நட்டோ ர் இன்மையும் கேளிர் துன்பமும்,ஒட்டாது உறையுநர் பெருக்கமும், காணூஉ
ஒருபதி வாழ்தல் ஆற்றுப தில்ல
பொன்னவிர் சுணங்கொடு செறிய வீங்கிய
மென்முலை முற்றம் கடவா தோர்' என, 5
நள்ளென் கங்குலும் பகலும் இயைந்து இயைந்து
உள்ளம் பொத்திய உரம்சுடு கூர்எரி
ஆள்வினை மாரியின் அவியா, நாளும்
கடறுஉழந்து இவணம் ஆகப், படர்உழந்து
யாங்குஆ குவள்கொல் தானே - தீம்தொடை 10
விளரி நரம்பின் நயவரு சீறுயாழ்
மலிபூம் பொங்கர் மகிழ்குரற் குயிலொடு
புணர்துயில் எடுப்பும் புனல்தெளி காலையும்,
நம்முடை மதுகையள் ஆகி, அணிநடை
அன்னமாண் பெடையின் மென்மெல இயலிக், 15
கையறு நெஞ்சினள், அடைதரும்
மைஈர் ஓதி மாஅ யோளே?

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework