இருவிசும்பு அதிர முழங்கி அரநலிந்து,இகுபெயல் அழிதுளி தலைஇ, வானம்
பருவஞ் செய்த பானாட் கங்குல்,
ஆடுதலைத் துருவின் தோடு ஏமார்ப்ப,
கடைகோல் சிறுதீ அடைய மாட்டித், 5
திண்கால் உறியன், பானையன், அதளன்,
நுண்பல் துவலை ஒருதிறம் நனைப்பத்,
தண்டுகால் ஊன்றிய தனிநிலை இடையன்,
மடிவிடு வீளை, கடிதுசென்று இசைப்பத்,
தெறிமறி பார்க்கும் குறுநரி வெரீஇ 10
முள்ளுடைக் குறுந்தூறு இரியப் போகும்
தண்ணறும் புறவி னதுவே - நறுமலர்
முல்லை சான்ற கற்பின்
மெல்லியற் குறுமகள் உறைவின் ஊரே

Add a comment

ஓங்குநிலைத் தாழி மல்கச் சார்த்திக்குடைஅடை நீரின் மடையினள் எடுத்த
பந்தர் வயலைப், பந்து எறிந்து ஆடி,
இளமைத் தகைமையை வளமனைக் கிழத்தி!
'பிதிர்வை நீரை வெண்நீறு ஆக;' என, 5
யாம்தற் கழறுங் காலைத், தான்தன்
மழலை இன்சொல், கழறல் இன்றி,
இன்உயிர் கலப்பக் கூறி, நன்னுதல்
பெருஞ்சோற்று இல்லத்து ஒருங்குஇவண் இராஅள்,
ஏதி லாளன் காதல் நம்பித், 10
திரளரை இருப்பைத் தொள்ளை வான்பூக்
குருளை எண்கின் இருங்கிளை கவரும்
வெம்மலை அருஞ்சுரம், நம்இவண் ஒழிய,
இருநிலன் உயிர்க்கும் இன்னாக் கானம்,
நெருநைப் போகிய பெருமடத் தகுவி 15
ஐதுஅகல் அல்குல் தழையணிக் கூட்டும்
கூழை நொச்சிக் கீழது, என்மகள்
செம்புடைச் சிறுவிரல் வரித்த
வண்டலும் காண்டீரோ, கண்உடை யீரே?

Add a comment

தண்கதிர் மண்டிலம் அவிர்அறச் சாஅய்ப்பகலழி தோற்றம் போலப், பையென
நுதல்ஒளி கரப்பவும், ஆள்வினை தருமார்,
தவலில் உள்ளமொடு எஃகுதுணை ஆகக்,
கடையல குரலம் வாள்வரி உழுவை 5
பேழ்வாய்ப் பிணவின் விழுப்பசி நோனாது
இரும்பனஞ் செறும்பின் அன்ன பரூஉமயிர்ச்,
சிறுகண், பன்றி வருதிறம் பார்க்கும்
அத்தம்ஆர் அழுவத்து ஆங்கண் நனந்தலை,
பொத்துடை மரத்த புகர்படு நீழல், 10
ஆறுசெல் வம்பலர் அசையுநர் இருக்கும்,
ஈரம்இல், வெஞ்சுரம் இறந்தோர் நம்வயின்
வாராஅளவை- ஆயிழை!- கூர்வாய்
அழல்அகைந் தன்ன காமர் துதைமயிர்
மனைஉறை கோழி மறனுடைச் சேவல் 15
போர்எரி எருத்தம் போலக் கஞலிய
பொங்கழல் முருக்கின் எண்குரல் மாந்தி,
சிதர்சிதர்ந்து உகுத்த செவ்வி வேனில்
வந்தன்று அம்ம, தானே;
வாரார் தோழி! நம் காத லோரே

Add a comment

நீளிரும் பொய்கை இரைவேட்டு எழுந்தவாளை வெண்போத்து உணீஇய, நாரைதன்
அடிஅறி வுறுதல் அஞ்சிப், பைப்பயக்
கடிஇலம் புகூஉம் கள்வன் போலச்,
சாஅய் ஒதுங்குந் துறைகேழ் ஊரனொடு 5
ஆவதுஆக! இனிநாண் உண்டோ ?
வருகதில் அம்ம, எம் சேரி சேர!
அரிவேய் உண்கண் அவன்பெண்டிர் காணத்,
தாரும் தானையும் பற்றி, ஆரியர்
பிடிபயின்று தரூஉம் பெருங்களிறு போலத் 10
தோள்கந் தாகக் கூந்தலின் பிணித்து, அவன்
மார்புகடி கொள்ளேன் ஆயின், ஆர்வுற்று
இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள்போல்,
பரந்து வெளிப்படாது ஆகி,
வருந்துக தில்ல, யாய் ஓம்பிய நலனே!

Add a comment

பொன் அடர்ந் தன்ன ஒள்ளிணர்ச் செருந்திப்பன்மலர் வேய்ந்த நலம்பெறு கோதையள்,
திணிமணல் அடைகரை அலவன் ஆட்டி
அசையினள் இருந்த ஆய்தொடிக் குறுமகள்,
நலம்சால் விழுப்பொருள் கலம்நிறை கொடுப்பினும், 5
பெறல்அருங் குரையள் ஆயின், அறம்தெரிந்து,
நாம்உறை தேஎம் மரூஉப்பெயர்ந்து, அவனொடு
இருநீர்ச் சேர்ப்பின் உப்புடன் உழுதும்,
பெருநீர்க் குட்டம் புணையொடு புக்கும்,
படுத்தனம் பணிந்தனம், அடுத்தனம், இருப்பின், 10
தருகுவன் கொல்லோ தானே - விரிதிரைக்
கண்திரள் முத்தம் கொண்டு ஞாங்கர்த்
தேனிமிர் அகன்கரைப் பகுக்கும்
கானலம் பெருந்துறைப் பரதவன் எமக்கே?

Add a comment
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework