191. கோளாற்றக் கொள்ளாக் குளத்தின்கீழ்ப் பைங்கூழ்போல்
கேளீவ துண்டு கிளைகளோ துஞ்சுப
வாளாடு கூத்தியர் கண்போல் தடுமாறும்
தாளாளர்க் குண்டோ தவறு.

192. ஆடுகோ டாகி அதா஢டை நின்றது஡உம்
காழ்கொண்ட கண்ணே களிறணைக்கும் கந்தாகும்
வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்றான்
தாழ்வின்றித் தன்னைச் செயின்.

193. உறுபுலி ஊனிரை யின்றி ஒருநாள்
சிறுதேரை பற்றியும் தின்னும் - அறிவினால்
காற்றொழில் என்று கருதற்க கையினால்
மேற்றொழிலும் ஆங்கே மிகும்.

194. இசையா தெனினும் இயற்றியோ ராற்றால்
அசையாது நிற்பதாம் ஆண்மை - இசையுங்கால்
கண்டால் திரையலைக்கும் கானலந் தண்சேர்ப்ப
பெண்டிரும் வாழாரோ மற்று.

195. நல்ல குலமென்றும் தீய குலமென்றும்
சொல்லள வல்லால் பொருளில்லை - தொல்சிறப்பின்
ஒண்பொரு ளொன்றோ தவம்கல்வி யாள்வினை
என்றிவற்றான் ஆகும் குலம்.

196. ஆற்றும் துணையும் அறிவினை உள்ளடக்கி
ஊக்கம் உரையார் உணர்வுடையார் - ஊக்கம்
உறுப்பினால் ஆராயும் ஒண்மை யுடையார்
குறிப்பின்கீழ்ப் பட்ட துலகு.

197. சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
மதலையாய் மற்றதன் வீழுன்றி யாங்குக்
குதலைமை தந்தைகண் தோன்றிற்றான் பெற்ற
புதல்வன் மறைப்பக் கெடும்.

198. ஈனமாய் இல்லிருந் தின்றி விளியினும்
மானும் தலைவருவ செய்பவோ? - யானை
வா஢முகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள்
அ஡஢மா மதுகை யவர்.

199. தீங்கரும் பீன்று திரள்கால் உளையலா஢
தேங்கமழ் நாற்றம் இழந்தாஅங்கு - ஓங்கும்
உயர்குடி யுள்பிறப்பின் என்னாம் பெயர்பொறிக்கும்
பேராண்மை இல்லாக் கடை.

200. பெருமுத் தரையர் பொ஢துவந் தீயும்
கருனைச்சோ றார்வர் கயவர் - கருனையைப்
பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை
நீரும் அமிழ்தாய் விடும்.
Add a comment
201. வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்
கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தாஅங்கு
அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன்
கேளிரைக் காணக் கெடும்.

202. அழன்மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம்
நிழல்மரம்போல் நேரொப்பத் தாங்கிப் - பழுமரம்போல்
பல்லார் பயன்துய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே
நல்லாண் மகற்குக் கடன்.

203. அடுக்கல் மலைநாட. தற்சேர்ந் தவரை
எடுக்கல மென்னார் பொ஢யோர் - அடுத்தடுத்து
வன்காய் பலபல காய்ப்பினும் இல்லையோ
தன்காய் பொறுக்கலாக் கொம்பு.

204. உலகறியத் தீரக் கலப்பினும் நில்லா
சிலபகலாம் சிற்றினத்தார் கேண்மை - நிலைதி஡஢யா
நிற்கும் பொ஢யோர் நெறியடைய நின்றனைத்தால்
ஒற்கமி லாளர் தொடர்பு.

205. இன்னர் இனையர் எமர்பிறர் என்னும்சொல்
என்னும் இலராம் இயல்பினால் - துன்னித்
தொலைமக்கள் துன்பம்தீர்ப் பாரேயார் மாட்டும்
தலைமக்க ளாகற்பா லார்.

206. பொற்கலத்துப் பெய்த புலியுகிர் வான்புழுக்கல்
அக்காரம் பாலோ டமரார்கைத் துண்டலின்
உப்பிலிப் புற்கை உயிர்போல் கிளைஞர்மாட்டு
எக்காலத் தானு மினிது.

207. நாள்வாய்ப் பெறினும்தந் நள்ளாதா ஡஢ல்லத்து
வேளாண்மை வெங்கருனை வேம்பாகும் - கேளாய்,
அபராணப் போழ்தின் அடகிடுவ ரேனும்
தமராயார் மாட்டே இனிது.

208. முட்டிகை போல முனியாது வைகலும்
கொட்டியுண் பாரும் குறடுபோல் கைவிடுவர்
சுட்டுக்கோல் போல எ஡஢யும் புகுவரே
நட்டார் எனப்படு வார்.

209. நறுமலர்த் தண்கோதாய் நட்டார்க்கு நட்டார்
மறுமையும் செய்வதொன் றுண்டோ - இறுமளவும்
இன்புறுவ இன்புற் றெழீஇ அவரோடு
துன்புறுவ துன்புறாக் கால்.

210. விருப்பிலார் இல்லத்து வேறிருந் துண்ணும்
வெருக்குக்கண் வெங்கருனை வேம்பாம் - விருப்புடைத்
தன்போல்வா ஡஢ல்லுள் தயங்குநீர்த் தண்புற்கை
என்போ டியைந்த அமிழ்து.
Add a comment
221. நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும்.
நெல்லுக் குமியுண்டு, நீர்க்கு நுரைஉண்டு
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.

222. செறுத்தோ றுடைப்பினும் செம்புனலோ டுடார்,
மறுத்தும் சிறைசெய்வர் நீர்நசைஇ வாழ்நர்
வெறுப்ப வெறுப்பச் செயினும் பொறுப்பரே
தாம்வேண்டிக் கொண்டார் தொடர்பு.

223. இறப்பவே தீய செயினுந்தந் நட்டார்
பொறுத்தல் தகுவதொன் றன்றோ - நிறக்கோங்கு
உருவவண் டார்க்கு முயர்வரை நாட
ஒருவர் பொறையிருவர் நட்பு.

224. மடிதிரை தந்திட்ட வான்கதிர் முத்தம்
கடுவசை நாவாய் கரையலைக்குஞ் சேர்ப்ப
விடுதற் கா஢யா ஡஢யல்பிலரேல் நெஞ்சம்
சுடுதற்கு மூட்டிய தீ.

225. இன்னா செயினும் விடற்பால ரல்லாரைப்
பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும் - பொன்னொடு
நல்லிற் சிதைத்ததீ நாடோ றும் நாடித்தம்
இல்லத்தில் ஆக்குத லால்.

226. இன்னா செயினும் விடுதற் கா஢யாரைத்
துன்னாத் துறத்தல் தகுவதோ - துன்னருஞ்சீர்
விண்குத்து நீள்வரை வெற்ப. களைபவோ
கண்குத்திற் றென்றுதங் கை.

227. இலங்குநீர்த் தண்சேர்ப்ப. இன்னா செயினும்
கலந்து பழிகாணார் சான்றோர் - கலந்தபின்
தீமை எடுத்துரைக்கும் திண்ணறி வில்லாதார்
தாமும் அவா஢ற் கடை.

228. ஏதிலார் செய்த திறப்பவே தீதெனினும்
நோதக்க தென்னுண்டாம் நோக்குங்கால் - காதல்
கழுமியார் செய்த கறங்கருவி நாட
விழுமிதாம் நெஞ்சத்துள் நின்று.

229. தமரென்று தாங்கொள்ளப் பட்டவர் தம்மைத்
தமரன்மை தாமறிந்தா ராயின், - அவரைத்
தமா஢னும் நன்கு மதித்துத் தமரன்மை
தம்முள் அடக்கிக் கொளல்.

230. குற்றமும் ஏனைக் குணமும் ஒருவனை
நட்டபின் நாடித் தி஡஢வேனேல் - நட்டான்
மறைகாவா விட்டவன் செல்வுழிச் செல்க
அறைகடல்சூழ் வையம் நக.
Add a comment
211. கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மையெஞ் ஞான்றுங்
குருத்தின் கரும்புதின் ற்றறே - குருத்திற்கு
எதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ, என்றும்
மதுர மிலாளர் தொடர்பு.

212. இற்பிறப் பெண்ணி இடைதி஡஢யா ரென்பதோர்
நற்புடை கொண்டமை யல்லது - பொற்கேழ்
புனலொழுகப் புள்ளி஡஢யும் பூங்குன்ற நாட
மனமறியப் பட்டதொன் றன்று.

213. யானை யனைவர் நண்பொ஡ணஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும், - யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும், எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்.

