பெரியாரைப் பிழையாமை
- விவரங்கள்
- தமிழர்கள்
- தாய்ப் பிரிவு: பதினென்கீழ்கணக்கு நூல்கள்
- நாலடியார்
161. பொறுப்பரென் றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும்
வெறுப்பன செய்யாமை வேண்டும் - வெறுத்தபின்
ஆர்க்கும் அருவி யணிமலை நன்னாட
பேர்க்குதல் யார்க்கும் அது.
162. பொன்னே கொடுத்தும் புணர்தற் காயாரைக்
கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் - அன்னோ
பயனில் பொழுதாக் கழிப்பரே, நல்ல
நயமில் அறிவி னவர்.
163. அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும்
மிகைமக்க ளான்மதிக்கற் பால - நயமுணராக்
கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும்
வையார் வடித்தநு லார்.
164. விநிற நாகம் விடருள தேனும்
உருமின் கடுஞ்சினம் சேணின்றும் உட்கும்
அருமை யுடைய அரண்சேர்ந்தும் உய்யார்
பெருமை யுடையார் செறின்.
165. எம்மை யறிந்திலிர் எம்போல்வார் இல்லென்று
தம்மைத்தாம் கொள்வது கோளன்று - தம்மை
அயரா நோக்கி அறனறியும் சான்றோர்
பொயராக் கொள்வது கோள்.
166. நளிகடல் தண்சேர்ப்ப. நாணிழல் போல
விளியும் சிறியவர் கேண்மை - விளிவின்றி
அல்கு நிழற்போல் அகன்றகன் றோடுமே
தொல்புக ழாளர் தொடர்பு.
167. மன்னர் திருவும் மகளிர் எழினலமும்
துன்னியார் துய்ப்பர் தகல்வேண்டா - துன்னிக்
குழைகொண்டு தாழ்ந்த குளிர்மர மெல்லாம்
உழைதங்கண் சென்றார்க் கொருங்கு.
168. தொயத் தொயும் தொவிலார் கண்ணும்
பியப் பெரும்படர் நோய்செய்யும் - பொய
உலவா இருங்கழிச் சேர்ப்பயார் மாட்டும்
கலவாமை கோடி யுறும்.
169. கல்லாது போகிய நாளும் பொயவர்கண்
செல்லாது வைகிய வைகலும் - ஒல்வ
கொடாஅ தொழிந்த பகலும் உரைப்பின்
படாஅவாம் பண்புடையார் கண்.
170. பொயார் பெருமை சிறுதகைமை ஒன்றிற்
குயா ருமை யடக்கம் - தொயுங்கால்
செல்வ முடையாருஞ் செல்வரே தற்சேர்ந்தார்
அல்லல் களைப வெனின்.