துறை: முல்லை
வண்ணம்: ஒழுகுவண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: வினைநவில் யானை

பகைபெரு மையின் தெய்வம் செப்ப
ஆர்இறை அஞ்சா வெருவரு கட்டூர்ப்
பல்கொடி நுடங்கும் முன்பின் செறுநர்
செல்சமம் தொலைத்த *வினைநவில் யானை*
கடாஅம் வார்ந்து கடும்சினம் பொத்தி 5
வண்டுபடு சென்னிய பிடிபுணர்ந்(து) இயல
மறவர் மறல மாப்படை உறுப்பத்
தேர்கொடி நுடங்கத் தோல்புடை ஆர்ப்பக்
காடுகை காய்த்திய நீடுநாள் இருக்கை
இன்ன வைகல் பல்நாள் ஆகப் 10
பாடிக் காண்கு வந்திசின் பெரும
பாடுநர், கொளக்கொளக் குறையாச் செல்வத்துச் செற்றோர்
கொலக்கொலக் குறையாத் தானைச் சான்றோர்
வண்மையும் செம்மையும் சால்பும் மறனும்
புகன்றுபுகழ்ந்(து) அசையா நல்லிசை 15
நிலம்தரு திருவின் நெடியோய் நின்னே.
Add a comment
துறை: முல்லை
வண்ணம்: ஒழுகுவண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: நிழல்விடு கட்டி

உலகம் புரக்கும் உருகெழு சிறப்பின்
வண்ணக் கருவிய வளம்கெழு கமம்சூல்
அகல்இரு விசும்பின் அதிர்சினம் சிறந்து
கடும்சிலை கழறி விசும்(பு)அடையூ நிவந்து
காலை இசைக்கும் பொழுதொடு புலம்புகொளக் 5
களிறுபாய்ந்(து) இயலக் கடுமா தாங்க
ஒளிறுகொடி நுடங்கத் தேர்தி஡஢ந்து கொட்ப
அரசுபுறத்(து) இறுப்பினும் அதிர்விலர் தி஡஢ந்து
வாயில் கொள்ளா மைந்தினர் வயவர்
மாஇரும் கங்குலும் விழுத்தொடி சுடர்வரத் 10
தோள்பிணி மீகையர் புகல்சிறந்து நாளும்
முடிதல் வேட்கையர் நெடிய மொழியூஉக்
கெடாஅ நல்லிசைத் தம்குடி நிறுமார்
இடாஅ ஏணி வியல்அறைக் கொட்ப
நா(டு)அடிப் படுத்தலின் கொள்ளை மாற்றி 15
அழல்வினை அமைந்த *நிழல்விடு கட்டி*
கட்டளை வலிப்பநின் தானை உதவி
வேறுபுலத்(து) இறுத்த வெல்போர் அண்ணல்
முழவின் அமைந்த பெரும்பழம் இசைந்து
சா(று)அயர்ந் தன்ன கார்அணி யாணர்த் 20
தூம்(பு)அகம் பழுனிய தீம்பிழி மாந்திக்
காந்தள்அம் கண்ணிச் செழுங்குடிச் செல்வர்
கலிமகிழ் மேவலர் இரவலர்க்(கு) ஈயும்
சுரும்(பு)ஆர் சோலைப் பெரும்பெயல் கொல்லிப்
பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து 25
மின்உமிழ்ந் தன்ன சுடர்இழை ஆயத்துத்
தன்நிறங் கரந்த வண்டுபடு கதுப்பின்
ஒடுங்(கு)ஈர் ஓதி ஒள்நுதல் அணிகொளக்
கொடுங்குழைக் கமர்த்த நோக்கின் நயவரப்
பெருந்தகைக்(கு) அமர்ந்த மென்சொல் திருமுகத்து 30
மாண்இழை அரிவை காணிய ஒருநாள்
பூண்க மாளநின் புரவி நெடுந்தேர்
முனைகை விட்டு முன்னிலைச் செல்லாது
தூஎதிர்ந்து பெறாஅத் தாஇல் மள்ளரொடு
தொல்மருங்(கு) அறுத்தல் அஞ்சி அரண்கொண்டு 35
துஞ்சா வேந்தரும் துஞ்சுக
விருந்தும் ஆக நின்பெருந் தோட்கே.
Add a comment
துறை: வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர்: புண்உடை எறுழ்த்தோள்

வான்மருப்பின் களிற்றுயானை
மாமலையில் கணண்கொண்(டு)அவர்
எடுத்(து)எறிந்த விறல்முரசம்
கார்மழையின் கடிதுமுழங்கச்
சாந்துபுலர்ந்த வியல்மார்பிற் 5
தொடிசுடர்வரும் வலிமுன்கைப்
*புண்உடை எறுழ்த்தோள்* புடையல்அம் கழல்கால்
பிறக்(கு)அடி ஒதுங்காப் பூட்கை ஒள்வாள்
ஒடிவல் தெவ்வர் எதிர்நின்(று) உரைஇ
இடுக திறையே புர(வு)எதிர்ந் தோற்(கு)என 10
அம்(பு)உடை வலத்தர் உயர்ந்தோர் பரவ
அனையை ஆகல் மாறே பகைவர்
கால்கிளர்ந் தன்ன கதழ்பா஢ப் புரவிக்
கடும்பா஢ நெடுந்தேர் மீமிசை நுடங்குகொடி
புலவரைத் தோன்றல் யாவது சினப்போர் 15
நிலவரை நிறீஇய நல்லிசைத்
தொலையாக் கற்பநின் தெம்முனை யானே.
Add a comment
பொய்இல் செல்வக் கடுங்கோ வுக்கு
வேளாவிக் கோமான் பதுமன் தேவிஈன்றமகன்
கொல்லிக் கூற்றத்து நீர்கூர் மீமிசைப்
பல்வேல் தானை அதிக மானோ(டு)
இருபெரு வேந்தரையும் உடன்நிலை வென்று 5
முரசும் குடையும் கலனும்கொண்(டு)
உரைசால் சிறப்பின் அடுகளம் வேட்டுத்
துகள்தீர் மகளிர் இரங்கத் துப்(பு)அறுத்துத்
தகடூர் எறிந்து நொச்சிதந்(து) எய்திய
அருந்திறல் ஒள்இசைப் பெருஞ்சேரல் இரும்பொறையை 10

மறுஇல் வாய்மொழி அரிசில் கிழார்
பாடினார் பத்துப்பாட்டு.

அவைதாம்: குறுந்தண்ஞாயில், உருத்தெழு வெள்ளம், நிறந்திகழ் பாசிழை, நலம்பெறு திருமணி, தீஞ்சேற்றியாணர், மாசிதறிருக்கை, வென்றாடு துணங்கை, பிறழநோக்கியவர், நிறம்படுகுருதி, புண்ணுடை யெறுழ்த்தோள். இவை பாட்டின் பதிகம்.

பாடிப்பெற்ற பரிசில்: தானும் கோயிலாளும் புறம்போந்து நின்று கோயிலுள்ள எல்லாம் கொண்மின் என்று காணம் ஒன்பது நூறாயிரத்தோடு அரசுகட்டில் கொடுப்ப அவர் யான் இரப்ப இதனை ஆள்க என்று அமைச்சுப் பூண்டார்.
Add a comment
துறை: செந்துறைப்பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: நிறம்படு குருதி

உயிர்போற் றலையே செருவத் தானே
கொடைபோற் றலையே இரவலர் நடுவண்
பொ஢யோர்ப் பேணிச் சிறியோரை அளித்தி
நின்வயின் பி஡஢ந்த நல்இசை கனவினும்
பிறர்நசை அறியா வயங்குசெந் நாவின் 5
படியோர்த் தேய்த்த ஆண்மைத் தொடியோர்
தோளிடைக் குழைந்த கோதை மார்ப
அனைய அளப்(ப)அருங் குரையை அதனால்
நின்னொடு வாரார் தம்நிலத்(து) ஒழிந்து
கொல்களிற்(று) யானை எருத்தம் புல்லென 10
வில்குலை அறுத்துக் கோலின் வாரா
வெல்போர் வேந்தர் முரசுகண் போழ்ந்(து)அவர்
அர(சு)உவா அழைப்பக் கோ(டு)அறுத்(து) இயற்றிய
அணங்(கு)உடை மரபின் கட்டில்மேல் இருந்து
தும்பை சான்ற மெய்தயங்(கு) உயக்கத்து 15
*நிறம்படு குருதி* புறம்படின் அல்லது
மடைஎதிர் கொள்ளா அஞ்சுவரு மரபின்
கடவுள் அயிரையின் நிலைஇக்
கேடில ஆக பெரும்நின் புகழே.
Add a comment
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework