பைப்பயப் பசந்தன்று நுதலும்; சாஅய்ஐதுஆ கின்று, என் தளிர்புரை மேனியும்,
பலரும் அறியத் திகழ்தரும் அவலமும்;
உயிர்கொடு கழியின் அல்லதை; நினையின்
எவனோ?- வாழி, தோழி!- பொரிகாற் 5
பொகுட்டுஅரை இருப்பைக் குவிகுலைக் கழன்ற
ஆலிஒப்பின் தூம்புடைத் திரள்வீ,
ஆறுசெல் வம்பலர் நீள்இடை அழுங்க,
ஈனல் எண்கின் இருங்கிளை கவரும்
சுரம்பல கடந்தோர்க்கு இரங்குப என்னார், 10
கௌவை மேவலர் ஆகி, 'இவ் ஊர்
நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ
புரைய அல்ல, என் மகட்கு' எனப் பரைஇ,
நம்உணர்ந்து ஆறிய கொள்கை
அன்னை முன்னர், யாம்என், இதற்படலே?

Add a comment

நறவுண் மண்டை நுடக்கலின் இறவுக்கலித்துப்பூட்டுஅறு வில்லிற் கூட்டுமுதல் தெறிக்கும்
பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின்
அரவாய் அன்ன அம்முள் நெடுங்கொடி
அருவி ஆம்பல் அகல்அடை துடக்கி, 5
அசைவரல் வாடை தூக்கலின், ஊதுஉலை
விசைவாங்கு தோலின், வீஞ்குபு ஞெகிழும்
கழனிஅம் படப்பைக் காஞ்சி ஊர!
'ஒண்தொடி ஆயத் துள்ளும்நீ நயந்து
கொண்டனை' என்ப 'ஓர் குறுமகள்'; அதுவே- 10
செம்பொற் சிலம்பின், செறிந்த குறங்கின்
அம்கலுழ் மாமை, அஃதை தந்தை,
அண்ணல் யானை அடுபோர்ச் சோழர்,
வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை,
இருபெரு வேந்தரும் பொருதுகளத்து ஒழிய, 15
ஒளிறுவாள் நல்அமர்க் கடந்த ஞான்றை,
களிறுகவர் கம்பலை போல,
அலர்ஆ கின்றது, பலர்வாய்ப் பட்டே!

Add a comment

பனிவரை நிவந்த பயம்கெழு கவாஅன்துனிஇல் கொள்கையொடு அவர்நமக்கு உவந்த
இனிய உள்ளம் இன்னா ஆக,
முனிதக நிறுத்த நல்கல் எவ்வம்
சூர்உறை வெற்பன் மார்புஉறத் தணிதல் 5
அறிந்தனள் அல்லள், அன்னை; வார்கோல்
செறிந்துஇலங்கு எல்வளை நெகிழ்ந்தமை நோக்கிக்,
கையறு நெஞ்சினள் வினவலின், முதுவாய்ப்
பொய்வல் பெண்டிர் பிரப்புஉளர்பு இரீஇ,
'முருகன் ஆர் அணங்கு' என்றலின், அது செத்து 10
ஓவத் தன்ன வினைபுனை நல்இல்
'பாவை அன்ன பலர்ஆய் மாண்கவின்
பண்டையின் சிறக்க, என் மகட்கு' எனப் பரைஇ,
கூடுகொள் இன்இயம் கறங்கக், களன் இழைத்து,
ஆடுஅணி அயர்ந்த அகன்பெரும் பந்தர், 15
வெண்போழ் கடம்பொடு சூடி, இன்சீர்
ஐதுஅமை பாணி இரீஇக், கைபெயராச்,
செல்வன் பெரும்பெயர் ஏத்தி, வேலன்
வெறிஅயர் வியன்களம் பொற்ப வல்லோன்
பொறிஅமை பாவையிற் றூங்கல் வேண்டின், 20
எ ன்ஆம் கொல்லோ?- தோழி!- மயங்கிய
மையற் பெண்டிற்க்கு நொவ்வல் ஆக
ஆடிய பின்னும், வாடிய மேனி
பண்டையிற் சிறவாது ஆயின், இம்மறை
அலர்ஆ காமையோ அரிதே, அஃதான்று, 25
அறிவர் உறுவிய அல்லல்கண் டருளி,
வெறிகமழ் நெடுவேள் நல்குவ னேயெனின்,
'செறிதொடி உற்ற செல்லலும் பிறிது' எனக்
கான்கெழு நாடன் கேட்பின்,
யான்உயிர் வாழ்தல் அதனினும் அரிதே!

Add a comment

கள்ளிஅம் காட்ட புள்ளிஅம் பொறிக்கலைவறன்உறல் அம்கோடு உதிர, வலம்கடந்து,
புலவுப்புலி துறந்த கலவுக்கழிக் கடுமுடை
இரவுக்குறும்பு அலற நூறி, நிரைபகுத்து,
இருங்கல் முடுக்கர்த் திற்றி கெண்டும் 5
கொலைவில் ஆடவர் போலப், பலுடன்
பெருந்தலை எருவையொடு பருந்துவந்து இறுக்கும்
அருஞ்சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும்,
இருங்கழை இறும்பின் ஆய்ந்துகொண்டு அறுத்த
நுணங்குகட் சிறுகோல் வணங்குஇறை மகளிரொடு 10
அகவுநர்ப் புரந்த அன்பின் கழல்தொடி,
நறவுமகிழ் இருக்கை, நன்னன் வேண்மான்
வயலை வேலி வியலூர் அன்னநின்
அலர்முலை ஆகம் புலம்பப் பல நினைந்து,
ஆழேல், என்றி - தோழி! யாழ என் 15
கண்பனி நிறுத்தல் எளிதோ - குரவுமலர்ந்து,
அற்சிரம் நீங்கிய அரும்பத வேனில்
அறல்அவிர் வார்மணல் அகல்யாற்று அடைகரைத்
துறைஅணி மருத தொகல்கொள ஓங்கிக்,
கலிழ்தளிர் அணிந்த இருஞ்சினை மாஅத்து 20
இணர்ததை புதுப்பூ நிரைத்த பொங்கர்ப்
புகைபுரை அம்மஞ்சு ஊர,
நுகர்குயில் அகவும் குரல்கேட் போர்க்கே?

Add a comment

வாள்வரி வயமான் கோள்உகிர் அன்னசெம்முகை அவிழ்ந்த முள்முதிர் முருக்கின்
சிதரார் செம்மல் தா அய், மதர்எழில்
மாண் இழை மகளிர் பூணுடை முலையின்
முகைபிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ, நனை 5
அதிரல் பரந்த அம்தண் பாதிரி
உதிர்வீ அம்சினை தாஅய், எதிர்வீ
மராஅ மலரொடு விராஅய்ப் பராஅம்
அணங்குடை நகரின் மணந்த பூவின்
நன்றே, கானம்; நயவரும் அம்ம, 10
கண்டிசின வாழியோ - குறுமகள்! நுந்தை
அடுகளம் பாய்ந்த தொடிசிதை மருப்பின்,
பிடிமிடை களிற்றின் தோன்றும்
குறுநெடுந் துணைய குன்றமும் உடைத்தோ!

Add a comment
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework