231. செறிப்பில் பழங்கூரை சேறணை யாக
இறைத்துநீர் ஏற்றும் கிடப்பர், - கறைக்குன்றம்
பொங்கருவி தாழும் புனல்வரை நன்னாட
தங்கரும் முற்றுந் துணை.

232. சீ஡஢யார் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய்
மா஡஢போல் மாண்ட பயத்ததாம் - மா஡஢
வறந்தக்கால் போலுமே வாலருவி நாட
சிறந்தக்கால் சீ஡஢லார் நட்பு.

233. நுண்ணுணர்வி னாரொடு கூடி நுகர்வுடைமை
விண்ணுலகே யொக்கும் விழைவிற்றால் - நுண்ணு஡ல்
உணர்வில ராகிய ஊதியம் இல்லார்ப்
புணர்தல் நிரயத்துள் ஒன்று.

234. பெருகுவது போலத் தோன்றிவைத் தீப்போல்
ஒருபொழுதுஞ் செல்லாதே நந்தும் - அருகெல்லாம்
சந்தன நீள்சோலைச் சாரன் மலைநாட
பந்தமி லாளர் தொடர்பு.

235. செய்யாத செய்துநாம் என்றலும் செய்வதனைச்
செய்யாது தாழ்த்துக்கொண் டோ ட்டலும் - மெய்யாக
இன்புறு஡உம் பெற்றி இகழ்ந்தார்க்கும் அந்நிலையே
துன்புறு஡உம் பெற்றி தரும்.

236. ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும்
வி஡஢நீர்க் குவளையை ஆம்பலொக் கல்லா
பெருநீரார் கேண்மை கொளினுநீர் அல்லார்
கருமங்கள் வேறு படும்.

237. முற்றற் சிறுமந்தி முற்பட்ட தந்தையை
நெற்றுக்கண் டன்ன விரலான் ஞெமிர்த்திட்டுக்
குற்றிப் பறிக்கும் மலைநாட இன்னாதே
ஒற்றுமை கொள்ளாதார் நட்பு.

238. முட்டுற்ற போழ்தின் முடுகியென் னாருயிரை
நட்டா னொருவன்கை நீட்டேனேல் - நட்டான்
கடிமனை கட்டழித்தான் செல்வுழிச் செல்க
நெடுமொழி வையம் நக.

239. ஆன்படு நெய்பெய் கலனுள் அதுகளைந்து
வேம்படு நெய்பெய் தனைத்தரோ - தேம்படு
நல்வரை நாட நயமுணர்வார் நண்பொ஡ணஇப்
புல்லறிவி னாரொடு நட்பு.

240. உருவிற் கமைந்தான்கண் ஊராண்மை யின்மை
பருகற் கமைந்தபால் நீரளா யற்றே
தொ஢வுடையார் தீயினத்தா ராகுதல் நாகம்
வி஡஢பெடையோ டாடிவிட் டற்று.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework