவாற்றும், சான்றோரஃ தாற்றார் தெருமந்து
தேய்வர் ஒருமா சுறின்.
152. இசையும் எனினும் இசையா தெனினும்
வசைதீர எண்ணுவர் சான்றோர் - விசையின்
நாமா உளங்கிழித்த அம்பினின் தீதோ,
அமாப் பிழைப்பெய்த கோல்?
153. நரம்பெழுந்து நல்கூர்ந்தா ராயினும் சான்றோர்
குரம்பெழுந்து குற்றங்கொ ண்டேறார் - உரங்கவறா
உள்ளமெனும் நானால் கட்டி உளவரையால்
செய்வர் செயற்பா லவை.
154. செல்வுழிக் கண்ணொருநாள் காணினும் சான்றவர்
தொல்வழிக் கேண்மையிற் றோன்றப் புந்தியாப்பர்
நல்வரை நாட. சிலநாள் அடிப்படின்
கல்வரையும் உண்டாம் நெறி.
155. புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி
கல்லா ஒருவன் உரைப்பவும் கண்ணோடி
நல்லார் வருந்தியும் கேட்பரே, மற்றவன்
பல்லாருள் நாணல் பாந்து.
156. கடித்துக் கரும்பினைக் கண்தகர நுறி
இடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தே யாகும்
வடுப்பட வைதிறந்தக் கண்ணும் குடிப்பிறந்தார்
கூறார்தம் வாயிற் சிதைந்து.
157. கள்ளார், கள் ளுண்ணார், கடிவ கடிந்தொணஇ,
எள்ளிப் பிறரை இகழ்ந்துரையார், - தள்ளியும்
வாயில்பொய் கூறார், வடுவறு காட்சியார்
சாயிற் பாவ திலர்.
158. பிறர்மறை யின்கண் செவிடாய்த் திறனறிந்து
ஏதிலா ற்கண், குருடனாய்த் தீய
புறங்கூற்றின் மூகையாய் நிற்பானேல், யாதும்
அறங்கூற வேண்டா அவற்கு.
159. பன்னாளும் சென்றக்கால் பண்பிலார் தம்முழை
என்னானும் வேண்டுப என்றிகழ்ப - என்னானும்
வேண்டினும் நன்றுமற் றென்று விமுமியோர்
காண்டொறும் செய்வர் சிறப்பு.
160. உடையார் இவரென் றொருதலையாப் பற்றிக்
கடையாயார் பின்சென்று வாழ்வா - உடைய
பிலந்தலைப் பட்டது போலாதே, நல்ல
குலந்தலைப் பட்ட விடத்து.