அவையறிதல்
- விவரங்கள்
- தமிழர்கள்
- தாய்ப் பிரிவு: பதினென்கீழ்கணக்கு நூல்கள்
- நாலடியார்
311. மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ்வழி விட்டாங்கோர்
அஞ்ஞானந் தந்திட் டதுவாங் கறத்துழாய்க்
கைஞ்ஞானங் கொண்டொழுகுங் காரறி வாளர்முன்
சொன்ஞானஞ் சோர விடல்.
312. நாப்பாடம் சொல்லி நயமுணர்வார் போல்செறிக்கும்
தீப்புலவர் சேரார் செறிவுடையார் - தீப்புலவன்
கோட்டியுள் குன்றக் குடிப்பழிக்கும் அல்லர்க்கால்
தோட்புடைக் கொள்ளா எழும்.
313. சொற்றாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் காமுறுவர்,
கற்றாற்றல் வன்மையும் தாம்தேறார் - கற்ற
செலவுரைக்கும ஆறறியார் தோற்ப தறியார்
பலவுரைக்கும் மாந்தர் பலர்.
314. கற்றதுஉ மின்றிக் கணக்காயர் பாடத்தால்
பெற்றதாம் பேதையோர் சூத்திரம் - மற்றதனை
நல்லா டைப்புக்கு நாணாது சொல்லித்தன்
புல்லறிவு காட்டி விடும்.
315. வென்றிப் பொருட்டால் விலங்கொத்து மெய்கொள்ளார்
கன்றிக் கறுத்தெழுந்து காய்வாரோ - டொன்றி
உரைவித் தகமெழுவார் காண்பவே, கையுள்
சுரைவித்துப் போலுந்தம் பல்.
316. பாடமே ஓதிப் பயன்தொதல் தேற்றாத
முடர் முனிதக்க சொல்லுங்கால் - கேடருஞ்சீர்ச்
சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே, மற்றவரை
ஈன்றாட் கிறப்பப் பாந்து.
317. பெறுவது கொள்பவர் தோள்போல் நெறிப்பட்டுக்
கற்பவர்க் கெல்லாம் எளியநுல் - மற்றம்
முறிபுரை மேனியர் உள்ளம்போன் றியார்க்கும்
அறிதற் காய பொருள்.
318. புத்தகமே சாலத் தொகுத்தும் பொருடொயார்
உய்த்தக மெல்லா நிறைப்பினும் - மற்றவற்றைப்
போற்றும் புலவரும் வேறே பொருடொந்து
தேற்றும் புலவரும் வேறு.
319. பொழிப்பகல நுட்பநு லெச்சமிந் நான்கின்
கொழித்தகலங் காட்டாதார் சொற்கள் - பழிப்பில்
நிரையாமா சேர்க்கும் நெடுங்குன்ற நாட
உரையாமோ நுலிற்கு நன்கு?
320. இற்பிறப் பில்லா ரெனைத்துநுல் கற்பினும்
சொற்பிறரைக் காக்குங் கருவியரோ? - இற்பிறந்த
நல்லறி வாளர் நவின்றநுல் தேற்றாதார்
புல்லறிவு தாமறிவ தில்.