கேள்கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும்கேள்அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்,
ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல்சிறந்து,
ஆரங் கண்ணி அடுபோர்ச் சோழர்
அறம்கெழு நல்அவை உறந்தை அன்ன 5
பெறல்அரு நல்கலம் எய்தி நாடும்
செயல்அருஞ் செய்வினை முற்றினம் ஆயின்
அரண்பல கடந்த, முரண்கொள் தானை,
வாடா வேம்பின், வழுதி கூடல்
நாள்அங் காடி நாறும் நறுநுதல் 10
நீள்இருங் கூந்தன் மாஅ யோளொடு
வரைகுயின் றன்ன வான்தோய் நெடுநகர்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
நிவந்த பள்ளி, நெடுஞ்சுடர் விளக்கத்து,
நலம்கேழ் ஆகம் பூண்வடுப் பொறிப்ப, 15
முயங்குகம் சென்மோ - நெஞ்சே! வரிநுதல்
வயம்திகழ்பு இழிதரும் வாய்புகு கடாஅத்து ,
மீளி மொய்ம்பொடு நிலன்எறியாக் குறுகி,
ஆள்கோள் பிழையா, அஞ்சுவரு தடக்கைக்,
கடும்பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை 20
திருமா வியனகர்க் கருவூர் முன்துறைத்
தெண்நீர் உயர்கரைக் குவைஇய
தன்ஆன் பொருநை மணலினும் பலவே!

Add a comment

தேம்படு சிமயப் பாங்கர்ப் பம்பியகுவைஇலை முசுண்டை வெண்பூக் குழைய,
வான்எனப் பூத்த பானாட் கங்குல்,
மறித்துரூஉத் தொகுத்த பறிப்புற இடையன்
தண்கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ, 5
வண்டுபடத் தொடுத்த நீர்வார் கண்ணியன்,
ஐதுபடு கொள்ளி அங்கை காயக்,
குறுநரி உளம்பும் கூர்இருள் நெடுவிளி
சிறுகட் பன்றிப் பெருநிரை கடிய,
முதைப்புனம் காவலர் நினைத்திருந்து ஊதும் 10
கருங்கோட்டு ஓசை யொடு ஒருங்குவந்து இசைக்கும்
வன்புலக் காட்டுநாட் டதுவே - அன்புகலந்து
ஆர்வம் சிறந்த சாயல்,
இரும்பல் கூந்தல், திருந்திழை ஊரே!

Add a comment

மலைமிசைக் குலஇய உருகெழு திருவில்பணைமுழங்கு எழிலி பௌவம் வாங்கித்
தாழ்பெயற் பெருநீர், வலன்ஏர்பு வளைஇ,
மாதிரம் புதைப்பப் பொழிதலின், காண்வர
இருநிலம் கவினிய ஏமுறு காலை- 5
நெருப்பின் அன்ன சிறுகட் பன்றி,
அயிர்க்கட் படாஅர்த் துஞ்சுபுறம் புதைய,
நறுவீ முல்லை நாண்மலர் உதிரும்
புறவு அடைந் திருந்த அருமுனை இயவிற்
சீறூ ரோளே, ஒண்ணுதல்! - யாமே, 10
எரிபுரை பன்மலர் பிறழ வாங்கி,
அரிஞ்ர் யாத்த அலங்குதலைப் பெருஞ்சூடு
கள்ஆர் வினைஞர் களந்தொறும் மறுகும்
தண்ணடை தழீஇய கொடிநுடங்கு ஆர்எயில்
அருந்திறை கொடுப்பவும் கொள்ளான், சினம்சிறந்து, 15
வினைவயின் பெயர்க்குந் தானைப்,
புனைதார், வேந்தன் பாசறை யேமே!

Add a comment

வலம்சுரி மராஅத்துச் சுரம்கமழ் புதுவீச்சுரிஆர் உளைத்தலை பொலியச் சூடி,
கறைஅடி மடப்பிடி கானத்து அலறக்,
களிற்றுக் கன்று ஒழித்த உவகையர், கலிசிறந்து,
கருங்கால் மராஅத்து கொழுங்கொம்பு பிளந்து, 5
பெரும்பொழி வெண்நார் அழுந்துபடப் பூட்டி,
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்,
நறவுநொடை நல்இல் பதவுமுதற் பிணிக்கும்
கல்லா இளையர் பெருமகன் புல்லி
வியன்தலை நல்நாட்டு வேங்கடம் கழியினும் 10
சேயர் என்னாது, அன்புமிகக் கடைஇ,
எய்தவந் தனவால் தாமே - நெய்தல்
கூம்புவிடு நிகர்மலர் அன்ன
ஏந்துஎழில் மழைக்கண்எம் காதலி குணனே!

Add a comment

நன்னுதல் பசப்பவும் பெருந்தோள் நெகிழவும்உண்ணா உயக்கமொடு உயிர்செலச் சாஅய்
இன்னம் ஆகவும், இங்குநத் துறந்தோர்
அறவர் அல்லர் அவர்' எனப் பலபுலந்து
ஆழல் - வாழி, தோழி!- 'சாரல், 5
ஈன்றுநாள் உலந்த மென்னடை மடப்பிடி,
கன்றுபசி களைஇய, பைங்கண் யானை
முற்றா மூங்கில் முளைதருபு, ஊட்டும்
வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை;
நல்நாள் பூத்த நாகுஇள வேங்கை 10
நறுவீ ஆடிய பொறிவரி மஞ்ஞை
நனைப்பசுங் குருந்தின் நாறுசினை இருந்து,
துணைப்பயிர்ந்து அகவும் துணைதரு தண்கார்,
வருதும், யாம்' எனத் தேற்றிய
பருவம் காண் அது; பாயின்றால் மழையே

Add a comment
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework