மாவும் வண்தளிர் ஈன்றன குயிலும்இன்தீம் பல்குரல் கொம்பர் நுவலும்
மூதிலை ஒழித்த போதுஅவிழ் பெருஞ்சினை
வல்லோன் தைவரும் வள்ளுயிர்ப் பாலை
நரம்புஆர்த் தன்ன வண்டினம் முரலும் 5
துணிகயம் துன்னிய தூமணல் எக்கர்த்
தாதுஉகு தண்பொழில் அல்கிக் காதலர்
செழுமனை மறக்கும் செவ்விவேனில்
தானே வந்தன்று ஆயின் ஆனாது
இலங்குவளை நெகிழ்ந்த எவ்வம் காட்டிப் 10
புலந்தனம் வருகம் சென்மோ- தோழி!
'யாமே எமியம் ஆக நீயே
பொன்நயந்து அருள்இலை யாகி
இன்னை ஆகுதல் ஒத்தன்றால்' எனவே

Add a comment

ஆள்வினைப் பிரிதலும் உண்டோ ? பிரியினும்கேளினி- வாழிய நெஞ்சே!- நாளும்
கனவுக்கழிந் தனைய வாகி நனவின்
நாளது செலவும் மூப்பினது வரவும்
அரிதுபெறு சிறப்பின் காமத்து இயற்கையும் 5
இந்நிலை அறியாய் ஆயினும் செந்நிலை
அமைஆடு அங்கழை தீண்டிக் கல்லென
ஞெமைஇலை உதிர்த்த எரிவாய்க் கோடை
நெடுவெண் களரி நீறுமுகந்து சுழலக்
கடுவெயில் திருகிய வேனில்வெங் காட்டு 10
உயங்குநடை மடப்பிணை தழீஇய வயங்குபொறி
அறுகோட்டு எழிற்கலை அறுகயம் நோக்கித்
தெண்நீர் வேட்ட சிறுமையின் தழைமறந்து
உண்நீர் இன்மையின் ஒல்குவன தளர
மரம்நிழல் அற்ற இயவின் சுரனிறந்து 15
உள்ளுவை அல்லையோ மற்றே- உள்ளிய
விருந்து ஒழிவு அறியாப் பெருந்தண் பந்தர்
வருந்தி வருநர் ஓம்பித் தண்ணெனத்
தாதுதுகள் உதிர்த்த தாழைஅம் கூந்தல்
வீழ்இதழ் அலரி மெல்லகம் சேர்த்தி 20
மகிழ்அணி முறுவல் மாண்ட சேக்கை
நம்மொடு நன்மொழி நவிலும்
பொம்மல் ஓதிப் புனையிழை குணனே?

Add a comment

உய்தகை இன்றால்- தோழி- பைபயக்கோங்கும் கொய்குழை உற்றன குயிலும்
தேம்பாய் மாஅத்து ஓங்குசினை விளிக்கும்
நாடுஆர் காவிரிக் கோடுதோய் மலிர்நிறைக்
கழைஅழி நீத்தம் சாஅய வழிநாள் 5
மழைகழிந் தன்ன மாக்கால் மயங்குஅறல்
பதவுமேயல் அருந்து துளங்குஇமில் நல்லேறு
மதவுடை நாகொடு அசைவீடப் பருகி
குறுங்காற் காஞ்சிக் கோதை மெல்லிணர்ப்
பொன்தகை நுண்தாது உறைப்பத் தொக்குஉடன் 10
குப்பை வார்மணல் எக்கர்த் துஞ்சும்
யாணர் வேனில்மன் இது-
மாண்நலம் நுகரும் துணையுடை யோர்க்கே

Add a comment

பன்னாள் எவ்வம் தீரப் பகல்வந்துபுன்னைஅம் பொதும்பின் இன்னிழற் கழிப்பி
மாலை மால்கொள நோக்கிப் பண்ஆய்ந்து
வலவன் வண்தேர் இயக்க நீயும்
செலவுவிருப் புறுதல் ஒழிகதில் அம்ம- 5
'செல்லா நல்லிசைப் பொலம்பூண் திரையன்
பல்பூங் கானற் பவத்திரி அனவிவள்
நல்லெழில் இளநலம் தொலைய ஒல்லெனக்
கழியே ஓதம் மல்கின்று வழியே
வள்ளெயிற்று அரவொடு வயமீன் கொட்கும் 10
சென்றோர் மன்ற மான்றன்று பொழுது' என
நின்திறத்து அவலம் வீட இன்றிவண்
சேப்பின் எவனோ- பூக்கேழ் புலம்ப-
பசுமீன் நொடுத்த வெந்நெல் மாஅத்
தயிர்மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே 15
வடவர் தந்த வான்கேழ் வட்டம்
குடபுல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய
வண்டிமிர் நறுஞ்சாந்து அணிகுவம்- திண்திமில்
எல்லுத்தொழின் மடுத்த வல்வினைப் பரதவர்
கூர்உளிக் கடுவிசை மாட்டலின் பாய்புடன் 20
கோட்சுறாக் கிழித்த கொடுமுடி நெடுவலை
தண்கடல் அசைவளி எறிதொறும் வினைவிட்டு
முன்றில் தாழைத் தூங்கும்
தெண்கடற் பரப்பினெம் உறைவின் ஊர்க்கே

Add a comment

ஒறுப்ப ஓவலை நிறுப்ப நில்லலைபுணர்ந்தோர் போலப் போற்றுமதி நினக்குயான்
கிளைஞன் அல்லனோ- நெஞ்சே- தெனாஅது
வெல்போர்க் கவுரியர் நல்நாட்டு உள்ளதை
மண்கொள் புற்றத்து அருப்புஉழை திறப்பின் 5
ஆகொள் மூதூர்க் கள்வர் பெருமகன்
ஏவல் இளையர் தலைவன் மேவார்
அருங்குறும்பு எறிந்த ஆற்றலொடு பருந்துபடப்
பல்செருக் கடந்த செல்லுறழ் தடக்கை
கெடாஅ நல்இசைத் தென்னன் தொடாஅ 10
நீர்இழி மருங்கில் கல்லளைக் கரந்தஅவ்
வரையர மகளிரின் அரியள்
அவ்வரி அல்குல் அணையாக் காலே!

Add a comment
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework