வளமழை பொழிந்த வால்நிறக் களரிஉளர்தரு தண்வளி உறுதொறும் நிலவெனத்
தொகுமுகை விரிந்த முடககாற் பிடவின்
வைஏர் வால்எயிற்று ஒள்நுதல் மகளிர்
கைமாண் தோணி கடுப்பப் பையென 5
மயிலினம் பயிலும் மரம்பயில் கானம்
எல்லிடை உறாஅ அளவை வல்லே
கழல்ஒளி நாவின் தெண்மணி கறங்க
நிழல்ஒலிப் பன்ன நிமிர்பரிப் புரவி
வயக்குஉறு கொடிஞ்சி பொலிய வள்பு ஆய்ந்ு 10
இயக்குமதி- வாழியோ கையுடை வலவ!
பயப்புறு படர்அட வருந்திய
நயப்புஇன் காதலி நகைமுகம் பெறவே

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework