தொல்காப்பியம்
- விவரங்கள்
- தொல்காப்பியர்
- தாய்ப் பிரிவு: இயல்
- சங்க இலக்கியம்
தொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப்பெறும் மிகப் பழைய தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் இலக்கண நூல் ஆகும். இதை எழுதியவர் தொல்காப்பியர் ஆவார். மிகப் பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவேயாகும். தொல்காப்பியம் 1602 நூற்பாக்களால் ஆனது. இது எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தொல்காப்பியர் காலத்துப் பனம்பாரனார் சிறப்புப் பாயிரம் அளித்துள்ளார்.
எழுத்ததிகாரம்
- நூல் மரபு
- மொழி மரபு
- பிறப்பியல்
- புணரியல்
- தொகைமரபு
- உருபியல்
- உயிர்மயங்கியல்
- புள்ளிமயங்கியல்
- குற்றியலுகரப்புணரியல்
சொல்லதிகாரம்
- கிளவியாக்கம்
- வேற்றுமையியல்
- வேற்றுமைமயங்கியல்
- விளிமரபு
- பெயரியல்
- வினையியல்
- இடையியல்
- உரியியல்
- எச்சவியல்
பொருளதிகாரம்
- அகத்திணையியல்
- புறத்திணையியல்
- களவியல்
- கற்பியல்
- பொருளியல்
- மெய்ப்பாட்டியல்
- உவமயியல்
- செய்யுளியல்
- மரபியல்