214. பலநாளும் பக்கத்தா ராயினும் நெஞ்சில்
சிலநாளும் ஒட்டாரோ டொட்டார் - பலநாளும்
நீத்தா ரெனக்கை விடலுண்டோ , தந்நெஞ்சத்
தியாத்தாரோ டியாத்த தொடர்பு.

215. கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது
வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி - தோட்ட
கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை
நயப்பாரும் நட்பாரும் இல்.

216. கடையாயார் நட்பிற் கமுகனையர் ஏனை
இடையாயார் தெங்கி னனையர் - தலையாயார்
எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே,
தொன்மை யுடையார் தொடர்பு.

217. கழுநீருள் காரட கேனும் ஒருவன்
விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம் - விழுமிய
குய்த்துவையார் வெண்சோறே யாயினும் மேவாதார்
கைத்துண்டல் காஞ்சிரங் காய்.

218. நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்?
சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும், செய்விளைக்கும்
வாய்க்கால் அனையார் தொடர்பு.

219. தெளிவிலார் நட்பின் பகைநன்று சாதல்
விளியா அருநோயின் நன்றால் - அளிய
இகழ்தலின் கோறல் இனிதேமற் றில்ல
புகழ்தலின் வைதலே நன்று.

220. மாணஇப் பலரோடு பன்னாள் முயங்கிப்
பொ஡ணஇப் பொருட்டக்கார்க் கோடலே வேண்டும்
பாணஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா
மாணஇஇப் பின்னைப் பி஡஢வு.
Add a comment
231. செறிப்பில் பழங்கூரை சேறணை யாக
இறைத்துநீர் ஏற்றும் கிடப்பர், - கறைக்குன்றம்
பொங்கருவி தாழும் புனல்வரை நன்னாட
தங்கரும் முற்றுந் துணை.

232. சீ஡஢யார் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய்
மா஡஢போல் மாண்ட பயத்ததாம் - மா஡஢
வறந்தக்கால் போலுமே வாலருவி நாட
சிறந்தக்கால் சீ஡஢லார் நட்பு.

233. நுண்ணுணர்வி னாரொடு கூடி நுகர்வுடைமை
விண்ணுலகே யொக்கும் விழைவிற்றால் - நுண்ணு஡ல்
உணர்வில ராகிய ஊதியம் இல்லார்ப்
புணர்தல் நிரயத்துள் ஒன்று.

234. பெருகுவது போலத் தோன்றிவைத் தீப்போல்
ஒருபொழுதுஞ் செல்லாதே நந்தும் - அருகெல்லாம்
சந்தன நீள்சோலைச் சாரன் மலைநாட
பந்தமி லாளர் தொடர்பு.

235. செய்யாத செய்துநாம் என்றலும் செய்வதனைச்
செய்யாது தாழ்த்துக்கொண் டோ ட்டலும் - மெய்யாக
இன்புறு஡உம் பெற்றி இகழ்ந்தார்க்கும் அந்நிலையே
துன்புறு஡உம் பெற்றி தரும்.

236. ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும்
வி஡஢நீர்க் குவளையை ஆம்பலொக் கல்லா
பெருநீரார் கேண்மை கொளினுநீர் அல்லார்
கருமங்கள் வேறு படும்.

237. முற்றற் சிறுமந்தி முற்பட்ட தந்தையை
நெற்றுக்கண் டன்ன விரலான் ஞெமிர்த்திட்டுக்
குற்றிப் பறிக்கும் மலைநாட இன்னாதே
ஒற்றுமை கொள்ளாதார் நட்பு.

238. முட்டுற்ற போழ்தின் முடுகியென் னாருயிரை
நட்டா னொருவன்கை நீட்டேனேல் - நட்டான்
கடிமனை கட்டழித்தான் செல்வுழிச் செல்க
நெடுமொழி வையம் நக.

239. ஆன்படு நெய்பெய் கலனுள் அதுகளைந்து
வேம்படு நெய்பெய் தனைத்தரோ - தேம்படு
நல்வரை நாட நயமுணர்வார் நண்பொ஡ணஇப்
புல்லறிவி னாரொடு நட்பு.

240. உருவிற் கமைந்தான்கண் ஊராண்மை யின்மை
பருகற் கமைந்தபால் நீரளா யற்றே
தொ஢வுடையார் தீயினத்தா ராகுதல் நாகம்
வி஡஢பெடையோ டாடிவிட் டற்று.
Add a comment
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework