221. நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும்.
நெல்லுக் குமியுண்டு, நீர்க்கு நுரைஉண்டு
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.

222. செறுத்தோ றுடைப்பினும் செம்புனலோ டுடார்,
மறுத்தும் சிறைசெய்வர் நீர்நசைஇ வாழ்நர்
வெறுப்ப வெறுப்பச் செயினும் பொறுப்பரே
தாம்வேண்டிக் கொண்டார் தொடர்பு.

223. இறப்பவே தீய செயினுந்தந் நட்டார்
பொறுத்தல் தகுவதொன் றன்றோ - நிறக்கோங்கு
உருவவண் டார்க்கு முயர்வரை நாட
ஒருவர் பொறையிருவர் நட்பு.

224. மடிதிரை தந்திட்ட வான்கதிர் முத்தம்
கடுவசை நாவாய் கரையலைக்குஞ் சேர்ப்ப
விடுதற் கா஢யா ஡஢யல்பிலரேல் நெஞ்சம்
சுடுதற்கு மூட்டிய தீ.

225. இன்னா செயினும் விடற்பால ரல்லாரைப்
பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும் - பொன்னொடு
நல்லிற் சிதைத்ததீ நாடோ றும் நாடித்தம்
இல்லத்தில் ஆக்குத லால்.

226. இன்னா செயினும் விடுதற் கா஢யாரைத்
துன்னாத் துறத்தல் தகுவதோ - துன்னருஞ்சீர்
விண்குத்து நீள்வரை வெற்ப. களைபவோ
கண்குத்திற் றென்றுதங் கை.

227. இலங்குநீர்த் தண்சேர்ப்ப. இன்னா செயினும்
கலந்து பழிகாணார் சான்றோர் - கலந்தபின்
தீமை எடுத்துரைக்கும் திண்ணறி வில்லாதார்
தாமும் அவா஢ற் கடை.

228. ஏதிலார் செய்த திறப்பவே தீதெனினும்
நோதக்க தென்னுண்டாம் நோக்குங்கால் - காதல்
கழுமியார் செய்த கறங்கருவி நாட
விழுமிதாம் நெஞ்சத்துள் நின்று.

229. தமரென்று தாங்கொள்ளப் பட்டவர் தம்மைத்
தமரன்மை தாமறிந்தா ராயின், - அவரைத்
தமா஢னும் நன்கு மதித்துத் தமரன்மை
தம்முள் அடக்கிக் கொளல்.

230. குற்றமும் ஏனைக் குணமும் ஒருவனை
நட்டபின் நாடித் தி஡஢வேனேல் - நட்டான்
மறைகாவா விட்டவன் செல்வுழிச் செல்க
அறைகடல்சூழ் வையம் நக.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework