வினையியல்
- விவரங்கள்
- தமிழர்கள்
- தாய்ப் பிரிவு: சங்க இலக்கியம்
- தொல்காப்பியம்
வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது நினையும் காலை காலமொடு தோன்றும். |
1 |
காலம்தாமே மூன்று என மொழிப. | 2 |
இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா அம் முக் காலமும் குறிப்பொடும் கொள்ளும் மெய்ந் நிலை உடைய தோன்றலாறே. |
3 |
குறிப்பினும் வினையினும் நெறிப்படத் தோன்றிக் காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம் உயர்திணைக்கு உரிமையும் அஃறிணைக்கு உரிமையும் ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும் அம் மூ உருபின தோன்றலாறே. |
4 |
அவைதாம், அம் ஆம் எம் ஏம் என்னும் கிளவியும் உம்மொடு வரூஉம் க ட த ற என்னும் அந் நாற் கிளவியொடு ஆயெண் கிளவியும் பன்மை உரைக்கும் தன்மைச் சொல்லே. |
5 |
க ட த ற என்னும் அந் நான்கு ஊர்ந்த குன்றியலுகரமொடு ஏன் அல் என வரூஉம் ஏழும் தன் வினை உரைக்கும் தன்மைச் சொல்லே. |
6 |
அவற்றுள், செய்கு என் கிளவி வினையொடு முடியினும் அவ் இயல் திரியாது என்மனார் புலவர். |
7 |
அன் ஆன் அள் ஆள் என்னும் நான்கும் ஒருவர் மருங்கின் படர்க்கைச் சொல்லே. |
8 |
அர் ஆர் ப என வரூஉம் மூன்றும் பல்லோர் மருங்கின் படர்க்கைச் சொல்லே. 9 |
|
மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை காலக் கிளவியொடு முடியும் என்ப. |
10 |
பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த அந் நால் ஐந்தும் மூன்று தலை இட்ட முன்னுறக் கிளந்த உயர்திணையவ்வே. |
11 |
அவற்றுள், பன்மை உரைக்கும் தன்மைக் கிளவி எண் இயல் மருங்கின் திரிபவை உளவே. |
12 |
யாஅர் என்னும் வினாவின் கிளவி அத் திணை மருங்கின் முப் பாற்கும் உரித்தே. |
13 |
பால் அறி மரபின் அம் மூ ஈற்றும் ஆ ஓ ஆகும் செய்யுளுள்ளே. |
14 |
ஆய் என் கிளவியும் அவற்றொடு கொள்ளும். | 15 |
அதுச் சொல் வேற்றுமை உடைமையானும் கண் என் வேற்றுமை நிலத்தினானும் ஒப்பினானும் பண்பினானும் என்று அப் பால் காலம் குறிப்பொடு தோன்றும். |
16 |
அன்மையின் இன்மையின் உண்மையின் வன்மையின் அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும் என்ன கிளவியும் குறிப்பே காலம். |
17 |
பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த அன்ன மரபின் குறிப்பொடு வரூஉம் காலக் கிளவி உயர்திணை மருங்கின் மேலைக் கிளவியொடு வேறுபாடு இலவே. |
18 |
அ ஆ வ என வரூஉம் இறுதி அப் பால் மூன்றே பலவற்றுப் படர்க்கை. |
19 |
ஒன்றன் படர்க்கை த ற ட ஊர்ந்த குன்றியலுகரத்து இறுதி ஆகும். |
20 |
பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த அம் மூ இரண்டும் அஃறிணையவ்வே. |
21 |
அத் திணை மருங்கின் இரு பால் கிளவிக்கும் ஒக்கும் என்ப எவன் என் வினாவே. |
22 |
இன்று இல உடைய என்னும் கிளவியும் அன்று உடைத்து அல்ல என்னும் கிளவியும் பண்பு கொள் கிளவியும் உள என் கிளவியும் பண்பின் ஆகிய சினைமுதற் கிளவியும் ஒப்பொடு வரூஉம் கிளவியொடு தொகைஇ அப் பால் பத்தும் குறிப்பொடு கொள்ளும். |
23 |
பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த அன்ன மரபின் குறிப்பொடு வரூஉம் காலக் கிளவி அஃறிணை மருங்கின் மேலைக் கிளவியொடு வேறுபாடு இலவே. |
24 |
முன்னிலை வியங்கோள் வினையெஞ்சுகிளவி இன்மை செப்பல் வேறு என் கிளவி செய்ம்மன செய்யும் செய்த என்னும் அம் முறை நின்ற ஆயெண் கிளவியும் திரிபு வேறுபடூஉம் செய்திய ஆகி இரு திணைச் சொற்கும் ஓரன்ன உரிமைய. |
25 |
அவற்றுள், முன்னிலைக் கிளவி இ ஐ ஆய் என வரூஉம் மூன்றும் ஒப்பத் தோன்றும் ஒருவர்க்கும் ஒன்றற்கும். |
26 |
இர் ஈர் மின் என வரூஉம் மூன்றும் பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினும் சொல் ஓரனைய என்மனார் புலவர். |
27 |
எஞ்சிய கிளவி இடத்தொடு சிவணி ஐம் பாற்கும் உரிய தோன்றல் ஆறே. |
28 |
அவற்றுள், முன்னிலை தன்மை ஆயீர் இடத்தொடு மன்னாது ஆகும் வியங்கோட் கிளவி. |
29 |
பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை அவ் வயின் மூன்றும் நிகழும் காலத்துச் செய்யும் என்னும் கிளவியொடு கொள்ளா. |
30 |
செய்து செய்யூ செய்பு செய்தென செய்யியர் செய்யிய செயின் செய செயற்கு என அவ் வகை ஒன்பதும் வினையெஞ்சுகிளவி. |
31 |
பின் முன் கால் கடை வழி இடத்து என்னும் அன்ன மரபின் காலம் கண்ணிய என்ன கிளவியும் அவற்று இயல்பினவே. |
32 |
அவற்றுள், முதல் நிலை மூன்றும் வினைமுதல் முடிபின. |
33 |
அம் முக் கிளவியும் சினை வினை தோன்றின் சினையொடு முடியா முதலொடு முடியினும் வினை ஓரனைய என்மனார் புலவர். |
34 |
ஏனை எச்சம் வினைமுதலானும் ஆன் வந்து இயையும் வினைநிலையானும் தாம் இயல் மருங்கின் முடியும் என்ப. |
35 |
பல் முறையானும் வினையெஞ்சுகிளவி சொல் முறை முடியாது அடுக்குந வரினும் முன்னது முடிய முடியுமன் பொருளே. |
36 |
நிலனும் பொருளும் காலமும் கருவியும் வினைமுதற் கிளவியும் வினையும் உளப்பட அவ் அறு பொருட்கும் ஓரன்ன உரிமைய செய்யும் செய்த என்னும் சொல்லே. |
37 |
அவற்றொடு வரு வழி செய்யும் என் கிளவி முதற்கண் வரைந்த மூ ஈற்றும் உரித்தே. |
38 |
பெயரெஞ்சுகிளவியும் வினையெஞ்சுகிளவியும் எதிர் மறுத்து மொழியினும் பொருள் நிலை திரியா. |
39 |
தம்தம் எச்சமொடு சிவணும் குறிப்பின் எச் சொல் ஆயினும் இடைநிலை வரையார். |
40 |
அவற்றுள், செய்யும் என்னும் பெயரெஞ்சுகிளவிக்கு மெய்யொடும் கெடுமே ஈற்றுமிசை உகரம் அவ் இடன் அறிதல் என்மனார் புலவர். |
41 |
செய்து என் எச்சத்து இறந்த காலம் எய்து இடன் உடைத்தே வாராக் காலம். |
42 |
முந் நிலைக் காலமும் தோன்றும் இயற்கை எம் முறைச் சொல்லும் நிகழும் காலத்து மெய்ந் நிலைப் பொதுச் சொல் கிளத்தல் வேண்டும். |
43 |
வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள என்மனார் புலவர். |
44 |
மிக்கதன் மருங்கின் வினைச்சொல் சுட்டி அப் பண்பு குறித்த வினைமுதற் கிளவி செய்வது இல் வழி நிகழும் காலத்து மெய் பெறத் தோன்றும் பொருட்டு ஆகும்மே. |
45 |
இது செயல் வேண்டும் என்னும் கிளவி இரு வயின் நிலையும் பொருட்டு ஆகும்மே தன் பாலானும் பிறன் பாலானும். |
46 |
வன்புற வரூஉம் வினா உடை வினைச்சொல் எதிர் மறுத்து உணர்த்துதற்கு உரிமையும் உடைத்தே. |
47 |
வாராக் காலத்து வினைச்சொல் கிளவி இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும் இயற்கையும் தெளிவும் கிளக்கும் காலை. |
48 |
செயப்படுபொருளைச் செய்தது போலத் தொழிற்படக் கிளத்தலும் வழக்கு இயல் மரபே. |
49 |
இறப்பே எதிர்வே ஆயிரு காலமும் சிறப்பத் தோன்றும் மயங்குமொழிக் கிளவி. |
50 |
ஏனைக் காலமும் மயங்குதல் வரையார். | 51 |